முன்னாள்
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை,
காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி உட்பட 6 மாவட்டங்களில்
உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை தமிழக அரசு இன்று காலை
முதல் எடுத்து வருகிறது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.கடந்த
1991-96ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து
சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர்களையும் சேர்ந்து வழக்கு பதிவு செய்த
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். 21
ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி
ஜான் மைக்கேல் டி குன்ஹா 2014 ல், ஜெயலலிதா உள்பட 4 பேரையும்
குற்றவாளிகளாக அறிவித்து, 4 பேருக்கும் தலா 4 ஆண்டு தண்டனையும்
ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி, மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதம்
விதித்து தீர்ப்பளித்தார்.
1135 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பினை ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். கடந்த பிப்ரவரி 14 அன்று இந்தத் தீர்ப்பை பினாகி சந்திரகேஷ், அமிர்தவராய் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் உறுதி செய்தது.
வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா இறந்த நிலையில், தற்போது 4 பேருக்கும் சொந்தமான 68 சொத்துகளை கைப்பற்றுமாறு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பக இயக்குனர் மஞ்சுநாதா, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.சென்னை
நுங்கம்பாக்கம் ஹேடோஸ் சாலையில் உள்ள லெக்ஸ் பிராப்பர்ட்டி டெவலப்மென்ட்
பிரைவேட் லிமிடெட்டுக்கு சொந்தமான கட்டிடம், டிடிகே சாலையில் உள்ள
கட்டிடம், நீலாங்கரையில் உள்ள கட்டிடத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து,
இந்த சொத்துக்கள் அரசுக்கு சொந்தமானது என்று போர்டு வைத்தனர்.
கட்டிடத்தையும் சீல் வைத்தனர்.
நிலங்களிலும் அதேபோல அதிகாரிகள் போர்டு
வைத்தனர்.பறிமுதலாகும் சில சொத்துக்கள்
ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்படும் சொத்துக்கள்:
சென்னை டிடிகே சாலையில் உள்ள லெக்ஸ் பிராப்பர்ட்டி டெவலப்மென்ட் (பி) லிட்
கட்டிடம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் உள்ள நிலம் மற்றும் நீலாங்கரையில்
உள்ள நிலம்.
*
தூத்துக்குடி மாவட்டத்தில் ரிவர்வே அக்ரோ புரோடெக்ஸ் (பி) லிட்
நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு சர்வே எண்களை கொண்ட 1166.75 ஏக்கர் நிலம்.
;* காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிடோவ் அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிட் நிறுவனத்திற்கு சொந்தமான 183.64 ஏக்கர் பரப்பு நிலம்.
* திருவாரூர் மாவட்டத்தில் ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் (பி) லிட் நிறுவனத்திற்கு சொந்தமான 29.71 ஏக்கர் நிலம். நக்கீரன்
1135 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பினை ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். கடந்த பிப்ரவரி 14 அன்று இந்தத் தீர்ப்பை பினாகி சந்திரகேஷ், அமிர்தவராய் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் உறுதி செய்தது.
வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா இறந்த நிலையில், தற்போது 4 பேருக்கும் சொந்தமான 68 சொத்துகளை கைப்பற்றுமாறு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பக இயக்குனர் மஞ்சுநாதா, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக