thetimestamil.com :ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா, பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என இன்று காலை சொன்னவர். அந்த பரபரப்பு அடங்கும் முன்பே மற்றொரு ‘அறிய’ தகவல் ஒன்றை சொல்லியிருக்கிறார்.
அதாவது ஆண் மயில் உறவு கொள்ளாதாம்; ஆண் மயிலின் கண்ணீரை குடிப்பதால்தான் பெண் மயில் கர்ப்பமாகிறதாம். ஆண் மயிலின் இந்தப் புனிதத் தன்மையால்தான் அது தேசிய பறவையாக உள்ளதாம். அதனால்தான் கடவுள் கிருஷ்ணர் தன்னுடைய தலையில் மயில் இறகை சொருகி இருந்தாராம். மேலும் அவர் மயிலும் பசும் புனித உயிர்கள் என்கிறார்.
விரைவில் ஓய்வு பெறவிருக்கும் நீதிபதி ஷர்மா, பசுவை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியவர். உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் கங்கை மற்றும் யமுனை நதிகளை புனித நதிகளாக அறிவித்ததைப் போல பசுவை புனிதமானதாக அறிவிக்க வேண்டும் என இன்று தெரிவித்திருந்தார். இந்த ஆளோட மொத்த குடும்பத்துக்கும் டி என் ஏ சோதனை செய்யவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக