செவ்வாய், 30 மே, 2017

சமுத்திரகனி பார்ப்பனீயரா அல்லது அறியாமையில் தூங்குபவரா?

ராஜராஜன் ஒருவன் இந்த சமூகத்திற்கு தேவையில்லை என்று முடிவெடுத்துவிட்டால், முடிவை வேகமாக எடுத்துவிட வேண்டும். அப்போது தான் ஒரு பயம் வரும்.
வன்கொடுமைக்கு எதிராக என்கவுண்டர்களுக்கு ஆதரவாக சமுத்திரக்கனி இப்படி சொல்லி இருக்கிறார் .
லஞ்சத்தினால் நாடு முன்னேறவில்லை. கடுமையாக தண்டனைகள் இருந்தால் இந்தியா வல்லரசாகிவிடும். இது போன்ற மொண்ணைத்தனமான பாசிஸ்டு பார்வையை வைத்திருக்கும் ஒருவருக்கு யோகி ஆதித்யநாத் பிடிப்பதில் ஆச்சரியமில்லை.
சில நாட்களுக்கு முன்னர், பெண்கள் தாலி ஏன் அணியவேண்டும் என்று வந்த ஒரு பார்வேர்ட் மெசேஜை சமுத்திரக்கனி என்ற பேஸ்புக் பக்கம் பகிர்ந்து இருந்தது. அதற்கு 8000+ லைக்ஸ் வந்து இருக்கிறது.
பெண்களின் மார்புக்குழிக்கு அருகே ஒரு முடிச்சி இருக்கிறது. அது ஆண்களுக்கு கிடையாது. அந்த முடிச்சை சரி செய்ய தான் நம் முன்னோர்கள் தாலியை கண்டுபிடித்து ராஜராஜசோழனிடம் சொன்னார்கள் என்று அந்த பதிவு போகும். இம்மாதிரியான பிற்போக்கு கருத்துக்களை முகநூலில் பரப்புவது போலவே தான் அவரது படங்களும் பரப்பிக்கொண்டு இருக்கிறது.


சமுத்திரக்கனியின் சர்ச்சைக்குரிய பேட்டி


மருத்துவமனைக்கு சென்று பிள்ளை பெறவேண்டாம். வீட்டிலேயே பெற்றுக்கொள்ளலாம் என்று அவரது அப்பா படம் பேசியதாக சொன்னார்கள். மரபை பேசுகிறேன் பேர்வழி என்று அறிவியலுக்கு எதிரான கருத்துகளை பரப்பிக்கொண்டு இருக்கிறார் சமுத்திரக்கனி. இவரது அடுத்த படமான தொண்டன் என்ன கிறுக்குத்தனங்களை நியாயப்படுத்துப்போகிறதோ என்று பயமாக இருக்கிறது.
ஒன்றே ஒன்று மட்டும் தான் சொல்லவேண்டும்..
இந்திய அரசியலில் யாரெல்லாம் சும்மா சிஸ்டம் சரியில்லை, மரபை மீட்டெடுப்போம், இயற்கையை காப்பாற்றுவோம், முப்பாட்டன் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்பதை “மட்டும்” பேசிக்கொண்டு இருக்கிறார்களோ, அவர்களை இருவகையாக பிரிக்கலாம்.
1) அறியாமையில் பேசுகிறார்கள்
2) பார்ப்பனீய அடிமைகள்
சமுத்திரக்கனி எந்த வகை என்பதை நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.
நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி ’புதிய தலைமுறை’ இதழுக்கு அளித்த பேட்டியில் உ.பி. முதல்வர் ஆதிய்நாத்தின் அதிரடி செயல்பாடுகள் பிடிக்கும் என சொல்லியிருந்தார். அதற்கு முகநூலில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  thetimestamil

கருத்துகள் இல்லை: