“ஜில்லா பரிஷத் பள்ளி” என்ற உதிர்ந்துக்கொண்டிருக்கும் பெயர்ப்பலகையுடன் ஒரு பள்ளி. டீச்சரில்லாமல் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள். மிகச்சிறிய அந்த மலைகிராமத்தில், பெரும்பாலும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள விவசாய குடும்பங்கள். பாரதிராஜா படமெல்லாம் இல்லை. 2009 இல் ரஞ்சித்சிங் திசேல் பரிதேவாடி மலைக் கிராமத்திற்கு வேலைக்கு வந்தபோது, அவர் வேலைக்கு சேரவேண்டிய பள்ளி இப்படித்தான் இருந்தது. 70 களில் இது வழக்கமான காட்சியாக இருந்திருக்கலாம். 2009 இல் இப்படிப்பட்ட இடங்களில் பணிபுரிய எத்தனை இளைஞர்களிடம் முனைப்பு இருக்கும்?. ரஞ்சித்திற்கும் இக்கால இளைஞர்களின் வழக்கமான IT எஞ்சினியர் கனவு இருந்தது. ஆனால், சில காரணங்களால் கனவு, கனவாகவே நின்றுவிட, அப்பாவின் ஆலோசனையின்படி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேருகிறார் ரஞ்சித். பெரிய பிடித்தம் என்றெல்லாம் இல்லையென்றாலும் ரஞ்சித்திற்கு ஒன்று புரிந்தது. “மெஷினை வடிவமைக்கிறவங்க எஞ்சினியர்னா, குழந்தைகளை, அவர்கள் மூலம் இந்த சமுதாயத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கற எஞ்சினியர்கள் ஆசிரியர்கள்தான்”. இந்தப் புரிதலுக்குப் பிறகு ரஞ்சித்தால் தன் படிப்பை, அது சார்ந்த தொழிலை ஆழமாக நேசிக்க முடிந்தது.
சனி, 5 டிசம்பர், 2020
“ஜில்லா பரிஷத் பள்ளி” 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு ரஞ்சித்சிங் திசேல்~.. Ranjitsinh Disale Wins Global Teacher Prize 2020
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ : என் ஆதரவில் பின்வாங்க மாட்டேன்.. மிரட்டி பார்த்த இந்தியா!
webdunia - Sugapriya Prakash : கனடா பிரதமர், மனித உரிமைகளுக்கான அமைதியான முறையில் எங்கு போராட்டம் நடந்தாலும் கனடா அதை ஆதரிக்கும் என பேச்சு. வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிரது. இந்நிலையில் இந்தப் போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் ’இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் பற்றி செய்திகள் கவலை அளிக்கிறது என்று ம் அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும் என்றும் தெரிவித்திருந்தார்......
ஈரோடு சவுந்தர் காலமானார். பல படங்களுக்கு வசனம் எழுதி இயக்குநராகவும், நடிகராகவும் தனி முத்திரை பதித்தவர்
webdunia :தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு வசனம் எழுதி இயக்குநராகவும், நடிகராகவும் தனி முத்திரை பதித்தவர் ஈரோடு சவுந்தர்.
அவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் முன்னஈ இயக்குநர் மற்றும் சிறந்த வசன கர்த்தாவாக இருந்தவர் ஈரோடு சவுந்தர். இவர் முதல் சீதனம், சிம்மராசி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம், போன்ற ஹிட் படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.
சசிகலா முன்கூட்டியே விடுதலை இல்லை: பெங்களூரு சிறை நிர்வாகம் தகவல்
சூரப்பாவின் நேர்மை பிடிச்சிருக்கு!- கமல்ஹாசன்
வந்தவரோ வளைந்து கொடுக்காதவர். தமிழகத்தின் பொறியியல் கல்வியை உலகத் தரத்திற்கு உயர்த்த முனைந்தவர். அதிகாரத்தின் முன்பு நெளிந்து போகாதவர். பொறுப்பார்களா ஊழல் திலகங்கள்? வளைந்து கொடுக்கவில்லை என்றால் முடிப்பது தான் அவர்கள் பழக்கம். எவனோ அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஒரு பேடி எழுதிய கடிதத்தை அடிப்படையாக வைத்து விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறார்கள். மொட்டையில் முடி வளராததால் அவர் மீது புகார்கள் இருக்கிறதாஎன்று விளம்பரம் செய்து கடை விரித்துக் காத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கொக்கறிக்காதீர்கள்! அதற்கு உங்களுக்கு உரிமை இல்லை!... கமலஹாசனுக்கு..
மோடி அனைத்துக் கட்சிக் கூட்டம் . டி.ஆர்.பாலுவின் மைக்ரோ போன் ம்யூட் செய்யபப்ட்டது.
தோட்டக்காரி .. இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம்.. 1963 இல் திரையிடப்பட்டது.
ரஜினி போன்ற கருப்புப்பண முதலை களுக்கு சட்டம் எப்படி வளைந்து கொடுக் கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு
வெள்ளி, 4 டிசம்பர், 2020
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் . டிஆர்எஸ் 56.. பாஜக 48, ஓவைசி 44!
tamil.oneindia.com : ஹைதராபாத்: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்தது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் 150 இடங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆளும் டிஆர்எஸ் 56 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது, பாஜக 48 தொகுதிகளில் வென்றுள்ளது. ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 44 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வென்றுள்ளன.
தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சியின் 150 வார்டுகளுக்கான தேர்தல் டிசம்பர் 1-ந் தேதி நடைபெற்றது. மாநில சட்டசபை தேர்தலைப் போல ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் களைகட்டி இருந்தது. இந்த தேர்தலில் தெலுங்கானாவின் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகியவை தனித்து களம் கண்டன.
பிரதமரின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்தி மட்டுமே! போர் முழங்கிய டி ஆர் பாலு திருச்சி சிவா . ஆடிப்போன மோடி
சாதிய பெயர்கள் எங்கள் வீதிகளுக்கு வேண்டாம்” மகாராஷ்ட்ர அரசு முடிவு
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் தெலுங்கு தேசம் முன்னணியில் ஓவைசியின் கட்சி இரண்டாவது இடத்தில் பாஜக மூன்றாவது இடத்தில்
மொத்தம் 150 வார்டுகளை கொண்ட ஹைதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல், மாநில சட்டமன்றத் தேர்தலைப் போலவும், நாடாளுமன்றத் தேர்தல் போலவும் இந்தியா உற்றுநோக்கும் தேர்தலாக மாறி இருக்கிறது. இதற்குக் காரணம், தென்னிந்தியாவில் பாஜக வேரூன்ற தெலங்கானா மாநிலம் ஒரு சிறந்த வாய்ப்பாக பாஜக கருதுகிறது. அதோடு கடந்த சில மாதங்களாகவே பாஜகவுக்கும் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிரியச் சமிதி கட்சிக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. எனவே மத்திய பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணிகளை முதல்வர் சந்திரசேகர் ராவ் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினி அரசியல்: நவம்பர் 30 டு டிசம்பர் 3 -.. நடந்தது என்ன... பின்னணியில் அமித் ஷாஜி இருக்காரு' என கமலாலயத்தினர்
இத்தனை ஆண்டுகளாக இல்லாமல், தற்போது திடீரெனெ எப்படி இந்த முடிவுக்கு வந்தார் ரஜினி, அவர் மனதை கரைத்தவர்கள் யார்?... குறிப்பாக நவம்பர் 30-ம் தேதியிலிருந்து டிசம்பர் 3-ம் தேதிக்கு இடைப்பட்ட நாள்களில் என்ன நடந்தது என்ற பல்வேறு கேள்விகளோடு ரஜினி ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள், அவருக்கு நெருக்கமானவர்கள் எனப் பலரையும் தொடர்பு கொண்டோம்.
ரஜினியின் பார்ப்பார் அர்ஜுன் மூர்த்தியின் ஜாதிவெறி |
பாமர மக்களின் துயரை துடைக்காத ஆன்மீகத்தால் எந்த ஒரு பயனும் இல்லை.
நடிகை சௌந்தர்யாவுக்கு இருந்த நன்றி உணர்வு கூட ரஜினி காந்துக்கு இல்லையே !
நடிகை சௌந்தர்யா |
கதாபாத்திரத்திற்காக மிகப் பெரும் உழைப்பை அர்ப்பணிக்கிறார்.சினிமாவில் சம்பாதித்த காசை சினிமாவிற்கே செலவிடுகிறார்.போட்டப் பணம் திரும்பி வருமா என்றெல்லாம் யோசிப்பதில்லை.ஆனால்,கமல் அவர்களால் இந்திய சினிமாவைத் தாண்டி போக முடியவில்லையே! ஒரு முறை முன்னாள் பாரதப் பிரதமர் திரு.மன்மோகன்சிங் அவர்கள் ஜப்பான் பாராளுமன்றத்தில்,
41 தொகுதிகள்தான் வேண்டும்.. திமுகவிடம் அடம்பிடிக்கும் காங். ..மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம்..
யார் ஆட்சியில் ஊழல்? நேரில் விவாதிக்க வருமாறு முதல்வருக்கு ஆ. ராசா சவால்
BBC " 2 ஜி ஸ்பெக்டரம் விவகாரத்தில் தி.மு.க ஊழல் செய்ததாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், இது தொடர்பாக விவாதத்திற்கு வரும்படி தி.மு.கவின் சார்பில் சவால் விடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் செய்யப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து வியாழக்கிழமையன்று ஆய்வுசெய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தி.மு.க. தேவையில்லாமல் தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தங்கள் மீது தெரிவிப்பதாகக் கூறினார். “எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தினமும் அறிக்கை விடுகிறார். அவருக்கு அறிக்கை நாயகன் என்றே பெயர் சூட்டலாம். மக்களைப் பார்த்து மனு வாங்காமல், நான்கைந்து மாதமாக வீட்டிலேயே இருந்துகொண்டு இந்த ஆட்சியில் ஊழல் நடப்பதாக பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்.
கடைசி தலைமுறை அரசுமருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவத்துறை டெக்னிஷியன்கள் ....அடுத்த அதிர்ச்சி..!
Maha Laxmi : · அடுத்த அதிர்ச்சி..! இது உண்மையான தெரியவில்லை அப்படி இருந்தால் மாபெரும் கொடுமை கடைசி தலைமுறை அரசுமருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவத்துறை டெக்னிஷியன்கள் அனைத்து பிரிவு மருத்துவ ஊழியர்களும் இப்போது இருப்பவர்கள் தானா?
மத்திய அரசின் #மாபெரும்திட்டங்கள்! மருத்துவ கல்விக்கு பிறகு அரசு மருத்துவமனைகளுக்கு மூடு விழா நடத்தப்போகும் மோடி அரசின் புண்ணியங்கள்:
இந்தியாவின் எட்டு பெரும் நகரங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் உள்ள வளாகத்தில் 50 அல்லது 100 படுக்கை வசதிக்கொண்ட கட்டிடத்தை #தனியாருக்கு 30வருடங்களுக்கு கொடுக்க வழிவகை செய்யும் ஒரு ஓப்பந்தத்தை அனைத்து மாநில அரசுக்கும் மத்திய நிதி ஆயோக் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அனுப்பியிருக்கிறது.
இதன் மூலம் இந்திய ஒன்றியத்தில் பெரும்பாலான மக்கள் நம்பிக்கொண்டு இருக்கும் அரசு மருத்துவமனைகளையே இல்லாமல் செய்யும் வேலையை மோடி அரசு செய்ய துணிந்திருக்கிறது.
Dev Anand நடிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அதையும் தாண்டி சினிமாவை நேசித்த இந்திய டாப் ஸ்டா
லாலு பிரசாத்தின் சுயசரிதை GOPALGANJ TO RAISINA “நாங்கள் ஏழைகள்தான்… ஆனால் படிக்க ஆசைப்படுபவர்கள்.
லாலு பிரசாத் முதலமைச்சராக இருந்த காலங்களில்… ”வழக்கமாக” ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தலித்துகளுக்கு வீடுகட்டித் தருவதற்கு மாற்றாக நகரின் மத்தியில் அடுக்குமாடி வீடு கட்டிகொடுத்தார்.
அரசு நிலத்தில் அமைந்திருந்த கோடீஸ்வரர்களுக்கான 200 ஏக்கர்
பாட்னா கோல்ப் மைதானத்தை கைப்பற்றி மிருகங்கள் சுதந்திரமாக உலவட்டும் என அருகில் இருந்த பாட்னா மிருகக்காட்சி சாலையோடு இணைத்தார்.
பணக்காரர்கள் குடிக்கவும் கும்மாளமிடவுமாய் இருந்த பாட்னா ஜிம்கானா கிளப்பில் 60 சதவீதம் கையகப்படுத்தி...
அதில் இனி ஏழை ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் வீட்டு திருமண நிகழ்வுகள் உட்பட சகலத்தையும் வைத்துக் கொள்ளலாம் என அறிவிகத்தார்
.
.
ஒரு புறத்தில் பணக்காரர்கள் விலை உயர்ந்த மதுபானங்கள் குடித்துக் கொண்டிருக்கும்போது ஏழைகள் என்ன செய்வார்களென யோசித்து
.
“இனி நீங்களே உங்களுக்கான உள்ளூர் கள்ளையும் கறியையும் கையோடு கொண்டு வாருங்கள்.
இங்கேயே உங்களுக்கு விருப்பமான ஆடு கோழி பன்றி என சமைத்துச் சாப்பிடுங்கள்.
இது வசதி உள்ளவனுக்கு மட்டுமேயான இடமல்ல. இது உங்களுக்கானதும்தான் என அறிவிகொடுத்தார் லாலு பிரசாத்
andhimazhai.com :புத்தகம்… அப்படி ஒரு புத்தகம். படிக்கக் கையில் எடுத்ததில் இருந்து முடிக்கும் வரை அவ்வளவு சுவாரசியம். . எல்லாம் நம்ம தலைவர் லாலு பிரசாத்தின் சுயசரிதைதான். . லாலு பிரசாத் என்றாலே ஒரு இளக்காரப்பார்வை எண்ணற்றவர்களிடம் உண்டு. அதுவும் அவரை நம்மூர் பசுநேசர் ராமராஜனோடு ஒப்பிட்டுச் செய்த பகடிகள் ஏராளம். . ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி அவர் யார்? எப்படிப்பட்டவர்? எவ்விதம் இவ்வளவு உயரத்துக்கு வந்தார்? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விடை இந்த நூலில் இருக்கிறது. . அதிலும் தான் எந்த இடத்தில் தடுமாறினேன்…. தவறிழைத்தேன் என்கிற மனம் திறந்த ஒப்புதல் வாக்குமூலங்களும் உண்டு இதில். அவருக்கே உரித்தான நக்கல் நையாண்டி ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கிறது. தமிழிலேயே தடுமாறும் நான் இந்த இங்கிலீஷ் புத்தகத்தை வாசித்துவிட்டேன் என்றால் உங்களால் முடியாதா என்ன? (GOPALGANJ TO RAISINA)
ஃபைசர் பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசி அனுமதி வழங்கிய பிரிட்டன்
இது இரண்டு கோடி பேருக்கு கோவிட்-19 தொற்றுக்கான நோய் எதிர்ப்பாற்றலை உண்டாக்க போதுமானது.
மகாராஷ்டிராவில் ஊர்களின் ஜாதிப்பெயர்கள் அகற்ற முதல்வர் உத்தம் தாக்கரே உத்தரவு .. சமத்துவபுரம் பாணியில் சமதா புரம்?
மகர் வாதா, பிராமண் வாதா, மங் வாதா, தோர் வஸ்தி, பெளத் வாதா, மல்லி கல்லி போன்ற சாதிப் பெயர்கள் ஒழிக்கப்படுகின்றன. மாற்றாக, சமதா நகர், பீம் நகர், ஜோதி நகர், சாகு நகர், கிராந்தி(புரட்சி) நகர் போன்ற பெயர்கள் சூட்டப்படும்.அம்பேத்கர் பெயரில் வழங்கப்படுகின்ற தலித் விருது அம்பேத்கர் சமஜ் பூசண் விருது என மாற்றப்படும். Maharashtra to rechristen all localities with caste-based names CM Uddhav Thackeray, who chaired the cabinet meeting on Wednesday, said the decision would help to create social harmony and increase national unity among all caste and creed.
வியாழன், 3 டிசம்பர், 2020
தேனில் சர்க்கரை பாகு கலப்படம் -டாபர், பதஞ்சலி, பைத்யநாத் மற்றும் ஜண்டு உள்ளிட்ட 13 முன்னணி பிராண்டுகள்! சோதனையில் சிக்கின...
RSS-ன் மறைமுக தேர்தல் பணியின் சூத்திரமும், நோக்கமும்
மதம் மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்புடையதாக வைக்கப்பட்டதால் மட்டுமே இந்தியத் துணைக்கண்டத்தில் சாதி எனும் மிகக் கொடுமையான முறை பாதுகாக்கப்பட்டது. ஆளும் வர்க்கத்தின் பொருளாதார சுரண்டலை மையமாக வைத்து சாதிய அமைப்பு இயங்கினாலும் அது வெகுமக்களிடம் ஒரு புனிதமாக, கடமையாக, ஒரு நெறிமுறையாக கட்டாயம் உணரவேண்டிய விழுமியமாக பாதுகாக்கப்பட்டது.
பாஜகவின் வெற்றிகளில் ஆர்.எஸ்.எஸ்-சின் கண்ணுக்கு தெரியாத கை
இதுபோன்ற ஒரு உளவியலைத்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எளிய மக்களைச் சென்றடைய பயன்படுத்துகிறது. இது மக்களுக்கு ஒரு கலாச்சார நம்பகத்தன்மை கொண்ட அடையாளத்தை வழங்குகிறது. அதன் நுட்பங்கள் அடிப்படையில் சாதி, சமூக வலைப்பின்னல்களை உடையது. இந்த வலைப்பின்னல் பாரதிய ஜனதா கட்சியால் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் நடந்த பொதுத் தேர்தலைகளை ஆய்வு செய்யும்போது பாஜக-வின் கரங்கள் வலுப்பெற்ற இடத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு தனித்துவமான வேலைத்திட்டத்துடன் களமிறக்கப்பட்டுள்ளது.
பன்னீர்செல்வம் : ரஜினியுடன் வாய்ப்பு இருந்தால் கூட்டணி அமையும்
nakkeeran : வருகின்ற 2021 ஜனவரி மாதம், அரசியல் கட்சித் தொடங்குவதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31 -ஆம் தேதி வெளியாகும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்துத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது அரசியல் வருகைக்குப் பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வம் வீரபாண்டி அருகே உள்ள தப்புகுண்டு பகுதியில் அமைய இருக்கும் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இடத்தை நேரடியாக ஆய்வு செய்தார்.
தமிழருவி மணியன் : ரசிகப் பெருமக்களுக்கும், ஊழலற்ற, நேரிய ஆட்சியைத் தர ரஜினி ஒருவரால் மட்டுமே முடியும்
தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிற சூழ்நிலையிலும், மருத்துவர்கள் கொடுத்திருக்கிற எச்சரிக்கையைப் புறக்கணித்துவிட்டு மக்கள் நலனுக்காக, மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும் என்பதற்காக ரஜினி இன்று ஒரு மிகப்பெரிய வேள்வியில் இறங்கியிருக்கிறார் என்று தமிழருவி மணியன் பேசினார்.
ரஜினி, போயஸ் கார்டனில் உள்ள தன் இல்லத்தின் முன் கட்சி தொடங்குவது குறித்து அறிவித்தார். அதற்குப் பின், தமிழருவி மணியனைத் தனது பணிக்கான மேற்பார்வையாளராக நியமித்துள்ளதாகத் தெரிவித்தார்.... அதன்பின்னர் தமிழருவி மணியன் செய்தியாளர்களிடம் இன்று பேசியதாவது: ...
ரஜினி teaser release : அரசியல் கட்சி துவக்கம்... மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் இப்போ இல்லேன்னாஎப்பவும்இல்ல
இலங்கையில் புரேவி புயல்- யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறையில் மிக மோசமான சேதம்!
இந்த புயல் தற்போது மன்னார்வளைகுடாவுக்குள் நுழைந்து பாம்பனை நெருங்கிக் கொண்டிருக்கிறது. புரேவி புயல் கரையை கடந்த போது மணிக்கு 80கி.மீ. முதல் 100 கி.மீ. வரை பலத்த சூறாவளி காற்று வீசியது. பாம்பனை நெருங்கிய புரேவி புயல்- பல மாவட்டங்களில் கனமழை- இன்று இரவு அல்லது அதிகாலை கரையை கடக்கிறது இப்புயலால் இலங்கையின் பல பகுதிகளில் 20 செ.மீ மழை பதிவாகி இருக்கிறதாம். இந்த புரேவி புயல் முழுவதும் தமிழரின் தாயகப் பகுதிக்குள்தான் கரையை கடந்தது. இதனால் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னர், கிளிநோச்சி மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
மேற்குவங்க தேர்தலில் பாஜகவின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள்
அறிமுக போட்டியிலேயே அசத்தல்: டி.நடராஜனுக்கு முதலமைச்சர் பழனிசாமி, முக ஸ்டாலின் வாழ்த்து
சீன பருத்தி பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதிப்பு
dailythanthi.com : உய்குர் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பருத்தி பொருட்களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்து உள்ளது.
வாஷிங்டன், சீனாவில் உள்ள முகாம்களில், சிறுபான்மை சமூகம் என அறியப்படும் உய்குர் முஸ்லிம்களில் பெரும்பகுதியினரை அரசியல் மறு கல்வியூட்டல் என்ற பெயரில் அந்நாடு சிறை பிடித்து கொடுமைகளை இழைத்து வருகிறது என அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ஐ.நா. நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆனால் சீனா இதனை மறுத்து வருகிறது. அவர்கள் தவறாக நடத்தப்படவில்லை. உய்குர் முஸ்லிம்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது என தெரிவித்தது.
முகக்கவசம் அணியாததால் அந்தரத்தில் விமானத்துக்குள் அடிதடி!
puthiyamugam.com : ஆம்ஸ்டெர்டாமிலிருந்து இபிஸா நகருக்குச் சென்ற விமானத்தில் இருந்த பயணிகளுக்கிடையே முகக் கவசம் அணிவது தொடர்பான பிரச்னை வன்முறையில் சென்று முடிந்துள்ளது.
பலர் தடுக்க இரு ஆண்கள் கோபமாகச் சண்டையிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சட்டையில்லாத ஒருவரை பலர் தடுத்துப் பிடிக்கிறார்கள். அவரை மற்றொருவர் தாக்குகிறார். அங்கிருப்பவர்கள் “நிறுத்துங்கள், இங்கே குழந்தைகள் உள்ளனர்.” என்று கத்துகின்றனர். அந்த வீடியோவின் கடைசியில் சட்டையில்லாத அந்த நபர் கீழே தள்ளப்பட்டு மற்றவர்களால் தரையில் அழுத்தி பிடிக்கப்பட்டிருக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்த பதிவில் ’இச்சண்டையில் ஈடுபட்ட ஒருவர் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் மது அருந்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஎல்எம் நிறுவன விமானத்தில் நடந்த இந்த சண்டையின் காரணமாக அந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதன், 2 டிசம்பர், 2020
சார்பட்டா பரம்பரையின் சாம்பியன் ‘நாக்அவுட் கிங்’ காசிமேடு ஆறுமுகம்! குத்துச்சண்டை.. தமிழகம் இழந்த ஒலிம்பிக் வாய்ப்புகள்
Gnatppan Siva : · சார்பட்டா பரம்பரையின் கடைசி காலத்து அசைக்கமுடியாத சாம்பியனாக இருந்து, ‘நாக்அவுட் கிங்’ காசிமேடு ஆறுமுகம். 1977 வரைக்கும் இவர் கொடிதான் பறந்தது. ‘‘எங்க பரம்பரைய ‘சதுர்சூரிய சார்பட்டா பரம்பரை’ன்னு சொல்வாங்க. அதுக்கு அர்த்தம் தெரியாது!, பாக்ஸிங் மேடையில முதல்ல அடிப்பதுபோல லெப்ட், ரைட்னு எதிராளி முகத்துக்கு முன்னாடி கையைக் காட்டி பயம் காட்டுவேன். ‘இவன் அடிக்கமாட்டான்’னு எதிராளி முடிவுக்கு வரும்போது சடார்னு வெயிட்டா ஒரு பன்ச் விடுவேன். இதுதான் என் ஸ்டைல். இதுக்குத்தான் ‘நாக்அவுட் கிங்’னு பேர் கிடைச்சுது. -
நாக் அவுட் ஆறுமுகம்.. வன்முறை பூமியாக இப்போது காட்டப்படும் வடசென்னைதான் அந்த வீரம் விளைந்த மண். இந்தப் பகுதியில்தான் இடியப்ப நாயக்கர் பரம்பரை, சார்பட்டா பரம்பரை என்ற பெயர்களில் அமைந்த இரண்டு குழுக்களிலிருந்து புறப்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மோதியிருக்கிறார்கள்.. ‘‘போட்டியில் மோதும் இரண்டு பாக்ஸர்களையும் ஸ்டூடியோவில் வைத்து முதலில் போட்டோ எடுப்பார்கள். இந்த போட்டோவைத்தான் பிட் நோட்டீஸ், விளம்பர தட்டிகள், போஸ்டர்கள், தியேட்டர் ஸ்லைடுகளில் காண்பிப்பார்கள். போட்டோவில் இரண்டு பாக்ஸர்களும் ஈக்குவலா தெரியணும். இல்லாவிட்டால் பாக்ஸர்களுக்கான அசோசியேஷன் அனுமதிக்காது. எல்லா போட்டிகளுக்கும் ஒரு கான்டிராக்டர் இருப்பார். அவரிடம் கான்ட்ராக்டில் கையெழுத்து போட்டதும்தான் போட்டோவுக்கு போஸ் கொடுக்க முடியும்." -பாக்ஸர் மோகன்..
kungumam :பெருமிதம் கொள்ளவும், ஆரவாரம் செய்யவும், வெற்றித் தருணங்களை ஒலிம்பிக் போட்டிகளில் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாறுகிறோம். இந்தியனாக இது வேதனை தருகிறது; தமிழர்களுக்கு அதில் இன்னும் வேதனை. தோற்கிறார்களோ, ஜெயிக்கிறார்களோ... அதிகம் வீரர்களை அனுப்பி வைத்த மாநிலம் என சொந்தம் கொண்டாடுகிறது குட்டியூண்டு ஹரியானா. நாமோ, ககன் நரங் ஜெயித்ததும் ‘அவர் சென்னையில் பிறந்தவர்’ என ஆறுதல் அடைகிறோம்.
மேட்டுப்பாளையம்.. 17 உயிர்களை பறித்த தீண்டாமை சுவர்! மீண்டும் புதிய சுவரிலும் இதே..
தமிழகத்தையே உலுக்கிய அந்த கோர விபத்து நடந்து ஒரு வருடம் நிறைவடையும் நிலையில், இன்றுவரை அப்பகுதியில் பாதுகாப்பில்லாத நிலையில் பல குடியிருப்புகள் இருக்கின்றன. சுவர் இடிந்து விழுந்த விபத்தில் தனது உறவினர்களை இழந்த மணி, வலிநிறைந்த நினைவுகளை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார். அன்றைய தினம் எங்கள் பகுதியில் கனமழை பெய்தது. மழை பெய்தாலே ஆதி திராவிடர் காலனியை மட்டும் வெள்ளநீர் சூழ்ந்து கொள்ளும். காரணம், இப்பகுதி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. இடிந்து விழுந்த சுவரின் அருகே இருந்த ஓட்டு வீட்டில் எனது இரண்டு சகோதரர்களின் குடும்பங்கள் வசித்து வந்தன. நான், எனது மகன் மற்றும் மருமகளோடு ஓடையின் அருகே வசித்து வந்தேன். அதிக மழைப் பொழிவு காரணமாக எனது வீட்டுக்குள் மழைநீரும் சாக்கடைநீரும் இடுப்பளவு வந்து விட்டது. அருகில் வசிப்பவர்களின் உதவியோடு வீட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த போது, எனது தம்பியின் வீடு இடிந்துவிட்டதாக தகவல் வந்தது."
மதுரையில் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட ரமேஷின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
minnambalam :மதுரை பேரையூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அணைக்கரை பட்டியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரது மகன் ரமேஷ். கடந்த செப்டம்பர் மாதம் போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர், அப்பகுதியிலிருந்த மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். ரமேஷின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, சார்பு காவல் ஆய்வாளர்கள் ஜெய கண்ணன், பரமசிவம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ரமேஷ் |
இந்த சூழலில் பேரையூரை சேர்ந்த சந்தோஷ், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “எனது சகோதரர் இதயக்கனி, புனிதா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். புனிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சாப்டூர், சார்பு ஆய்வாளர்கள் ஜெயகண்ணன் மற்றும் காவலர் ராஜா ஆகியோர் எனது குடும்பத்தினரை விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்தனர்.
பாமக வலுவான மாவட்டங்களில் படிப்பறிவு குறைவு? பள்ளி இடைநிற்றலும் அதிகம்? தமிழக அரசு புள்ளி விபரங்கள்
tharmenthiran L பாமக வலுவாக இருக்கும் பெரும்பாலான மாவட்டங்களில் படிப்பறிவு குறைவாகவும்.. பாதியில் பள்ளி இடைநின்றலும் அதிகமாக இருப்பதாக தமிழக அரசு புள்ளி விபரங்கள் ....
அதற்காண விழிப்புணர்வை 30"ஆண்டுகளாக பாமக முன்னெடுக்கவில்லையே ஏன்?
அது போன்ற ஒரு முன்னெடுப்பினால் மட்டும்தானே எந்த சமூகமும் முன்னேற முடியும்?
90"களில் இருந்த அரசு வேலைவாய்ப்பு 2020"ல் குறைந்து தனியார் வேலைவாய்ப்புக்களே தற்போது அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் படிக்காத பாதியில் நிறுத்திய வாரிசுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தால் 20% இடஒதுக்கீடு பெற்றாலும் வன்னிய சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சாரரே பயன் பெறபோவதால் எப்படி ஒட்டுமொத்த சமூகமும் முன்னேற முடியும்?
நடிகை வித்யா பாலன் இரவு விருந்துக்கு செல்லாததால்… பட ஷூட்டிங்கை நிறுத்திய ம.பி. அமைச்சர்
maalaimalar :பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கும் ஷேர்னி படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் நடந்து வருகிறது. மத்திய பிரதேச வனப்பகுதியில் நடத்தப்பட்டுவரும் சில காட்சிகளின் படப்பிடிப்புக்காக அவர் கடந்த சில வாரங்களாக அந்த மாநிலத்தில் தங்கி படப்பிடிப்பில் ஈடுப்பட்டுள்ளார். இந்நிலையில் மத்திய பிரதேச மாநில அமைச்சரின் இரவு உணவுக்கான அழைப்பு நிராகரிக்கப்பட்டதால், படத்தின் படப்பிடிப்பு அங்கு நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச வனத்துறை அமைச்சர் விஜய் ஷா இரவு உணவிற்கு வித்யா பாலனை அழைத்ததாகவும், அதை அவர் நிராகரித்ததாகவும், இது நடந்து ஒரு நாள் கழித்து திரைப்படத்தின் தயாரிப்புக் குழுவின் வாகனங்கள் படப்பிடிப்புக்காக காட்டுக்குள் நுழைவது நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நீதிபதி சி.எஸ். கர்ணன் சென்னையில் கைது
BBC : உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர் தொடர்பாக அவதூறு காணொளியை வெளியிட்ட விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினர் கைது செய்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் பாலியல் ரீதியாக அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பேசியதாக கர்ணன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது செயல்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கர்ணன் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது கர்ணனுக்கு முதல் முறை அல்ல. 3 ஆண்டுகளுக்கு முன்பே உயர் நீதிமன்ற நீதிபதி பதவி வகித்தபோதே அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு ஆளானார். அந்த வகையில் சர்ச்சைகளுடன் தமது சட்டத்துறை வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார் கர்ணன்.
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் 232 வது குருமகா சன்னதி தானம் இயற்கை எய்தினார்
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் |
காஞ்சிபுரத்தில் தொடங்கப்பெற்ற பிராமணரல்லாதோர் அர்ச்சகர் பயற்சிப்பள்ளிக்கு, பயிற்சியளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் என்பதும், 1973ம் ஆண்டு அமைக்கப்பெற்ற கோயில் நிலத்தை முறைப்படுத்தல் ஆலோசனைக்குழுவின் துணைத்தலைவர் மற்றும் பிராமணல்லாதோர் அர்ச்சகராகும் திட்ட ஆலோசனைக்குழுவின் உறுப்பினர் என பங்காற்றியவர் என்பதும் செங்கற்பட்டு வட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடலூர் கிராமம் மற்றும் முதலியார்க்குப்பம் ஆகிய கிராமங்களில் சுனாமி மறுவாழ்வு குடியிருப்புகள் அமைத்துக்கொடுத்தவர் என்பதும் போற்றுதலோடு குறிப்பிடத்தக்கது.
சிவா மயிலாடுதுறை : எனது பெரியப்பா - காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனகா்த்தா் 232 வது பட்டம் குருமகா சன்னதி தானம் சிவ பதம் அடைந்தார்.
நாகர்கோவிலில் தமிழக பிச்சைக்காரர் ஜார்கண்ட் பிச்சைக்காரரால் அடித்துக் கொலை
பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் புரெவி புயல்- இந்திய வானிலை ஆய்வு மையம்
நாலு பஸ்சை உடைக்கிறது குடிசையை கொளுத்துறது ஆணவ கொலை செய்றது...
செவ்வாய், 1 டிசம்பர், 2020
1967 பின் சென்னையில் மட்டும் காணாமல் போன ஏரிகள், குளங்கள்.. 39 !
கனடாவில் பஞ்சாபியர்கள் மிகவும் பலம் வாய்ந்த ஒரு சிறுபான்மையோர்களாக உள்ளார்கள்
நேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்க சீனா உறுதி
dinamalar.com : பீஜிங் : நேபாளத்தின் இறையாண்மை, சுதந்திரம், எல்லை ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பிற்கு ஆதரவளிப்பதாக, சீனா தெரிவித்துள்ளது.சீன ராணுவ அமைச்சர் வெய் பெங்கி, ஒரு நாள் பயணமாக நேபாளம் சென்றார். இது குறித்து, சீன பாதுகாப்பு துறை வெளியிட்டு உள்ள அறிக்கை:வெய் பெங்கி, நேபாள பிரதமர் சர்மா ஒலி, ராணுவ தளபதி பூர்ண சந்திர தாபா ஆகியோரை சந்தித்து பேசினார்.கொரோனாவால், நிறுத்தப்பட்ட, நேபாளம் - சீனா இடையிலான ராணுவ பயிற்சியை மீண்டும் துவங்குவது குறித்து, பேச்சு நடத்தினார். நேபாள ராணுவத்தை மேம்படுத்த, சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என, தெரிவித்தார்.
'ஒரே சீனா' கொள்கைக்கு நேபாளம் தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். அதுபோல, இதர நாடுகளும், தைவான், திபெத் ஆகியவை, சீனாவின் அங்கம் என்பதை ஏற்க வேண்டும்.
முக அழகிரி : நான் பாஜகவில் இணைய உள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் வதந்தியே
webdunia :தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவிலிருந்து விலகி பல காலமாக அரசியல் தொடர்பின்றி இருந்த மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அவரது ஆதரவாளர்களோடு அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்ட நிலையில் பாஜகவோடு அவர் இணைய போவதாகவும் பேசிக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த தகவல்களை மறுத்துள்ள மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்கும் எண்ணம் தமக்கு இல்லை என கூறியுள்ளார்.
ஆனால், பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், மு.க.அழகிரி பாஜகவில் இணைந்தால் கண்டிப்பாக வரவேற்போம் என கூறினார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி, வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்கு இருக்கும் என தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு!
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 6 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போலீசாரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் போராடி வருகின்றனர்.
‘6 மாதங்களுக்கு தேவையான பொருட்களுடன் வந்துள்ளோம், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை டெல்லியிலேயே முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். ஜந்தர் மந்தர் மற்றும் ராம் லீலா ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், டெல்லி புறநகர்ப் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு
போற்றப்படுகின்றார். தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலக்கட்டங்களில் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை அரசு உறுதிபடுத்த வேண்டியுள்ளது. மேலும், 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இவ்வழக்கையும் எதிர்கொள்ள இத்தகைய புள்ளி விபரங்கள் தேவைப்படுகின்றன.
இரானின் அணு விஞ்ஞானி 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் கொல்லப்பட்டார்
இலங்கை சிறையில் கலவரம் 8 கைதிகள் உயிரிழப்பு 50பேர் காயம்.. தொடர்ந்து பதற்றம்
மஹர சிறைச்சாலை முன் சிறைக்கைதிகளின் குடும்பத்தவர்கள் பெருமளவில் திரண்டவேளை அவர்களை கலகம் அடக்கும் பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
ரஜினி : அரசியலுக்கு வர மாட்டேன்.. ஒரு நாளைக்கு 14 மாத்திரை .... வெளிய போகக் கூடாதுனு டாக்டர்கள் சொல்லிட்டாங்க
minnambalam : “நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்தினரிடம் நேற்று (நவம்பர் 30) அன்று சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது தனது நிலைப்பாட்டை அவர் தெள்ளத் தெளிவாக சொல்லியிருக்கிறார். இதுபற்றியெல்லாம் மண்டபத்தில் மன்றத்தினரிடம் ரஜினி பேசியது என்ன என்ற தலைப்பில் நேற்றே மின்னம்பலத்தில் விரிவாக வெளியாகியிருக்கிறது. ரஜினி தனது மன்ற நிர்வாகிகளிடம், இப்போதைய தனது உடல் நிலை பற்றித்தான் அதிக அழுத்தம் கொடுத்துப் பேசியிருக்கிறார். ‘அரசியலுக்கு வரணும்னு உங்களை விட எனக்கு அதிக ஆர்வமும் ஈடுபாடும் இருந்துச்சு. கட்சி ஆரம்பிக்கிறது முன்னாடி சமயபுரம் மாரியம்மன் கோயில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி சர்ச்சுக்கு போயிட்டு மக்களை சந்திக்குறதுனு முடிவெடுத்திருந்தேன். ஆனா இந்த கொரோனா எல்லாத்தையுமே மாத்திப் போட்டுருச்சு.
பஞ்சாப், அம்ரிஸ்டர் அருகே ரயில் பாதை மறிக்கும் விவசாயிகள் – பாரத் பந்த் போராட்டம்
திங்கள், 30 நவம்பர், 2020
ரஜினி : அரசியல் பிரவேசம் பற்றி விரைவில் முடிவை அறிவிப்பேன் .. பொறுமையாக இருங்க..
BBC :சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிக்கு சொந்தமான மண்டபத்தில் நடைபெற்று வரும் மக்கள் மன்றத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அரசியலில் களமிறங்குவது குறித்து ரஜினி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் ரஜினியின் மக்கள் மன்றத்தை சேர்ந்த சுமார் 50 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முன்னதாக, கொரோனா பெருந்தொற்று பரவலை கருத்திற்கொண்டு இந்த கூட்டத்தில் ரஜினிகாந்த் காணொளி வாயிலாக பங்கேற்பார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் நேரடியாகவே பங்கேற்றுள்ளது அவரது ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.