ரகசியமாய்..மிக ரகசியமாய்.. அந்த விழா நடந்து முடிந்து விட்டது. சென்னை
ஜெமினி மேம்பாலம் அருகே ஒரு ஆஸ்பத்திரி திறப்பு விழா நடந்தது. அந்த
விழாவில் ரஜினி காலா ஷூட்டிங் போவதற்கு முன்னதாக கலந்து கொண்டு அந்த
ஆஸ்பத்திரியை திறந்து வைத்துவிட்டுத்தான் ஷூட்டிங்கே கிளம்பியுள்ளார்.
அந்த ஆஸ்பத்திரியின் பெயர் வெஸ்ட் மினிஸ்டர். அந்த ஆஸ்பத்திரி லைகா நிறுவனத்துக்கு சொந்தமானது. அவர்கள் ஆஸ்பத்திரி கட்டி முடித்து ரஜினியை திறப்பு விழாவுக்கு அழைத்த போது, நான் வருகிறேன். ஆனால் பத்திரிகை, ஊடகங்களுக்கு சொல்லக் கூடாது, அழைப்பிதழிலும் பெயர் போடக்கூடாது என்ற கண்டிஷனுடன் விழாவில் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்துள்ளார். ஏற்கனவே இலங்கைப்பயணம் குறித்து கூறிய போது ரஜினிக்கு எதிராக தமிழ் ஆர்வலர்கள் கொதித்து எழுந்துவிட்டார்கள். அதனால் வீண் சர்ச்சையை தவிர்க்கவே ரஜினி அவ்வாறு கண்டிஷன் போட்டதாக வெஸ்ட் மினிஸ்டர் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதேபோலவே இயக்குனர் சங்கருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போது அவரும் ரஜினியின் கண்டிஷன்களையே போட்டாராம். அவரும் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் இந்த நிறுவனம் ஆஸ்பத்திரி மட்டுமல்லாமல் கட்டுமானத்துறையிலும் கால் பதித்துள்ளனர். சாலிகிராமத்தில் பிரமாண்ட அபார்ட்மெண்ட் ஒன்றையும் கட்டி வருகின்றனர்.
ஆக, இனிமேல் லைகா நிறுவனத்தின் தொழில் முதலீடுகள் சென்னையில் அதிகமாக இருக்குமாம். இந்த லைகா நிறுவனம் ரஜினி ஆரம்பிக்கப் போகும் கட்சிக்கு பெருமளவு நிதி ஆதாரங்களுக்கு சப்போர்ட்டாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி ஆரம்பிக்கறத்துக்கு முன்னாடியே ஸ்பான்சர் கிடைச்சாச்சு? லைவ்டே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக