சனி, 2 பிப்ரவரி, 2013

யாவும் கற்பனையே...விஸ்வரூபம் பிரச்னை எப்படி முடிந்தது?

பாப்பா கரப்பான்பூச்சி பாத்து பயந்துச்சுது.. சுடுறேன்!Viruvirupu
பாப்பா கரப்பாம்பூச்சி பாத்து பயந்துட்டாங்க.. சுடுறேன்!
“விஸ்வரூபம் படம் ஒட்டு மொத்தமான தடை செய்யப்பட வேண்டும்” என்று கூறிய இஸ்லாமிய அமைப்புகள், “படத்தில் உள்ள சில காட்சிகளை எடிட் செய்தால், போராட்டம் செய்ய மாட்டோம்” என அறிவித்து, பிரச்னையை முடித்துள்ளன. அதில் சிக்கல் ஏதுமில்லை. பிரச்னை நல்லபடியாக முடிந்தால் சரி.
பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட இஸ்லாமிய அமைப்புகளில் ஒரு அமைப்பின் பிரதிநிதி, பேச்சுவார்த்தைகளின் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார் (வீடியோ இருக்கிறது). எந்த அடிப்படையில், தாம் அனுமதி கொடுத்தோம் என அதில் அவர் விளக்கியுள்ளார். சுவாரசியமான விளக்கம் அது.
படத்தின் ஆரம்பத்தில், “இது நிஜமாக நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு” என்று ஒரு வாசகம் வருகிறது. அதை நீக்கிவிட்டு, “படத்தில் காண்பிக்கப்படும் யாவும் கற்பனையே. யாரையும், எந்த மதத்தையும் குறிப்பவை அல்ல” என்று போட்டால், எமக்கு திருப்தியே. கற்பனையாக நீங்க என்ன வேண்டுமானாலும் எடுத்துவிட்டு போங்க. எங்களுக்கு பிரச்னை இல்லை.
ஆனால், இப்படியான தீவிரவாத செயல்களில் இஸ்லாமியர்கள் ஈடுபடுகிறார்கள் என்று ‘உண்மைச் செய்திகள்’ என்பதாக கூறாதீர்கள். அதுதான் எமக்கு கோபம். படத்தின் தொடக்கத்தில் “யாவும் கற்பனையே” என்று போட்டுவிட்டால் யாவரும் நலம் என்று கூறியிருக்கிறார்.
இதை கூறிய இஸ்லாமிய தலைவர் எந்தளவுக்கு உலக செய்திகளை படிப்பவர் என்று தெரியவில்லை. ஆனால், பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தமிழக அரசு தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், போலீஸ் கமிஷனர் மற்றும் அதிகாரிகள் உலகச் செய்திகள் படிப்பவர்கள் என்று ஊகிக்கலாம். அவர்களில் யாரும் ‘களுக்’ என்று சிரித்ததாக தகவல் இல்லை.
எப்படியோ, “யாவும் கற்பனையே” அறிவிப்புடன் விஸ்வரூபம் வெளியாக போகிறது. இவர்களுக்கும் சந்தோஷம்.. அவர்களுக்கும் சந்தோஷம்! கற்பனைச் சித்திரம்!

தி.மு.க. தலைவர்: ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா ?

தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி- பதில் அறிக்கை.விஸ்வரூபம் திரைப்படம் குறித்த வழக்கில் நடிகர் கமல்ஹாசன் நிறுவனத்திற்காக சென்னை உயர்நீதி மன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் . ராமன் வீட்டிற்கு மின் வாரியத் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் சென்று மிரட்டியதாக ஏடுகளில் எல்லாம் செய்தி வந்திருக்கிறதே? நானும் அந்தச் செய்தியைப் படித்தேன். வழக்கறிஞர் .ராமன், பேரறிஞர் அண்ணாவின்  நண்பரும், மூத்த வழக்கறிஞருமான வி.பி.ராமனின் மகனாவார். கழக ஆட்சியில் அவர் அட்வகேட் ஜெனரலாகத் திறம்படப் பணியாற்றினார். எந்த வழக்கிலும் நேர்மையாக வாதிடக் கூடியவர். வழக்கறிஞர் என்ற முறையில்தான் ராஜ்கமல் நிறுவனத் திற்காக வாதாடியிருக்கிறார். ஆனால் அவருடைய வீட்டிற்கு 30-1-2013 அன்று மின் திருட்டு தடுப்புப் பிரிவைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் திடீரென்று சென்று, வீட்டு உபயோகத்திற்கான மின் சாரத்தை, வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்து, மின் இணைப்பைத் துண்டிக்க முயற்சித் திருக்கிறார்கள்.வீட்டிலே இருந்தவர்களை மிரட்ட முயற்சித்த நேரத்தில், ராமனுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. நீண்ட விவாதத்திற்குப் பிறகு  திரும்பச் சென்று விட்டார்களாம். ஆனால் இப்படிப்பட்ட செயல்களால் ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் தான் ஏற்படுகிறது.

விஸ்வரூபம் பிரச்னை முடிவுக்கு வந்தது!

பிரேம் எடிட்டிங், சவுன்ட் ட்ராக் மியூட்டிங் உண்டு!!

Viruvirupu
விஸ்வரூபம் படம் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை முடிவடைந்தது. “வெற்றிகரமான முடிவு எட்டப்பட்டது. படம் ரிலீஸ் தேதியை மிக விரைவில் அறிவிக்கிறேன்” என தெரிவித்தார் கமல்.
இஸ்லாமிய அமைப்புகள் கூறிய 7 காட்சிகளை எடிட் செய்ய கமல் சம்மதித்ததாக தெரிகிறது. சில இடங்களில் சவுன்ட் ட்ராக்கை நீக்குவது பற்றியும் கமல் குறிப்பிட்டார். இதன் அர்த்தம், 7 காட்சிகள் முழுமையாக வெட்டப்படும் என்பதல்ல. அவற்றில் உள்ள ஆட்சேபத்துக்குரிய பகுதிகள் எடிட் செய்யப்படும் என்பதே.
எவ்வளவு பிரேம்கள் வெட்டப்படும், எவ்வளவு சவுன்ட் ட்ராக் மியூட் செய்யப்படும் என்பதை, ஒரிஜினல் படம் பார்த்தவர்கள் புரிந்து கொள்ள முடியும்.
புதிதாக எடிட் செய்யப்பட்ட படம், தணிக்கை குழுவிடம் மீள்-சமர்ப்பிப்பு செய்யப்படும் எனவும் கமல் கூறியுள்ளார். அது ஒரு நடைமுறைதான். அதில் சிக்கல் ஏதும் இருக்கப் போவதில்லை.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கமல்ஹாஸன், அவரது அண்ணன் சந்திரஹாஸன் ஆகியோர் நேரில் பங்கேற்றனர். மாலை 6 மணிக்கு பேச்சு வார்த்தை நிறைவடைந்தது.
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 24 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், போலீஸ் கமிஷனர் மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் இந்த பேச்சில் பங்கேற்றுள்ளனர்.
மாலை 3 மணிக்குத் தொடங்கிய பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்ததாக, நிருபர்களிடம் கமல் தெரிவித்தார். படத்தில் ரிலீஸ் தொடர்பாக சிலருடன் பேசவேண்டி இருப்பதாகவும், அதையடுத்து ரிலீஸ் தேதியை மிக விரைவில் அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில்கூட இருக்கலாம்.

விஸ்வரூபம்...ஒரே மதத்தின் இருவேறு உலகங்கள்.

RAW உளவுப்‌பிரிவின் முஸ்லீம் அதிகா‌ரி ஒருவர் தனது டீமுடன் இணைந்து நியூயார்க் நகரை அல்கய்தாவின் தாக்குதலில் இருந்து காப்பதுதான் விஸ்வரூபத்தின் ஒன்லைன்.விக்ரம் படத்தின் அடுத்தக்கட்டமாக இதனை சொல்லலாம். கதை அமெ‌ரிக்கா - ஆப்கான் என இரு தளங்களில் பயணிக்கிறது.
படத்தின் ஆரம்பத்தில் நளினமான கமலை பூஜஅறிமுகப்படுத்தும் விதமும், அவர் கமலை திருமணம் செய்வதற்கான காரணமும், தனது பாஸுடன் அவருக்குள்ள நெருக்கமும் முன்பின்னாக சொல்லப்படும் விதம் தேர்ந்த கதை சொல்லியின் நேர்த்திக்கு உதாரணம். இந்த சில நிமிடங்களில் உனைக்காணாத பாடலும், கமலின் நளினமான நடிப்பும் சேர்ந்து நம்மை அப்படியே ஈர்த்துக் கொள்கிறது. தொடர்ந்துவரும் கமலின் சுயரூபம் விஸ்வரூபமாக வெளிப்படும் இடம்வரை.... சான்ஸே இல்லை... க்ளாஸ்.
கமல் யார் என்பது நியூயார்க்கை அழிக்க திட்டமிடும் அல்கய்தாவின் முக்கிய தீவிரவாதி முல்லா உமருக்கு தெ‌ரிந்துவிடுகிறது. கமல் யார்? இதற்கு பதிலாக உம‌ரின் பார்வையில் ஆப்கான் காட்சிகள் வருகின்றன.

ஞாநி: கட்டைப் பஞ்சாயத்தை ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக பரிந்துரை

விஸ்வரூபம் பட விவகாரத்தில் கடைசியில் யாருக்கும் வெட்கமில்லை என்ற நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. கருத்துச் சுதந்திரம், சட்ட நெறிமுறை எல்லாம் எல்லாராலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. கமல்ஹாசனின் படம் தமிழக முஸ்லிம்களுக்கு எதிரானதா இல்லையா என்ற கருத்தை படத்தை மக்களிடம் வெளியிட்டபின்னர்தான் தீர்மானிக்கமுடியும்.முன்கூட்டியே தாங்கள் மட்டும் பார்த்து தீர்மானிக்கும் அதிகாரம், தங்களைத் தாங்களே எல்லா முஸ்லிம்களுக்கும் பாதுகாவலர்களாக அறிவித்துக் கொண்டுள்ள  மத அடிப்படைவாதத் தலைவர்களுக்குக் கிடையாது. எல்லா ஹிந்துக்களுக்கும் தாங்கள்தான் பிரதிநிதி என்று சங்கபரிவாரம் நிலைநிறுத்த முயற்சிப்பதற்கு சரிநிகர் சமானமான அபத்தம் இது. ஒரு படம் இந்திய சட்டப்படி தணிக்கை செய்யப்பட்டபிறகு அது வெளியாவதை யாரும் எதிர்க்கமுடியாது. படத்துடன் பிரசிச்னை இருந்தால், எப்படி அனுமதித்தீர்கள் என்று தணிக்கை வாரியத்திடம்தான் கேட்கவேண்டும். அடுத்து மேல் முறையீடாக நீதிமன்றத்துக்கு செல்லவேண்டும்.  மாநில அரசிடம் மனு கொடுத்து படத்தை அரசு தடை செய்யவைத்த முஸ்லிம் அமைப்புகள் யாரும் நீதிமன்றத்துக்குப் போகவில்லை. அவர்களுக்கு படத்தை கமல்ஹாசன் போட்டுக் காட்டியது, மும்பை தாதா பால் தாக்கரேவுக்கு தன் பம்பாய் படத்தை மணிரத்னம் போட்டுக் காட்டிய தவறுக்கு நிகரான தவறு.

பொட்டு சுரேஷ் கொலை அட்டாக் பாண்டி ஆதரவாளர்கள் 9 பேர் சரண்

திண்டுக்கல் : அழகிரியின் விசுவாசியாக இருந்து வந்த பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் 9 பேர் இன்று கோர்ட்டில் சரண் அடைந்தனர். கடந்த வியாழக்கிழமை மதுரையில், தி.மு.க., தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மத்திய அமைச்சர் அழகிரியின் தீவிர விசுவாசியுமான பொட்டு சுரேஷ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார்.
இதனையடுத்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோர்ட்டில் 7 பேர் சரண் அடைந்தனர். பெயர் விவரம் வருமாறு: சபாரத்தினம், ராஜூ, சந்தானம், கார்த்திக், சேகர், லிங்கம், செந்தில் ஆகியோர் ஆவர். இது போல மேலூர் கோர்ட்டில் 2 பேரும் சரண் அடைந்ததாக கோர்ட் வட்டாரம் தெரிவிக்கிறது.

விஸ்வரூபம் பற்றி (ஜெயலலிதா வெளியே சொல்லாத) மற்றொரு உளவுத்துறை அறிக்கை!

 Viruvirupu
“விஸ்வரூபம் படம் ரிலீஸானால் தமிழகத்தில் வன்முறை வெடிக்கும் என்று தமிழக உளவுத்துறை அறிக்கை கொடுத்தது” என்று முதல்வர் ஜெயலலிதா தனது பிரஸ் மீட்டில் சொன்னார். ஆனால், அவர் சொல்லாத மற்றொரு உளவுத்துறை ரிப்போர்ட்டும் இருக்கிறது என்று தெரிகிறது.
அந்த உளவுத்துறை அறிக்கையை பார்த்துவிட்டே, முதல்வர் பிரஸ்மீட் வைத்தார் என்று உளவுத்துறை வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
தமிழக உளவுத்துறையின் ஒரு பிரிவினர் தயாரித்த இந்த உளவு அறிக்கையை பார்த்த மேலதிகாரி ஒருவர், “இதை எப்படி முதல்வரிடம் கொண்டு போவது” என்று கையை பிசையும் அளவுக்கு போனாராம்.
தமிழக உளவுத்துறையில் உள்ள நமது சோர்ஸ் ஒருவர் சொன்னதன்படி, அந்த அறிக்கையில் கன்குளூஷன்: “விஸ்வரூபம் விவகாரம் ஆரம்பத்தில் ‘கமல் vs இஸ்லாமிய அமைப்புகள்’ என்று இருந்தது. இப்போது, அப்படியல்ல, ‘கமல் vs தமிழக அரசு’ என்று மக்கள் பார்க்கிறார்கள். இதனால், அரசு மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது”
இந்த அறிக்கை எப்படியோ, முதல்வரிடம் சேர்க்கப்பட்டது என்கிறார்கள். அதையடுத்தே முதல்வர் டி.ஜி.பி. ராமானுஜத்தை அழைத்து இது பற்றி பேசியிருக்கிறார்.
இதற்கிடையே ஒரு ‘அதிசயம், ஆனாலும் உண்மை’ டைப் சம்பவம் நடந்தது.
நம்பினால் நம்புங்கள், தமிழக உளவுத்துறை தயாரித்த இந்த உளவு அறிக்கை, அரசுத் தலைமைக்கு போகுமுன், கோபாலபுரம் போய்விட்டது!
அங்கே (கோபாலபுரத்தில்) இந்த அறிக்கை தீபாவளி எஃபக்டை ஏற்படுத்தியது. அதற்குமுன் கலைஞர், விஸ்வரூபம் தொடர்பாக பொத்தம் பொதுவான ஒரு அறிக்கையை (அதுவும், டாக்டர் ராமதாஸின் அறிக்கைக்கு பிறகு) வெளியிட்டிருந்தார். இந்த உளவு ரிப்போர்ட்டை பார்த்தபின், விஸ்வரூபம் படம் தொடர்பாக தமிழக அரசை நேரடியாக விமர்சித்து கலைஞரின் நீண்ட அறிக்கை வெளியானது.
பெரும்பாலான மக்களின் மனநிலையும், கருணாநிதியின் அறிக்கையும் ஒரே நேர்கோட்டில் போவது, அரசியல் ரீதியாக எவ்வளவு ஆபத்தானது என்பதை புரியாதவரா, 30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் முதல்வர்? உடனடியாக தன் தரப்பு விளக்கத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.
ஒரே ஒரு பிரச்னைக்காக, தனியாக ஒரு பிரஸ்மீட் வைத்தாக வேண்டிய நிலைமைக்கு ஜெயலலிதா இறங்கி வர வேண்டியதாயிற்று.
விஸ்வடூபம் விவகாரத்தில் அநேக மீடியாக்களும் கமல் பக்கத்தையே ஆதரித்து வந்த நிலையில், அறிக்கையாக அனுப்பினால், மீடியாவில் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களோ என்ற சந்தேகம் முதல்வருக்கு இருந்திருக்கலாம். அதனால், பிரஸ்மீட் வைத்து அதை ஜெயா டி.வி-யில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கிறார்.
மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல்வர், மீடியாவை கோட்டையில் சந்தித்தார். அதிலிருந்தே இந்த விவகாரத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என புரிந்து கொள்ளலாம்.
முதல்வர் கொடுத்த விளக்கம், எந்தளவுக்கு தமிழக மக்களை கன்வின்ஸ் பண்ணியது? அதை அடுத்த உளவு அறிக்கையில் அவர் தெரிந்து கொள்வார்!

விஸ்வரூபமெடுத்தார் இதயதெய்வம், புரட்சித்தலைவி, மாண்புமிகு அம்மா அவர்கள்

விஸ்வரூபம் திரைப்பட பாதுகாப்பிற்காக போலீசைக் குவிப்பதை விட, மக்கள் கோரிக்கைக்கு செவி மடுத்துவிடலாம் என்ற யோசனை கூடங்குளத்தில் ஏன் தோன்றவில்லை? அங்கே பிற மாநிலங்களிலிருந்தெல்லாம் போலீசு இறக்குமதி செய்யப்பட்டதே, அது ஏன்?
    “சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவே தடை” , என்று விசுவரூபம் படத்துக்கான தடை குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் முதலமைச்சர், இதயதெய்வம், புரட்சித்தலைவி, மாண்புமிகு அம்மா அவர்கள். திடீரென்று கூட்டப்பட்ட பத்திரிகையாளர் கூட்டத்தில் (un scheduled press conference – the hindu) இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
    நேற்று இரவு தனது இணையப் பதிப்பில் இந்த பேட்டி குறித்த செய்தியை வெளியிட்ட இந்து நாளேடு, “சட்டம் ஒழுங்குதான் என் முன்னுரிமை” என்று தலைப்பிட்டிருந்தது. இன்று இந்துவில் இதே செய்தியின் தலைப்பு “கமலும் முஸ்லீம் தலைவர்களும் ஒப்பந்தத்திற்கு வந்து விட்டால் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் – ஜெயலலிதா” என்று மாறியிருக்கிறது. என்னத்துக்கு தேவையில்லாம அம்மாவின் கோபத்துக்கு ஆளாகணும் என்பதுதான் காரணம்.
    ஆனால் இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா லேசாக உண்மையைச் சொல்ல முயன்றிருக்கிறது.
    “உருவாகி வரும் புயலை அம்மா கவனித்து விட்டதுதான், அவர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதற்கு காரணம். கமலஹாசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரஜனிகாந்த், பாரதிராஜா போன்றவர்கள், நேரடியாக அரசுக்கு எதிராகப் பேசவில்லை என்ற போதிலும், ராஜ்கமல் அலுவலகத்துக்கு வந்து சேரும் திரையுலகத்தினரின் கூட்டம், அவர்களுடைய அடக்கி வைத்திருக்கும் ஆத்திரத்தையும் கமலஹாசனுக்குப் பெருகிவரும் அனுதாபத்தையும் காட்டிவிட்டது.

    அனைத்து சாதி அர்ச்சகர் போராட்ட வழக்கு நிதி தாருங்கள் !

    வினவு கேட்பாரற்று கைவிடப்பட்டிருந்த இப்பிரச்சினையை, இதன் அரசியல் முக்கியத்துவம் கருதி நாங்கள் எடுத்துக் கொண்டோம். இதில் போராடுவதற்கும் வெற்றி பெறுவதற்கும் உழைப்பு மட்டும் போதுமானதல்ல, நிதியும் வேண்டும்.
    30.1.2013 அன்று சென்னை மெமோரியல் ஹால் அருகில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஆற்றப்பட்ட உரைகளை கீழே தொகுத்து தந்திருக்கிறோம்.
    2006 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்காலத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட 206 மாணவர்களை, அர்ச்சகர்களாக நியமிக்க கூடாது என்று மதுரை மீனாட்சியம்மன் கோயில் பார்ப்பன அரச்சகர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றனர்.
    திமுக ஆட்சிக்காலத்தில் வழக்கை நடத்தக்கூடாது என்று வேண்டுமென்றே இழுத்தடித்தனர். திமுக அரசும் நடத்துவதில் தீவிரம் காட்டவில்லை. இப்போது அம்மா ஆட்சி வந்துவிட்டது.
    பார்ப்பன அர்ச்சகர்களுடன் பேசி சுமுகமாக ஒரு தீர்வு காண இருப்பதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது. சுமுகத்தீர்வு என்பதன் பொருள் என்னவென்றால், சீரங்கம், மதுரை, மயிலை உள்ளிட்ட ஆகம விதிப்படி அமைந்த கோயில்களில் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத மாணவர்களை நியமிக்காமல், அவர்களுக்கு மற்ற மாரியாத்தா, காளியாத்தா கோயில்களை ஒதுக்கிவிடுவது என்பதே. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பயிற்சி முடித்த மாணவர்களை தொடர்பு கொண்டு, வழக்கெல்லாம் வேண்டாம், வேலை போட்டுத் தருகிறோம் என்று ஆசை காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.

    Kamal Hassan நான் மண்டியிட மாட்டேன். பாசிசத்துக்கு அடிபணிய மாட்டேன்.

     ‘It’s creative abortion’ விளைவுகளை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். விஸ்வரூபம் திரைப்படத்தின் தமிழ் பிரிண்டை கொண்டு போய் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகம் முன்பு எரிக்கப் போகிறேன்.
    து நேற்று 31.1.2013 மதியம் மும்பையிலிருந்து வெளிவரும் மிட் டே நாளிதழில் வெளிவந்துள்ள கமலஹாசனின் பேட்டி. இது தொலைபேசியில் எடுக்கப்பட்ட பேட்டி என்பது இப்பேட்டியைப் படிக்கும்போது புரிகிறது. இந்தப் பேட்டி வெளிவந்த பின்னர் தான் அம்மாவின் சமரச அறிக்கை வெளிவருகிறது.
    அதாவது இந்தப் பேட்டியைப் படித்த பிறகுதான் அம்மாவின் தாயுள்ளம் உருகியது. அப்புறம் கொதிக்கத் தொடங்கியிருக்கிறது என்று தெரிகிறது.
    30 ம் தேதி இரவு என்.டி.டி.வி ஒளிபரப்பிய விவாதத்தின் போது, சோவின் முகத்தில் வழக்கமான தெனாவெட்டையும், குரலில் திமிரையும் காணவில்லை. பீதியும் அதை மறைக்க முயன்றதால் தோன்றிய கடுப்புமே இருந்தது.
    “மிட் டே” பேட்டியையும் அம்மா படித்திருக்கக் கூடும். “என் திரைப்படத்தின் படச்சுருளை (சென்னையில்) கொளுத்தப் போகிறேன். பாசிசத்திடம் மண்டியிட மாட்டேன்”  என்றெல்லாம் பேட்டியில் கமலஹாசன் பேசியிருக்கிறார். ஒருவேளை ஏடாகூடமாக ஏதாவது செய்து கமலஹாசனுக்கு விளம்பரம் இன்னும் கூடிவிட்டால்? அந்த நினைப்பே திகிலூட்டியிருக்கும். விளைவுதான் அம்மாவின் அறிவிப்பு.
    இந்தப் பேட்டியை மொழிபெயர்த்து வெளியிடக் காரணம் இருக்கிறது.

    India தூக்கு தண்டனை! கொடூரமான பலாத்கார குற்றத்திற்கு

    புதுடில்லி : பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.டில்லியில், ஓடும் பேருந்தில், மருத்துவக் கல்லூரி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். நாட்டையே, உலுக்கிய இந்த அதிர்ச்சி சம்பவத்துக்கு, நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.வர்மா தலைமையில், இமாச்சல் பிரதேச ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, லீலா சேத், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல், கோபால் சுப்ரமணியம் ஆகிய, மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், பாலியல் வன்முறையை தடுக்க தேவையான சட்டங்கள், பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, இந்த குழு, ஆய்வு செய்து, 200 பக்கங்களை உடைய அறிக்கையை, உள்துறை அமைச்சகத்திடம், பரிந்துரையாக, கடந்த, 23ம் தேதி அளித்தது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு, தூக்கு தண்டனை வழங்குவது உட்பட, பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டு இருந்தன.சாதாரண ஆண்கள் சும்மா தான் இருகின்றனர். இமாதிரி செயலில் இடுபடுபவர்கள் பண பலம், படை பலம் உள்ளவர் அல்லது எதற்கும் துணிந்தவர்கள் இவர்களிடம் சட்டம் செல்லுமா அல்லது சேவகம் செய்யுமா? .  dinamalar.com

    இது இன்னொரு ரிசானாவின் கதை !

    தம்பலகமம் முள்ளிப் பொத்தானையின் புலிக் குட்டி பஜார் எனும் கிராமத்தைச் சேர்ந்த கபிபுல்லா என்பவரின் மூத்தமகள் ரிசானா 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது குடும்ப வறுமையைப் போக்கவும் தனது சகோதரிகளின் கல்விக்கு உதவுவதற்காகவும் சவூதிக்கு பணிப்பெண்ணாகச் சென்றார். சென்றவர் 2010.04.11 ஆம் திகதி 3 ஆவது மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டார் என்ற செய்தி மட்டுமே கிடைத்தது.
    ஏழை விவசாயியான கபிபுல்லாவின் மூத்தமகள் ரிசானாவின் உண்மையான பெயர் ஆரிபா. சவூதி செல்லும் போது  இவருக்கு வயது 17. பாரிச வாதத்தால் படுத்த படுக்கையில்  உள்ள தனது தாயின் மருத்துவச் செலவையும் சகோதரிகளின் கல்வியையும் கருத்தில் கொண்டு சென்றவர் கந்தளாயில் உள்ள வேறு ஒரு முகவரியில் உள்ள ஆரிபா என்னும் பெயருடையவரின் அடையாளத்திலேயே சென்றுள்ளார். இதனை கிண்ணியாவைச் சேர்ந்த உதவிமுகவர் ஒருவரே ஏற்பாடு செய்து அனுப்பியுள்ளார். வெளிநாடு செல்லும் பெண்களுக்கு வழங்கும் முற்பணம் கூட தமது மகளுக்கு கிடைக்கவில்லை என மிகுந்த மன வேதனையுடன் ரிசானாவின் தந்தை கபிபுல்லா தெரிவிக்கிறார்.
    மேலும் தெரிவிக்கையில், ரிசானா சென்று மூன்று மாதங்களாக எம்முடன் தொலைபேசியில் பேசினார். அப்போது தான் பணிப்பெண்ணாகக் கடமையாற்றும் வீட்டின் எஜமானி நல்லவர் இல்லை. தனக்கு அடிப்பார். சாப்பாடு தருவதில்லை. நான் சவூதி மக்காவில் தான் இருக்கிறேன். என்னுடன் பிலிப்பைன்ஸ் நாட்டு பணிப்பெண்கள் இருவர் வேலை செய்கிறார்கள். எனவே என்னை நாட்டுக்கு திருப்பி எடுங்கள் என்று ரிசானா தெரிவித்தார் என்று அவர் கூறுகின்றார்.

    வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

    பதறிக்கொண்டு மதுரை வந்து இறங்கினார் மு.க.அழகிரி!

    Viruvirup
    மத்த கட்சிக்காரங்க நம்மாள தொட மாட்டாங்களே...
    மத்த கட்சிக்காரங்க நம்மாள தொட மாட்டாங்களே…
    பொட்டு சுரேஷ் நேற்று மதுரையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்து, மதுரை வந்து இறங்கியுள்ள மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, “பொட்டு சுரேஷ் எனது நண்பன், உண்மையான விசுவாசி” என்று உணர்ச்சிவசப்பட்டு கூறியுள்ளார்.
    மத்திய அமைச்சரின் நண்பர் பொட்டு சுரேஷ் மீது கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
    படுகொலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. முன் பகை, உட்கட்சி பூசல் அல்லது தொழில் போட்டியால் கொல்லப்பட்டாரா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
    இந்நிலையில் சென்னையில் இருந்த மு.க. அழகிரி இன்று பகல் மதுரை வந்து சேர்ந்தார். பொட்டு சுரேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய நண்பனாக, உண்மையாக விசுவாசியாக இருந்தவர் பொட்டு சுரேஷ். பொட்டு சுரேஷை படுகொலை செய்த யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

    மதுரை ஆதீனம் மைனர் அருணகிரியை ஆட்கொண்ட அல்லா !

    ஜெயினுலாபிதீன்லங்கைத் தமிழ் இஸ்லாமியப் பெண் ரிசானா நபீக் சவுதி அரசாங்கத்தால் தலைவெட்டி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடக்கும் விவாதங்களை அறிவீர்கள். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த, வெகு சிலர் மட்டுமே இந்த விவகாரத்தில் ஷரியத் சட்டத்தையும் சவுதி அரசையும் விமர்சித்து வருகிறார்கள். இவ்விவகாரத்தில் சரியான முறையில் எதிர்வினையாற்றியிருந்த மனுஷ்யபுத்திரனை, தவ்ஹீத் ஜமாத் என்ற மதவெறிக் கும்பலின் தலைவர் பி.ஜைனுலாபிதீன் வார்த்தைகளாலேயே கொலை செய்திருந்ததும், அதைத் தொடர்ந்து வினவு தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையும் வாசகர்கள் அறிந்ததே.
    ஷரியத் சட்டத்தின் ‘மாண்பை’ நிலைநாட்ட களமிறங்கியுள்ள பி.ஜே கும்பல், அதற்கு ‘கலர் கலராக’ விளக்கங்களைத் தந்து வருகிறது. நக்கீரனில் மனுஷ்யபுத்திரன், ஆனந்த விகடனில் பாரதி தம்பி – உள்ளிட்டு ஷரியத் சட்டத்தை விமர்சித்தவர்களை “டேய்… மரியாதையா நேரடி விவாதத்திற்கு வாங்கடா… #$%&*#@#$…” என்று சவுதி வஹாபியம் இவர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ள மரியாதையோடும் கண்ணியத்தோடும் கோட்டா சீனிவாசராவ் பாணியில் விவாதத்திற்கு அழைத்து வருகின்றனர்.
    இதன் தொடர்ச்சியாக சென்னை மண்ணடியில் சென்ற 27.1.2013   அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  “இஸ்லாமிய சட்டமே தீர்வு” என்ற தலைப்பில் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு சென்று வந்தோம்.
    நாங்கள் சென்றிருந்த போது கோவை ரஹ்மத்துல்லா என்பவர் பேசிக் கொண்டிருந்தார். பேச்சினூடாக பாரதி தம்பி, ஜோஸபின் உள்ளிட்ட பத்திரிகையாளர்களோடு சேர்த்து மனுஷ்யபுத்திரனுக்கும் மண்டகப்படி நடந்து கொண்டிருந்தது. “பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பற்றி யோசித்தீர்களா மிருகங்களே….” என்றவர், “இந்த ரிசானா நபீக் என்ன பத்தினியா.?.” என்று திடீரென்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

    6 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை

    திண்டுக்கல்லில் இளம் சிறார்களுக்கான நீதிக்குழுமம் நேற்று தொடங்கப்பட்டது. 18 வயதிற்குட்பட்ட சட்டவிரோதச் செயலில் சிக்கியுள்ள இளம் சிறார்கள் இதுவரை மதுரையில் உள்ள இளம் சிறார் நீதி குழுமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வந்தனர். இதைத் தவிர்க்கும் வகையில் தற்போது திண்டுக்கல்லில் இளம் சிறார்களுக்கான நீதிக்குழுமம் தொடங்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த தொடக்க விழாவில் சென்னை நீதிமன்ற நீதிபதி ராமசுப்பி ரமணியன் நீதி குழுமத்தைத் திறந்து வைத்தார். மாவட்ட செசன்ஸ் நீதிபதி பாலசுந்தரகுமார் வரவேற்றுப் பேசி னார். கலெக்டர் வெங்கடாசலம், எஸ்.பி. ஜெயச்சந்திரன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர். உயர்நீதிமன்ற நீ திபதி ராமசுப்பிரமணியம் பேசியதாவது: ஒரு குழந்தை தவறு செய்வது அவரது குடும்பச் சூழலின் காரணமாகத்தான். தற்போது தாய், தந்தையர்கள் குழந்தைகளைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். தொலைக்காட்சி, சினிமாக்களை பார்த்து கெட்டுப் போகின்ற சூழல் உள்ளது.

    BJP நிதின் கட்காரியிடம் வருமான வரித்துறையினர் 4 மணி நேரம் விசாரணை

    நாக்பூர்: வரி ஏய்ப்பு செய்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ., முன்னாள் தலைவர் நிதின் கட்காரியிடம், வருமான வரித்துறை இயக்குனர் நேற்று விசாரணை நடத்தினார். இந்த விசாரணை, நான்கு மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது.
    மகாராஷ்டிராவில், பா.ஜ., தலைமையிலான ஆட்சியில், 1995 முதல் 1999 வரை, பொதுப்பணித் துறை அமைச்சராக கட்காரி இருந்தபோது, ஏராளமான ஒப்பந்தங்களை, "ஐடியல் ரோடு பில்டர்ஸ்' நிறுவனம் பெற்றது.
    அதற்குப் பிரதிபலனாக, கட்காரியின் நிறுவனத்தில் பெருமளவு முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், அத்துடன் வேறு பல நிறுவனங்களும், போலி பெயரில், கட்காரி நிறுவனத்தில், பெருமளவு முதலீடு செய்துள்ளதாகவும் புகார் கூறப்பட்டது.

    விஸ்வரூபம் சினிமா பிரபலங்கள் U Turn அடித்து ஜெயலலிதாவுக்கு ஆதரவு

    புரட்சித் தலைவி, முதல்வர் அம்மாவுக்கு நன்றி நன்றி!' - கமல் சார்பில் சிவகுமார், ராதிகா

    சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு எதிரான தடையை விலக்கிக் கொள்ள முன்வந்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு கமல் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர் சிவகுமார், ராதிகா உள்ளிட்ட சினிமாக்காரர்கள்.கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்துக்கு எதிராக தமிழக அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்த சூழலில், இன்று கமலுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு, அவரது அலுவலகத்தில் கூடினர் சினிமா பிரபலங்கள் பலரும்.
    அவர்கள் இந்தத் தடை, கமலுக்கு தங்களின் ஆதரவை எல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்தபோதே, முதல்வர் ஜெயலலிதாவின் பேட்டி வெளியாகிவிட்டது.இஸ்லாமிய அமைப்பினருடன் கமல் சமரசமாகப் போய்விட்டால், படத்தை வெளியிடுவதில் எந்தத் தடையும் இல்லை என்று முதல்வர் கூறியிருந்தார். இதைக் கேட்டவுடன் ரசிகர்கள் வெளியில் கொண்டாட ஆரம்பித்தனர்.இதைத் தொடர்ந்து வந்திருந்த அத்தனை பிரபலங்களும் அப்படியே யு டர்ன் அடித்து, முதல்வருக்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்தனர்.முதலில் பேட்டியளித்த நடிகை ராதிகா, "தமிழக முதல்வர், புரட்சித்தலைவரி மாண்புமிகு அம்மா அவர்களின் அறிவிப்பின் மூலம் விஸ்வரூபம் பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அவரது உள்ளம் கலையுலகினருக்காக எப்போதுமே இரக்கப்படும். அதனால்தான் சுமூகத் தீர்வுக்கு உறுதுணையாக இருப்பதாக கூறியுள்ளார். முதல்வருக்கு எங்கள் திரையுலகமே நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.மும்பையில் இருக்கும் கமல்ஹாசனிடம் இந்தத் தகவலை தெரிவித்துவிட்டோம். இஸ்லாமிய அமைப்புகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காணப்படும். இதற்கான முயற்சிகளில் உடனடியாக இறங்குகிறோம்," என்றார்.நடிகர் சிவகுமார் பேசுகையில், "முதல்வர் புரட்சித்தலைவிக்கு கமல் சார்பில் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். விரைவில் கமல்ஹாஸன் வந்துவிடுவார். இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சு நடத்தி பிரச்சினையை முடித்துவிடுவோம். முதல்வருக்கு மீண்டும் நன்றி," என்றார்.விரைவில் முதல்வரை நேரில் சந்தித்து கமல் நன்றி கூறுவார் என்றும் சிவகுமார் தெரிவித்தார். விரைவில் கமுநிஸ்ட் பாண்டியன் தலைமையில் அம்மாவின் சகல ஜால்ராக்களும் விஸ்வரூபத்திற்கு மிகப்பெரும் விளம்பரத்தை மிகுந்த மதி நுட்பத்துடன் ஏற்பாடு செய்து தமிழ்நாட்டை வழிநடத்திய இதய தெய்வம் புரட்சி தலைவி அமாவுக்கு  விழா எடுப்பார்கள் வழக்கமான செட் புரோபெட்டிகள் மட்டும் அல்லாது ரஜினி வகையறாக்களும் கலந்து கொள்ள கூடிய சாத்தியமும் உண்டு 

    கடற் கொள்ளையர்களை தடுக்கும் மையமாக கொழும்பை தெரிவுசெய்ய நெதர்லாந்து முடிவு

    கடற் கொள்ளையர்களிடமிருந்து வர்த்தக கப்பல்களைக் காப்பாற்றும் நோக்கில் கொழும்பு துறைமுகத்தை முக்கிய தளமாகப் பயன்படுத்த நெதர்லாந்து கடற்படை தீர்மானித்துள்ளது. இலங்கை கப்பல் போக்குவரத்தில் முக்கிய கேந்திர நிலையமாக விளங்குவதால் கொழும்பு துறைமுகத்தினை கப்பல் பாதுகாப்பு மையமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கப்பல்கள் நெதர்லாந்து பாதுகாப்பு படையினரை இலங்கையின் சில துறைமுகங்களில் ஏற்றி இறக்கும் ஒழுங்கொன்று இலங்கை அரசாங்கத்துடன் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கை சட்டத்துக்கு அமையவே ஆயுதங்கள் வெடிப்பொருட்கள் கையாளப்படுமெனவும் நெதலாந்து தூதரகம் குறிப்பிட்டுள்ளது. கடற்கொள்ளையரின் தாக்குதல்கள் அதிகமாக சோமாலிய கரைக்கு அப்பால் அரபுக்கடலில் மேற்கொள்ளப்படுகின்றன. இதனைத் தடுக்கும் வகையிலே இலங்கையுடன் இத்திட்டத்தினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகின்றன  thenee,com

    வியாழன், 31 ஜனவரி, 2013

    பிரான்ஸிலிருந்து கடும்போக்கு இமாம்களை நாடுகடத்த திட்டம்

    பிரான்ஸில் இருக்கும் கடும்போக்கு முஸ்லிம் இமாம்களை நாடுகடத்த இருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் மனிவல் வெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
    “பெண்களை மதிக்காத, எமது கலாசாரத்திற்கு எதிரான கருத்தை கொண்டிருக்கும், பிரான்ஸ¤டனான போராட்டத்திற்கு தயாராகும் அனைத்து வெளிநாட்டு மதப் பிரசாரகர்களும் எதிர்வரும் தினங்களில் நாடு கடத்தப்படுவர்” என பிரசல்ஸில் நடைபெற்ற ஐரோப்பாவிலிருந்து தீவிரவாதத்தை முறியடிப்பது தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.
    எனினும் நாடு கடத்தப்படவுள்ள வெளிநாட்டு முஸ்லிம் இமாம்கள் தொடர்பான தகவலை அவர் வெளியிடவில்லை. ஆனால் இவர்கள் சலபி குழுக்களைச் சேர்ந்தவர் என அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே பிரான்ஸிலிருந்து பல முஸ்லிம்களும் இதே குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.thinakaran.lk

    இரவில் சிக்கும் இளம்பெண்களை சீரழித்த கான்ஸ்டபிள் ..பணக்காரன் ஆக பகீர் கொள்ளை நெட்வொர்க்

    கோவில்பட்டி: பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசையில் ரவுடிகளுடன் சேர்ந்து கொண்டு இரவு நேரங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கோவில்பட்டி போலீஸ்காரர் கையும் களவுமாக சிக்கினார். நகை பறிப்போடு பல பெண்களை மிரட்டி அவர் சீரழித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (36). இவர் நேற்று முன்தினம், நெல்லையில் வங்கி தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் தனது அக்காள் மகள் செல்வியை (18) பைக்கில் ஏற்றிக்கொண்டு கோவில்பட்டி புது பஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ராம் அனுமன் நகர் பகுதியில் வரும்போது 2 பைக்கில் வந்த 3 பேர் வழிமறித்தனர். செல்வி நகைகளை கத்தியை காட்டி பறித்தனர். அவர் கூச்சலிடவே 3 பேரும் ஓட்டம் பிடித்தனர்.

    கலைஞர்: கமல் தொடர்பாக எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது:


    தி.மு.க. தலைவர் கலைஞர்  இன்று செய்தியாளர்களிடம் விஸ்வரூபம் பிரச்சனை தொடர்பாக பேசினார்.
     அப்போது அவர்,   ‘’31-1-2013 தேதிய முரசொலி நாளிதழில் நான் எழுதிய கடிதத்தில், கமல் ஹாசன் நடித்த விக்ரம் திரைப் படத்தின் சிறப்புக் காட்சி ஒன்றில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். கலந்து கொண்டபோது, ஜெயலலிதா, எம்.ஜி. ஆருக்கு தன் கைப்பட எழுதிய கடிதத்தில் கமல்ஹாசனைப் பற்றி ஒருமையில் கண்டனம் செய்து குறிப்பிட்டு தெரிவித்த சில வாசகங்களை எழுதியிருந்தேன்.
    அப்படி நான் எழுதியது கற்பனையான குற்றச்சாட்டு எனவும், தான் தினமும் எம்.ஜி.ஆருடன் பேசுவதற்கான வாய்ப்பு அப்போது இருந்ததால், எதற்காக கடிதம் எழுத வேண்டும் என்றும், அதற்காக என் மீது வழக்கு தொடரப் போவதாகவும் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார்.
    நான் எழுதியதற்கு போதுமான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. முதல் அமைச்சர் என் மீது வழக்கு போடும்போது, நீதிமன்றத்தில் ஆதாரத்தைக் காட்ட நான் தயாராக இருக்கிறேன்’’ என்று கூறினார். 

    பொட்டு சுரேஷ்’ மதுரையில் வெட்டி கொலை! போலீஸ் குவிப்பு!!

    Viruvirup
    அஞ்சாநெஞ்சரின் அஞ்சாத வலதுகை!
    அஞ்சாநெஞ்சரின் அஞ்சாத வலதுகை!
    மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் வலது கை என சொல்லப்பட்டவரும், தி.மு.க. செயற்குழு உறுப்பினருமான பொட்டு சுரேஷ், இன்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்பட்டதை மதுரை போலீஸ் உறுதி செய்துள்ளது.
    ஆனால், இது தொடர்பான தகவல்கள் சற்று குழப்பமாகவே உள்ளன.
    மு.க.அழகிரியின் வீடு இருக்கும் சத்ய சாய் நகர் – பொன்மாரி நகர் பகுதியில், இரவு 8 மணி அளவில் பொட்டு சுரேஷ் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது ஒரு தகவல். இது குறித்து அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்ததையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர் என்றும் சொல்லப்பட்டது.
    அதே நேரத்தில் நாம் மதுரை போலீஸை தொடர்பு கொண்டபோது, பொட்டு சுரேஷ் மதுரை துரைசாமி நகரில் உள்ள அவரது வீட்க்கு வெளியே வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார் என்றனர்.
    மதுரை நகரில் தற்போது போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். மேலதிக விபரங்கள் கிடைத்தவுடன், உடன் தருகிறோம்.

    மனுஷ்யபுத்திரன் – வஹாபியம்- கடிதங்கள்

    அன்புள்ள ஜெ
    மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்களை நீங்கள் கண்டித்திருப்பதைக் கண்டேன். இந்தத் தருணத்தில் மனுஷ்யபுத்திரனின் குரலுக்கு எந்தவகையான விளைவுகள் இருக்குமென நினைக்கிறீர்கள்?
    கே.ராமச்சந்திரன்
    அன்புள்ள ராமச்சந்திரன்,
    எல்லா மதங்களிலும் இரு வகையான தேக்கங்கள் உருவாகும். அதன் உலகியல் ஒழுக்க அடிப்படைகள் காலப்போக்கில் பழமையானவையாக ஆகும். அதன் ஆன்மீகத்துக்கான விளக்கங்கள் பொருந்தாமல் போகும். அந்நிலையில் அவற்றை மாற்றுவதற்கு எதிரான குரல்கள் எழும். மதச்சீர்திருத்தம் என நாம் சொல்வது அதையே
    மதத்தின் ஆன்மீக உள்ளடக்கத்தையும் அதன் உலகியல் நடைமுறைகளையும் பிரித்தறிய முடியாதவர்கள் அதை மூர்க்கமாக எதிர்ப்பார்கள். மதத்தை ‘அச்சு அசலாக’ அப்படியே பின்பற்றவேண்டுமென வாதிடுவார்கள். நூல்களைச் சுட்டிக்காட்டுவார்கள்.
    இந்துமதத்திலும் குழந்தைமணம் முதல் பெண்களுக்குச் சொத்துரிமை வரை தீண்டாமை முதல் ஆலயப்பிரவேசம் வரை இதேபோன்ற மூர்க்கமான எதிர்ப்புகள் நிகழ்ந்துள்ளன. அவற்றை மீறியே இங்கே மாற்றங்கள் வந்தன. பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கிறித்தவமதத்தில் அத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்தன.
    அவை மதத்துக்கு எதிரானவை அல்ல. உண்மையில் அவை மதத்தை செம்மைப்படுத்துபவை. மதத்தின் ஒளியை மறைக்கும் ஒட்டடைகளை நீக்குபவை. அதை உண்மையான ஆன்மீகவாதிகள் புரிந்துகொள்வார்கள்.
    உலக அளவில்கூட இஸ்லாமிய மதத்தில்தான் சீர்திருத்தக்குரல் மிகக்குறைவாக எழுகிறது. அக்குரல்கள் கொடுமையாக ஒடுக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் இஸ்லாம் இன்னும் இருவகை அடிப்படைவாதிகளிடம் சிக்கியிருக்கிறது. சம்பிரதாயவாதிகள். தூய்மைவாதிகள்.
    வஹாபியர்கள் என்ற பேரில் இன்று அறியப்படுபவர்கள் தூய்மைவாதிகள். குர்ஆனை ’அப்படியே’ விளக்கிக்கொள்பவர்கள். அதாவது அது ஆயிரம் வருடம் முன்பு எப்படி விளங்கிக்கொள்ளப்பட்டதோ அதையே இன்றும் கடைப்பிடிக்கவேண்டும் என்பவர்கள்அவர்களுடையது ஓர் சர்வதேசிய இஸ்லாமிய அரசியலே ஒழிய ஆன்மீகமோ மதமோ அல்ல.
    இன்றைய சூழலில் இந்த அடிப்படைவாதிகளை எதிர்ப்பதே உண்மையான ஆன்மீகத்திற்கான குரலாக இருக்கமுடியும். எந்த வகையில் எழுந்தாலும் அக்குரல் மிக ஆக்க்பபூர்வமான விளைவுகளையே உருவாக்கும்.
    ஒரு சராசரி இஸ்லாமியன் ஜெய்னுலாப்தீன் போன்றவர்கள் வெளிப்படுத்தும் அநாகரீகமான வசைகளை மூர்க்கத்தை ஒருபோதும் ஏற்க மாட்டான் என்றே நினைக்கிறேன்.
    ஜெ
    அன்புள்ளஜெ
    மனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவாக நீங்கள் எழுதிய கட்டுரை கண்டேன்
    ஜெய்னுலாப்தீனின் பேச்சை யு டியூபில் கேட்டீர்களா?  .jeyamohan.in

    டெல்லி பாலியல் வன்முறை – குற்றம் : தூண்டியது யார் ?

    டில்லியில் கும்பல் வல்லுறவுக்கும் மிகக் கொடூரமான தாக்குதலுக்கும் ஆளாக்கப்பட்ட மாணவி சிகிச்சை பயனின்றி இறந்து விட்டார். பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிய போலீசின் தவறு என்ற கோணத்திலும், இக்குற்றத்துக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்ற கோணத்திலுமே இப்பிரச்சினை இன்று விவாதிக்கப்படுகிறது. இது தொடர்பான சட்டத்திருத்தங்களை சிபாரிசு செய்ய முன்னாள் நீதிபதி வர்மா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
    குஜராத்திலும் மும்பையிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கில் வல்லுறவுக் குற்றங்களை நிகழ்த்தி அவற்றை நியாயப்படுத்தியுள்ள பாஜகவும், வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்ட கிரிமினல்களை எம்.எல்.ஏ ஆக்கியிருக்கும் சமாஜ்வாதி கட்சி அமைச்சர் ஆசம்கானும், ‘பணத்துக்காக பொய் சொல்கிறார்கள்‘ என்று பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்களை இழிவு படுத்திய ஜெயலலிதாவும் ‘வல்லுறவுக் குற்றத்துக்கு தூக்குதண்டனை விதிக்க வேண்டும்‘ என்று பேசுகின்றனர். இரவுப் பேருந்துகளை அதிகரிப்பது, இரவுப் பேருந்துகளில் ஊர்க்காவல் படையினரை நியமிப்பது போன்ற நடவடிக்கைகள் அறிவிக்கப்படுகின்றன. ‘வல்லுறவுக் குற்ற வழக்குகளை 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவேண்டும்‘ என்று வேறொரு வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    ஊழலின் காவலர்களே ஊழல் ஒழிப்பு பேசுவது போல, தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடையைத் திறந்து வைத்து விட்டு, குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களுக்கான தண்டனையை அதிகரிப்பது போல, பெண்களுக்கெதிரான குற்றங்களை தூண்டுபவர்களும் குற்றவாளிகளைப் பாதுகாப்பவர்களும்தான் இன்று தண்டனை அதிகரிப்பு பற்றி பேசுகிறார்கள். மேன்மையான பாரதப் பண்பாடு என்ற பெயரிலான ஆணாதிக்க நிலவுடைமைக் கலாச்சாரம், வல்லுறவுகளை கணவன்மார்களின் உரிமையாக்கியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களைத் தம் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்வதை, ஆதிக்க சாதியினரின் அதிகாரமாக்கியிருக்கிறது.

    விஸ்வரூபம்: முதல்வரின் ‘சர்ச்சைக்குரிய’ பேச்சு!

    Viruvirupu
    சற்றுமுன் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, “இஸ்லாமிய அமைப்புகளால் வன்முறை வெடிக்கலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கை கிடைத்த காரணத்தால் மட்டுமே விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். நேற்று ஒரு தினம், ஒரு காட்சி காண்பிக்கப்பட தொடங்கியபோதே, தமிழகத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டினார்.
    விஸ்வரூபம் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க நேற்று நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களில், பெற்றோல் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன, படத்தின் பேனர்கள் தீக்கிரையாக்கப்பட்டன, தியேட்டர்கள்மீது கல்லெறி சம்பவங்கள் நடைபெற்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
    விஸ்வரூபம் படம் தமிழகத்தில் 524 திரையரங்குகளில் திரையிடப்பட இருந்தது. இப்படத்திற்கு 24 இஸ்லாமிய கூட்டமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த நிலையில், படம் வெளியிடப்பட்டால், வன்முறை வெடிக்கலாம் என்று உளவுத் துறை அறிக்கை கொடுத்திருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

    அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்: அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு என்ன?

    தி.மு.க. தலைவர் கலைஞர் கேள்வி
     தந்தை பெரியார் நெஞ்சிலிருந்த முள்ளை அகற்றுவதற்கு தி.மு.க. அரசில் நிறைவேற்றப் பட்ட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை குறித்த முடிவு குறித்து, தற்போதைய அ.தி.மு.க. அரசு வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் எத்தகைய நட  வடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்று தி.மு.க. தலைவர் கேட்டுள்ளார்.
    இதுகுறித்து இன்றைய முரசொலியில் அவர் எழுதியிருப்பதாவது:
    கேள்வி: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கழக ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் தொடர்ச்சியாக பயிற்சி பெற்ற அர்ச்சகர்  களுடைய தற்போதைய நிலை என்ன?
    கலைஞர்: தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் இருந்த முள்ளை அகற்றிடும் வகையில் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே 23-5-2006 அன்று அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தகுதி யும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறு  பாடின்றி திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழி வகை செய்யப்பட்டது.
    அரசாணையினை அடுத்து பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்;
    சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்  பட்டன.

    கவுன்சிலரான பாலியல் தொழிலாளி ! சாதித்த பீகார் பெண்

    பர்பூர்: பீகாரில், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண், அந்த தொழிலுக்கு, "குட்பை' கூறி விட்டு, தற்போது, அரசியலில் குதித்து, கவுன்சிலராக உருவெடுத்து, சாதித்து காட்டியுள்ளார்.பீகார் மாநிலம், முஜாப்பர்பூரைச் சேர்ந்தவர், ராணி பேகம், 42. இவருக்கு, திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். எதிர்பாரதவிதமாக, பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய நெருக்கடியான நிலை, இவருக்கு ஏற்பட்டது.இந்த தொழிலில், பல்வேறு அவலங்களை, இவர் சந்தித்தார். திடீரென, "இந்த தொழிலை கை கழுவி விட்டு, அரசியல்வாதியாக மாறினால் என்ன' என்ற எண்ணம், இவருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, தனக்கு தெரிந்தவர்களின் உதவியுடன், முஜாப்பர்பூர் மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    டிடிஎச்-க்கு என்ன பதில், கமல்ஹாசன்?


    imagesகோவிந்த் நிஹிலானியும் கமல்ஹாசனும் வசனமெழுதிய படம் குருதிப் புனல். கமல்ஹாசன்தான் நாயகன். போலிஸ் அதிகாரி வேடம். சிறைபிடிக்கப்பட்ட தீவிரவாதியிடம், அவன் சினிமாவைப் பார்த்து பலஹீனமான இளைஞர்களை நம்பியிருப்பதாக அந்த போலிஸ் அதிகாரி வசனம் பேசுவதாக காட்சி வரும்.
    இந்த வசனத்தின்படி சினிமா பார்க்கும் இளைஞர்களை பலவீனமானவர்கள் என்பதாக சித்தரிக்க முடிந்த கமல்ஹாசனால், அந்த பலவீனமான ரசிகர்களைக் கொண்டே, தனக்கென ஓர் உயர்ந்த பிம்பத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடிந்திருக்கிறது.
    தன்னளவில் பலத்தை அதிகரித்துக்கொண்டு ஒரு ஹீரோவாக வளர்ந்த கமல்ஹாசன், புதுமைகளுக்குப் பெயர் போனவர். வித்தியாசமான மேக்கப், காட்சி அமைப்புகளில் பரிசோதனை முயற்சி, பத்து வேடங்கள், வயது கடந்த கிழவனை ஹீரோவாகக் காட்டும் சினிமா… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.. இதெல்லாம் Movie Making எனப்படும் சினிமா எடுப்பதில் மட்டும் செய்து கொண்டிருந்த புதுமைகள். இப்போது சினிமாவை விற்பதில் புதுமை செய்யலாம் என நினைத்துத் தனது புதிய படமான விஸ்வரூபத்தினை., டிடிஎச் தொலைக்காட்சியில் ரிலீஸ் என்று அறிவித்தார். அதுவும் அந்தப் படம் ஜனவரி 10ம்தேதி இரவு ஒன்பதரை மணிக்கு டிடிஎச் சானல்களில் காட்டப்படும்.. அதன் பின்னர் மறுநாள் ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. ஏர்டெல் டிடிஎச் சேவைக்காக பிரத்யேக ப்ரஸ் மீட் நடந்து இந்தத் திட்டம் மிக வேகமாக பிரபலமடையத் தொடங்கியது.
    இது மாதிரி டிடிஎச் ரிலீஸ் செய்ய பல டிடிஎச் சேவை நிறுவனங்கள் முன்வந்தன. அந்த நிறுவனங்களின் சானல்களில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான கமல்ஹாசனே தோன்றி விளம்பரங்கள் செய்தார். இதன் அடிப்படையில் இந்த திரைப்படத்தை, டிடிஎச் சானலில் பார்க்க ஒரே ஒரு காட்சிக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் சந்தாதாரர்கள் கட்ட வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட்து. கமல்ஹாசனின் விளம்பரத்தினால் ஈர்க்கப்பட்டவர்கள் இந்த சந்தாவினைக் கட்டத் தொடங்கினார்கள்.  இப்படி வசூல் ஆன தொகை ஒரு கட்டத்தில் முன்னூறு கோடியினைக் கடந்ததாக செய்திகள் வெளியாகின.

    மும்பை செல்கிறார் கமல் விஸ்வரூபம் தொடர்பாக

    சென்னை: விஸ்வரூபம் படத்தை திரையிடுவதற்காக மும்பை செல்ல உள்ளதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார். மும்பை சென்று வெற்றியுடன் திரும்பி வருவேன் என்று ரசிகர்களுக்கு கமல் தகவல் கூறியுள்ளார். ரசிகர்கள் அமைதிகாக்குமாறும் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஸ்வரூபம் படம் இந்தியில் பிப்ரவரி 1ம் தேதி மும்பையில் வெளியாக உள்ளது.தமது விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எழுந்துள்ள சிக்கல்களுக்காக யார் மீதும் கோபம் இல்லை என்றும் வருத்தம் தான் என்றும் நடிகர் கமலஹாசன் மீண்டும் விளக்கமளித்துள்ளார். நியாயத்திற்காக தாம் போராடி வருவதாகவும் ரசிகர்கள் ஆத்திரப்படாமல் அமைதி காக்குமாறும் கமல் வலியுறுத்தியுள்ளார். முஸ்லீம்கள் உட்பட தமது ரசிகர்கள் அனைவரும் தம்முடனே உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் குறித்து தமது முஸ்லீம் ரசிகர்கள் மற்றும் இதர இஸ்லாமிய நண்பர்கள் தம்முடன் பேசி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
    விஸ்வரூபம் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு இனிதான் வரவேண்டி உள்ளதாக கூறியுள்ளார்.

    விஸ்வரூபமூம் துப்பாக்கியும் மட்டும்தான் இசுலாமியர்களின் எதிரிகளா?

    பெங்களூரில் கோரமங்களா சிக்னலுக்கு முன்பாக இடது புறமாக திரும்பும் சாலை ஒன்று இருக்கிறது. இரவு நேரத்தில் விளக்கு வெளிச்சம் போதுமானதாக இருக்காது.  ஆள் நடமாட்டமும் குறைவாகத்தான் இருக்கும். நேற்றிரவு பத்து மணிக்கு மேலாக பைக்கில் வந்து கொண்டிருந்த போது ஒருவர் லிஃப்ட் கேட்டார். ஊனமான தனது கால்களுக்கு உதவியாக தாங்குகோல்களை பிடித்துக் கொண்டு நின்றார். முஸ்லீம் குல்லாவும் தாடியுமாக இருந்த அவருக்காக வண்டியை நிறுத்த தயக்கமாக இருந்தது. சற்று தூரம் தள்ளிச் சென்று யாராவது அவருக்கு உதவுகிறார்களா என பார்த்துக் கொண்டிருந்தேன். சுமார் பத்துக்கும் மேற்பட்ட பைக்காரர்கள் நிற்காமல் சென்றார்கள். நான் உட்பட ஏன் யாருமே அவருக்கு உதவவில்லை என்ற யோசிக்கத் தோன்றியது. அறியாத மனிதருக்கு உதவச் சென்று வேறு ஏதேனும் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளக் கூடும் என்ற பயமா அல்லது இசுலாமியர் என்பதால் எழும் தயக்கமா என்று வெகு நேரம் குழப்பமாக இருந்தது.

    மீண்டும் தடை! விஸ்வரூபத்திற்கு' ஐகோர்ட்

    சென்னை: நடிகர் கமல் நடித்துள்ள, "விஸ்வரூபம்' திரைப்படத்திற்கு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்து சென்னை, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது."விஸ்வரூபம்' படத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பான வழக்கில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வெங்கட்ராமன், "விஸ்வரூபம் படத்திற்கு, தமிழக அரசு விதித்திருந்த, இரண்டு வார தடை நீக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் படத்தை திரையிட, எந்தத் தடையும் இல்லை' என, நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார்.தனி நீதிபதியின் உத்தரவுக்கு, தடை கேட்டு, நேற்று முன் தினம் நள்ளிரவு, அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், வீட்டுக்கு சென்று வாதிட்டார். ஆனால், மறு நாள் (நேற்று) காலையில் மேல்முறையீடு தாக்க செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

    புதன், 30 ஜனவரி, 2013

    கமலுக்கு ஆஜரான வழக்கறிஞர் வீட்டில் மின் இணைப்பு துண்டிப்பு -

    கமலுக்கு ஆதரவாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வீட்டில்
    மின் இணைப்பு துண்டிப்பு - கடும் வாக்குவாதம் தமிழக அரசு தொடர்ந்த விஸ்வரூபம் படம் வழக்கு சம்பந்த மாக கமலுக்கு ஆதரவாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமனுக்கு மின் வாரிய அதிகாரிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.பி.எஸ்.ராமன் வீட்டில் மின் இணைப்பை துண்டிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தனர்.   முன் அறிவிப்பின்றி மின் இணைப்பை துண்டிப்பதற்கு அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதம் தெரிவித்தனர்.

    விஸ்வரூத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க Jeya TV முயன்றதாக ???

    விஸ்வரூபம் படத்தை ஏன் அதிமுக அரசு
     கடுமையாக எதிர்க்கிறது? : கலைஞர் விளக்கம்

     விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு இந்த அளவிற்கு கடுமையாக தடை விதிக்க காரணம் என்ன? என்பதற்கு திமுக தலைவர் கலைஞர் விளக்கம் அளித்துள்ளார்.
    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை மேலும் நீடிக்காமல் பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு  கொண்டுவரவேண்டும்.  கமல் ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தை, கலந்தாலோசனை மூலமாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலே உள்ள தமிழக அரசும் அதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.   கி.வீரமணி, ஜி.ராமகிருஷ்ணன், டாக்டர் ராமதாஸ், திருமாவளன், சரத்குமார் உள்ளிட்டோர் இப்பிரச் சனை சுமூகமாக பேசி முடிக்க வேண்டும் என்று வலியுறுத் தியுள்ளனர்.
    ஆனால் தமிழக அரசு இதை காதில் வாங்கிக்கொள்ளாததோடு,  இதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை.   மேலும் தமிழக அரசு இந்த அளவிற்கு கடுமையாக இந்தப் படத்திற்கு தடை விதிப்பதற்கு என்ன காரணம்? 
    அதிமுகவுக்கு மிகவும் வேண்டிய ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இந்த படத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க முயன்றதாகவும்,  ஆனால் திரைப்படத்தை 100 கோடிக்கு மேல் செலவு செய்து தயாரித்திருப்பதால் திரைப்படத்தை குறைந்த விலைக்கு விற்க மறுத்துவிட்டு அதிக விலைக்கு வேறு ஒரு தொலைக்காட்சிக்கு விற்றுவிட்டதுதான் காரணம் என்றும் கூறூகிறார்கள்.
    அதைப்போல மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நூல் வெளியீட்டு விழாவில் கமல் பேசும்போது,   வேட்டி கட்டிய ஒரு தமிழன் பிரதமராக வரவேண்டும் என்று ப. சிதம்பரத்தை குறிப்பிட்டு பேசியதும் கோபத்திற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.  ஆனால், இந்த கருத்துக்கள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. 
    நேற்று இரவு 10.15 மணிக்கு தடையை நீக்கி உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.  இதற்கு பிறகும் அதிமுக அரசு மனம் இறங்கியதா? இல்லை.  தலைமை நீதிபதி பொறுப்பில் உள்ள எலிப்பி தர்மாராவ் வீட்டிற்கே சென்று மேல் முறையீட்டு மனு கொடுத்து தடையும் வாங்கி இருக்கிறார்கள். 
    ஜனநாயகமும், மனிதாபிமானமும் இந்த அரசிடம் இருக்கிறதா என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் தேவையில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    விஸ்வரூபம் : ஜெயாவின் கையாட்களா முஸ்லிம் அமைப்புக்கள் ?

    விஸ்வரூபம் படம், கமலஹாசன் சொல்லிக் கொள்வது போல ஒரு “ஸ்பை த்ரில்லர்” ஆக இருக்கப்போகிறதோ இல்லையோ, தற்போது தமிழகத்தில் அரங்கேறி வரும் கூத்துகள் கிட்டத்தட்ட அவ்வாறுதான் இருக்கின்றன.
    படத்திற்கு 31 மாவட்ட ஆட்சியர்களும் விதித்திருந்த தடையை நீக்கி நேற்று இரவு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
    “இப்போது தீர்ப்பை வெளியிட்டு விட்டால், நாளை காலை 5 மணிக்கே முதல் காட்சியை திரையரங்கில் போட்டு விடுவார்கள். எனவே நாளை காலை தீர்ப்பை வெளியிடுங்கள். நாங்கள் மேல் முறையீடு செய்து கொள்கிறோம்” என நேற்று உயர்நீதிமன்றத்தில் பதறியிருக்கிறார் அரசின் தலைமை வழக்குரைஞர் நவநீத கிருஷ்ணன். நீதிபதி அதை ஏற்கவில்லை. எனவே இரவோடு இரவாக தலைமை நீதிபதியின் வீட்டுக்குச் சென்று, அவரைத் தட்டி எழுப்பி தடை உத்தரவு கேட்டிருக்கிறார்கள். ‘இன்று காலை நீதிமன்றத்தில் முதல் வழக்காக இதனை எடுத்துக் கொள்வதாக’ அவர் கூறியிருப்பதாக இன்றைய நாளேடுகள் கூறுகின்றன.
    நேற்று நீதிமன்றத்தில் அரசு தரப்பு எடுத்து வைத்த வாதங்களைப் பார்த்தபோது, “வேறு ஏதோ நோக்கங்களுக்காகத்தான் இந்த நாடகத்தை ஜெயலலிதா அரசு நடத்துகிறது” என்பது பச்சையாகத் தெரிந்தது.

    விஸ்வரூபம் விவகாரத்தில் சோ: முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வந்து குதித்தார்!

    Viruvirupu
    நான்கூடதான் ‘முகம்மது பின் துக்ளக்’ன்னு படம் எடுத்தேன். அதில் முல்லா ஓமர் வந்தாரா?

    நான்கூடதான் ‘முகம்மது பின் துக்ளக்’ன்னு படம் எடுத்தேன். அதில் முல்லா ஓமர் வந்தாரா?
    மூத்த அரசியல் விமர்சகரும், முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசகர்களில் ஒருவர் என்று கூறப்படுபவருமான சோ (ராமசாமி), விஸ்வரூபம் தொடர்பாக தமது கருத்தை தெரிவித்துள்ளார். அவரது கருத்து, “தமிழக அரசு செய்தது சரியே… படம் தடை செய்யப்பட வேண்டியதுதான்” என்பதே!
    CNN IBN ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார் சோ.
    “தமிழக அரசு விஸ்வரூபம் படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும். ஒரு திரைப்படத்துக்காக மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை பொறுத்துக்கொள்ள முடியாது” என்றும் கூறியுள்ளார் அவர்.
    ராஜ்தீப் சர்தேசாய், “அரசு எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கும் குழுக்களின் சார்பாக செயல்படுகிறது, கமல்ஹாசன் பக்கம் என்ன நியாயம் உள்ளது என்பதை பார்க்கவில்லை?” என்று கேள்வி எழுப்பியபோது சோ, “பொதுமக்கள் நலன் உள்ள திசையிலேயே முதல்வர் ஜெயலலிதா நின்றார். ஒரு படம் சிலரது நம்பிக்கைகளை தகர்க்கும் என்றால், அந்தப் படம் தடை செய்யப்படத்தான் வேண்டும்” என்றார்.
    எமக்கு இருப்பது, ஒரேயொரு கேள்விதான். மத்திய தணிக்கை சபையோ, உயர் நீதிமன்றமோ ஏன் அவ்வாறு நினைக்கவில்லை? ஒருவேளை உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ, படத்துக்கு தடை விதித்தது செல்லாது என தீர்ப்பு வழங்கினால், சோ என்ன சொல்லுவார்?
    “எல்லோரும் தப்பு. தமிழக அரசுதான் ரைட்டு” என்பாரோ!  கம்யுனிஸ்ட் கட்சி பாண்டியனுக்கும் சோவுக்கும் இடையில் கடும் போட்டி ஆரம்பமாகிவிட்டது  கால் கழுவுவோம் வாரீர் 

    கொலைப் பழி சுமந்து அப்பாவிச் சிறுமியாக சிறைப்பட்டவளை காக்க முடியாத கையாலாகாத உலக மானிடம்

    ஶ்ரீதரன் -ஞானசக்தி வீட்டுப் பணிப் பெண்ணாக தனது பதின்ம வயதில் சவுதிக்கு அனுப்பப்பட்ட மூதூர் வறிய குடும்பத்து பெண் பிள்ளையின் தலை சீவப்பட்டது. சீவியது யாருமல்ல. சவுதியின் நீதித்துறை. வீட்டுப் பணிப்பெண்ணாக பிள்ளை பராமரிப்பாளராக வேலைசெய்த போது பால் பருக்குகையில் குழந்தை இறந்து விட்டது.
    இதற்காக இந்த சிறுமி மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது.
    பகுத்தறிவிற்கு ஒவ்வாத ,மனித நியாயத்திற்கு ஒவ்வாத வகையில் இந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.எத்தனையோ கெஞ்சல்கள் மன்றாட்டங்கள் விடுத்த போதும் சவுதி அரசோ நீதித் துறையோ கருணை காட்டவில்லை.
    உலகப் பொது நியாயம் ஒன்றிருக்கிறது. இந்த பெண்ணின் மரணத்தை இதுபோன்றவற்றை சகஜமாக ஏற்றுக் கொண்டு நாம் மனிதரெனக் கொண்டிங்கு வாழ்வதில் என்ன நியாயம் இருக்கிறது அராஜகமாக பெண்களுக் கெதிரான  வன்கொடுமை செய்பவர்களின் அறிவு மட்டத்திற்கும் மதம் ,சட்டம்-நீதியின் பெயரில் ஈவிரக்கமில்லாத மனித தன்மையற்ற தண்டனை வழங்கும் அதிகார வர்க்கத்தின் அற உணர்வு மட்டத்திற்கும் என்ன வித்தியாசம்.

    Finally விஸ்வரூபம் ரிலீஸ்! But பாய்ந்து தடுக்கிறது போலீஸ்!! விரட்டப்படும் மக்கள்!!!

    தமிழகத்தின் பல பகுதிகளிலும் விஸ்வரூபம் காலை காட்சிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் டிக்கெட் கொடுத்துவிட்டு, ரசிகர்கள் வெளியே நிறுத்தப்பட்டிருந்தனர். சில இடங்களில் படம் தொடங்கி ஓடத் தொடங்கியபின் இடைநிறுத்தப்பட்டது. இதனால், ரசிகர்கள் கொந்தளிப்பு நிலையை அடைந்தார்கள்.
    கோவை சென்ட்ரல் தியேட்டருக்கு வெளியே ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி கலையரங்கம் தியேட்டருக்கு வெளியேயும் நிலைமை அதுவே. ஈரோடு பி.எஸ்.பி. தியேட்டரில் படம் 30 நிமிடங்கள் காண்பிக்கப்பட்ட பின், இடைநிறுத்தப்பட்டது. கோவை கலெக்டர் ஆபீஸ் முன் ரசிகர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
    கும்பகோணம் காசி தியேட்டரில், 15 நிமிடங்கள்  காண்பிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது
    டிக்கெட் பணம் திரும்ப கொடுக்கப்படும் என தியேட்டர் நிர்வாகம் அறிவித்த நிலையிலும், ரசிகர்கள் கலைந்து செல்லாததால், போலீஸ், பொதுமக்களை அடித்து விரட்டியது.
    சென்னையில், தியேட்டர்களில் விஸ்வரூபம் பேனர்கள் அகற்றப்படுகின்றன. சில இடங்களில் பேனர்கள் எரிக்கப்பட்டுள்ளன. கூட்டமாக நின்றவர்கள் அடித்து விரட்டப்பட்டனர்.
    விஸ்வரூபம் படத்தின் மீதான தடை நீக்கத்தை எதிர்த்து இன்று காலை மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் தலமையிலான குழு காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக இதனை பதிவு செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி எலிப்பி தர்மாராவ் தலைமையிலான பெஞ்ச், பிற்பகல் 2.30 மணிக்கு விசாரிப்பதாகக் கூறியுள்ளது.
    ஆனால் தடையை நீக்கத்துக்கு தடை விதிக்கவில்லை. இதனால், படம் காண்பிக்கப்படுவதை அரசு தடுப்பது குறித்து சட்டச் சிக்கல்கள் ஏற்படலாம்.
    தமிழக வரலாற்றில் ஒரு திரைப்படம் இந்தளவுக்கு பரபரப்பாக ஓடத் தொடங்கியதில்லை. கமலுக்கு ஆதரவாக ஏதாவது அரசியல் கட்சிகளோ, அல்லது மத்திய அரசு தலையீடோ இருக்குமா என்பது இன்னமும் தெரியவில்லை. viruviruppu,com

    விஸ்வரூபம்,, ஜெயலலிதாவுக்கு பயந்து வாய் மூடி இருக்கும் திரை உலகம்

    விஸ்வரூபம் படம் விவகாரத்தில், வாய் மூடிக்கொண்டு பதுங்கியுள்ள திரைப்பட நட்சத்திரங்கள், இனியாவது வெளியே வந்து, குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார், மூத்த பத்திரிகையாளர் ஞாநி.
    இதுவரை, கமல்ஹாசனுக்காக ஒட்டுமொத்த கலையுலகில் இருந்து தெளிவாக குரல் கொடுத்தவர்கள், ரஜினிகாந்த், பார்த்திபன், மற்றும் பாரதிராஜா மட்டுமே.
    அரசியல் கட்சிகளை பொறுத்தவரை தெளிவாக குரல்கொடுத்த இரு கட்சிகள், பா.ம.க., மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை. தி.மு.க. மிகக் கவனமாக கருத்து தெரிவித்திருந்தது.
    இந்த விவகாரம், கமல்ஹாசன் மீது தமிழக அரசு தலைமைக்கு ஏற்பட்ட கோபம் காரணமாக நடைபெறுகிறது என்பதை புரிந்துகொண்டே, பல ‘ஆக்ஷன் ஹீரோக்கள்’ பதுங்கினார்கள் என்று சொல்லப்படுகிறது. கோடம்பாக்கம் தகவல்களில் இருந்து, இவர்கள் பதுங்கியுள்ள இடத்தில் இருந்து தாமாக தலையை தூக்க லேசில் முன்வர மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

    கமல் என்ற தனி இந்தியரை மாநில அரசிடம் இருந்து காப்பாற்ற, மத்திய அரசு வர முடியுமா?

    விஸ்வரூபம் படத்துக்கான தடை நேற்று நீதிமன்றத்தால் விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னரும், இன்று காலை படம் வெளிடப்படுவதை மாநில அரசு தடுத்ததில் இருந்து, மாநில அரசு இந்த விவகாரத்தில் எந்தளவு முனைப்புடன் உள்ளது என்பது தெளிவாகிறது. பக்கத்து மாநிலங்களில் விஸ்வரூபம் படம் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையும் இன்றி காண்பிக்கப்படுகிறது.
    அந்தந்த மாநில அரசுகள், தியேட்டர்களுக்கும், படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்து, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துகின்றன.
    இந்த நிலையில் சில தன்னார்வ அமைப்புகள், உரிமை மறுக்கப்படும் ஒரு இந்தியருக்கு, இந்தியாவில் அவர் வசிக்கும் மாநிலத்தில் அரசே எதிராக இருந்தால், மத்திய அரசு தலையிட இந்திய அரசியல் சட்டம் இடம் கொடுக்கிறதா என ஆராயத் தொடங்கியுள்ளன.
    இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சை சில தன்னார்வ அமைப்புகள் அணுகியுள்ளதாகவும் தெரியவருகிறது.
    இதில் மத்திய அரசு தலையிட முடியுமா என்பது, இன்றைய நீதிமன்ற தீர்ப்பின்பின் தெரியவரலாம் எனவும் சொல்லப்படுகிறது.viruviruppu

    கமல்ஹாசன்: அரசியல் சூழ்ச்சி இது! என்னை ‘அவர்’ வீழ்த்த நினைத்தால், ஏமாருவார்!

    viruvirupu.com “இன்று விஸ்வரூபம் படத்தின் தடை விலக்கப்படாவிட்டால், இந்த வீட்டையும் நான் இழக்க நேரிடும். நான் எனது சகல சொத்துக்களையும் இழப்பேன். தமிழகத்தை விட்டு வெளியேறுவேன். வேறு ஒரு மாநிலத்தில் வாழ்வதற்கு உகந்த இடம் தேடுவேன். அதுவும் கிடைக்கவில்லை என்றால் வெளிநாடு செல்வேன்” என்று உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.
    நான் தமிழகத்தில் வாழ்வது பற்றி இன்று மதியம் தெரிந்துவிடும்.
    இங்கு நடப்பவை அனைத்துக்கும் யார் காரணம் என்று என்னைக் கேட்காதீர்கள். உங்களுக்கே தெரியும். யார் காரணம் என்று உங்களுக்கே தெரியும். அரசியல் சூழ்ச்சி ஒன்றில் நான் சிக்கியிருப்பதாக நினைக்கிறேன்.
    ஏன் தமிழகத்தை விட்டு வெளியேற நினைக்கிறேன் என்று கேட்கிறீர்களா? நானல்ல, நான் வெளியேற வேண்டும் என்று ‘தமிழகம்’ நினைக்கிறது!” என்றார் அவர்.
    கமல் ஒரு முடிவுக்கு வந்துள்ளார் என்றே தெரிகிறது. “என்னை வீழ்த்தலாம் என்று நினைக்காதீர்கள். வீழ்ந்தாலும், விதையாக வீழ்வேன். வளர்வேன். லட்சக்கணக்கான பறவைகள் வந்து அமரும் மரமாக மாறுவேன்” என்பது, கமல் ஒரு ‘முடிவு’ எடுத்திருப்பதை காட்டுகிறது.
    முதல்வர் ஜெயலலிதா கடந்த காலத்தில் ஒரு தடவை ரஜினிகாந்த்தின் பேச்சு, மற்றும் நடவடிக்கைகளால் ஆட்சி இழந்தார்!

    விஸ்வரூபம் தீர்ப்பை ஒத்திவைக்குமாறு அரசு கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்!

    கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. தணிக்கை செய்யப்பட்ட படத்தை தடை செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    29.01.2013 அன்று நடைபெற்ற விசாரணையில் இரவு 8 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறிய நீதிபதி, தொடர்ந்து 10 மணிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தார். இதன்படி இரவு 10 மணிக்கு தீர்ப்பை வழங்கிய நீதிபதி, படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
    முன்னதாக, விஸ்வரூபம் பட வழக்கில் தீர்ப்பை 30.01.2013 வரை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் வாதாடினார். அப்போது தமிழக அரசு மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
    தீர்ப்பை ஒத்திவைக்குமாறு தமிழக அரசு வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, இரவே தீர்ப்பை வழங்கினார். தமிழக அரசு விரும்பினால் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    அமெரிக்காவில் 240,000 இந்தியர்கள் குடியேறி உள்ள

    வாஷிங்டன் : அமெரிக்காவில் சுமார் 240,000 இந்தியர்கள் சட்ட விரோதமாக குடியேறி உள்ளது தெரிய வந்துள்ளது. மொத்தமுள்ள 11.5 மில்லியன் எண்ணிககையில் சட்ட விரோதமாக வசிப்பவர்களில் 8.9 மில்லியன் பேர் கனடா,மெக்சிகோ,கரீபியன் உள்ளிட்ட வடஅமெரிக்கா பகுதிகளில் வசிப்பது தெரிய வந்துள்ளது. மெக்சிகோவில் மட்டும் 6.8 மில்லியன் பேர் சட்ட விரோதமாக குடியேறி உள்ளனர். அமெரிக்காவில் சட்ட விரோதமாக வசிக்கும் ஆசிய நாடுகளில் 240,000 பேருடன் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது. சீனா (280,000) முதல் இடத்திலும், பிலிப்பைன்ஸ்(270,000) 2வது இடத்திலும் உள்ளன.dinamalar,com

    Deal Deal தாராபுரம் கடலை வியாபாரி வீட்டு பீரோவை திறந்து விட்ட வருமானவரி அதிகாரிகள் கப்சிப்!

    Viruvirupu
    தாராபுரத்தில் ரூ.27,500 கோடி பெறுமதியாக அமெரிக்க பண பரிவர்த்தனை பத்திரங்கள் (பில் ஆஃப் எக்ஸ்சேஞ்ச்) கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக வருமானவரி துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலக்கடலை வியாபாரி ராமலிங்கத்துக்கு, அவரது சொத்துக்களை ‘திறந்து விட்டது’, வருமானவரித்துறை!
    திடீரென தாராபுரத்தில் வந்து குதித்து, “உங்க சொத்துக்களை நீங்களே வெச்சுக்குங்க” என்று கூறி திறந்து விட்டு, விருட்டென்று கிளம்பிச் சென்றனர் அதிகாரிகள்!
    ராமலிங்கம், கையை கிள்ளிப் பார்த்துக் கொண்டார். வலித்தது!
    “எனது வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை முறைகேடானது. அது ஒரு சதி வேலை” என்று வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்த திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த நிலக்கடலை வியாபாரி ராமலிங்கம், தமக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் வழக்குப் போடப் போவதாகவும் எச்சரித்திருந்தார்.
    தாராபுரம் உப்புத்துறை பாளையம் நிலக்கடலை வியாபாரி ராமலிங்கம் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ரூ.27,500 கோடி மதிப்புள்ள அமெரிக்க பண பரிவர்த்தனை பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. அதையடுத்து, கடலை வியாபாரி ராமலிங்கத்தின் வங்கி கணக்கு, லாரிக்கரில் இருந்த நகைகளை முடக்கி வைத்திருந்தனர்.
    தாராபுரத்தில் உள்ள 2 வங்கிகளில் இருந்த வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. நிரந்தர வைப்பு நிதியாக சுமார் 2 கோடி ரூபாய் வைத்திருந்ததையும் வங்கி லாக்கரில் இருந்த 703.66 கிராம் தங்க நகை, மற்றும் 5 கிலோ 700 கிராம் வெள்ளி பொருட்க ளையும் வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கினர்.
    ராமலிங்கம் நிருபர்களுக்கு அளித்திருந்த பேட்டியில், “எனது வங்கி கணக்கை முடக்கியதால் குடும்ப செலவுக்கு கூட பணம் இல்லை என்று வருமான வரிதுறை அதிகாரிகளுக்கு கடந்த 11-ம் தேதி கடிதம் கொடுத்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கூறியிருந்தார்.
    நேற்று மதியம் சென்னையிலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் தாராபுரம் வந்து, ராமலிங்கத்தை அழைத்துக் கொண்டு வங்கிகளுக்கு சென்றனர். வங்கி கணக்குகளை மீண்டும் செயல்படுத்த வங்கி அதிகாரிகளுக்கு ரிலீஸ் ஆர்டர் வழங்கியதோடு, லாக்கரில் முடக்கி வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை ஒப்படைத்தனர்.
    அதையடுத்து அவரை பத்திரமாக போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏற்றி சென்று வீட்டில் இறக்கி விட்டனர்.
    அத்துடன், ராமலிங்கத்தின் வீட்டில் சீல் வைக்கப்பட்ட பீரோக்களையும் திறந்து விட்டுச் சென்றனர்.
    கடலை வியாபாரி வீட்டின் முன்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட, (போலியான ஆவணம் என அறிவிக்கப்பட்ட) ரூ.27,500 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியவில்லை. பீரோ திறக்க வந்த அதிகாரிகளிடம் கேட்டபோது, பதில் ஏதும் கூறாமல் விருட்டென்று கிளம்பி சென்றனர்!
    அசால்டாக திறந்துவிட்டு போகிறார்களே அதிகாரிகள்…அம்மா தடைபோடுவது போல!

    சமச்சீர் கல்வி திட்டம் வந்த பின் மெட்ரிக் இயக்குனரகம் தேவையா?

    மாநில பாடத் திட்டம்,மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் கல்வி ஆகிய, நான்கு வகையான கல்வி திட்டங்களை ஒருங்கிணைத்து, சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அமல்படுத்தியுள்ள நிலையில், மெட்ரிக் பள்ளிகளுக்கென, தனியாக இயக்குனர் அலுவலகம் தேவையா, என்ற கேள்வி எழுந்து உள்ளது.மெட்ரிக் இயக்குனரகத்தின் கீழ், 4,000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 25 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

    மைனரையும் தூக்கிலிட வேண்டும்!' : மருத்துவ மாணவியின் தந்தை ஆவேசம்

    லக்னோ:""என் மகளை, பாலியல் பலாத்காரம் செய்த ஆறு பேரில் ஒருவன், மைனர் என்பதால், அவனுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க கூடாது; அவனையும் தூக்கில் போட வேண்டும்,'' என, பாலியல் பலாத்காரத்தால் உயிரிழந்த, டில்லி மாணவியின் தந்தை, ஆவேசமாக தெரிவித்துள்ளார்.டில்லியில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட, மருத்துவ மாணவியின் தந்தை கூறியதாவது:என் மகளை, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தவர்களில் ஒருவன், மைனர் என, சிறார் நீதி வாரியம் அறிவித்துள்ளது. இதனால், குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டு மட்டுமே, அவனுக்கு தண்டனை கிடைக்கும்.கோர்ட்டின் இந்த அறிவிப்பு, துரதிருஷ்டவசமானது. அந்த நபர், வயதில் சிறுவனாக இருந்தாலும், மிக கொடிய குற்றத்தை செய்துள் ளான். வயதை அடிப்படையாக வைத்து, அவனுக்கு கருணை காட்டக் கூடாது. அதிகபட்ச தண்டனையாக, அவனுக்கு, தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

    நிராகரித்தார் நீதிபதி.,,கமலுக்கு சாதகமான தீர்ப்பை நாளை காலை 10.30 வரை பிற்போட அரசு கோரிக்கை!

    Viruvirupu
    விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீக்கக் கோரி கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தாக்கல் செய்துள்ள வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. கமல்ஹாசன், மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸூக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளார், நீதிபதி.
    தமிழக அரசுக்கு ஏற்பட்ட தோல்வியாகவே தீர்ப்பு பார்க்கப்படுகிறது. அதையடுத்து, அரசு வக்கீல் நீதிபதியிடம் அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
    ராஜ்கமல் பிலிம்ஸூக்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பை, நாளை காலை 10.30 மணிவரை நிறுத்தி வைக்குமாறு, தமிழக அரசிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு வக்கீல், இந்த கோரிக்கையை நீதிபதியிடம் தெரிவித்தார். நாளை காலை 10 மணிக்கு மேன்முறையீடு செய்ய இருப்பதாகவும், அரசு வக்கீல் தெரிவித்தார்.
    ஆனால், அரசின் கோரிக்கையை நிராகரித்தார், நீதிபதி.
    “படத்தை வெளியிடுவதானாலும், நாளைதான் வெளியிடுவார்கள். நீங்கள் மேன்முறையீடு செய்து கொள்ளலாமே” என்று தெரிவித்தார் நீதிபதி.
    மீண்டும் தமது கோரிக்கையை வலியுறுத்திய அரசு வக்கீல், “இல்லை.. தற்போது தடை கிடையாது என்பதால், அவர்கள் (ராஜ்கமல் பிலிம்ஸ்) நாளை காலை 6 மணிக்கு வேண்டுமானால் படத்தை ரிலீஸ் பண்ண முடியும். அதனால், நாளை காலை 10.30 மணிவரை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும்” என கோரினார்.
    இந்தக் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்தார், நீதிபதி.
    சென்னை ஹைகோர்ட்டில் இந்த வழக்கின் தீர்ப்புக்காக காத்திருந்த இஸ்லாமிய சமூக பிரதிநிதிகள், ஒன்றாக கிளம்பிச் சென்றார்கள். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுப்பதற்காக கிளம்பிச் சென்றார்கள் என கூறப்படுகிறது.

    செவ்வாய், 29 ஜனவரி, 2013

    விஸ்வரூபம் தடை நீங்கியது தமிழகத்தில் திரையிட கோர்ட் அனுமதி

    விஸ்வரூபம் தடை நீங்கியது தமிழகத்தில் திரையிட கோர்ட் அனுமதி !  அ.தி.மு.க. அரசு, விஸ்வரூபம் படத்துக்கு விதித்த தடை, தேவையற்ற நடிவடிக்கை என கருதப்பட்டு, நீக்கப்பட்டுள்ளது.

    எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் ராஜினாமா

    கர்நாடக ஜனதா கட்சி தலைவர் எடியூரப்பாவுக்கு ஆதரவாக உள்ள 13 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் பூபையாவிடம் தங்கள் ராஜினாமா கடிதங்களை முறைப்படி கொடுத்தனர். ராஜினாமா செய்த 13 எம்.எல்.ஏக்களில் 2 அமைச்சர்களும் அடங்குவர். இவர்களது ராஜினாமாவால் கர்நாடக பாரதீய ஜனதா அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
    பா.ஜ.க. வில் இருந்து வெளியேறி கர்நாடக ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை துவங்கிய எடியூரப்பாவுக்கு ஆதரவாக உள்ள 13 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்தனர். இவர்கள் நேற்று முன்தினம் ராஜினாமா செய்வதாக இருந்தது. ஆனால் கர்நாடக சட்டசபை சபாநாயகர் கே.ஜி. பூபையா வெளியூர் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு தான் பெங்களூர் திரும்பினார். இதனால் செவ்வாய்கிழமை காலை ராஜினாமா செய்வது என்று அவர்கள் முடிவு செய்திருந்தனர்.

    விஸ்வரூபம்,,சான்றிதழ் வழங்கியதில் பெரும் ஊழல் - தமிழக அரசு புகார்

    விஸ்வரூபம் படத்திற்கு முறையாக தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதில் பெரும் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்தே தனியாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி கமல்ஹாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதேபோல மாவட்டங்களில் படத்தைத் திரையிட கலெக்டர்கள் பிறப்பித்துள்ள தடையை நீக்கக் கோரியும் தனியாக ஒரு வழக்கையும் அவர் தொடர்ந்துள்ளார்.இந்த மனுக்களை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்து வருகிறார். இதில் படத்திற்கு அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் படம் பார்த்த நீதிபதி வெங்கட்ராமன் நேற்று தீர்ப்பளிப்பதாக இருந்தார். ஆனால் இன்றைக்கு அதை ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் சுமூகப் பேச்சுவார்த்தை நடத்துமாறும் கமல்ஹாசனுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பி்ல ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்திற்கு முறையாக தணிக்கைச் சான்று வழங்கப்படவில்லை. அதில் முறைகேடு நடந்துள்ளது. இதுமட்டுமல்ல, படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் பெரும் ஊழல் நடக்கிறது, நடந்து கொண்டுள்ளது. அதுகுறித்தே தனியாக விசாரிக்க வேண்டும்.விஸ்வரூபம் படத்திற்குத் தணிக்கைச் சான்று அளித்த குழுவைச் சேர்ந்த யாருமே மத்திய அரசால் நியமிக்கப்ட்டவர்கள் அல்ல. அதிலும் முறைகேடு நடந்துள்ளது. எனவே இந்தப் படத்திற்கு வழங்கப்பட்ட சான்றிதழே முறைகேடானது.நான்கு பேர் மட்டுமே பார்த்து ஒரு சான்று அளிப்பதை ஏற்க முடியாது. அனைவரும் பார்க்க வேண்டும், குறிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து அனுமதி தர வேண்டும். எனவே இந்தப் படத்தைத் திரையிட தடை விதிக்கப்பட்டது சரியே என்று வாதிட்டார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதி வெங்கட்ராமன், இந்தக் காரணத்திற்காகத்தான் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தீர்களா என்று கேட்டார். மேலும் படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் எதுவும் இல்லையே என்றும் வினவினார்.அதற்குப் பதிலளித்த நவநீதகிருஷ்ணன், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியது அரசின் கடமையாகும். இதனால்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார்.பின்னர் மதிய உணவு இடைவேளைக்காக விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 2.30 மணிக்கு விசாரணை தொடரும் என்றும் நீதிபதி அறிவித்தார்.பின்னர் கமல்ஹாசன் தரப்பு வக்கீல் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்திற்காக இதுவரை தான் சம்பாதித்ததை, தனது உழைப்பை மொத்தமாக கொட்டியுள்ளார் கமல்ஹாசன். இப்படத்திற்காக முழுமையாக அவர் உழைத்துள்ளார்.மத்திய தணிக்கை வாரியம் அனுமதி அளித்து விட்ட நிலையில் அப்படத்தைத் தடை செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை. எனவே மாநில அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானதாகும்.இந்தப் படத்தைப் பார்த்த பல இஸ்லாமியர்களே அதை வரவேற்றுள்ளனர். எனவே தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.அரசுத் தரப்பு, கமல்ஹாசன் தரப்பு, சென்சார் போர்டு தரப்பு என வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு இரவு 8 மணிக்கு வழங்கப்படும் என்று நீதிபதி வெங்கட்ராமன் அறிவித்தார்.பெருமளவில் போலீஸ் குவிப்புஇதற்கிடையே, உயர்நீதிமன்ற வளாகத்தில் பெருமளவில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வரும் கோர்ட்டுக்கு வெளியே பெருமளவில் செய்தியாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் திரண்டு நிற்கின்றனர்.

    கமல் தமிழக அரசுடன் போசாமல் ஒதுங்கிய காரணம்.. பிளஸ் பாயின்ட்!

    விஸ்வரூபம் படம் தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றபோது, நாளை (இன்று) விசாரணைக்கு முன், அரசு அதிகாரிகளுடன் கமல் பேசி சுமுகமான முடிவுக்கு வரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை கூறிவிட்டே, விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தது.
    அதையடுத்து, கமல் தலைமைச் செயலகத்துக்கு வருவார் என அங்கு செய்தியாளர்கள் காத்திருந்தனர்.
    ஆனால், கமல் வரவில்லை.
    இந்த படத்துக்கு தடை விதித்ததில் தமிழக அரசுக்குதான் சிக்கல் ஏற்பட்டுள்ளது என கமலுக்கு எடுத்துச் சொல்லப்பட்டதாக தகவல். டில்லியில் இருந்தும் இந்த விஷயத்தில் கமலுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டது என்றும் கூறுகிறார்கள்.
    தமிழக அரசு சட்டரீதியான தகுந்த காரணங்கள் இல்லாமல் செய்த தடை என்பதில் கமல் தரப்புக்கு ஒரு பிளஸ் உள்ளது. எனவே இன்றைய விசாரணைக்கு முன், தேவையில்லாமல் தமிழக அரசிடம் போய் எதற்காக உங்களுக்கு உள்ள பிளஸ் பாயின்டை இழக்க வேண்டும் என அட்வைஸ் கொடுக்கப்பட்டதாம்.
    தமிழக அரசை சந்திப்பது என்றால், இன்றைய விசாரணையின் போக்கை பார்த்துவிட்டு முடிவு செய்வது என தீர்மானிக்கப்பட்டதாம்.
    அத்துடன், இந்த விவகாரத்தில் இழப்பீடு கோரி, சுப்ரீம் கோர்ட்வரை கமல் செல்ல முடியும் என்கிறார்கள்.viruvirupu.com/2013/01/29/45709/

    தியேட்டரில் வகுப்பெடுத்த பாரதிராஜா காடுவெட்டிக்கும் ராமதாசுக்கும் எதிராக பேசாதது ஏன்?

    பாரதிராஜா விடலைகளை உசுப்பேத்தும் தனுஷ், அல்டிமேட், ஆக்சன் கிங், இளையதளபதி, சின்னதளபதி, காதல், திருமணம் அனைத்தையுமே விஜய் டி.விக்கு வியாபாரமாக்கிய சினேகா-பிரசன்னா இப்படி காதலை பல பரிமாணத்தில் தமிழகத்துக்கு கலக்கி கொடுத்த பெரிய பட்டியலே.. நாட்டில் காதலை முன்வைத்து ஒரு அநியாயம் நடக்கும்போது வாயை மூடிக்கொள்வது, நமக்கேன் வம்பு! என்ற பிழைப்புவாத கண்ணோட்டம் மட்டும் காரணமல்ல, திரைத்துறைக்குள்ளும் தினவெடுத்து திரியும் சொந்தசாதி அரிப்பும்தான்! vinavu,com
    தாழ்த்தப்பட்டோரின்  ஊரையும் கொளுத்திவிட்டு, உடைமைகளையும் பறித்துவிட்டு, சந்தடி சாக்கில் வந்தவரை ஆதாயம் என வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்கவேண்டும், அதன் பல்லைப் பிடுங்க வேண்டும் என ஆதிக்கசாதி வெறியர்கள் அய்ந்து நட்சத்திர விடுதியில் ரூம் போட்டு சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். சினிமாகாரர்களையே விஞ்சும் வகையில் ‘நாடகக் காதல்’ எனப் புது ட்ரீட்மென்ட்டோடு பாமக ராமதாஸ் போன்றோர் பிலிம் காட்டவும் இறங்கிவிட்டார்கள். “டேய்! எவனாவது சாதி மாறி காதலிச்சா வெட்டுங்கடா!” என காடுவெட்டியும், கந்துவட்டியும் உருட்டுக் கட்டையோடு உலா வருகையில், “ஒரு பொண்ணும் நீயும் லவ் பண்ணா… அவள கடத்தி தருவேன், உனக்கே மண முடிப்பேன்..” என்று ‘போடா!போடியில்!’ ஸ்டெப்பு போட்ட எந்த சிம்புவும் சந்து பக்கம் கூட காணோம்! மொத்த கோடம்பாக்கத்து கும்பலுக்கும் இது பொருந்தும்.
    காதலுக்கு விதவிதமாக ‘சீன்’ சொன்னவர்கள், பார்த்து காதல், பார்க்காமலே காதல் என்று காதலிலே கரைகண்டவர்கள், காதலுக்கு மெட்டு போட்டே கட்டை தேய்ந்த விற்பன்னர்கள், காதலுக்கென்றே பிறந்து வளர்ந்ததுபோல காட்டிக் கொள்ளும் கவிஞர்கள், இப்படி ஊரை உசுப்பேத்தியே காதலை வைத்து கல்லா கட்டியவர்கள் எல்லாம், ஒரு காதல் திருமணத்தை சாக்கு வைத்து வன்னிய சாதிவெறியோடு செட்டு போடாமலேயே சேரியை கொளுத்தும்போது, எட்டிப்பார்க்கவும் இல்லை, எதிர்த்துப் பேசவுமில்லை என்றால் இந்த கோடம்பாக்கத்து காரியவாதிகளை ஆதிக்க சாதிவெறிக்கு அடிக்கொள்ளிகள் என்று ஏன் சொல்லக்கூடாது?

    விஸ்வரூபம்.. 26 நிமிடங்கள், 23 செக்கன்டுகள் காட்சிகளை வெட்ட தயாரா?” கோர்ட்டில் கேள்வி!

    தற்போது நடைபெறும் விஸ்வரூபம் விசாரணையில், கமல் தரப்பிடம், “விஸ்வரூபம் படத்தில் 26 நிமிடங்கள், 23 செக்கன்டுகள் இடம்பெறும் காட்சிகளை வெட்ட முடியுமா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டதாக தெரிகிறது.
    விசாரணை தொடங்கும் முன்னர் சேம்பருக்கு வெளியே வைத்தே இந்த கேள்வி கேட்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
    இப்படியொரு கேள்வி விழுப்பப்பட்ட காரணம், விசாரணையில் இதே கோரிக்கை வந்தால், கமல் தரப்பு அதற்கான பதிலுடன் தயாராக இருக்க வேண்டும் என்பதே.
    அதேநேரத்தில், இந்த 26 நிமிடங்கள், 23 செக்கன்டுகள் இடம்பெறும் காட்சிகள் எவை என்று தெரிவித்ததாகவோ, பட்டியல் கொடுக்கப்பட்டதாகவோ தெரியவில்லை.
     தற்போது நடைபெறும் விஸ்வரூபம் விசாரணையில், கமல் தரப்பு வக்கீல் தனது வாதத்தில், “விஸ்வரூபம் படத்தில் ஒரேயொரு இந்திய முஸ்லீம் கதாபாத்திரம்தான் உள்ளது.
    அந்த கதாபாத்திரம், படத்தின் கதாநாயகன் கமல்தான். இந்த பாத்திரம் நல்லவர் என்றே சித்தரிக்கப்பட்டுள்ளது.
    படத்தில் இடம்பெறும் மற்றைய முஸ்லீம் கதாபாத்திரங்கள் அனைவரும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பினர்.
    அந்த தீவிரவாத இயக்கத்தை (தலிபான்) பயங்கரவாத இயக்கமாக ஐ.நா. பிரகடனம் செய்துள்ளது. அப்படியான நிலையில், அவர்களை வேறு எப்படி காட்ட முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
    விசாரணையில், இந்தக் கருத்து கமல் தரப்புக்கு சாதகமான கருத்தாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

    இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் !


    இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாக இருக்கும் ஓர் இனம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரிதாக தெரியாமல் இருப்பது ஒரு அதிசயமே.
    காலனிய நாடுகள் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை விலைக்கு வாங்கிச் சென்று, தாம் ஆட்சி செய்த பிற நாடுகளில் பணியமயர்த்தியது வரலாற்றில் ஒரு கசப்பான உண்மை.
    அக்காலகட்டத்தில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து ஒரு தொகுதியினர் இலங்கைக்கும் அடிமைகளாக கொண்டுவரப்பட்டனர். அவர்களின் வம்சமே இந்தக் கஃபீர்கள்.இவர்கள் மொசாம்பிக் நாட்டிலிருந்து வந்ததாக தமது முன்னோர் கூறக் கேட்டதாகக் கூறினாலும், அது முற்றிலும் சரியா, அப்படியென்றால் மொசாம்பிக் நாட்டின் எப்பகுதியிலிருந்து வந்தார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் யாரிடமும் இல்லை.

    கோமாலினி..கேமராவை மறைத்து சினிமா ஷூட்டிங்

    சென்னை: கோமாலினி என்ற படம் கேமராவை மறைத்து வைத்து  முழுபடமும் ஷூட்டிங் நடந்தது. இதுபற்றி இயக்குனர் அரஸ் என்ற திருநாவுக்கரசு கூறியதாவது: கோமாலினி படத்தில் குறிப்பிட்ட நடிகர், நடிகைகள் யாரும் கிடையாது. கேமராவை மறைத்து வைத்து யதார்த்தமாக ரோட்டில் கடந்துபோகிறவர்களை அவர்களுக்கு தெரியாமல் படம் பிடித்து அதை திரைக்கதையாக்கி, கோர்வைப்படுத்தி படமெடுக்கும் ‘ஹிடன் கேமரா’ என்ற பாணியில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஆவிகளுடன் பேசுபவர்கள் பற்றியும் படமாக்கி உள்ளோம். ஆவிகளுக்கு இதில் முக்கிய பங்கு தந்துள்ளோம். காட்டுக்குள் வாழும் சித்தர்கள், யோகிகள், நம்பூதிரிகள் மற்றும் மந்திரவாதிகளின் வாழ்க்கையை இது சித்தரிக்கும். சுமார் ஒரு வருடம் இதன் ஷூட்டிங் நடந்தது. இப்படியொரு முயற்சி நடப்பது இதுவே முதல்முறை. கதை, திரைக்கதை, கிளைமாக்ஸ் என்று எதுவும் இதற்காக எழுதப்படவில்லை. ராஜேஷ் ஒளிப்பதிவு. வேத்சங்க இசை.

    இலங்கையில் விஸ்வரூபம் வெளியிட அனுமதி வழங்கப்படும்

    Viswaroopam-Movieவிஸ்வரூபம் விரைவில் வெளியாகும்' : இலங்கை தணிக்கைச் சபை - 'அல்கைதா பற்றித் தான் படம் பேசுகிறது'படத்தினை முற்றாக தடை செய்ய வேண்டும் : படத்தைப் பார்த்த இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் தீர்க்கமான முடிவு முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக இலங்கையிலும் தமிழகத்திலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடப்படவில்லை.இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று இலங்கையில் வெளியாகும் திரைப்படங்களுக்கு அனுமதி வழங்கும் தணிக்கைச் சபை தெரிவித்துள்ளது.எந்தவொரு சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய கருத்துக்கள் அந்தப் படத்தில் இல்லை என்று தாங்கள் கருதுவதாகவும் இலங்கை தணிக்கைச் சபையின் தலைவர் காமினி சுமனசேகர பிபிசியிடம் தெரிவித்தார்.

    Kiran Bedi :நீதிபதி வர்மா கமிட்டியின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்

    பாலியல் வன்முறைகளை தடுக்க, கிரிமினல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆராய, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி வர்மா தலைமையிலான கமிட்டி சமீபத்தில் தனது பரிந்துரைகளை அளித்தது.
    இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு வந்திருந்த கிரண்பேடி, இதுதொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
    ஒரு ராணுவ வீரரோ அல்லது ஒரு போலீஸ்காரரோ, சீருடையில் இருக்கும் ஒரு மனிதன் பாலியல் பலாத்காரம் செய்வாரேயானால், அவர் ராணுவ சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படக் கூடாது. சிவில் சட்டத்தின் கீழ் தான் வழக்கு நடத்தப்பட வேண்டும்.

    மோடி அடுத்த பிரதமராக கோரிக்கை

    புதுடில்லி:"வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும்,'' என, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, முதன் முதலாக குரல் கொடுத்துள்ளார். அதனால், இந்த விவகாரத்தில், மோடிக்கு ஆதரவு பெருகுவதால் திருப்பமும், மறுபுறம் கூட்டணி கட்சியான, ஐக்கிய ஜனதா தளத்தை சின்கா சீண்டி விட்டதால், சர்ச்சையும் எழுந்துள்ளது. லோக்சபா தேர்தல், அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இருந்தாலும், எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும், அதை சந்திக்க, ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தயாராகி வருகின்றன. காங்கிரஸ் சார்பில் சமீபத்தில், துணை தலைவராக தேர்வாகியுள்ள ராகுல், பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நிறுத்தப்பட்டால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ., சார்பில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் என, கோரிக்கைகள் எழுந்துள்ளன.