காஞ்சிபுரத்தில்,
மகேந்திரா சிட்டியில் உள்ள இன்போசிஸ் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த
ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தாலவாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா(30) மகேந்திரா சிட்டியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த திங்கள்( மே 29) கிழமை வேலைக்குச் சென்றவர் இரண்டு நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், பதற்றமடைந்த அவரது மனைவி அவருடைய செல்பேசிக்கு தொடர்பு கொண்டபோது, போன் ஸ்விட் ஃஆப் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து,அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை(மே 30) ஐடி நிறுவனத்தின் கழிவறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அவருடைய செல்போனும் ஆப் செய்யப்பட்டு இருந்ததால்,இளையராஜா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது. இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே உண்மை தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இளையராஜா கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களிலும் மற்றும் இன்போசிஸ் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புனேவில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரசீலா ராஜூ கொலை, தற்போது இளையராஜா என தொடர்ந்து இன்போசிஸ் நிறுவனத்தில் நடந்து வரும் மர்ம மரணங்கள் அந்நிறுவனத்தின் ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்போசிஸ் ஊழியர்களின் மரணத்தில் இருக்கும் முடிச்சு எப்போது அவிழ்க்கப்படும் மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக