ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

90 வீதமான ஆணுறை விற்பனை இயந்திரங்கள் திருடு போய்விட்டன !


நாடு முழுவதும் 90 சதவீத ஆணுறை எந்திரங்கள்
மாயமாகி விட்டதாகவும் பல
இடங்களில் எந்திரங்கள் செயல்படவில்லை என்றும் கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அரசின் ஒவ்வொரு துறை பற்றியும் கணக்கு தணிக்கை துறை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மீது குற்றம் சாட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ்சை கட்டுப்படுத்துவதற்காக பொது இடங்களில் ஆணுறைகள் வழங்கும் தனியாங்கி எந்திரங்கள் வைக்கப்பட்டன. விலை மாதர்கள் அதிகம் நடமாடும் பகுதிகள், பஸ் நிலையங்கள், கழிப்பிடங்கள் மற்றும் பொது இடங்களில் இந்த தானியங்கி எந்திரங்கள் வைக்கப்பட்டன. ஏழைகள் உடல் நலன் காக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் நிறுவப்பட்ட ஆணுறை வழங்கும் தானியங்கி எந்திரங்களில் 90 சதவீதம் எந்திரங்களை காணவில்லை என்று கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டி உள்ளது.

விளம்பர உலகின் அசைக்க முடியாத ராணி சினேகா



அண்மை காலங்களில்  தமிழ் திரையுலகில் நிஜமான சாதனை கதாநாயகி என்ற பெயருக்கு சினேகா தான் முதலில் நிற்பதாக விளம்பரதாரர்கள் அபிபிராய படுகிறார்கள் இன்றும் கூட மளிகை கடை முதல் வாசனை திரவிய விளம்பரம் வரை முதல் choice நம்ப சிநேகம் தானாம் , அதனோடு சேர்ந்த புண்ணியத்தில் பிரசன்னாவுக்கும் யோகமாமே ? அதாவது விளம்பர கிளிப்பிங்க்சில் அவரது ரெட்டும் ஏறிவிட்டதாம்

அவன் என்னிடமும் திருமணம் செய்ய கேட்டான் நான் மறுத்துவிட்டேன்

ஹன்சிகா காதல் தொடர்பாக பரவி வரும் புது தகவலால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சிம்பு, ஹன்சிகா இணைந்து 2 படங்களில் நடிக்கின்றனர். ‘வாலு படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் இதுபற்றி அறிவிக்காமல் இருவரும் ரகசியம் காத்து வந்தனர். கடந்த மாதம் இருவருமே காதல் ரகசியத்தை போட்டு உடைத்தனர். இதற்கிடையில் சிம்பு, ஹன்சிகாவுக்கு இடையேயான காதல் விவகாரம் பகிரங்கமானதைத் தொடர்ந்து ஹன்சிகாவின் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்திருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது - இதற்கு பதில் அளிக்கும் விதமாக  ‘எங்களது திருமணம் பெற்றோர் சம்மதத்துடன்தான் நடக்கும். அதுவும் என் தங்கை இலக்கியாவுக்கு திருமணம் முடிந்தபிறகுதான் எனது திருமணம் நடக்கும்Õ என்று சிம்பு கூறினார்.

திமுகவின் கடலூர் புறவழிசாலை திட்டமும் கிடப்பில் போடப்பட்டது !

கடலூர் சரவணா நகர் பகுதியில் புறவழிச் சாலை அமைக்க தேர்வு
செய்யப்பட்ட இடம். > திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகர் புறவழிச் சாலை திட்டம் நில ஆர்ஜிதம் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
விளை நிலங்கள் யாவும் மனைப்பிரிவுகளாக உருவாகி வரும் இந்த காலக்கட்டத்தில் மற்ற நகரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் கடலூர் ஓரளவுதான் விரிவடைந்துள்ளது.
இதற்கு காரணம் நகரின் கிழக்கே கடலும், வடக்கே புதுச்சேரி மாநிலமும், தெற்கே மாசுபட்ட சிப்காட் வளாகமும் அமைந்திருக்கிறது.
அதனால் கடலூர் வளர்ச்சி என்றாலே மேற்கு திசையில் மட்டும்தான் 30-க்கும் மேற்பட்ட புதிய நகர்கள் உருவாகியுள்ளன.
பழைய மற்றும் புதிய நகர்களில் இருந்து மக்கள் கடைவீதி வழியாகத்தான் லாரன்ஸ்ரோடு, பஸ் நிலையத்துக்கு வர வேண்டும்.
அதனால் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோடு முதல் கூத்தப்பாக்கம் வரை அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஆகும் இடமாக உள்ளது.

கொத்தடிமையாக தவித்த 14 தொழிலாளர்கள் மீட்பு ! புதுகோட்டை கரும்பு தோட்டத்தில் கொத்தடிமைகள்



 புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த பனையபட்டி ஊராட்சி மேலபனையூர் கரும்பு தோட்டத்தில் கொத்தடிமைகளாக சிலர் வேலை செய்து வருவதாக ஆர்டிஓ அலுவலகத்துக்கு ஆதிவாசி தோழமை கழக நிர்வாகி தனராஜ் தகவல் கொடுத்தார். ஆர்டிஓ ராஜாராம், தாசில்தார் பிரதாபகரன் மற்றும் போலீசார், கரும்புத்தோட்டத்துக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு கொத்தடிமையாக தவித்த விழுப்புரம் பாக்கம் பகுதியை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 14 பேரை மீ¢ட்டனர்.புதுவையை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர்,  தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்களை கொத்தடிமையாக விற்றுள்ளார். கரும்புதோட்ட சூப்பர்வைசர் நாகராஜனிடம் 2 முதல் 15 ஆண்டு வரை கொத்தடிமைகளாக இருந் துள்ளது விசாரணையில் தெரியவந்தது.  பாலியல் கொடுமை: கொத்தடிமையாக இருந்த 17 வயது பெண் ஒருவர் கூறுகையில், ‘எனக்கு சிறு வயதிலேயே திருமணமாகிவிட்டது. 2 குழந்தைகள் உள்ளனர். என்னை சூப்பர்வைசர் நாகராஜன்  அடித்து துன்புறுத்தி தினமும் பலாத்காரம் செய்வார். இதில் எனக்கு ஒரு குழந்தை பிறந் தது. யாரிடம் சொல்வது என தெரியாமல் தவித்து வந்தேன்‘ என கதறினார்.

மன்மோகன் சிங் : ராகுல் பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார் ! ? அதைவிட வதேரா ரொம்பவும் பொருத்தம் ?

ரஷியாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஜி–20 நாடுகளின் 2 நாள் மாநாடு நடைபெற்றது.
பிரதமர் பதவி
இதில் கலந்து கொள்வதற்காக ரஷியா சென்று இருந்த பிரதமர் மன்மோகன் சிங், அங்கிருந்து டெல்லி திரும்பினார். வரும் வழியில் விமானத்தில் தன்னுடன் வந்த நிருபர்களுக்கு மன்மோகன் சிங் பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் நிருபர்கள்; “அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்திதான் காங்கிரசுக்கு தலைமை தாங்க வேண்டும் என்று கட்சியில் உள்ள பலரும் கூறி வரும் நிலையில், 3–வது முறையாக நீங்கள் பிரதமர் ஆகும் வாய்ப்பு இருக்கிறதா?“ என்று கேட்டனர்.
ராகுல் பொருத்தமானவர்
அதற்கு மன்மோகன் சிங் பதில் அளிக்கையில்; “2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி மிகவும் பொருத்தமானவராக இருப்பார் என்று நான் எப்போதும் சொல்லி வருகிறேன். காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்’’ என்று கூறினார்.

2020 Tokyo அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் டோக்கியோ நகரில் நடைபெறும் !

பியூனோஸ் ஏர்ஸ்:2020-ல் ஒலிம்பிக்போட்டிகளை நடத்த டோக்கியோ தேர்வாகியுள்ளது.இதற்கான ரகசிய ஓட்டெடுப்பு நேற்று மாலை அர்ஜென்டினாவில் உள்ள பியூனோஸ் ஏர்ஸ் நகரில் சர்வதேச ஒலிம்பிக் குழு நடத்தியது. இந்த ஓட்டெடுப்பில் டோக்கியோ, இஸ்தான்புல் மற்றும் மாட்ரிட் ஆகிய நகரங்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இதில் டோக்கியோ தேர்வாகியுள்ளது. இது 125 வது சீசன் ஆகும்.இதன் மூலம் ஜப்பான், 2வது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ளது. ஏற்கனவே 1964-ல் ஜப்பான் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது 93 நாடுகள் போட்டிகளில் பங்கேற்று இருந்தது.1964-ல் ஜப்பானில் நடந்தபோது ஆசிய நாடு அப்போதுதான் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தேர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.1940-ல் டோக்கியோவில் நடத்த போட்டியிட்டது ஆனால் அப்போது அங்கு புகுஷிமா அணு உலை பிரச்சினை பெரிய தடையாக இருந்தது.  y