செவ்வாய், 30 மே, 2017

கடதல்காரர்களை துப்பாக்கியால் சுட்டு தம்பியை மீட்ட தேசிய வீராங்கனை



தேசிய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஒருவர், கடத்தப்பட்ட தன் உறவினரை மீட்க, கடத்தல்காரர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் காப்பாற்றியுள்ளார். டெல்லியைச் சேர்ந்த 33 வயதான துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஆயிஷா ஃபலக். ஆறு ஆண்டுகளாக துப்பாக்கிச்சுடுதலில் ஈடுபட்டு வருபவர். தனக்கென பிரத்யேக உரிமத்துடன்கூடிய துப்பாக்கி வைத்துள்ளார். தன் கணவரின் தம்பி, கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டு மிரட்டப்படுவதை அறிந்த ஆயிஷா, போலீஸாருடன் இணைந்து தானே களத்தில் இறங்கினார். 25,000 பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆயிஷா தன் கணவருடன் பணத்தை எடுத்துக்கொண்டு கடத்தல்காரர்கள் அழைத்த இடத்துக்குச் சென்றார். போலீஸார் மறைவாக இருந்து கண்காணித்துள்ளனர். பணத்தைப் பெற்றுக்கொண்டதும், கடத்தல்காரர்கள் ஆயிஷா தம்பதியினரைத் தாக்க முற்பட, தன்னிடமிருந்த துப்பாக்கியால் அவர்களைக் காலில் சுட்டு, உறவினரை மீட்டுள்ளார்.
போலீஸாரின் பாராட்டுகளைப் பெற்ற ஆயிஷா, ‘நான் ஆறு வருடங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சுடுதலில் தேசிய அளவில் சாதனைகள் புரிந்துள்ளேன். தற்போது, இளம்பெண்களுக்கு தற்காப்பு வகுப்புகள் எடுத்துவருகிறேன். எப்போதும் கையில் துப்பாக்கி இருக்கும். அப்போதைய சூழலில், நான் கற்றுக்கொடுத்த வித்தைகளேயே பயன்படுத்தவேண்டிய சூழல் உருவாகியது’ எனக் கூறினா

கருத்துகள் இல்லை: