இசைக்
கலைஞர்கள் ஓய்வு பெறுவதில்லை. அவர்களுக்குள் இசையே இல்லாத நிலை தோன்றும்
போது அவர்கள் நிறுத்திவிடுகிறார்கள். - லூயி ஆர்ம்ஸ்ட்ராங்.
நினைப்பது நடந்துவிட்டால் அது அதிர்ஷ்டம்.
ஆனால் நினைத்ததற்கும் மேலே கிடைத்துவிட்டால்... அதைத்தான் பேரதிர்ஷ்டம் என்று சொல்கிறார்களோ?
கே.வி. மகாதேவன் விஷயத்திலும் அதுதான் நடந்தது.
கந்தன் கருணை படப் பாடல்கள் மக்களால் பெரிதும் விரும்பப்படும் என்று எதிர்பார்த்தார்.
அது நடக்கவும் செய்தது.
ஆனால் அதற்கு ஒரு படி மேலாக 1967-ஆம் ஆண்டுக்கான "சிறந்த இசையமைப்பாளருக்கான" தேசிய விருதும் அவருக்கு கந்தன் கருணை படத்துக்கு அமைத்த இசைக்காகக் கிடைத்தது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அதுவரை இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஜனாதிபதி விருதுகளில் சிறந்த இசைக்கான விருது வழங்கப்படவே இல்லை. முதல் முதலாக 1967-ஆம் வருடம் தான் இசைக்கான தேசிய விருது அறிமுகப்படுத்தப் பட்டது. அதைத் தொடர்ந்து முதல்முதலாக சிறந்த இசைக்கான தேசியவிருது பெற்ற இசையமைப்பாளர் என்ற கௌரவம் கே.வி.மகாதேவனுக்குத்தான் கிடைத்தது.அதுவும் ஒரு தமிழ்ப் படத்துக்கு இசையமைத்தற்காக. "இது நான் சற்றும் எதிர்பார்த்திராத ஒரு மிகப் பெரிய அங்கீகாரம்" என்று தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருது குறித்து தனது கருத்தைத் தெரிவித்தார் கே.வி.மகாதேவன்.