. கடந்த 2016-ஆம் ஆண்டு பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது போராட்டம் நடத்திய வழக்கில் மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தியை இன்று மீண்டும் கைது செய்துள்ளது காவல்துறை. புழல் சிறையில் இருக்கும் போதே அவரை மீண்டும் மீண்டும் கைது செய்து வருகிறது காவல்துறை.
மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கடந்த 21ஆம் தேதி சென்னை மெரீனாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி மெழுகுவர்த்தி அஞ்சலிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அனுமதி மறுத்தும் தடையை மீறி கூடியதாக போலீசார் அவரையும் மேலும் சிலரையும் கைது புழல் சிறையில் அடைத்தனர். மேலும், அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று ஒரு வழக்கு அவர் மீது போடப்பட்டது. இன்றும் ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது. இன்று போடப்பட்ட வழக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக வள்ளுவர்கோட்டம் அருகே நடத்திய ஆர்ப்பாட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறி வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்குக்காக இன்று சென்னை எழும்பூர் 14வது நடுவர் நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை, நீங்கள் இந்த வழக்கில் பெயில் எடுக்க விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு, சரி என்றார் திருமுருகன்.
பின்னர் வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் வழக்கு விசாரணையின்போது, நீங்கள் ஏன் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என்று மாஜிஸ்திரேட் கேட்டதற்கு, வாய்வழியாக அனுமதி கேட்டோம். அதற்கு சரி என்று போலீசார் தெரிவித்தனர் என்றார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், திருமுருகனை இந்த வழக்கில் சொந்த ஜாமீனில் செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டார். ஜீவா பாரதி படங்கள்: ஸ்டாலின் நக்கீரன்
வெப்துனியா :இலங்கை இறுதிப்போரின் போது தமிழினத்தை காக்க உயிர் நீத்த தமிழர்களுக்கு சென்னை மெரினாவில் மே 17 இயக்கத்தினர் கடந்த மே 21-ஆம் தேதி அஞ்சலி செலுத்த முயற்சித்தனர். இதற்கு அனுமதி அளிக்காத காவல்துறை மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உட்பட சிலரை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனையடுத்து திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது தமிழக அரசு. இதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான், திருமாவளவன் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தை தெரிவித்து, அவர் மீதான் குண்டர் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் புழல் சிறையில் உள்ள திருமுருகன் காந்தியை மீண்டும் ஒரு வழக்கில் நேற்று கைது செய்தனர். காவிரி விவகாரத்தில் 2016-ஆம் ஆண்டு தேனாம்பேட்டையில் உள்ள ஐஓசி அலுவலகத்தின் மீது கல் வீசிய வழக்கில் நேற்று கைது செய்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து இன்று மீண்டும் ஒரு வழக்கில் அவரை கைது செய்துள்ளது காவல்துறை. கடந்த 2016-ஆம் ஆண்டு பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது போராட்டம் நடத்திய வழக்கில் மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தியை இன்று மீண்டும் கைது செய்துள்ளது காவல்துறை. புழல் சிறையில் இருக்கும் போதே அவரை மீண்டும் மீண்டும் கைது செய்து வருகிறது காவல்துறை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக