வியாழன், 1 ஜூன், 2017

பசுவை வணங்குபவர்கள் பால் குடிக்க கூடாது .. பெரும் பண்ணைகளில் பசுவுக்கு கொடூர வதை


Sridhar Subramaniam பசுவை கோமாதா என்று வணங்குபவர்கள், பசுவின் மீது கருணை காட்ட வேண்டும் என்பவர்கள் பால் குடிக்கக் கூடாது, தயிர், நெய், பனீர் போன்றவற்றை உண்ணக்கூடாது.
ஏனெனில் Commercial Dairy Industry என்று சொல்லப்படும் வாணிப-ரீதியான பால் துறை பசுக்களின் மீது சொல்லவொண்ணா குரூரங்களை அவிழ்த்து விடுகிறது. பசுக்கள் செயற்கையாக கருத்தரிக்கப் படுகின்றன. அந்தக் கன்றுகள் ஓரிரு மணிகளில் அவற்றிடம் இருந்து தனிப்படுத்தப் படுகின்றன. அவற்றின் அளவுக்கு மேல் மூன்று நான்கு மடங்கு பால் தினமும் மெஷின் மூலம் கறக்கப் பட்டு அவற்றின் காம்புகள் தொடர்ந்து காயப்படுகின்றன. 20 வருடங்கள் வரை வாழக்கூடிய பசுக்கள் எட்டே வருடங்களில் இறந்து போய் விடுகின்றன. வருடக்கணக்கில் கொடும் சித்ரவதைகளை அனுபவித்து வாழ்ந்து மடிகின்றன. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், கொன்று புசிப்பவர் பால், தயிர் உண்பவர்களை விடப் பசுக்களின் மீது பெரும் கருணை காட்டுகிறார்கள். எட்டு வருடங்கள் கொடும் சித்ரவதை அனுபவிப்பதை விட ஒரே வெட்டில் மடிந்து விடுவது கருணைதானே?
(இது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும், நம்ப முடியாத, செய்தியாக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ மற்றும் போட்டோ லிங்க்களைப் பார்க்கவும்.)

கருத்துகள் இல்லை: