சனி, 9 ஏப்ரல், 2011

EVKSஇளங்கோவன்: கலைஞர் இலவச "டிவி' என்று அறிவித்தபோது, நானே நம்பவில்லை

கலைஞரை விமர்சித்தது வேறு விஷயம்

கலைஞரை நான் பலமுறை விமர்சித்துள்ளேன் என்பது வேறு விஷயம் என, ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் சேகர்பாபுவை ஆதரித்து புதுவண்ணாரப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் தொடர்வது காலத்தின் கட்டாயம். மக்களுக்கு தேவையானதைச் செய்யும் ஆட்சியை மாற்றிவிடக்கூடாது. காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, பொருளாதார நிபுணர்கள் சாத்தியமே இல்லை என்றனர். ஆனால், காமராஜர் சாதித்துக் காட்டினார். அதுபோல் கலைஞர் இலவச "டிவி' என்று அறிவித்தபோது, நானே நம்பவில்லை. நிபுணர்களும் சாத்தியமில்லை என்றனர். கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் சொன்னபடி இலவச "டிவி' வழங்கினார். ஜெயலலிதா இதற்கு முன் ஐந்தாண்டுகளில் மக்களைப் பற்றி கவலைப்படவே இல்லை; மாக்களைப்பற்றிதான் சிந்தித்தார். யானைகளுக்கு முகாம் நடத்தியதுதான் அவரதுசாதனை.

கலைஞரை நான் பலமுறை விமர்சித்துள்ளேன் என்பது வேறு விஷயம். ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். மக்களுக்குத் தேவையான திட்டங்களை
செயல்படுத்தினார். என் சுயமரியாதைதான் முக்கியம்; ஏழை,எளிய மக்களைப்பற்றி கவலையில்லை என்கிற ஜெயலலிதாவை ஆட்சியில் அமர வைத்தால், நடந்து வரும் திட்டங்களும் முடங்கிப்போகும். வரவேண்டிய நல்ல புதிய திட்டங்களும் வராமல் போய்விடும். யார் பெரியவர் என்ற போட்டியால் தமிழகத்தில் வளச்சி தடைபடும்.

தமிழகத்துக்கு நல்லது செய்யும் இந்த ஆட்சி தொடர்ந்தால், தமிழகம் கேட்கும் திட்டங்களை எல்லாம் மத்திய அரசு தரும். என்னைப் பொறுத்தவரை உதயசூரியன், கை சின்னங்கள் வேறு வேறு அல்ல. அதை உணர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் சேகர்பாபுவையும், ராயபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரையும் வெற்றி பெறச் செய்யுங்கள்

Jayalalitha போர் என்றால் ஜனங்கள் செத்து மடிவது சகஜம்

பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று தீர்மானம் போட்டவர் ஜெயலலிதா: கலைஞர்

பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் போட்டவர் ஜெயலலிதா என்று திமுக தலைவர் கலைஞர் கூறினார்.சென்னையில் நடைபெற்ற திமுக பிரச்சார பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல் நேரத்தில் மட்டும் இலங்கை தமிழர்களுக்காக அதிமுக போன்ற கட்சிகள் அக்கறை காட்டி வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் என்ன. அந்த தீர்மானத்தை திமுக ஆதரிக்கவில்லை. ஏற்றுக்கொள்ளவில்லை. நடுநிலை வகித்தோம்.
அந்த தீர்மானம் இலங்கையில் இருந்து பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டுவந்து சென்னையிலே விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்டது யார்.
திமுக அரசா. நெஞ்சிலே கை வைத்து சொல்லுங்கள். நெஞ்சிருந்தால் கை வைத்து சொல்லுங்கள். நாங்களா அந்த தீர்மானம் போட்டோம். இல்லையே.
இலங்கையிலே ராஜபக்சவின் ஆணவத்தால் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, நான் கண்ணீர் விட்டு அழுது கவிதைகள் எழுதினேன்.
அப்போது அம்மையார் ஜெயலலிதா என்ன சொன்னார். போர் என்றால் ஜனங்கள் செத்து மடிவது சகஜம். இலங்கை தமிழர்களை பார்த்து ஜனங்கள் என்று சொல்லி அவர்கள் செத்து மடிவது சகஜம் என்று சொன்ன ஜெயலலிதா, இன்றைக்கு இலங்கை தமிழர்களுக்கு நெருக்கமான உறவாகி விட்டார்.
இலங்கையில் தமிழர்கள் வாழ வைக்கப்பட வேண்டும் என்று போராடியது திமுக. இலங்கை தமிழர்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பது திமுகதான் என்றார்.

Cellphone தொலைபேசி மூலம் பிறப்பு,இறப்பு சான்றிதழ்கள் துரிதமாக பெறும் வசதி!

செல்லிட தொலைபேசிகள் மூலம் விபரங்களை பெற்று பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவு சான்றிதழ்களை துரிதமாக வழங்குவதற்கான செயற்திட்டமொன்றை தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் விபரங்களை வழங்குவதன் ஊடாக பிறப்பு, இறப்பு மற்றும் விவாக பதிவுச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்தார்.
இத்திட்டத்தின்படி இச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு பிரதேச செயலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. சான்றிதழ்களைப் பெறுவதற்கு பிரதேச செயலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. சான்றிதழ்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கான கட்டணங்கள் செல்லிட தொலைபேசி மூலம் செலுத்த முடியும்

ரிஸானாவை விடுவிக்குமாறு மீண்டும் கோரிக்கை


இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நபீக்கை விடுதலை செய்யுமாறு ஹொங்கோங்கை தலைமையகமாகக் கொண்ட ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் கோரிக்கை விடுத்துள்ளது. சவுதிஅரேபிய மன்னரிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு சவுதிஅரேபியாவில் பணிபுரிந்த வீட்டில் உள்ள குழந்தையை கொலை செய்ததாக ரிஸானா நபீக் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட பல தரப்பினர் விடுத்த கோரிக்கையை அடுத்து ரிஸானா நபீக்கின் மரண தண்டனையை தற்காலிகமாக ஒத்திவைக்க அவுதிஅரேபிய மன்னர் தீர்மானித்தார். இந்த நிலையில் பணிப்பெண்ணாக சென்றிருந்த ரிஸானா நபீக்கிற்கு விட்டுப் பணிப்பெண் தொழிலில் அனுபவம் இருந்திருக்கவில்லை எனவும் குழந்தையை கொலை செய்ய அவருக்கு எவ்வித அடிப்படை காரணங்களும் இல்லை எனவும் ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பசில் பெனாண்டோ அரேபிய செய்திச் சேவை ஒன்றிற்கு தொலைபேசி ஊடாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், ரிஸானா நபீக்குடன் உரையாடி பல மாதங்கள் கழிந்துள்ளதாகவும் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவருடைய பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளதாக பசில் பெனாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரான்ஸ், கனடா, ஜோ்மன், ஐக்கிய இராச்சியம், சுவிட்சர்லாந்து, இலங்கை அகதிகள் நாடு திரும்புவதில் ஆர்வம்

அரசியல் தஞ்சம் கோரிய பலர் நாடு திரும்பியுள்ளனர்
வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த அறுநூறு இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்பியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்பியிருப்பதாகவும், பிரான்ஸ், கனடா, ஜோ்மன், ஐக்கிய இராச்சியம், சுவிட்சர்லாந்து, மலேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்தும் கணிசமானவர்கள் அவ்வாறு நாடு திரும்பியிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்துக்கான இலங்கைப் பிரதிநிதி மைக்கல் ஸ்வெக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் யுத்தம் முடிவுற்ற நிலையில் இலங்கை அகதிகள் நாடு திரும்புவதில் கடும் ஆர்வம் காட்டி வருவதாகவும், கடந்த வருடம் மட்டும் 3200 பேரளவில் நாடு திரும்பியிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு நாடு திரும்பியவர்களுக்கு உதவுவதற்கென வடக்கு மாகாணத்தில் மட்டும் தற்போதைக்கு ஐந்து இணைப்புக் காரியாலயங்களை நிறுவியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

சாயிபாபாவின் உடல்நிலை

புட்டபர்த்தி: பகவான் சத்யசாயி பாபாவுக்கு செயற்கைச் சுவாசமளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அவரின் வாரிசு தொடர்பாக பல்வேறு ஊகங்கள் சில
வருடங்களாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் பிரசாந்தி நிலையத்தையும் அதன் செயற்பாடுகளையும் வழிநடத்துவதற்கான வாரிசு இதுவரை இல்லையென வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நான்கு வருடங்களுக்கு முன்னர் சாய்பாபா சுகவீனமடைந்ததைத் தொடர்ந்து இந்த சர்வதேச ஆன்மீக நிலையத்தின் எதிர்காலம் பற்றிப் பல கேள்விகள் எழுந்திருந்தன. நாட்டின் இரண்டாவது சீரடியாகவும் பாரிய ஆன்மீக நிலையமாகவும் புட்டபர்த்தி தொடர்ந்தும் செயற்படுமென ஆச்சிரம வட்டாரங்கள் தெரிவித்ததாக ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை நேற்று குறிப்பிட்டுள்ளது.

1963 ஜூலை 06 குருபூர்ணிமா தினத்தில் சாயிபாபா தனது ஆன்மீகக் கண்டுபிடிப்பின் பின்னணியிலுள்ள இரகசியத்தை வெளிப்படுத்தியிருந்தார். சிவன்சக்தி கோட்பாட்டின் முப்பரிமாண ஜனனமாக சாயி அவதாரத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார். சீரடி சாயிபாபா, சிவா, பார்வதி ஆகியவையே ஸ்ரீசத்யசாயி பாபா எனவும் சக்திக் கோட்பாடானது கர்நாடக மாநிலத்திலுள்ள மண்டியா மாவட்டத்தின் பிரேமசாயாக அவதரித்திருப்பதாகவும் கருதப்பட்டது.

தனது சிறுபராயத்திலும் புனிதர் சீரடி பற்றி சாயிபாபா குறிப்பிட்டிருந்தார். தான் எழுதிய பாடல்களில் இதனைப் பற்றி அவர் எழுதியுள்ளார். சீரடி சாயிபாபா 1918 இல் தான் மரணமடைவதற்கு முன்னர் தனது மரணத்தைப் பற்றி அறிவித்திருந்தார். எட்டு வருடங்களில் சென்னை மாகாணத்தில் மீளத் தோன்றுவாரென அவர் அறிவித்திருந்தார். சத்யசாயி பாபா 1926 இல் பிறந்தார். பின்னர் தான் சீரடி பாபாவாக இருந்ததாக அவர் அறிவித்திருந்தார்.

தன்னைப் பற்றி அவர் பேசும்போதெல்லாம் தனது முன்னைய உடல் சீரடி பாபாவாக இருந்ததாக சத்யசாயி பாபா கூறியுள்ளார். ஆனால், மண்டியா மாவட்டத்தில் பிரேமசாயின் மற்றொரு அவதாரத்தை தான் எடுப்பாரென சாயிபாபா அறிவித்திருந்தும் இதுவரை அவரின் அந்த வாரிசு பற்றித் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இந்தப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு வாரிசு பற்றி அறிவிப்பதற்கான எந்தவொரு திட்டத்தையும் சாயி மத்திய நம்பிக்கையகம் கைவிட்டுள்ளதாக ஆச்சிரம வட்டாரங்கள் கூறியுள்ளன.

சாயிபாபாவின் உடல்நிலை மோசமடைந்துவரும் நிலையில், அவரின் சகோதரர் ஜானகிராமனின் மகனும் நம்பிக்கையக உறுப்பினருமான ஜே.ரெட்ணாகருக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாயி நம்பிக்கையகத்தை மிகவும் சக்தி வாய்ந்ததாக உருவாக்கியவர்களில் ஒருவராக சாயி பாபா குடும்பத்தைச் சேர்ந்த ரெட்ணாகர் விளங்குகிறார். சில மாதங்களுக்கு முன்னர் வீதி விபத்தில் அவரும் காயமடைந்துள்ளார்.

நடிகை சுஜாதா

சென்னை: பிரபல நடிகை சுஜாதா காலமானார். அவருக்கு வயது 59.

1952ம் ஆண்டு இலங்கையில் பிறந்த அவரது தாய் மொழி மலையாளம் ஆகும். கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்டோருடன் நடித்துள்ள இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தியில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். அந்தமான் காதலி, விதி ஆகிய படங்கள் இவருக்கு பெரும் பெயர் வாங்கித் தந்தன.

கடைசியாக வரலாறு என்ற படத்தில் நடித்த சுஜாதா அதற்குப் பின் பட வாய்ப்புக்களை ஒப்புக் கொள்ளவில்லை.

சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று சென்னையில் தனது வீட்டில் மரணடைந்தார்.

உண்ணாவிரதத்தை இன்று கைவிடுகிறார் ஹஸôரே

புதுதில்லி, ஏப். 8: லோக்பால் மசோதாவை வரையறுக்க கூட்டுக் குழு அமைப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை வெளியிட மத்திய அரசு ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 4 நாள்களாக தில்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் சமூக சேவகர் அண்ணா ஹஸôரே தனது போராட்டத்தை சனிக்கிழமை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். "எங்களது அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, எனது உண்ணாவிரதத்தை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு முடித்துக் கொள்கிறேன். இது நமது நாட்டுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி' என்று அண்ணா ஹஸôரே கூறினார். மத்திய அரசுக்கும், ஹஸôரே பிரதிநிதிகளுக்கும் இடையே எட்டப்பட்ட உடன்பாட்டின்படி, லோக்பால் மசோதாவை வரையறுக்கும் கூட்டுக் குழுவில், பொதுமக்கள் தரப்பில் 5 பேரும், அரசுத் தரப்பில் 5 பேரும் இடம்பெறுகின்றனர். மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குழுவுக்கு தலைவராக இருப்பார். சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், நீர்வளத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் அரசுத் தரப்பில் இடம் பெறுகின்றனர். பொதுமக்கள் தரப்பில் சமூக ஆர்வலர் அண்ணா ஹஸôரே, மூத்த வழக்கறிஞர்கள் சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இடம் பெறுகின்றனர். வழக்கறிஞர் சாந்தி பூஷண் குழுவின் இணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். கபில் சிபல் வரவேற்பு: அண்ணா ஹஸôரேவின் முடிவை வரவேற்றுள்ள மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டார். பொதுமக்கள், அரசுத் தரப்பு பிரதிநிதிகள் அடங்கிய லோக்பால் மசோதா வரைவுக் குழு குறித்த அறிவிப்பாணை உடனடியாக வெளியிடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். சனிக்கிழமை காலை அறிவிப்பாணை வெளியிடப்படும், அதன் நகல் கிடைத்த பின்னரே அண்ணா ஹஸôரே உண்ணாவிரதத்தை கைவிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். 4 நாள்கள் உண்ணாவிரதம்: ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தும் அதிக அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்குவதற்கான திருத்தப்பட்ட லோக்பால் (ஜன் லோக்பால்) மசோதாவை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி காந்தியவாதியான அண்ணா ஹஸôரே கடந்த செவ்வாய்க்கிழமை தில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். இந்தப் போராட்டத்துக்கு நாடு முழுவதிலுமிருந்து அரசியல்வாதிகள், ஆன்மிகவாதிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஹஸôரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டங்களும் நடைபெற்றன.

இளங்கோவன்: தி.மு.க., ஆட்சி தொடர்வது காலத்தின் கட்டாயம்


""தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் தொடர்வது காலத்தின் கட்டாயம். மத்திய அரசுடன் இணக்கமான ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு நல்லது,'' என, இளங்கோவன் பேசினார்.
சென்னை ராயபுரம் தொகுதி காங்., வேட்பாளர் மனோவை ஆதரித்து, ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் திறந்த ஜீப்பில் வீதிவீதியாகச் சென்று பிரசாரம் செய்தார். பின்னர் ஆர்.கே.நகர் தொகுதியில் சேகர்பாபுவை (தி.மு.க.,) ஆதரித்து புதுவண்ணாரப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் இளங்கோவன் பேசியதாவது: தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் தொடர்வது காலத்தின் கட்டாயம். மக்களுக்கு தேவையானதைச் செய்யும் ஆட்சியை மாற்றிவிடக்கூடாது. காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, பொருளாதார நிபுணர்கள் சாத்தியமே இல்லை என்றனர். ஆனால், காமராஜர் சாதித்துக் காட்டினார். அதுபோல் கருணாநிதி இலவச "டிவி' என்று அறிவித்தபோது, நானே நம்பவில்லை. நிபுணர்களும் சாத்தியமில்லை என்றனர். கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் சொன்னபடி இலவச "டிவி' வழங்கினார். ஜெயலலிதா இதற்கு முன் ஐந்தாண்டுகளில் மக்களைப் பற்றி கவலைப்படவே இல்லை; மாக்களைப்பற்றிதான் சிந்தித்தார். யானைகளுக்கு முகாம் நடத்தியதுதான் அவரதுசாதனை.

கருணாநிதியை நான் பலமுறை விமர்சித்துள்ளேன் என்பது வேறு விஷயம். ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். மக்களுக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்தினார். என் சுயமரியாதைதான் முக்கியம்; ஏழை,எளிய மக்களைப்பற்றி கவலையில்லை என்கிற ஜெயலலிதாவை ஆட்சியில் அமர வைத்தால், நடந்து வரும் திட்டங்களும் முடங்கிப்போகும். வரவேண்டிய நல்ல புதிய திட்டங்களும் வராமல் போய்விடும். யார் பெரியவர் என்ற போட்டியால் தமிழகத்தில் வளச்சி தடைபடும். தமிழகத்துக்கு நல்லது செய்யும் இந்த ஆட்சி தொடர்ந்தால், தமிழகம் கேட்கும் திட்டங்களை எல்லாம் மத்திய அரசு தரும். என்னைப் பொறுத்தவரை உதயசூரியன், கை சின்னங்கள் வேறு வேறு அல்ல. அதை உணர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் சேகர்பாபுவையும், ராயபுரம் தொகுதியில் காங்.,வேட்பாளரையும் வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.
K Shekar - chennai,இந்தியா
2011-04-09 02:48:25 IST Report Abuse
அதிமுக சொம்புகளே, திமுகவை திட்டினா, இளங்கோவன் நல்லவர், அதே அவர், உண்மைய சொன்னா கெட்டவரா? மூளை மழுங்கிபோய் மங்கி சொங்கியாக இருக்கும் உங்களை சொல்லி குற்றமில்லை, உங்களை இந்த அளவுக்கு அறிவுகெட்டவர்களாகவும் அரை வேக்காட்டு ஜென்மங்களாகவும் மூளை சலவை செய்த, நாலரை வருடம் காணாமல் போய், இப்போது தேர்தல் என்றவுடன் பதவி வெறி பிடித்து, பல்லை இளித்துக்கொண்டு வந்து ஒட்டு பிச்சை பொறுக்கும் ......காரியின் கைங்கர்யம் இது. சுயநலம் கொண்ட ஜெயாவால் கெட்டுபோன உங்களுக்கு, சாக்கடையெல்லாம் சந்தனமாகும், சத்தியம் பொய்யாகும், நல்லவை நாற்றமெடுக்கும் ,அரைபைதியங்களாக அலையும் உங்களுக்கு கலைஞரின் 108 ஆம்புலன்ஸ் வரும், உங்கள் பைத்தியத்துக்கு வைத்தியம் கிடைக்கும். பொறுத்திருங்கள், மே பதிமூணு, தலைவர் கலைஞரின் ஆறாவது முதல்வர் பதவி நடைபெறும். கலைஞர் முதல்வரானால் அந்த பதவிக்கு பெருமை, தமிழுக்கு பெருமை, தமிழ்நாட்டுக்கு பெருமை, மனித குலத்துக்கே பெருமை. ஆனால் தப்பி தவறி அந்த பதவிக்கு ஜெ. வந்துவிட்டால், ( வரவே முடியாது என்பது தான் நிச்சயம்) பதவிக்கே பைத்தியம் பிடிக்கும் சட்டசபை சாக்கடையாகும், வருகால சந்ததிகள் வாழ்வு நசுக்கப்படும், . மழைக்காலம் மறைந்து போகும், மக்கள் மனம் மாயுந்து போகும், சுனாமி அரக்கன் வீறு கொண்டு வந்து , சும்மா புகுந்து புகுந்து விளையாடி, தமிழினமே, azhinthu poka seithuvidum.

2011-04-09 02:31:08 IST Report Abuse
o ithuthaan maartam maartam nu ellorum solrangalo....! nethuvara eppadi thittinirkal...ippo paarunga ippadi vilutringale...sari sari polachu ponga....! engalala ungalukku 15 seat kediachuthna santhosam thaan!
sathish - melbourne,ஆஸ்திரேலியா
2011-04-09 02:22:21 IST Report Abuse
நினைத்தாலே, பாவமா இருக்கு, இளங்கோவனமே , உங்களை. எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்கன்னு நினைச்சா ,என் மனசு அப்படியே சுக்கு நூறா உடையுது. ஆனா ஒண்ணு இது எல்லாம் சோனியா சொல்லி கொடுத்த நாடகமுனு எனக்கு நல்லாவே, தெரியும். எப்படியும் தேர்தலுக்கு பின்னே அமைய போகும் அ.தி.மு.க.ஆட்சியோடு காங்கிரஸ் கூட்டு வைக்க போகுது. அதனாலேதானே சோனியா கூட பிரசாரத்தில் அம்மாவை பத்தி ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேசாமே ஏதோ ஓட்டு போடுங்கோனு சொல்லிட்டு போயிட்டாங்கோ. தேர்தலில் தி.மு.க.வுக்கு பத்து சீட்டு கிடைச்சாலே அதிகம். அம்மா ஜே.ஜே. நல்ல மேஜார்டியோட ஆட்சியில் உட்கார போறாங்கோ.
Nathan - Manama,பஹ்ரைன்
2011-04-09 02:20:44 IST Report Abuse
இளங்கோவன் ,திருமா, வைகோ இவர்களை எல்லாம் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது
Reply
Unarvil Tamilan - chennai,இந்தியா
2011-04-09 02:17:37 IST Report Abuse
சந்தர்ப்ப சுயநல "வாதிகளிடமிருந்தும்" , ஒரு குடும்ப ஆதிக்கத்திலிருந்தும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் அனைவருக்கும் கிடைத்த அருமையான வாய்ப்பு "ஒரு துளி மை" ! தமிழக மக்களே இவர்களை இந்த குடும்ப ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும்! மக்களே சிந்தித்து ஓட்டளிப்பீர் !

vijay - paris,பிரான்ஸ்
2011-04-09 02:15:31 IST Report Abuse
அப்ப எப்ப ஒங்க காமராஜர் ஆட்சி மலரும் ?
Sekar Sekaran - jurong west,சிங்கப்பூர்
2011-04-09 01:46:22 IST Report Abuse
இப்படியுமா ஓர் பிழைப்பு? பொழுது புலர்ந்தால் ஒரு பேச்சு..! மாலை மயங்கினால் ஒரு பேச்சு..! நிதானம் இல்லாத தடுமாறும் பேச்சு.! "எப்படி வேண்டுமானாலும்" பிழைக்கலாம்..என்பதற்கு உதாரணமாய் ஒருவரை காட்டவேண்டுமென்றால் காலம் கண்டிப்பாய் "இளங்கோவனை" உதாரணமாய் காட்டியே கேவலமாய் சொல்லிக்கொண்டே இருக்கும்.....

srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ
2011-04-09 01:40:36 IST Report Abuse
கொஞ்ச நாள் முன்னாடி சரவெடி மாதிரி பெனாத்தின மனுஷன் இப்போ நமுத்துப்போன ஊசிவெடி மாதிரி புஸ் புஸ்-ன்னு பம்முறத பாரு. அப்படியே கோபாலபுரம் பக்கம் போயி இதே மாதிரி கூவிட்டு கையோட ஒரு இலவச 'டிவி' யையும் வாங்கீட்டு ஊட்ல போய் மல்லாக்க படுத்து "மானட மயிலாட" பாருங்க. நல்ல வேலை உங்க அப்பா உயிரோடு இல்லை இதையெல்லாம் பார்பதற்கு. எப்படிப்பட்ட மனிதருக்கு இப்படிப்பட்ட பிள்ளை.
Baskaran Subramanian - chennai,இந்தியா
2011-04-09 01:28:26 IST Report Abuse
sekhar பாபு உன்ன பாத்தா "ஆட்ட வெட்றதுக்கு முன்னாடி நல்லா பூ வச்சி, பொட்டு வச்சி, மாலை போட்டு அலங்கரிச்சி நிக்க வெப்பாங்க" அந்த மாதிரியே நீங்க எங்க கண்ணுக்கு தெரியிறிங்க...!!! மே... மே.....

Indian - Chennai,இந்தியா
2011-04-09 00:46:31 IST Report Abuse
தமிழ் நாடுல தேர்தல் முடித்தவுடனே தங்கபாலு வை நீக்கிட்டு இளங்கோவன்னை தலைவராக்க போறதா காங்கிரஸ் சொல்லிருக்கும் !!! உடனே தி.மு.க., ஆட்சி க்கு ஜால்ரா அடிக்க ஆரம்பிச்சுருவாங்க !!!

ROBIN HOOD - bedok,சிங்கப்பூர்
2011-04-09 00:33:59 IST Report Abuse
இளங்கோவன் ஒரு ......... கெட்ட மனிதர் என்பதை நிரூபித்து விட்டார் ... வாழ்த்துக்கள் இளங்கோவன் அவர்களே ... மண்ணை கவ்வுவதற்கு ......

Indonesia ஆட்கடத்தல்காரர்களை 15 வருடம் சிறையில் வைக்க புதிய சட்டம்

சட்டவிரோத ஆட்கடத்தல் காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பிலான சட்டமொன்றை உருவாக்க இந்தோனேசியா தயாராகி வருகிறது. இது தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பம்பாங் யுதோயோனோ தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிதாக கொண்டுவரப்படவுள்ள சட்டத்தின் அடிப்படையில் ஆட்கடத்தல் தொடர்பில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு 15 வருட சிறை தண்டனையும், அதற்கு தூண்டுதலாக இருந்து லஞ்சம் பெறுபவர்களுக்கு 5 வருட சிறை தண்டனையும் கடத்தப்படுபவர்களுக்கு 170 000 டொலர் தண்டமும் தண்டனையாக விதிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமானது இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு நன்மையாக அமையுமென தெரிவிக்கப்படுகிறது. இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் அதிக சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆயுதம் கடத்தித் தந்தவர் கே.பி: அவரையும் விசாரியுங்கள்: தடுப்புக்காவல் கைதிகள்

இராணுவத்திற்கெதிராக போரிட எங்களுக்கு ஆயுதம் கடத்தித் தந்தவர் கே.பி: அவரையும் விசாரியுங்கள்: தடுப்புக்காவல் கைதிகள்
இராணுவத்திற்கெதிராக போரிடுவதற்கு விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஆயுதக்கடத்தல் மேற்கொண்ட கே.பி. விசாரிக்கப்பட வேண்டுமென்று தடுப்புக் காவல் கைதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தடுப்புக் காவல் கைதிகளிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள முயன்ற போதே அவர்கள் மேற்கண்ட கோரிக்கையை முன் வைத்துள்ளனர். விடுதலைப் புலி உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் இயக்கத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டு, போர்ப்பயிற்சியளிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் தாம் நிரபராதிகள் என்று வாதிடும் அவர்கள், தமக்கு போரிடுதவற்கான ஆயுதங்களை வழங்கிய கே.பி. யை மட்டும் விசாரிக்காமல் விட்டு வைத்திருப்பதன் மர்மம் என்னவென்றும் கேள்வியெழுப்பியுள்ளனர். தடுப்புக் காவல் கைதிகளின் கேள்விக்கு பதிலளிக்க முடியாத பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளையும் இடைநடுவில் கைவிட்டு கொழும்பு திரும்பியுள்ளனர்

ராகுல் காந்தி பிரசாரக் கூட்டத்தில் இலங்கை அகதியை தேடிய பொலிசார்

தூத்துக்குடி, ஏப். 7: இலங்கை அகதிகள் முகாமில் இருந்து தப்பிய நபர், விளாத்திகுளத்தில் ராகுல்காந்தி பங்கேற்ற கூட்டத்தில் புகுந்துள்ளாரா என்று அவரது புகைப்படத்துடன் பொலிசார் தீவிர சோதனை நடத்தினர்.  தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி பேசினார்.  இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் கைகளில் ஒரு நபரின் புகைப்படம் அடங்கிய துண்டுச் சீட்டுகள் இருந்தன. அந்தப் புகைப்படத்தில் காணப்பட்ட நபரை போலீஸப்ர் கூட்டத்தில் தீவிரமாகத் தேடினர்.  இதுதொடர்பாக விசாரித்தபோது புகைப்படத்தில் இருந்த நபர் இலங்கை தமிழ் அகதி செல்வக்குமார் என்பது தெரியவந்தது.  சேலம் மாவட்டம், நாகையன்பட்டியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த செல்வக்குமாரை கடந்த ஓராண்டாக காணவில்லையாம். அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம்.  இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றிருந்த அவர், இப்போது இந்தியாவுக்குத் திரும்பியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாம்.  எனவே அவர், ராகுல்காந்தி பங்கேற்ற பிரசாரக் கூட்டத்துக்கு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடியதாக பொலிசார் தெரிவித்தனர்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

Vaiko மீடியாக்களிடம் தேர்தல் குறித்து பேசவேண்டாம்: கட்சியினருக்கு வைகோ வேண்டுகோள்

சென்னை, ஏப்ரல் 8: மதிமுகவினர் தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் எதுவும் பேச வேண்டாம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று மதிமுக முடிவு செய்த பிறகு, இந்தக் கட்சியினர் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தங்கள் கூட்டணியில் இருந்து வெளியேற்றியதற்காக அதிமுக அணிக்கு எதிராக இவர்கள் வாக்களிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து வைகோ எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதற்கிடையில் மதிமுகவினர் மானசீகமாக திமுக அணியை ஆதரிப்பதாகவும், திராவிட இயக்கங்கள் விரைவில் ஒன்று சேரும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதவிர சில மாவட்டங்களில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மதிமுக மாவட்ட நிர்வாகிகள் சிலர் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுத்தனர். இந்தச் சூழ்நிலையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ``தேர்தல் குறித்து மதிமுகவினர் கருத்துகள் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும்'' என வைகோ தன் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரசாரத்துக்கு வந்த திமுக தொண்டர் படுகொலை

ஆலங்குளம், ஏப்ரல் 8: திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்துக்கு பிரசாரத்துக்காக வந்த திமுகவினரிடையே ஏற்பட்ட குழு மோதலில் ஒருவர் பலியானார். ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பூங்கோதையை ஆதரித்து பிரசாரம் செய்ய முன்னாள் அமைச்சர் ராதிகா செல்வியின் ஆதரவாளர்கள் ஆலங்குளம் வந்தனர். இவர்கள் அனைவரும் ஒரு தனியார் கல்லூரியில் தங்கியிருந்தனர். இதற்கிடையே நேற்று இரவு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மோதல் வெடித்தது. வாய்த்தகராறு முற்றி கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் திமுக தொண்டர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Jaffna Municipal ஊழல் எதுவும் இல்லை – முதல்வர்

யாழ் மாநகரசபைக்குள் ஊழல் எதுவும் இல்லை – முதல்வர்

யாழ் மாநகரசபை ஊழல் நிறைந்ததாகக் காணப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நவீன வசதிகள் கொண்ட வர்த்தகக் கட்டடத் தொகுதியொன்று அமைக்கப்படுவதைப் பொறுக்காதவர்கள் வேண்டுமென்றே பொய்க்குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி பணிகளைக் குழப்பி வருவதாகவும் அவர் கூறினார்.
“யாழ்ப்பாணத்தில் வெளியாகும் ஒரு பத்திரிகை யாழ் மாநகரசபைக்குள் ஊழல் நிறைந்துள்ளதாக செய்திகளை வெளியிட்டு வருகிறது. இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை” என்று திட்டவட்டமாக மறுத்தார் அவர்.
“யாழ்ப்பாண வர்த்தகர்களின் கோரிக்கைக்கு அமையவே யாழ்ப்பாணத்தில் ஐந்து மாடிக் கட்டடம் அமைக்கப்படுகிறது. இதன்மூலம் மக்களும், வர்த்தகர்களும் பெரும் நன்மையடைவர்” என்று தெரிவித்த அவர், யாழ் மாநகர சபை யாழ்ப்பாண மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த கட்டடத்தை அமைத்துள்ளதாகவும், இது சில விசமிகளுக்குப் பிடிக்கவில்லை என்றும் கூறினார்.
“யாழ்ப்பாணத்தில் இவ்வாறான நவீன கட்டடத்தைக் கட்டி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வழிமுறைகளை ஏற்படுத்தும் யாழ் மாநகரசபையின் நடவடிக்கையைப் பிடிக்காத சிலர் யாழ் மாநகர சபைக்குள் ஊழல் நிறைந்துள்ளதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொய் வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“ஐந்து மாடி நவீனக் கட்டடத் தொகுதியை அமைப்பது தொடர்பாக அனைவரிடம் வெளிப்படையாகக் கேட்டோம். அப்போது ஒரு தமிழ் முதலீட்டாளர் முன்வந்து யாழ் மாநகரசபைக்கு எந்தவித செலவும் இல்லாமல் அந்த கட்டத்தைக் கட்ட முன்வந்தார்” என்று தெரிவித்தார்.
இந்த நவீன சந்தைக் கட்டடத் தொகுதி மக்களுக்குப் பயன்பெறும் விதத்தில் அமைவதை விரும்பாத சிலர் மாநகர சபை ஊழல் செய்வதாகவும், இதற்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் கூறிவருவதாகவும் தெரிவித்த அவர்,
“உண்மை எனது பக்கம் உள்ளது. எந்த விசாரணையையும் எதிர்கொள்ள நான் தயார்” என்றார் ஆணித்தரமாக.
யாழ் மாநகர சபையைத் தாம் பொறுப்பேற்கும்போது 2 உழவியந்திரங்கள் மட்டுமே இருந்ததாகவும், தற்போது வாகனப் பிரிவு சீர்செய்யப்பட்டு 22 உழவியந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறிய அவர், நல்லதொரு நிலைக்கு மாநகர சபையைக் கட்டியெழுப்பிச் செல்லும்போது அதனைப் பொறுத்துக்கொள்ளாத சில விஸமிகள் ஊழல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி பணிகளுக்கு தடையேற்படுத்துவதாகவும், யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா கூறினார்.

Jaffna Victoria road விக்டோரியா வீதியூடாக அதிகளவான மக்கள் பயணம்

யாழ் விக்டோறியா வீதி திறந்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அந்த வீதியால் பெருமளவான மக்கள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாடசாலை மணவர்கள், வியாபாரிகள் மற்றும் பேரூந்துகள் என்பன இந்த வீதியால் தற்போது பயணங்களை மேற்கொண்டு வருகின்றன.
இந்த வீதி இராணுவத்தினரால் திறந்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்களின் போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டுள்ளது.
1995ம் ஆண்டு ரிவிரச இராணுவ நடவடிக்கையின் மூலம் இராணுவத்தினர் யாழ் குடாநாட்டைத் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த பின்னர், விக்டோறியா வீதி, மணிக்கூட்டுக்கோபுர வீதி உள்ளிட்ட பகுதியில் இராணுவத்தினரின் 512வது கட்டளைத் தலைமையகம் அமைக்கப்பட்டதுடன், சுபாஸ் விடுதி, ஞானம்ஸ் ஹோட்டல் உள்ளிட்ட கட்டடங்களும் இராணுவத்தினரின் பாவனைக்கு எடுக்கப்பட்டது.
16 வருடங்களின் பின்னர் தற்போது இந்தப் பகுதி முழுமையாக மீண்டும் மக்கள் பாவனைக்குத் திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து பெருமளவான மக்கள் தற்போது இந்த வீதியூடாக பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

திராவிட இயக்கங்கள் ஒன்றுபடுகின்ற சூழல் விரைவில் வரும்

மதுரை, ஏப்.7: திராவிட இயக்கங்கள் ஒன்றுபடுகின்ற சூழல் விரைவில் வரும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.  மதுரையில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:  தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக நான் சொல்லவில்லை. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது பாரபட்சமில்லாமல், நீதிமன்றம்போல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். நீதிமன்றங்களேகூட சில சமயங்களில் தடுமாறும் நிலையில், தேர்தல் கமிஷன் தன் மீது எந்தவிதமான விமர்சனமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு அமோக வெற்றி வாய்ப்பு உள்ளது. திமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர். உதாரணமாக கலைஞர் வீடு வழங்கும் திட்டம் மூலம் இதுவரை 1.10 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மீதமுள்ள வீடுகளைக் கட்டித் தருவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளதை இங்கு சுட்டிக்காட்டியுள்ளீர்கள். அவருக்கு கிடைத்த தகவல்படி அவர் அதைச் சொல்லியிருக்கலாம். அது துல்லியமாகவும் இருக்கலாம்.  மதிமுகவில் உள்ள இரண்டாம் நிலைத் தலைவர்கள் திமுகவுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்களே என்று கேட்கிறீர்கள். இந்தத் தேர்தலில் பல இடங்களில் மதிமுக தொண்டர்கள் நேரடியாகவும், மானசீகமாகவும் திமுகவுக்கு ஆதரவு தருகின்றனர். திராவிட இயக்கங்கள் ஒன்றுபடுகின்ற சூழல் விரைவில் வரும் என்பதற்கான அடையாளம்தான் இது.  தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுவது பற்றி எதிர்க்கட்சிகள் குறைகூறி விமர்சித்து வருகின்றன. மின்பற்றாக்குறை என்பது ஒரு தொடர் நிகழ்வு. வீடுகள், தொழிற்சாலைகளுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தேவையைவிட உற்பத்தி குறைவாக இருப்பதால் பற்றாக்குறை ஏற்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் மின்னுற்பத்தியை அதிகரிக்க ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் செய்த தவறு எங்கள் தலையில் விழுந்திருக்கிறது.  மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மின்திட்டங்கள் வரிசையாக நிறைவேற்றப்பட்டு மின்பற்றாக்குறை அகற்றப்படும்.  தமிழகத்தை மீட்டெடுக்கப் போவதாக ஜெயலலிதா பிரசாரம் செய்து வருகிறார். முதலில் அவர் பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலிருந்து தன்னுடைய நகைகளை மீட்கட்டும்.  மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி செல்வாக்கு மிகுந்தவராக இருக்கிறார். மதுரை மக்களுக்குத் தேவையான நன்மைகளை அவர் செய்து வருகிறார். இதைக் கண்டு பொறுக்காமல் ஜெயலலிதாவும் அவரது அணியினரும் அவர் மீது தேவையில்லாமல் புகார்களைக் கூறிவருகின்றனர்.  தேர்தல் ஆணையத்தில் ஏற்கெனவே அதிகாரியாக பணி செய்து ஓய்வு பெற்றுள்ள சிலரின் உதவியைக் கொண்டு தேர்தல் ஆணையம் இப்போது செயல்பட்டு வருவதாக பேச்சு அடிபடுகிறது. அது உண்மையாக இருக்கக் கூடாது.  அரசு அதிகாரிகள் சிலர் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக சொல்லப்படுகிறதே என்று கேட்கிறீர்கள். அரசியலில் மட்டுமல்ல; அதிகாரிகள் மத்தியிலும் எட்டப்பர்கள் உண்டு.  கோவையில் அதிமுக கூட்டணித் தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, திமுக குடும்பக் கட்சி என்று பேசியிருக்கிறார். குடும்பக் கட்சியாக இருக்கலாம். ஆனால், சந்திரபாபு நாயுடு போல குடும்பத்தை குலைத்த கட்சி திமுக அல்ல.  இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா முதல்வராகவும், விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பார் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியுள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரன் பெயரை குறிப்பிடும்போது மறைந்த அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் ஞாபகம்தான் எனக்கு வருகிறது. அவர் மறையும்போது என்னை அழைத்து, எனக்குப் பதிலாக எங்கள் சமூகத்திலிருந்து ஓர் அமைச்சரை நியமிக்க வேண்டுமென்றால் பண்ருட்டி ராமச்சந்திரனைப் போன்ற துரோகிகளை போட்டு விடாதீர். எனக்கு விரோதியாக இருந்தாலும் கடலூர் இளம்வழுதி போன்றவர்களை நியமியுங்கள் என்று சொன்னார். நான் அவருடைய பேச்சைக் கேட்காததால் அனுபவிக்கிறேன்.  தமிழகத் தேர்தல் முடிவுகள் மத்தியில் எதிரொலிக்குமா? எப்போது என்று கேட்கிறீர்கள். நிச்சயம் எதிரொலிக்கும். எப்போது எனில் எதிரொலிக்கும்போது தெரியும் என்றார்.  பேட்டியின்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, கனிமொழி எம்.பி., கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Khushboo பட்டினியையே சாகடித்தவர் கருணாநிதி: கோட்டக்குப்பத்தில் குஷ்பு பிரசாரம்

:""அ.தி.மு.க., ஆட்சியில் பட்டினிச் சாவுகள்தான் நடந்தது. கருணாநிதி ஆட்சிக்கு வந்தபிறகு, பட்டினியையே சாகடித்தார்,'' என, நடிகை குஷ்பு பேசினார்.வானூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் புஷ்பராஜை ஆதரித்து, நடிகை குஷ்பூ நேற்று வேன் மூலம் பிரசாரம் செய்தார். கோட்டக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் குஷ்பு பேசியதாவது:
சிறுபான்மை மக்களுக்காக உழைப்பவர் முதல்வர் கருணாநிதி. இஸ்லாமியர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு கொடுத்துள்ளார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 5 சதவீதமாக உயர்த்திக் கொடுப்பார். அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் பல தொழிற்சாலைகள் மூடிக் கிடந்தன. தி.மு.க., ஆட்சியில் முதல்வர் கருணாநிதி எத்தனையோ புதிய தொழிற்சாலைகளை திறந்துள்ளார். ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். விவசாயிகளுக்கு 7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளார். மேலும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மின் மோட்டார் கொடுத்துள்ளார். கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அவர் செய்துவரும் நல்ல திட்டங்கள் தொடரும்.அ.தி.மு.க., ஆட்சியில் பட்டினிச் சாவுகள்தான் நடந்தன. கருணாநிதி ஆட்சிக்கு வந்தபிறகு, பட்டினியையே சாகடித்தார். அவர், மக்களைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார். விழுப்புரத்தில் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.இப் பகுதியில் சரியான மருத்துவமனை வசதி இல்லை. இங்குள்ளவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டி உள்ளது. அங்கு, புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கிறார்கள். தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றால், இப்பகுதியில் படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்படும். தொகுதியில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படும். ஆறாவது முறையாக கருணாநிதி முதல்வராக தேர்வு செய்யப்பட, தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழகத்தின் எதிர்காலமும், உங்கள் எதிர்காலமும் நன்றாக இருக்க வேண்டுமானால், கருணாநிதி தலைமையில் மீண்டும் தி.மு.க., ஆட்சி வரவேண்டும்.இவ்வாறு குஷ்பு பேசினார்.

தமிழிலும் சிங்களத்திலும் மக்களுக்கான சேவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம், சலுகை பெறும் ஊழியர்கள் மக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது. நம்பிவரும் மக்களின் கண்ணீரை துடைக்க அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். வடக்கு கிழக்கு என்றில்லாமல் ஒரே நாடு என்ற ரீதியில் தமிழிலும் சிங்களத்திலும் மக்களுக்கான சேவைகளை வழங்க அரசாங்க ஊழியர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

தம்மை நம்பி வரும் மக்களின் கண்ணீரைத்துடைப்பதில் அரச ஊழியர்கள் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் அவர்களுக்கு சம்பளவ உயர்வு, வீட்டுக்கடன் உட்பட பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.நாட்டு மக்களின் நிதியிலிருந்து சம்பளம் மற்றும் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் அரச ஊழியர்கள் மக்களுக்கு சுமையாக அல்லாது சேவையாளர்களாக வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரச முகாமைத்துவ இணைந்த சேவைக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 2.333 பேருக்கான நியமனக்கடிதம் வழங்கும் வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நியமனக்கடிதங்களை கையளித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர்கள் ஜோன் செனவிரத்ன, நவீன் திசாநாயக்க உட்பட அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில் அரசாங்க ஊழியர்கள் என்பவர்கள் சிறப்பான தொழிலை செய்பவர்கள். சமூகத்தில் அவர்களுக்கு சிறந்த இடம் உள்ளது. அதேபோன்று முன்பு எழுதுவினைஞர்களாக இத்துறையில் இணைபவர்கள் சிவில் சேவையில் உயர் அதிகாரிகளாகவே ஓய்வு பெற்றுச் செல்கின்றனர். இந்த வகையில் அநாகரிக தர்மபால டி. பி. இலங்கரத்ன போன்றோர் குறிப்பிடக் கூடியவர்கள்.
தற்போது அரச சேவையில் 13 இலட்சம் பேர் சேவையாற்றுகின்றனர். அரச நியமனங்களை ரத்துச் செய்திருந்த யுகமொன்று இந்த நாட்டில் இருந்தது. தற்போது அரச துறை முன்னேற்றம் கண்டுள்ளதுடன் அத்துறையிலுள்ளோர் இரு மொழித் தேர்ச்சி, கணனி அறிவுடனும் திகழ்கின்றமையைக் குறிப்பிட வேண்டும். அரசாங்க ஊழியர்கள் இந்த நாட்டு மக்களின் பணத்திலேயே கல்வி கற்கின்றனர் என்பதை மறக்கக் கூடாது. அதனைக் கருத்திற்கொண்டு சேவைக்காக வரும் மக்களை அன்புடன் அணுகி அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தம்மிடம் சேவைகளைப் பெறவருவோரை தமது தாய், தகப்பன் உறவினர் என்று கருதி அவர்களின் தேவைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
நாட்டின் சில பகுதிகளில் அரச ஊழியர்கள் சுதந்திமாக பணியாற்ற முடியாத காலம் ஒன்று இருந்தது. தற்போது நாட்டில் எங்கும் எவரும் சுதந்திரமாக பணிசெய்ய முடியும்.எல்லைக் கிராமங்கள் என்ற பேச்சுக்கே தற்போது இடமில்லை அதேபோன்று கஷ்டப்பிரதேசம் என்ற பெயரையும் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதில் அரச ஊழியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவர்கள் நாட்டுக்காக தமது எட்டு மணித்தியால பணியை முறையாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

துக்ளக்"அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு’ as a brahmin

தமிழகத் தேர்தல் – 2011; ஒரு பார்வை!
- துக்ளக்
tamilnadu election2011தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிற இரண்டு பெரிய கட்சிகளாகிய தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்களுடைய கூட்டணிகளை ஏற்படுத்திக் கொள்வதில், சில பிரச்சனைகளைச் சந்தித்தன.

காங்கிரஸ் கட்சி, தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுமா அல்லது தனியே செல்லுமா என்பது, ஒரு நிலையில் கேள்விக்குரியதாகியது. இதன் காரணமாக, மத்திய அமைச்சரவையிலிருந்தே விலகுவதாக அறிவித்த தி.மு.க. – ‘இனி மத்திய அரசுக்கு வெளியிலிருந்து, பிரச்சனைகளின் அடிப்படையில்தான் ஆதரவு’ என்று அறிவித்த தி.மு.க. – இறுதியில் காங்கிரஸிடம் பணிந்தது. தி.மு.க. மந்திரிகளாகிய அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரிடம் சோனியா காந்தி மிகவும் கடுமையாகப் பேசியபோதும் கூட, தி.மு.க. அடங்கிச் சென்றது.

இதற்குக் காரணம், தேர்தலில் காங்கிரஸ் கட்சியினால் ஏற்படக் கூடிய ஓட்டு லாபம் மட்டுமல்ல – ஸ்பெக்ட்ரம் விசாரணை உரிய வகையில் நடந்து முடிந்தால் பேராபத்து என்பதால், அந்த வேகத்தை தடுப்பதற்காக, காங்கிரஸின் சினேகம் தி.மு.க.விற்குத் தேவைப்பட்டது. அதனால்தான் முதலில் சுயமரியாதை என்று ஒரு சவடால் மிரட்டலை விடுத்த தி.மு.க., பின்பு முழுமையாகச் சரணடைந்தது.

இப்படி, இது ‘சுமுகமாக’ முடிந்தாலும், ஏற்கெனவே காங்கிரஸ்காரர்களுக்கு தி.மு.க. மீது இருந்த கோபம், இதனால் மேலும் அதிகமாகி இருக்கிறது. டெல்லியில் ‘ஆட்சியில் கூட்டாட்சி, ஊழலில் சுயாட்சி’ என்று செயல்பட்ட தி.மு.க., தமிழகத்தில் காங்கிரஸிற்கு அமைச்சரவையில் இடம் கொடுக்காதது, காங்கிரஸாருக்குக் கோபத்தை ஏற்படுத்தியதில் வியப்பில்லை. இது தவிர, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தினால், தி.மு.க. ‘சம்பாதித்ததில்’ காங்கிரஸுக்கு பங்கு உண்டோ இல்லையோ – தி.மு.க. சம்பாதித்த கெட்ட பெயரில் காங்கிரஸிற்குப் பங்கு நிச்சயம் உண்டு என்ற நிலை, காங்கிரஸாருக்குக் கோபத்தைக் கூட்டியது.

பா.ம.க.விற்கு சீட்களை ஒதுக்கி விட்டு, அதைக் காட்டியே காங்கிரஸிற்கு சீட்டை குறைக்கப் பார்த்த கலைஞரின் மலிவான தந்திரம் (இதை பல பத்திரிகைகளும் ராஜதந்திரம் என்று போற்றினாலும்), காங்கிரஸ் மேலிடத்திற்கு எரிச்சலை ஊட்டியது. விளைவு – காங்கிரஸாரின் கோபம்; கழகத்தின் சரணாகதி; தந்திரத்தின் தோல்வி.

இப்படி காங்கிரஸிற்கும், கழகத்திற்கும் இடையே உள்ள உறவு பெரும் பிரச்சனைகளைக் கண்டுள்ளதால், காங்கிரஸாரின் ஓட்டு, எந்த அளவிற்கு கழக வேட்பாளர்களுக்குக் கிடைக்கும் என்பதும், கழகத்தினரின் ஓட்டு எந்த அளவுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கிடைக்கும் என்பதும் நிச்சயமற்ற விஷயங்கள். இந்த உறவு மட்டுமல்ல – விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க.வின் உறவும் இப்படிப்பட்டதுதான்; தலைவர்கள் செய்து கொண்ட சமாதானத்தைத் தொண்டர்கள் செய்து கொள்ளாததால், அவரவர்கள் ஓட்டு அந்தந்த கட்சிகளுக்குப் போகுமே தவிர, மற்றவர்களுக்கு கிட்டாமல் போகும்.

இது போதாதென்று, அண்ணன் – தம்பி உறவும், சலசலப்புகளை சந்தித்து வந்துள்ளதால், கழகத்தில் அவர்களுடைய பிரிவுகளைச் சார்ந்தவர்களின் பரஸ்பர ஒத்துழைப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்று சொல்ல முடியாது.
இப்படி, உறவுகளிடையே உள்ள வேற்றுமைகள், தி.மு.க. கூட்டணியை உடனிருந்தே கொல்லும் நோயாக வாட்டக் கூடிய வாய்ப்புகள் அதிகம். எதிர் பக்கத்தில், அ.தி.மு.க. உள்ளடக்கிய கூட்டணியிலும் பிரச்சனைகள் எழுந்தன. சீட் பிரச்சனை, தொகுதிப் பிரச்சனை போன்ற அந்த பிரச்சனைகள், தி.மு.க. கூட்டணியில் இருந்தது போல், உறவுப் பிரச்சனைகள் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

வேட்பாளர்கள் தேர்வு முடிந்து, தொகுதிப் பிரச்சனை, தொங்கலில் நின்ற நேரத்தில் அ.தி.மு.க. தரப்பு, தான் போட்டியிடுகிற தொகுதிகளின் பட்டியலை, வேட்பாளர்களின் பெயர்களுடன் வெளியிட்டு விட்டது. யாருமே எதிர்பார்க்காத இந்த நடவடிக்கை, கூட்டணிக் கட்சிகளுக்கு ‘அதிர்ச்சி’யைத் தர, அவை ஒன்று கூடி ஆலோசனை நடத்தின. இதைச் சாக்கிட்டு, ‘அ.தி.மு.க. கூட்டணி முறிந்து, ஒரு மூன்றாவது அணி உருவாகி விட்டது’ என்றே அறிவித்து, இந்த மூன்றாவது அணியின் தலைமையை விஜயகாந்திற்குத் தந்து, பத்திரிகை உலகம் ஒரு வதந்திப் புயலைக் கிளப்பி விட்டது.

ஆனால் விஜயகாந்தோ, கம்யூனிஸ்ட்களோ, மற்ற சில கட்சிகளோ, இந்தப் புயலால் நிலை தடுமாறிவிடவில்லை. மாறாக, அ.தி.மு.க.வுடன் பேசி, அந்தந்தக் கட்சிகள், தனித்தனியே தொகுதி உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன. இது நடக்காமல் இருக்க, ஆளும் கட்சி எவ்வளவோ முயன்றது. பணம், புரட்டு, உளவுத் துறையின் வித்தைகள்... என்று பல நடவடிக்கைகள் வந்தன. ஆனால், இவை எல்லாம் தோல்வியடைந்து, அ.தி.மு.க. கூட்டணி முழுமை அடைந்தது.

இதற்கு, அடிப்படைக் காரணம் – தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வினரிடையே, தொண்டர்கள் மத்தியில் தோன்றி விட்ட கசப்புணர்வு, அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்படவில்லை. தி.மு.க. கூட்டணியை காங்கிரஸ் தொண்டர்கள் வெறுத்தனர்; ஆனால் அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணியை இரு கட்சித் தொண்டர்களும் முழுமையாக விரும்பினர்.

இதைத் தவிர, அ.தி.மு.க. தலைமை, தன்னுடைய தொகுதிப் பட்டியலை மாற்றி, அதில் பல இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்து, வேட்பாளர் பட்டியலையும் மாற்றி, கூட்டணிக் கட்சிகளின் விருப்பங்களை மதித்து நடந்து கொண்டது. கூட்டணி அமைய இது பெரிதும் உதவியது.

இதே போல, ‘விஜயகாந்த் மூன்றாவது அணி தலைவர்’ என்று பத்திரிகைகள் உசுப்பி விட்டாலும், ‘தலைமை’ ஆசைக்கு அவர் பலியாகவில்லை. அதுமட்டுமல்ல. அவருக்கு, பெரும் தொகையைத் தர ஆளும் கட்சி சார்பில் சிலர் முன் வந்தனர். ஆளும் கட்சியின் தூதுவர்கள், அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பிரிவதாக இருந்தால், கற்பனை செய்யப்பட முடியாத தொகையைத் தர தயாராக இருந்தார்கள்.

இது போதாதென்று, விஜயகாந்திற்கும் அ.தி.மு.க.விற்கும் இடையே பிளவை ஏற்படுத்த உளவுத் துறை, அதிகார துஷ்பிரயோகம் செய்தது.

இவையெல்லாம் பலிக்காமல் போனதற்குக் காரணம் – விஜயகாந்த் காட்டிய விவேகமே. பண்ருட்டி ராமச்சந்திரனின் அனுபவபூர்வமான ஆலோசனைகளும், இளைஞரணி தலைவர் சுதிஷ் காட்டிய நிதானமும் பெரிதும் உதவ, விஜயகாந்த் சரியான முடிவை எடுத்தார். ஆளும் கட்சியின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகாமல் அவர் எடுத்த முடிவு, பாராட்டத்தக்கது.

இது தவிர, அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதாவும், கூட்டணிக் கட்சிகள் கடைசி நேரத்தில் கோரிய மாற்றங்களைக் கூட ஏற்றார். அது அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டியது.

மார்க்ஸிஸ்ட் கட்சியும், புதிய தமிழகமும் தங்கள் பங்கிற்கு, கூட்டணிக்குப் பெரிதும் உதவின. இப்படி கூட்டணியில் பல கட்சிகளின் பங்கும் உதவியது. ஒவ்வொரு கட்சியும், சில விஷயங்களில் விட்டுக் கொடுக்க முன்வந்தது, அ.தி.மு.க. கூட்டணிக்கு பலம் சேர்க்கக் கூடிய விஷயம்.

இடையில் ஏற்பட்ட பிரச்சனை கூட, தொகுதி ஒதுக்கீடு பற்றியதே. தொகுதிகள் பங்கீடு தாமதமாவதால், தேர்தல் பணிகள் எல்லாமே ஸ்தம்பிக்கும் என்பதால்தான், அ.தி.மு.க. தொகுதி அறிவிப்பு வெளியிட்டு விட முனைந்தது – என்பது மற்ற கூட்டணிக் கட்சிகளுக்குப் புரிய வந்தது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கிடையாது என்று கலைஞர் அறிவித்து, ஒரு போலி மிரட்டலை விடுத்தபோது – அவருக்கு, அழகிரி முதல் வீரமணி வரை பலர் பாராட்டு தெரிவித்து – ‘இதுதான் சரி’ என்று கொண்டாடினர். அ.தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டபோது, இப்படி எந்தக் கட்சியும் மகிழவில்லை. இது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய வித்தியாசம். தி.மு.க. கூட்டணி, வெறுப்புற்றவர்களின் ஒப்பந்தம்; அ.தி.மு.க. கூட்டணி, விருப்பமுடையோரின் உறவு.

அடிப்படை விஷயங்களில், அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளிடையே பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்பதும், கட்சிகளின் தொண்டர்களிடையே ஒற்றுமை உள்ளது என்ற நிலையும், அந்தக் கூட்டணிக்கு உள்ள பலம். இந்த நிலையில், வெவ்வேறு கட்சியினர் பெற்று வருகிற ஓட்டுக்கள் அடிப்படையில் பார்த்தாலும், அ.தி.மு.க. கூட்டணியே, தி.மு.க. கூட்டணியை விட பலம் வாய்ந்ததாகத் தெரிகிறது.

இந்த வாய்ப்புடன் தேர்தலைச் சந்திக்கிற அ.தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதற்கு முன்பு தி.மு.க.வும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த இரண்டு அறிக்கைகளையும் பார்ப்போம்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிற இரண்டு முக்கிய அணிகளின் தலைமைக் கட்சிகள், வெளியிட்டிருக்கிற தேர்தல் அறிக்கைகளில், முன்னணி இடம் இலவசங்களுக்கே அளிக்கப்பட்டிருக்கின்றன.

தங்களுடைய 2006-ஆம் வருட வெற்றி, இலவசங்கள் பற்றிய அறிவிப்பினால்தான் கிட்டியது என்று நம்புகிற தி.மு.க., இம்முறை மேலும் பல இலவசங்களை அறிவித்திருக்கிறது. சென்ற முறை, இலவச டெலிவிஷன்தான் கவர்ச்சி இலவசமாக இருந்தது. இம்முறை அந்த இடம் ‘மிக்ஸி அல்லது கிரைண்டர் இலவசம்’ என்ற அறிவிப்பிற்குக் கிட்டியிருக்கிறது.

கல்லூரி மாணவர்களுக்கு ‘லேப்டாப் இலவசம்’ என்ற அறிவிப்பும் சரி, மேலே சொன்ன மிக்ஸி அல்லது கிரைண்டர் அறிவிப்பும் சரி, உடனே எழுப்பிய கேள்வி ‘சரி; இவற்றை இயக்க மின்சாரத்திற்கு எங்கே போவது? உங்கள் ஆட்சியில் மின்சாரம் கிடைக்காதே? பிறகு இந்த இலவசங்களால் என்ன பயன்?’ என்பதுதான்.

மின் உற்பத்தி பெருக்கப்படும் என்று தி.மு.க. அறிக்கை கூறியிருப்பது, ஒரு கொடூரமான ஜோக்காகத்தான் தெரிகிறது. ஐந்து வருடங்களாக தமிழகத்தை இருளில் தள்ளி, சாதாரண மக்களிலிருந்து விவசாயிகள் உட்பட, தொழிற்சாலைகள் வரை, எல்லோரையும் ஹிம்சித்து விட்டு, இப்போது மின் உற்பத்திப் பெருக்கம் பற்றி தி.மு.க. பேசுவது – அக்கட்சியின் தலைமை, மக்களை அடி முட்டாள்களாகவே கருதுகிறது என்பதைத்தான் காட்டுகிறது.

இப்படி இலவசங்களை இம்முறையும் தி.மு.க. அறிவிக்க, அ.தி.மு.க. நேரடிப் போட்டியில் இறங்கி விட்டது! ‘தி.மு.க. மிக்ஸி அல்லது கிரைண்டர் என்கிறது. நாங்கள் மிக்ஸி, கிரைண்டர், அவற்றோடு ஃபேன் தருகிறோம்’ என்று ஆரம்பித்து விட்டது அ.தி.மு.க.. ‘லேப்டாப் இலவசம்கூட, பள்ளி மாணவ மாணவிகளுக்கும் கிடைக்கும்’ என்பதிலும், தி.மு.க.வின் இலவசத்தை அ.தி.மு.க.வின் இலவசம் மிஞ்சுகிறது. இதை எதிர்பார்க்காத தி.மு.க.வினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும் வெகுண்டு எழுந்துவிட்டனர்.

‘காப்பி! எங்களைப் பார்த்து காப்பி!’ என்றது தி.மு.க.. அதையே சொன்னார் ப.சிதம்பரம்! (அதிலும் ஒரு காப்பி). ‘இதெல்லாம் செய்யவே முடியாது’ என்றும் தி.மு.க. தலைவர்கள் கூற ஆரம்பித்தனர். ஆத்திரத்தில், ‘காப்பி என்றும் கூறி, செய்ய முடியாது என்றும் கூறினால், நமது அறிவிப்புகளே செய்ய முடியாதவை என்று ஆகுமே’ என்பதைக் கூட அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை. ப.சிதம்பரம், வீரமணி போன்றவர்களின் ஆதரவுக் கண்டனங்களுடன் சேர்ந்து, கழகக் கண்டனம் எழுப்புகிற ஓசையைப் பார்த்தால், அ.தி.மு.க.வின் அறிவிப்புகள், தி.மு.க.வை ரொம்பவே மிரளச் செய்து விட்டன என்பது புரிகிறது. இது, அ.தி.மு.க. இலவசங்களின் வெற்றி!

‘காப்பி’ என்ற கண்டனத்தைப் பார்த்தால், ‘கலைஞரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ என்பது ஆந்திர அரசைப் பார்த்து, தமிழக அரசு செய்ய முனைந்த காரியம்தானே! அதில் ஒரிஜினல் விஷயம், லஞ்சத்துக்கான வசதி என்பதைத் தவிர வேறு என்ன? அதே போல, ‘அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ்’ என்ற மத்திய அரசு திட்டத்தை – பல மாநிலங்களிலும் உள்ள திட்டத்தை – தான் மட்டுமே செய்த திட்டம் போல, தி.மு.க. கூறுவது என்ன ரகத்தைச் சார்ந்தது...?

நம்மைப் பொறுத்தவரை, அரசு, இலவசங்களை வாரி இறைப்பதை நாம் ஏற்கவில்லை. வேலையில்லாதவர்களுக்கு ஒரு அலவன்ஸ் தந்து வந்த சில மேலை நாடுகள் கூட, பின்னர் ‘அது மக்களிடையே சோம்பேறித்தனத்தைத்தான் வளர்க்கிறது’ என்று கூறி, அந்த உதவியைத் திரும்பப் பெறுவதற்கு வழி தேட முனைந்தன. இங்கு கொடுக்கப்படுவதோ, அவசியத் தேவைகள் அல்ல; ‘வசதி’ ரகத்தைச் சார்ந்தவை.

இலவசங்களை அறிவிப்பது என்பது, ஓட்டு வாங்கப் பணம் தருவதுதான். ஆனால், இந்த மாதிரி இலவசங்களை எதிர்பார்க்கிற மனோபாவத்தை மக்களிடையே தி.மு.க. வளர்த்து விட்டது. இப்போது ஒரு கட்சி ‘நாங்கள் இந்த மாதிரி இலவசங்களைத் தர மாட்டோம்’ என்று கூறினால், மக்கள் ‘சரி. நீ தர வேண்டாம்; நாங்களும் உனக்கு ஓட்டு போட மாட்டோம்’ என்று கூறிவிடுவார்கள் போலிருக்கிறது! அந்த அளவிற்கு இலவச போதை மக்களுக்கு ஏறியிருக்கிறது. இது மாற வேண்டும். அதற்கு மாநிலத்தின் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் முன்னேற வேண்டும். இதற்காகவே இந்த ஆட்சி மாற வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, அ.தி.மு.க.வும் இலவசங்களை அறிவித்து விட்டதால், இப்போது இலவசங்களை வைத்து யாரும் ஓட்டளிக்கப் போவதில்லை. இருதரப்பிலும் இலவசங்கள் உண்டு எனும்போது, அது ‘இர்ரெலவன்ட்’ ஆகிவிட்டது! அ.தி.மு.க. அறிக்கையின் சாதனை இது.

அப்படியே யாராவது சிலர், இரு தரப்பு இலவச அறிவிப்புகளை அலசிப் பார்க்க நினைத்தால் – அவர்கள் மனதில் ஒரு எண்ணம் எழும். ‘இரண்டு ஏக்கர் நிலம் தருவதாகச் சொல்லி விட்டு, உள்ளங்கை நிலம் என்று மாற்றி, அதையும் தரவில்லை தி.மு.க.; கேஸ் அடுப்பும், இணைப்பும் தருவதாகச் சொல்லிவிட்டு, அதைப் பற்றிக் கண்டு கொள்ளவே இல்லை தி.மு.க.. டெலிவிஷனுக்கு கேபிள் தொடர்பு இலவசமாகத் தருவோம் (‘தந்து தொலைக்கிறோம்’ என்றார் முதல்வர்) என்று கூறிவிட்டு, அதையும் கை கழுவியது தி.மு.க. – ஆகையால், தி.மு.க.வின் இலவச அறிவிப்புகளை எப்படி முழுமையாக நம்புவது?

இந்த மாதிரி சந்தேகம், ஜெயலலிதாவைப் பற்றி மக்கள் மனதில் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை. தவிர, அ.தி.மு.க. அறிக்கையில், இலவசங்களைத் தவிர, வேறு பல விஷயங்களும் கூறப்பட்டுள்ளன.

விவசாய உற்பத்தியைப் பெருக்க, ஒரு திட்டம்; விவசாயிகளின் தனிநபர் வருமானத்தை உயர்த்துவது; சிறு பாசனத்தின் கீழ் 30,000 ஹெக்டேர் நிலத்தைக் கொண்டு வருவது; உணவு பதப்படுத்துவதற்கான மையங்கள்; விவசாயப் பொருட்கள் வீணாகாமல் பாதுகாக்கத் தேவையான கோடௌன்கள்; இடைத்தரகர்களை நீக்கி, பதுக்கல்காரர்களை ஒடுக்கி விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவர ஏற்பாடு; கரும்பு உற்பத்திப் பெருக்கம்; குடிநீர்த் திட்டம்; மின்சார உற்பத்திக்கான திட்டம்; சூரிய ஒளி மின்சார உற்பத்தி; கைத்தறித் துறை சீரமைப்பு... என்பது போன்ற பல முன்னேற்றத் திட்டங்கள் அ.தி.மு.க. அறிக்கையில் இடம் பெற்றிருக்கின்றன.

வீராணம் திட்டத்தை நிறைவேற்றியதிலும், மழை நீர் சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டதிலும், ஜெயலலிதா காட்டிய முனைப்பையும், உறுதியையும் நினைத்துப் பார்க்கிறபோது, இப்போது அவர் அறிக்கையில் உள்ள திட்டங்கள், வெறும் பேச்சுக்காக இருக்காது என்று கூறலாம்.

அறிவிப்புகள் இருக்கட்டும். சென்ற ஐந்தாண்டுகால தி.மு.க. ஆட்சி பற்றி தீர்ப்பு கூறும் வாய்ப்பு மக்களுக்குக் கிட்டியிருக்கிறது. ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறி, இதற்காக இவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புத் தரலாம் என்று நினைக்க வழி இருக்கிறதா? சுத்தமாகக் கிடையாது.

கழக ஊழல், உலகப் பிரசித்தமாகி விட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழலில், உள்ளே சென்றது ராசாதான் என்றாலும், அதற்குப் பிறகு இன்னும் யார் யார் சிக்குகிறார்கள் என்று பார்க்க வேண்டும். உலகமே கேள்விப்பட்டிராத அளவிற்குப் பெரும் ஊழல். இது டெல்லியில் அமர்ந்து கழகம் செய்த ஊழல் என்றால், மாநிலத்தில் மணல் கொள்ளையிலிருந்து, நிலங்கள் அபகரிப்பு வரை, எல்லாமே அராஜகம்தான். குடும்பத்தினர் பெரும் தனவந்தர்கள் ஆனதும், கழகத்தின் பல மட்டங்களில் உள்ளவர்கள் திடீர் பணக்காரர்கள் ஆனதும்தான், ஐந்தாண்டு கழக ஆட்சியின் சாதனை.

மத்திய அரசுடன், கழகத் தலைமைக்கு உள்ள நெருக்கம், குடும்பத்தாருக்குப் பெரிதும் உதவியதே தவிர, மாநிலத்திற்கு ஒரு துளியும் உதவவில்லை. காவிரி ஆனாலும் சரி, பெரியாறு ஆனாலும் சரி, பாலாறு ஆனாலும் சரி – மத்திய அரசிடம் கழகத்திற்கு இருந்த செல்வாக்கு செல்லாக் காசுதான். கலைஞரே கூட டெல்லிக்குப் போய் முகாமிடுவது எல்லாம், தன் குடும்பத்தினருக்காகத்தானே தவிர, மாநிலத்திற்காக அல்ல. இப்படி வெளிப்படையான ஒரு குடும்ப நல ஆட்சி, இதுவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடந்ததில்லை.

சட்டம் – ஒழுங்கு அடைந்துள்ள சீர்கேடு, பெரும் ஆபத்தான விஷயம். தா.கிருஷ்ணன் கொலை வழக்கிலும் சரி, தினகரன் பத்திரிகை அலுவகத்தை எரித்து மூன்று பேர் கொல்லப்பட்டதிலும் சரி, குற்றவாளிகளே இல்லை எனும்போது, தண்டனை ஏது? சட்டத்தையும், நீதிமன்றத்தையும் பார்த்து, கழகம் சிரிக்கிறது. நாடு, நமது மாநிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறது.

இப்படி முதன்மைக் குடும்பமே, சட்டத்தைக் கேலிக்குரிய விஷயமாக்கி விட்டபோது, சட்டத்திற்கு மற்றவர்கள் என்ன மரியாதை தருவார்கள்? தலைநகரில் நடுத்தெருவில் பெரும் அராஜகம்; ஹோட்டல் தகர்ப்பு; பயங்கரத் தாக்குதல்... இதற்கெல்லாம் வழக்கு எதுவும் கிடையாது! இது நம்ம ஊர் நியாயம்.

சட்டக் கல்லூரியில்,என்றும் இல்லாத வைபவமாக, மாணவர்கள் ஜாதி ரீதியாகப் பிரிந்து, உள்நாட்டுப் போர் நடத்தி, பெரும் வன்முறை நிகழ்த்த, போலீஸார் நின்று வேடிக்கை பார்த்த நிகழ்ச்சி, டெலிவிஷனிலேயே வந்துவிட்டது. சினிமா காட்சிகள் தோற்றன! போலீஸாரின் இந்த பரிதாப நிலை, இம்மாநிலத்தின் சாதனை!

சென்னை ஹைகோர்ட்டில், வக்கீல்களுக்கும் போலீஸாருக்கும் இடையே போர்! இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்காவது இந்தப் பெருமை உண்டா? அமைதியை நிலைநாட்ட முயன்ற போலீஸார், அரசினால் கைவிடப்பட்டார்கள் என்பது, இதற்கு முடிவுரை.

இந்த அரசின் நிர்வாக அவலங்களுக்கெல்லாம் சிகரமாக அமைந்தது, மின்வெட்டு. மின்துறை நிர்வாகம், இவ்வளவு சீரழிந்தது – இதற்கு முன் எப்போதும் இல்லாத நிலை. தங்களுக்கு நிர்வாகம் தெரியாது; தெரிந்த அளவு செய்யவும் அக்கறை இல்லை – என்று தி.மு.க. அரசே கொடுத்திருக்கிற ஒப்புதல் வாக்குமூலம் – நம்மை விட்டு விலகாத மின்சார வெட்டு.

குடும்ப நலன் தவிர வேறு அக்கறையில்லாத ஒரு அரசு தொடர்வது, இம்மாநிலத்திற்கு பெரிய நஷ்டத்தில் முடியும். இந்த முறை மீண்டும் இவர்கள் வென்றால், ‘எவ்வளவு தவறு செய்தாலும் சரி; அதை எவ்வளவு வெளிப்படையாகச் செய்தாலும் சரி; மக்களுக்கு ஏதாவது சில பொருட்களைக் கொடுப்பதாகக் கூறி, அதற்கு அச்சாரமாக ஓட்டிற்கு பணமும் கொடுத்தால் போதும் – ஜெயித்து விடலாம்’ என்ற எண்ணம் தி.மு.க.விற்கு மட்டுமல்ல, மற்ற கட்சிகளுக்கும் கூட ஏற்பட்டு விடும்.

அதன் பிறகு தமிழகம் பெரும் வீழ்ச்சியைக் காணும். ஏற்கெனவே தமிழகத்தை பீஹாரை விட, கீழே தள்ளியிருக்கிறது கழக அரசு. அந்த நிலையிலிருந்து மீட்பதற்கு ஆட்சி மாற்றம் தேவை.

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில், சென்ற முறை ஆட்சி செய்தபோது, புகார்களுக்கு இடம் இல்லாத வகையில் நிர்வாகம் நடந்தது. அதனால்தான் கலைஞர் எவ்வளவோ முயன்றும், அந்த ஆட்சிக் காலம் பற்றிய வழக்கு எதையும் அவரால் கொண்டு வர முடியவில்லை. நிர்வாகத் திறன், மன உறுதி, தன்னம்பிக்கை போன்ற, ஆட்சியாளர்களுக்குத் தேவையான குணங்களைக் கொண்டவர் என்பதை ஜெயலலிதா நிரூபித்திருக்கிறார். இன்று தி.மு.க. ஆட்சியை மாற்ற, தமிழக மக்களுக்கு உள்ள ஒரே ஆயுதம் ஜெயலலிதாதான்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு தி.மு.க. பணத்தாசை காட்டியது; பலவித மிரட்டல்களும் விடுக்கப்பட்டன; அப்படியும் கூட, தி.மு.க. அரசை வீழ்த்த முனைவதே தனது கடமை என்று உறுதியாக முடிவெடுத்தார் அவர்; மார்க்ஸிஸ்ட்கள், தங்களுடைய அனுபவபூர்வமான அரசியல் அணுகுமுறையினால் அ.தி.மு.க. கூட்டணிக்கு வலு சேர்க்கின்றனர்; இதைப் போலவே வலது கம்யூனிஸ்ட்களும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் கூட்டணியில் முனைப்பைக் காட்டியிருக்கின்றனர். ஆக, தி.மு.க. அரசை வீழ்த்தி, தமிழகத்தில் நல்ல மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதில், முனைப்புடைய கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கின்றன.

இதையெல்லாம் நினைத்துப் பார்த்து, அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பதே, விவரம் தெரிந்த வாக்காளரின் முடிவாக இருக்கும் என்று நாம் நம்புகிறோம். ஒரு குடும்பம் மட்டும் செழிக்கும் என்ற நிலை மாறி, தமிழகம் தழைக்க, ஆட்சி மாற்றம் தேவை.

நன்றி
: துக்ளக்

வியாழன், 7 ஏப்ரல், 2011

ஜெயலலிதா, விஜயகாந்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

;சென்னை, ஏப்.7: தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசிய குற்றச்சாட்டு தொடர்பாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருவரும் இதுகுறித்து இன்று மாலை 5 மணிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. தேர்தல் பிரசாரத்தின்போது கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசிவருவதாக திமுக தேர்தல் குழு சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் திமுக, அதிமுக கூட்டணித் தலைவர்களின் தீவிர பிரசாரத்தால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது

'செய் அல்லது செத்து மடி': ஹசாரே ஆவேசம்; பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் ஆதரவு

புதுடில்லி: ஊழல் ஒழிப்பிற்கான லோக்பால மசோதாவை உருவாக்க ஒரு கூட்டுக்குழு ஏற்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவு குறித்து முறையான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட அவகாசம் கேட்டதால் காந்தியவாதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் தொடர்கிறது.
செய் அல்லது செத்து மடி என்று ஆவேசமாக குறிப்பிட்ட ஹசாரே, 'எனது இந்த போராட்டத்திற்கு மக்கள் தந்துள்ள ஆதரவு மகிழ்ச்சி தருகிறது. இதுவரை எத்தனையோ ஊழல்கள் வெளிவந்துள்ளன; அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான இந்த போரட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவு மிக முக்கியம். எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும் ஊழல் செய்தால் அவர்களை எவ்வித முன் அனுமதி இன்றியும் விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால் மசோதா ஒன்றே ஊழலை ஒழிக்க வழி' என்றார்.
இதற்கிடையில் மும்பையில் ஹசாரேயின் ஆதரவாளர்கள் இந்தியா கேட் பகுதிக்கு ஊர்வலமாக செல்ல முயன்றபோது அதை போலீசார் தடுத்தனர். தடையை மீறி அவர்கள் ஊர்வலம் சென்றனர். ஊழலுக்கு எதிரான இவருடைய போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத், காஷ்மீர் உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஊர்வலங்களும் உண்ணாவிரதமும் நடைபெறுகின்றன.

ஊழலில் சிக்கியவர்கள் யாரும் தப்பி விடக்கூடாது , ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க உதவும் மசோதா உருவாகும் தருணத்திலேயே கடுமையாக இருக்க வேண்டும் என்று தொலைநோக்கு பார்வையுடன் நாட்டுக்காக உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை துறக்க தயாராகி வரும் காந்திய சிந்தனைவாதி அன்னா ஹசாரேக்கு க்கு நாடு முழுவதும் பலத்தரப்பு மக்களும் தங்களுடைய ஆதரவுக்கரத்தை நீட்டியுள்ளனர்.

3வது நாளாக இவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தைத் தொடர்ந்து ஊழல் ஒழிப்பு லோக்பால் மசோதாவை உருவாக்க ஒரு கூட்டுக்குழு ஏற்படுத்த மத்திய அரசு சம்மதித்துள்ளது.இத்துடன இவரது கோரிக்கை நியாயமானது என்றும் , மக்கள் பிரதிநித்துவம் கேட்டும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இவர் கண்டிருக்கும் களம் அனைவரையும் சுண்டி இழுத்துள்ளன. அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சிக்கும் இவர் இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு இழுத்து சென்ற அரசியல்வாதிகள் பரிசுத்தமில்லாதவர்கள் என வர்ணிக்கிறார்.


இவரின் போராட்டம் ஏன் ? : பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக லோக்பால் சட்டம் இயற்றும் நடவடிக்கையில், மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கான வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி, ஊழல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை மாற்ற வேண்டுமென்றும், இந்த வரைவு மசோதா தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சரவை குழுவில், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பிரதிநிதித்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தி, பிரபல சமூக சேவகரும், காந்திய தொண்டருமான அன்னா ஹசாரே உண்ணாவிரதம் துவக்கியுள்ளார்.
டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 3 வது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க டில்லி மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து திரளானவர்கள் இவரது மேடை அருகே கூடி வருகின்றனர். அரசியல்வாதிகள் யாரும் வரவேண்டாம். எனக்கு ஆதரவு அளிப்பதாக போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டாம் என்றும் அரசியல்வாதிகளை புறந்தள்ளி விட்டார்.

ராணுவ வீரராக இருந்தவர்: கிசான் பபத் பபாரோ ஹசாரே என்ற இயற்பெயர் கொண்ட மகாராஷ்ட்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்திக் கிராமத்தை சேர்ந்தவர். இவரது வயது தற்போது 71. ஆரம் இளம்பிராயத்தில் ராணுவத்தில் சேர்ந்தார். அங்கு டிரைவராக இருந்த போது எதிர்பாராத விபத்து காரணமாக ராணு பணியை விட்டு பொதுநலச்சேவையில் ஈடுபட்டார். நதிநீர் இணைப்பு, தகவல் உரிமை பெறும் சட்டம், ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளார். உயரிய பத்மபூஷண் விருது பெற்றுள்ளார்.

அரசியல்வாதிகள் பின்னால் தமிழக மக்கள்: அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு தமிழகத்தில் இதுவரை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது வியப்பாக உள்ளது. ஊழலுக்கு எதிராக சரியான விழிப்புணர்வு, தமிழக மக்களிடையே இன்னும் ஏற்படவில்லை; ஊழலால் ஏற்படும் கடும் விளைவுகளை தமிழக மக்கள் இன்னும் உணரவில்லை என்றே தோன்றுகிறது. அரசியல்வாதிகளின் போலியான வாக்குறுதிகளை நம்பி அவர்கள் பின்னால் அலையும் தமிழக மக்கள், ஊழலுக்கு எதிரான இத்தகைய போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிக்கும் சூழ்நிலை விரைவில் ஏற்பட வேண்டும்.

அடுக்கடுக்காக பிரமிக்க வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம். இப்பட்டிப்பட்ட செய்திகள் காந்தியவாதியான அன்னா ஹசாரேவின் கோபத்தை, ஆவேசத்தை நியாயப்படுத்தத்தான் செய்கிறது. காந்தியவாதி அன்னா ஹசாரே, ஊழல் ஒழிப்பு மசோதாவை கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து 3வது நாளாக உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தி வருகிறார்.

அவருக்கு சாதாரண மக்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது . பொதுநலத்துக்காக போராடும் அன்னா ஹசாரேவுக்கும் நமது வாசகர்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ." உண்மையின் உரை கல் " தினமலர் வாசகர்கள் அளித்து வரும் ஆதரவு தன்நலம் காணாது, வாசகர்களின் ஆதரவு மூலம் நாட்டு நலனுக்கு போராடும் நபர்களுக்கு நம்முடைய ஆதரவு குவியும்போது அதற்கு ஒரு பலம் கிட்டும். உங்கள் மேலான கருத்துக்களை வெளியிட்டு ஊழலை ஒடுக்க, சத்தியத்தை நிலைநாட்ட ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆயுதங்கள் வெடி பெருட்கள் மீட்பு!யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின்


யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் இடம் பெற்ற தேடுதல் நடவடிக்கையில் கையெறி குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கிளிநொச்சி புறநகர்ப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 3 கையெறி குண்டுகளும், இரண்டு மிதி வெடிகளும் மீட்கப்பட்டுள்ளன. அன்றைய தினம் உடையார் கட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 2 துப்பாக்கிகளும் அவற்றுக்குரிய ரவைகள் 11ம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் விடுதலைப் புலிகளால் முன்னர் பாவிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டது அல்லது விட்டுச் செல்லப்பட்ட ஆயுதங்களாக இருக்கலாமென்று படையினர் கூறுகின்றனர். இதேவேளை வவுனியாவில் இராணுவத்தினரும் கண்ணிவெடி அகற்றும் குழுவினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது 314 மிதிவெடிகளும் 81 மி.மீ. மோட்டார் குண்டுகள் இரண்டும், 60 மி.மீ.மோட்டார் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தலைமையாகம் தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் கிளிநொச்சிக்கு

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் கிளிநொச்சிக்கு மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் விவசாய பீடத்துக்கு அருகில் இதனை ஆரம்பிப்பதற்கு யாழ்.பல்கலைக்கழக மூதவையும் பேரவையும் முடிவு எடுத்துள்ளன. யாழ்.பல்கலைக்கழக பதிவாளரினால் அதற்கான விபர அறிக்கையை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அனுமதிக்காக ஓரிரு வாரங்களில் சமர்ப்பிப்பதென முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gandhi, Ambedkar and Osho காந்தியின் சூழ்ச்சிதனம்.ஓஷோவின் பார்வையில் அம்பேத்கார் நிலை.

;சுதந்திரத்திற்கு முன்பு, காந்தி இந்தியாவின் ஜனாதிபதி ஒரு பெண் இருக்க வேண்டும் என்றார். அதுமட்டும் இல்லாமல் அப்பெண் ஒரு தாழ்ந்த குல பெண்ணாக இருக்கவேணும் என்றார். ஆனால் சுதந்திரம் கிடைத்தவுடன் தான் சொன்னவை எல்லாம் மறந்து விட்டார் பழிய அரசியல்வாதி போல் ஆகிவிட்டார். நேரு ஒரு பிராமணர். அவர் ஒரு பெண்ணும் அல்ல.. மட்டும் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவரும் அல்ல..மறுபடியும் பிராமணர்களே அதிகாரத்தில் அமர்த்தப்பட்டார்கள். சுமார் 40 வருட மேலாக ஒரு பிரமான குடும்பம் இந்தியாவை அதிகாரம் செய்து வருகிறது. அது ஒரு அரசபரம்பரயாக ஆகிவிட்டது. மக்களாட்சியாக தெரியவில்லை. இந்த உண்மைய கொஞ்சம் நேரடியாக பாருங்கள் . காந்தி தன்னை ஒரு ஹிந்து சந்நியாசிபோலவே பாவித்துக்கொண்டார். ஆனால் மதத்தன்மை நிரம்பியவர் இல்லை. அவர் ஏன் அப்படி நடந்துகொண்டார் என்றால், இந்தியாவில் இந்துகள் அதிகம். ஆகவே அவர்களுக்கு ஏற்றவாறு, தன்னை மாற்றிக்கொண்டார்.

 இந்தியர்கள் பெரும்பாலும் ஏழைகள். எனவே தன்னையும் அப்படி காட்டிக்கொண்டார். இப்படி இந்தியாவில் இந்துக்களை தன் வசபடுத்திக்கொண்டார். அவர், ஒரு ஹிந்து தான் இந்த நாட்டை ஆளவேண்டும் என்றும் தீர்மானமாக இருந்தார். ஆகவேதான் இந்தியா பிரியக்கூடாது என்று தீர்மானமாக இருந்தார். ஏன்யென்றால் பிரிக்கபடாத இந்தியாவில் தான் மற்ற மதத்தினர் குறைவாக இருப்பார்கள். அப்பொழுது ஒரு ஹிந்து அரசியல் வாதிமிடமிருந்து சுலமாக அதிகாரத்தை மற்றவர்களால் எடுத்துகொள்ள முடியாது. இதை யாரும் ஆழமாக சிந்திக்கவில்லை அவர் ஒரு மதத்தை ஒரு அருவருப்பான அரசியலுக்கு உபயோகித்தார்

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி ஓட்டு உரிமை வேண்டும் என்று டாக்டர்.அம்பேத்கார் வாதாடினார். நான் இதை முழுமையாக ஆதரிக்கிறேன் முக்கியகாரணம்இந்த இனம் மக்கள், சுமார் 5000 வருடங்களாக அடக்கி வைக்கப்பட்டவர்கள், எந்த உரிமையும் இல்லாதவர்கள், அவர்களுடைய சுமரியாதை அழிக்கப்பட்டது. அவர்களது ஜனத்தொகை கிட்டத்தட்ட இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் கால்பாகம் அவர்கள் செய்யும் வேலைகள் மிகவும் கீழ்த்தரமானது அதற்காக அவர்களை நாம் போற்ற வேண்டும், மதிக்க வேண்டும், அதற்கு பதிலாக , நாம் என்ன செய்தோம்.அவர்களுடைய  நிழல்கூட நம்மேல் படக்கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக இருந்தோம்.! அப்படி நிழல் பட்டால்  நம்மை சுத்தம் செய்துகொள்ளஉடனே குளிக்க வேண்டுமாம்.!! என்ன ஆணவம்!!

அம்பேத்கார் கேட்டது மிகவும் சரியானதுதான் ஏனேனில், அப்பொழுத்தான், பார்லிமெண்டில் உள்ள அங்கத்தினர்களில் கால்பாகம் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரிதிநிதியாக இருப்பார்கள் இல்லாவிட்டால், அவர்கள் தங்களது குரலை எழுப்ப  வாய்ப்பே கிடைக்காது. மனு ஏற்படுத்திய மட்டமான ஜாதி வேற்றுமைகள் களைவது எனபது முடியாத காரியம். இந்த நட்டு சரித்திரத்தில் மனு ஒரு சாபக்கேடு, பல லட்சம் மக்களின் சுயமரியாதையை, மனித பண்பை அழித்தவன் இவன்தான், அவர்கள் அனைவரும் ஆடு, மாடு போல் நடத்ப்பட்டார்கள் ஏன் அதை விட மோசமாக நடத்ப்பட்டர்கள்.

அம்பேத்கார் கேட்டது மிகவும் சரி ஆனால் காந்தி, அம்பேத்கார், தன் வேண்டுகோளை கை விடவேண்டும் என்று சாகும் வரை  உண்ணாவிரதம் இருந்தார். காந்தி கடைபிடித்த முறை தர்க்க ரீதியாகச் சரியில்லை தன்னுடைய பட்டினிப் போராட்டத்தால் மக்களின் அனுதாபத்தைப்  பெற்று, ஒரு காரியத்தில் வெற்றி பெறலாம். அதற்காக அந்த காரியம் சரியாகிவிடாது இதை நன்றாக சிந்தியுங்கள். இது  ஒரு சாத்வீக மன மிரட்டல் தான் பய முறுத்தல்தான் அதாவது "நீங்கள் நான் சொல்வதற்க்கு இனங்காவிட்டால் நான் சாப்பிடாமல் இருந்து தற்கொலை செய்து கொள்வேன்".  இது பயமுறுத்தல் இல்லாமல் வேறென்ன..பிறகு என்ன நடந்தது..இந்த தேசத்தின் முக்கிய தலைவர்கள் அறிவிப்பை கைவிடாவிட்டால் காந்தி இறக்க நேரிடும் அதனால் நாட்டில் பெரிய கொந்தளிபே... ஏற்படும் தாழ்த்தப்பட்டவர்கள்  மேலும் ஒதுக்கபடுவார்கள் ஏன் உயிரோடு எரிக்கப்பட்டாலும் ஆச்சரியபடுவதற்கில்லை ஏனெனில் இறப்புக்கு காரணம் இந்தத் தாழ்த்தபட்ட மக்கள்தான் என்று உயர் ஜாதி ஹிந்துகள் நினைத்து விடுவார்கள  இது பல கேடுகளை விளைவிக்கும் என்று பயமுறுத்தினார்கள் அம்பேத்கார் எவ்வளவோ வாதாடியும் வெற்றி பெற முடியவில்லை  கடைசியில் விட்டுக் கொடுக்கும்படியாகி விட்டது.

நான் அம்பேத்கார் நிலையில் இருந்திருந்தால், காந்தியிடம் "நீங்கள் தாரளமாக இறக்கலாம். உங்கள் இறப்பு, ஒரு வாதமாகாது இது ஒரு முட்டாள் தனமான செய்கை"  என்றே கூறி இருப்பேன்.

ஒரு நிகழ்ச்சி

ஒரு அழகான பெண்ணை ஒரு அவலட்சணமான கிழவன் மணக்க ஆசைப்பட்டான். அவனுடைய வயது கிட்டத்தட்ட அந்த பெண்ணின் தகப்பனாரின் வயது இருக்கலாம். அவன் நம் காந்தியின் வழியை பின்பற்ற முனைந்தான் அவன், தன் பாயை  எடுத்திக் கொண்டு அந்த பெண்ணின் வீட்டின் முன் விரித்து படுத்துவிட்டான் எல்லோரிடமும் "அந்த பெண்ணின் தகப்பனார், தன் பெண்ணை எனக்கு மனம் செய்து தரவில்லையென்றால்நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்" என்று அறிவித்தான்.  இப்பொழுது அவனை சுற்றி கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் அவன் மேல் அனுதாபம் கொண்டு  "என்ன ஒரு காதல்..!  இதை போன்ற காதலை கதைகளில்தான் கேட்டிருக்கிறோம்.  இந்த மனிதனை ஒப்பிட்டால் மஜ்னு, பார்ஹாதர் ஒன்றுமே இல்லை" என்று ஆளுக்கு ஆள் கூறினார்கள்

அந்த பெண்ணின் தகைப்பனர் மிகவும் கவலையடைந்தார். அந்த பெண்ணும் பயத்தில் நடுங்கியவாறு இருந்தால்.  பிறகு அந்த வீட்டை சுற்றி நின்று கொண்டு சத்தம் போடா ஆரம்பித்தார்கள் அவர்கள் "இந்த ஆள், பட்டினியால் இறந்துவிட்டால். அது உனக்கு ஆபத்தைக் கொடுக்கும் இந்த மனிதன் மிகவும் சாத்வீகவாதி மத நம்பிக்கையுடையவன் உடனே அவனது கோரிக்கையை  நிறைவேற்று" என்று சப்தம் போட்டார்கள்.

அந்த பெண்ணின் தப்பனாருக்கு ஒன்றுமே புரியவில்லை. அவரது நெருங்கிய நண்பர்கள் அவரிடம் "நீங்கள் பழைய காந்தியவாதிகளை சந்தித்து ஆலோசனை கேளுங்கள் என்று கூறினார்கள் அவரும் அப்படியே ஒரு ஆளை கண்டுபிடித்து ஆலோசனை கேட்டார். அதற்கு அவர் இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. பக்கத்தில் ஒரு அசிங்கமான விபச்சாரி ஒருத்தி இருக்கிறாள். அவளுக்கு வயது அதிகம் நீங்கள் அவளிடம் சென்று ஒரு நுறு ருபாய்யைக் கொடுத்து தன் பாயை எடுத்துக் கொண்டு வந்து அவரது பக்கத்தில் படுக்கச் சொல்லவும். பிறகு, அவள் மக்களை பார்த்து "இந்த ஆள் என்னை கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால் நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்" என்று சொல்லச் சொல்லவும்" என்றார்.

அப்படியே அந்த விபச்சாரி செய்ய அந்த கிழவன் இரவோடு இரவாக தன் பாயை சுற்றிக் கொண்டு தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிவிட்டான்..!  இது எந்த வாதப் பிரதிவாதத்தில் சேர்ந்தது..!

இந்திய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில் அரசியல்தனம் கலந்திருகிறது.  இதுவும் இந்துகளுக்கே சாதமானதாக இருக்கிறது. 
                                                                                                                                                                                                                :-ஓஷோ

பிரிட்டனில் புதிய குடியேற்ற விதிகள் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளன.


ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அல்லாதோர் பிரிட்டனில் குடியேறுவதைக் குறைப்பதற்காக பிரதமர் டேவிட் கெமரூன் தலைமையிலான அரசு இந்த புதிய விதிகளை கொண்டு வந்தது.இந்நிலையில் இந்த புதிய விதிமுறைகள் இன்று முதல் அமுலாவதால் வெளிநாட்டு மாணவர்களுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு திறன் வாய்ந்த பணியாளர்களுக்கான எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்படும்.
மேலும் ஏற்கனவே பிரிட்டனிலேயே குடியேறியவர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதால் வெளிநாட்டு பணியாளர்கள் மிகுந்த அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஹட்டன், திடீர் தீயினால் பல கடைகள் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன்


ஹட்டன் பிரதான நகரில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் தீயினால் பல கடைகள் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் பெரும் அல்லோலகல்லோலம் ஏற்பட் டது. ஹோட்டலொன்றில் நேற்று மாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட தீ சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கும் மேலாக பற்றி எரிந்தது. இதில் ஹோட்டலும் அடுத்தடுத்ததாக அமைந்திருந்த ஏழு கடைகளும் முற்றாக எரிந்து சாம்பலாகின.
கட்டுப்பாட்டை மீறி தீ பரவத்தொடங்கியதையடுத்து வானம் முழுவதும் பெரும் புகை மண்டலமாக காணப்பட்டதுடன் சுமார் 100 மீற்றருக்கு அப்பாலும் தீ பரவியது. ஹட்டன் பகுதியில் தீயணைப்பு நிலையமொன்று இல்லாமையினால் உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. பொது மக்கள் தீயையணைப்பதற்கு பல்வேறு பிரயத்தனங்களை முன்னெடுத்த போதிலும் தீ கட்டுப்பாட்டை மீறி பரவிய தனால் அது பலனளிக்கவில்லை.
தீயினால் தகரங்கள் மற்றும் சுவர்களும் சிதறி வெடித்தன. பிரதான நகரின் ஏனைய கடைகளிலிருந்தவர்களும் அவசர அவசரமாக தமது உடைமைகளை அகற்றிய வண்ணம் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து மக்களை அங்கிருந்து அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்புக் கருதி பிரதான நகருக்கு வரும் இரண்டு பாதைகளும் மூடப்பட்டதுடன் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதும் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதேவேளை நேற்றுக் காலை முதல் மின் இணைப்பிலுள்ள திருத்த வேலைகள் காரணமாக ஹட்டன் நகரில் முன் அறிவித்தலுடன் அதிகாலை 5 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.விடயமறிந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சம்பவ இடத்தக்கு உடனடியாக விஜயம் செய்தார். தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட முடியாதென்பது உறுதியானதன் பின்னர் தீ மேலும் ஏனைய கடைகளுக்கு பரவுவதை தடுக்கும் முகமாக பெக்கோ இயந்திரங்களைக் கொண்டு முழுமையாக தீப்பற்றிய ஏழு கடைகளும் உடைத்து தரைமட்டமாக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்தும் தீ கட்டுப்பாட்டுக்குள் வராது எரிந்து கொண்டிருந்தது. சுமார் 6.45 அளவில் நுவரெலியாவிலிருந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். ஹட்டன் நகரில் பதற்றம் தணிந்ததையடுத்து அனைத்து பகுதிகளுக்கும் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.
ஹோட்டல்கள், புடவைக் கடைகள், நகைக் கடைகள், ஹார்ட்வெயார் கடைகள் உள்ளிட்ட ஏழு கடைகளே இதன் போது எரிந்து சாம்பராகியுள்ளன.தீயினால் எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லையென தெரிவித்த பொலிஸார் தீ ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிவதற்காக விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினர்

கள் இறக்க அனுமதிக்கப்படும்: ஜெயலலிதா

அதிமுக ஆட்சிக்கு வரும்பட்சத்தில், தென்னை மற்றும் பனை தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கள் இறக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஜெயலலிதா உறுதி அளித்தார்.
 பொள்ளாச்சியில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியது:  தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடத்தி வரும் கருணாநிதிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அந்த வகையில், இந்தத் தேர்தலில் தமிழகத்திற்கு சுதந்திரம் பெற்றுத் தாருங்கள். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மின்சாரம் மிகவும் முக்கியம். ஆனால், தமிழகத்தில் மின்சார வெட்டுப் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. மாநிலத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாகிவிட்டது. எந்தத் தொழிலை எடுத்தாலும், அதில் கருணாநிதி குடும்பத்தினர் உள்ளனர். திரைப்படத் தொழில், பத்திரிகை தொழில், மணல், கிரானைட் தொழில் என எல்லா துறைகளிலும் அவரது குடும்பத்தினர் புகுந்துவிட்டனர்.  இப்போது 6-வது முறையாக முதல்வராக வேண்டும் என்று கூறி கருணாநிதி வாக்கு கேட்டு வருகிறார். மீதமிருக்கும் துறைகளையும் அபகரிக்கத்தான் மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார். தமிழக மக்கள் ஏமாந்துவிடக்கூடாது.  இலங்கைத் தமிழர் பிரச்னையில் போர் நிறுத்தம் வேண்டி திடீரென 3 மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தியவர். ஒரே நாளில் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட காரணமாக இருந்தவர்.  இலங்கைத் தமிழர்கள்: மத்திய அரசில் அதிமுக அங்கம் வகித்திருந்தால், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றிருப்போம். இலங்கைத் தமிழர்களையும் காப்பாற்றி இருப்போம். ஆனால் கருணாநிதியோ, அப்படி எதுவும் செய்யவில்லை. இலங்கைத் தமிழர்களை அழித்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டவர்.  2ஜி முறைகேட்டில் முதல்வர் குடும்பத்தினருக்கு தொடர்பு உள்ளது. ஆனால், மாட்டிக் கொண்டது ஆ.ராசா; உயிரை விட்டவர் சாதிக் பாஷா.  கருணாநிதி குடும்பத்தைத் தண்டிக்கக்கூடிய சக்தி, வாக்காளர்களாகிய உங்களிடம் தான் உள்ளது. எனவே, சிந்தித்து வாக்களியுங்கள். இப்படியே போனால், தமிழகத்தை குடும்ப வசம் ஆக்கிக் கொள்வார் கருணாநிதி. அவரது குடும்பத்தை அப்புறப்படுத்த வேண்டும்.  கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு கருணாநிதியின் குடும்பம் ஊழல் புரிந்துள்ளது. எனவே, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு, திமுக போட்டியிடும் அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கும் அளவுக்கு, அதிமுகவை வெற்றி பெறச் செய்து வரலாற்றுச் சாதனையை நீங்கள் நிகழ்த்த வேண்டும்.  இத்தொகுதியில் பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டத்தில் ஆனைமலையாறு, நல்லாறு அணைக்கட்டு திட்டம் செயல்படுத்தப்படும். அம்பராம்பாளையம் திட்டத்தில் 294 கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  நெசவுத் தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தென்னை, பனை தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கள் இறக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.  உடுமலை வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், மடத்துக்குளம் வேட்பாளர் சி.சண்முகவேல், பொள்ளாச்சி வேட்பாளர் முத்துக்கருப்பண்ணசாமி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை (தனி) தொகுதி வேட்பாளர் எம்.ஆறுமுகம்  உள்ளிட்டோரை அறிமுகப்படுத்தி, ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.  இதுதவிர கேரள மாநிலத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் சம்பத், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 6 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும், அவர் வாக்கு சேகரித்தார்.