திங்கள், 15 டிசம்பர், 2025

H-1B விசாவில் மாபெரும் முறைகேடு.. இந்தியாவில் - முன்னாள் அமெரிக்க அதிகாரி பேட்டி பகீர்

 tamil.oneindia.com   : Vigneshkumar  ; வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹெச்-1பி விசா என்பது இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது. ஹெச்-1பி விசா வைத்திருப்போருக்கு அமெரிக்கா பல கடுமையான விதிகளை விதித்து வருகிறது. 
சிலர் அதற்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் ஹெச்-1பி விசா குறித்து முன்னாள் விசா அதிகாரி ஒருவர் கூறிய கருத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது.
அமெரிக்காவில் டிரம்ப் வந்த பிறகு வெளிநாட்டினருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். குறிப்பாக ஹெச்-1பி விசா வைத்திருப்போருக்குக் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறார்.

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

ஆர்.எஸ்.பாரதி : தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம்!

 மின்னம்பலம் - கவி : தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான காலஅவகாசம் நாளை (டிசம்பர் 14) உடன் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று (டிசம்பர் 13) செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், வாக்காளர்களின் வாக்குரிமை பறிபோகாமல் இருக்க திமுகவின் சட்டத்துறையும் தொண்டர்களும் தீவிரமாகப் பணியாற்றினர். கட்சி சார்பின்றி பணியாற்றினர்.