இன்று காலை முதல் சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. கட்டிடத்தின் முன்பகுதியில் ஒரு பாகம் இடிந்து விழுந்ததோடு, கடையின் ஏழு மாடியில் உள்ள பொருட்கள் அனைத்தும் கருகி சாம்பலாகிவிட்டது.
இந்த நிலையில் சென்னை சில்க்ஸ் உள்ளே இருந்த குமரன் தங்க மாளிகையில் கிலோ கணக்கில் தங்கம் இருந்ததாகவும், அந்த தங்கம் என்ன ஆயிற்று என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடை ஊழியர் ஒருவர் இதுகுறித்து போலீசாரிடம் கூறியபோது, 'ஒவ்வொரு நாளும் கடையை மூடும்போது கடையின் ஷோகேஷில் உள்ள நகைகள் தவிர மீதி நகைகள் மற்றும் தங்கக்கட்டிகள் அனைத்தையும் ஒரு பெரிய இரும்புப்பெட்டியில் வைத்து பூட்டிவிடுவார்கள் என்றும் எவ்வளவு பெரிய தீவிபத்து ஏற்பட்டாலும், அந்த இரும்புப்பெட்டி உருகாது என்பதால் நகைகள் உள்ளுக்குள் பத்திரமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
அப்படியே வெப்பத்தின் காரணமாக உருகியிருந்தாலும் அது பெட்டிக்குள் தான் இருக்கும் என்றும் நகைக்கடையை பொருத்தவரை ஓனருக்கு எந்தவித சேதாரமும் இருக்காது என்றும் கூறினாராம்., அதுமட்டுமின்றி கடையில் உள்ள பொருட்கள் மற்றும் கட்டிடத்திற்கு இன்சூர் செய்யப்பட்டிருக்கும் என்பதால் ஓனருக்கு பெரிய அளவில் நஷ்டம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.வெப்துனியா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக