அடியாட்கள்;அமைச்சர்கள்;உடையார்;ஒரே நாளில் பத்திரப்பதிவு : ஜெ-சசி கும்பலின் அராஜகம் பற்றி கொடநாடு உரிமையாளர்… Peter Earl Edward Craig Jones
thetimestamil.com : 90-களில் நீலகிரி மாவட்டத்தில் சொத்து வாங்குவது தொடர்பாக பல்வேறு இடங்களை ஜெ;வும் சசியும் பார்வையிட்டாலும், கடைசியில் அவர்கள் திருப்தியுற்றது கொடநாடு எஸ்டேட்டில். 1800-களில் உருவாக்கப்பட்ட இந்த எஸ்டேட், ஒவ்வொருவருக்காக விற்கப்பட்டு, 1970-களில் Peter Earl Edward Craig Jones என்பவரின் குடும்ப சொத்தாக மாறியது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நேரத்தில், கொடநாடு எஸ்டேட்டின் உண்மையான உரிமையாளர் Peter Earl Edward Craig Jones ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு முதன் முறையாக பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியை தமிழாக்கம் செய்திருக்கிறோம்.“இரண்டு வருடங்களுக்கும் மேலாக எங்களுக்கு ஜெ,சசி தரப்பில் இருந்து கடும் நெருக்கடி தரப்பட்டது. தொடர் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. 150-க்கும் அதிகமான ரவுடிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். எஸ்டேட்டை அவர்களுக்கு விற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு எங்களைத் தள்ளுவதற்கு தேவையான அத்தனை முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டார்கள்”. மிகமிகக்குறைவாக ஏழு கோடி ரூபாய்க்கு கொடநாடு எஸ்டேட் விற்கப்பட்டிருக்கிறது. இந்த விற்பனையில் அதிமுக விசுவாசியும் தொழிலதிபருமான ராஜரத்தினம் மற்றும் அமைச்சர்கள் பலருக்கும் தொடர்பிருப்பதாக Peter Earl Edward Craig Jones கூறுகிறார்.
“முறையான பத்திரப்பதிவு நடக்கவில்லை. நாங்கள் எந்த பதிவாளர் அலுவலகத்திற்கும் செல்லவில்லை. சென்னையில் உள்ள உடையாரின் வீட்டில் வைத்தே சொத்து பரிமாற்றம் நடைபெற்றது. அதுவும் பினாமி முறையிலேயே கொடநாடு எஸ்டேட் விற்கப்பட்டது. உடையாருக்கு எஸ்டேட்டை மாற்றி கொடுக்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டு வந்தேன். ஜெ.வின் பினாமியாக உடையார் செயல்பட்டார். அடுத்த நாளிலேயே என்னிடம் இருந்து கொடநாடு எஸ்டேட் பிடுங்கப்பட்டது. உண்மையை சொல்லவேண்டுமென்றால் ஜெ.கும்பலால் கொடநாடு என்னிடமிருந்து திருடப்பட்டது”
“கொடநாடு எஸ்டேட்டை திரும்ப பெறவேண்டுமேன்பதே என்னுடைய ஒரே விருப்பம். அதற்காக சசிகலா குடும்பத்திற்கோ அல்லது அரசாங்கத்திற்கோ இழப்பீடை அளித்து விடுகிறேன். இதற்காக நீதிமன்றம் செல்வேன்”
அரசியல் செல்வாக்கின் காரணமாக தங்கள் சொத்துகளை இழந்த பிற உரிமையாலர்களிடமும் இது குறித்து பேச இருப்பதாக Peter Earl Edward Craig Jones தெரிவித்துள்ளார்.
Sources: India Today
சிறு குறிப்பு:

கொடநாடு
எஸ்டேட் எப்படி வாங்கப்பட்டது என்பதைச் சொத்துக் குவிப்பு வழக்கின் 88-வது
சாட்சியான ராதா வெங்கடாசலம் (ராமசாமி உடையாரின் மருமகள்) நீதிமன்றத்தில்
சொன்னதைப் பார்ப்போம்.
‘‘ராமச்சந்திரா
நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பணிபுரிகிறேன். மருத்துவக்
கல்லூரி உட்பட பல நிறுவனங்களில் தலைவராக இருந்தார் ராமசாமி உடையார்.
அவருக்கு ஜெயலலிதாவைத் தெரியும். ஜெயலலிதாவை பலமுறை சந்தித்திருக்கிறார்.
1994 டிசம்பரில் கிரேக் ஜோன்ஸ், என் மாமனாரை சந்தித்தார். கொடநாடு
எஸ்டேட்டை விற்பதாகச் சொல்லி 7.50 கோடி ரூபாய் விலை பேசினார்கள். அதற்காக
எங்களுக்குள் சம்மதக் கடிதம் எழுதப்பட்டது. நான், என் கணவரின் சகோதரிகளான
அமுதா, ஆண்டாள் ஆகியோர் பங்குதாரர்களாக சேர்ந்தோம்.
11.2.1995-ல்
கொடநாடு எஸ்டேட் நிர்வாகத்திலிருந்து விலகுவதாக கிரேக் ஜோன்ஸ்
குடும்பத்தினர் எழுதிக் கொடுத்தனர். நாங்கள் செலுத்தவேண்டிய 7.50 கோடி
ரூபாயை இந்தியன் வங்கிக் கணக்கில் இருந்து கொடுத்தோம். அடுத்து மூன்றே
மாதங்களில் நான், அமுதா, ஆண்டாள் ஆகியோர் கொடநாடு எஸ்டேட்
நிர்வாகத்திலிருந்து விலகினோம்.
குணபூசணி
என்பவருக்கு அபிராமபுரம் இந்தியன் வங்கிக் கிளையில் கடன் வாங்குவதற்காக,
கொடநாடு டீ எஸ்டேட்டை செக்யூரிட்டியாகக் கொடுக்கச் சம்மதம் தெரிவித்து
கடிதம் கொடுத்தோம். நாங்கள் விலகிக்கொள்வதற்காக, 7.60 கோடி ரூபாய்
கொடுக்கப்பட்டது. சசிகலா, இளவரசி, குணபூசணி, சுதாகரன் ஆகியோர் காசோலைகளை
எங்களுக்குக் கொடுத்தனர். அதனை வங்கியில் போட்டோம். 5.6.95 அன்று நான்,
அமுதா, ஆண்டாள், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய ஆறு பேரும் சேர்ந்து ரீ
கான்ஸ்டிடியூசன் டீட் எழுதிக் கொண்டோம். மூவரும் அந்த நிறுவனத்திலிருந்து
விலகிக்கொண்டோம். கொடநாடு எஸ்டேட் தொடர்பாக அனைத்து ஏற்பாடுகளையும் என்
மாமனார்தான் முன் நின்று செய்தார். அவர்தான் என்னிடம், ‘சசிகலா
குடும்பத்தினர் கொடநாடு எஸ்டேட்டை வாங்க விரும்புகிறார்கள்’ எனச் சொன்னார்.
அசல் ஆவணங்கள் அனைத்தும், வாங்கியவர்களிடம் கொடுக்கப்பட்டது. நாங்கள்
பங்குதாரர்களாகச் சேர்ந்து பிறகு, விலகும் வரை அதில் நாங்கள் எவ்வித
கட்டுமானமும் செய்யவில்லை’’ என சாட்சியம் அளித்தார் ராதா வெங்கடாசலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக