சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜெயதேவன், அவரது
மனைவி, மகள் ஆகியோர் தீயில் எரிந்து சாம்பலான வழக்கில் அவர்கள் கொலை
செய்யப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் திடீரென எழுந்துள்ளது.
குரோம்பேட்டையை சேர்ந்தவர் 55 வயதான ஜெயதேவன். ஆடிட்டரான இவருக்கு ரமாதேவி
என்ற மனைவியும், திவ்யஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 27-ந் தேதி 3 பேரும் காரில் சுற்றுலா செல்வதாக பக்கத்து வீட்டாரிடம்
சொல்லிவிட்டு வெளியே சென்றுள்ளனர். அன்று இரவு மாமல்லபுரத்தை அடுத்த மணமை
அருகே உள்ள தனியார் வீட்டுமனை காலி இடத்தில் திடீரென அவர்களது கார்
தீப்பிடித்து எரிந்தது. இதில் ஜெயதேவன், ரமாதேவி, திவ்யஸ்ரீ ஆகிய 3 பேரும்
உடல் கருகி சாம்பலானார்கள்.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். கார்
ஏசியால் தீப்பிடித்ததா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் போலீசார்
விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் போலீசாருக்கு பல திடுக்கிடும்
தகவல்கள் கிடைத்தன.
ஆடிட்டர் மகள் திவ்யஸ்ரீக்கும், பதன்கோட்டில் ராணுவ கேப்டனாக பணியில்
இருக்கும் சரத் என்பருக்கும் இடையே கடந்த டிசம்பர் மாதம் திருமணம்
நடந்துள்ளது. இரு குடும்பமும் கேரளாவைப் பூர்வீமாகக் கொண்டவர்கள். புதுமணத்
தம்பதியரிடையே தொடர்ந்து சண்டை சச்சரவுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சரத் வீட்டில் திவய்ஸ்ரீ பல்வேறு அவமானங்களைச் சந்தித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தாம்பரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றும்
கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார்
திவ்யஸ்ரீயின் பெற்றோரை அழைத்து சமாதானம் பேசும்படி அறிவுறுத்தி இருந்தனர்.
இதனால் ஜெயதேவன் குடும்பத்தினர் மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ந்நிலையில் அவர்களின் கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து,
அவர்கள் குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற
முடிவிற்கு போலீசார் வந்தனர். கணவரிடம் விசாரணை இதுதொடர்பாக திவ்யஸ்ரீயின்
கணவரான ராணுவ கேப்டன் சரத்திடம் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சந்தோஷ்
ஹதிமணி விசாரணை நடத்தினார். அவரும் பல தகவல்களை போலீசாரிடம்
தெரிவித்துள்ளார்.
தற்போது இது கொலையாக இருக்கலாமா என்ற புதிய சந்தேகம் எழுந்துள்ளது. காரணம்
தீயில் கருகியபோது 3 பேருமே எந்தக் குரலுமா கொடுக்கவில்லை. காரை உடைத்துக்
கொண்டு வர முயற்சிக்கவும் இல்லை. என்னதான் தற்கொலை முடிவாக இருந்தாலும் தீ
உடலில் பரவும்போது அனிச்சையாக அலறுவார்கள்.
அந்த சாதாரண அலறல் கூட
இவர்களிடமிருந்து வரவில்லை என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்
கூறியுள்ளனர்.
கார் ஆடவில்லை, அசையவில்லை, ஒரு சத்தமும் கேட்கவில்லை. மேலும் ஜெயதேவன்
கார் ஸ்டியரிங் வீலில் படுத்தபடி காணப்பட்டுள்ளார். எனவே இவர்கள் மூன்று
பேரையும் கொன்று விட்டு யாரேனும் எரித்திருக்கலாம் என்ற புது சந்தேகம்
வந்துள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் எந்தத் தகவலும் இல்லை
tamil.oneindia.com/
tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக