ராதா மனோகர் : 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாடு!
இதை உண்மையில் ஒரு அகில உலக தில்லாலங்கடி மாநாடு என்று கூறலாம்.
அந்தளவுக்கு அதில் பொய்யும் புரட்டும் கரை புரண்டு ஓடிய மாநாடு இது!.
இந்த தமிழாராய்ச்சி மாநாடு தமிழரசு கட்சியின் அரசியல் மாநாடகத்தான் நடக்கும் என்று ஸ்ரீமாவோ அம்மையாரும் உதவி பாதுகாப்பு அமைச்சர் லக்ஷ்மன் ஜெயக்கொடியும் அன்று அழுத்தமாக நம்பினார்கள்
இம்மாநாடு அரசியல் மாநாடாக இருக்காது என்ற தமிழராய்ச்சி பிரமுகர்களின் உறுதி மொழிகளை பிரதமர் ஸ்ரீமாவோவும் அமைச்சர் லக்ஷ்மான் ஜெயக்கொடியும் துளியும் நம்பவில்லை.
இலங்கை தமிழாராய்ச்சி மன்றத்தில் ஏராளமான தமிழரசு கட்சி பிரமுகர்கள் ஊடுருவி இருந்தார்கள்
இந்த விபரம் எல்லாம் அம்மையாருக்கு நன்றாக தெரியும்
இவர்களின் வாக்கு நாணயம் பற்றிய புரிதல் ஸ்ரீமாவோ அம்மையாருக்கு இருந்தது.
ஸ்ரீமாவோ அம்மையாரின் நெருங்கிய நண்பரான திரு கோபாலபிள்ளை மகாதேவாவை தமிழரசு கட்சி கூட்டம் வற்புறுத்தியது
சனி, 29 ஆகஸ்ட், 2026
4 ஆவது உலக தமிழாராய்ச்சி மாநாடு - தமிழரசு கட்சியின் நரவேட்டை
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026
Nepal Flood: நிலநடுக்கம் அல்ல, பனிப்பாறை சரிவு! - காரணத்தை சொல்லும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்
விகடன் :புதன்கிழமை காலை நேபாள-சீன எல்லையில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக யு.எஸ்.ஜி.எஸ் முதலில் அறிவித்தது.
நேபாளத்தில் புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரழிவிற்கு நிலநடுக்கம் காரணம் என முதலில் கூறப்பட்ட நிலையில், அது ஒரு மிகப்பெரிய பனிப்பாறை சரிவால் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெளிவுபடுத்தியுள்ளது.
புதன்கிழமை காலை நேபாள-சீன எல்லையில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக யு.எஸ்.ஜி.எஸ் முதலில் அறிவித்தது.
Boney M எழுபதுகளில் உலகை கலக்கிய போனி எம் இசைக்குழுவினர்
Siva Ilango : "எழுபதுகளின் இசைக்காவியம்"
ஐம்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1974 ஆம் ஆண்டில், மேற்கு ஜெர்மனியில் நிறுவப்பட்ட ஒரு ரெக்கே, ஃபங்க் மற்றும் டிஸ்கோ (Reggae, Funk and Disco) இசைக் குழுதான் போனி எம் (Boney M). 'பாப்' (pop) இசையும், டிஸ்கோ (disco) நடனமும் உலகில் உச்சம் பெற்றிருந்த காலத்தில், அவற்றின் முடிசூடா மன்னர் என்ற முதல் இடத்தைப் பெற்றவர்கள் போனி எம் (Boney M) குழுவினர்.
தமிழக இலங்கை ஏதிலிகளை தந்திரமாக இலங்கைக்கு அனுப்ப புல்லுருவிகள் முயற்சி
![]() |
சரவணன் நடராஜா:: மதிப்பிற்குரிய இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களுக்கு,
முந்தைய ஆட்சியில் தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில், தங்களது தலைமையில் 21 நபர்கள் கொண்ட நாடாளுமன்றக் குழு 2008-ல் இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வந்து, இலங்கைத் தமிழர்களில் யாரேனும் நாடற்றவர்களாக இருக்கிறார்களா என்ற ஆய்வை மேற்கொண்டு, 28,584 நபர்கள் நாடற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து, அவர்கள் ஒருவேளை இலங்கை திரும்பினால் அவர்களுக்கு இலங்கையில் குடியுரிமை வழங்குவதற்கான ஏற்பாட்டை செய்தீர்கள் என்பதை அறிந்திருக்கிறோம்.
து தாங்கள் இலங்கையில் நாடற்றவர்கள் இருக்கக் கூடாது, அவர்களுக்கான தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்ற ஒரு இந்திய வம்சாவளி, மலையகத் தமிழராக அந்த மக்கள் மீது இருந்த கரிசனத்தில் அதைச் செய்தீர்கள். அது வரை சரி.
வியாழன், 27 ஆகஸ்ட், 2026
கீழடி அகழாய்வு அறிக்கையை முடக்கும் முயற்சி
![]() |
தமிழ்க்கவி : கீழடி - வரலாற்றைப் புரட்டிப் போடும் ஆய்வு
கீழடி அகழாய்வு அறிக்கையை முடக்கும் முயற்சி புதுமலர் - ஜூலை 2025 வெளியிடப்பட்டது: 30 ஜூன் 2026
அண்மையில் மிகப்பெரும் பேசுபொருளாக அமைந்தது கீழடி அகழாய்வு அறிக்கை. சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஒன்றியத் தொல்லியல் துறையால் முதலில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன. 2014 முதல் 2016 வரை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களால் 292 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டு அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மிகவும் அக்கறையுடனும், தீவிரமாகவும் வினையாற்றி மிகச்சிறப்பாக அமர்நாத் அவர்கள் அப்பணியை மேற்கொண்டார்.keezhadi 511தான் மேற்கொண்ட இரு அகழாய்வுகள் குறித்த அறிக்கைகளையும் அவர் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவ்விரண்டு அறிக்கைகளும் இதுவரை வெளியிடப்படவில்லை.
தலித்துகளும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் திமுகவின் முதுகில் குத்தினார்களா
![]() |
ஏறத்தாழ 65% மக்கள் உள்ள வேளாளர்கள், உடையார்கள், அகமுடையர்கள், மறவர்கள், கோணார்கள், இடையர்கள், வலையர்கள்/ முத்திரையர்கள், நாடார்கள், நாயுடுகள், ஆசாரிகள், வண்ணார்கள் மற்றும் கிறித்துவர்களுக்கு 26.5% இட உரிமையை வழங்கி விட்டு...
4.5% உள்ள இசுலாமியர்களுக்கு 3.5% இட உரிமை வழங்கியது கலைஞர் திமுக.!
மேலும் CAA, வக்ஃப் மசோதா, முத்தலாக் போன்ற மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களை தீவிரமாக எதிர்ப்பதை, திமுக கைவிட வேண்டும்.!
எப்போதுமே, 40% இசுலாமியர்கள் மட்டும் திமுகவை ஆதரித்து வந்தனர்.!
புதன், 26 ஆகஸ்ட், 2026
ஆர்.எஸ்.எஸ் தோற்றத்துக்கு அடித்தளம் அமைத்த பாரதி - வாலாசா வல்லவன்.
வாலாசா வல்லவன் : ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் 1925ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டது. பாரதியார் மறைந்ததோ 11.9.1921இல். ஆக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகும் முன்பே பாரதி மறைந்து விட்டார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இன்று என்ன என்ன கொள்கைகள் மேற்கொண்டிருக்கிறதோ, அவை அனைத்தையும், அவ்வியக்கம் உருவாகும் முன்பே எடுத்துக் கூறி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தவர் பாரதியே ஆவார். அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.
இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலச் செய்து விட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால் அவன் ராஜாங்கம் முதலிய சகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை.
எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலை நிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்து விட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்.
திமுகவில் அதிகார பதவிகளை கைப்பற்ற உதயநிதி - கனிமொழி ஆதரவாளர்கள் போட்டி
![]() |
தினமலர் :திமுகவில் பதவி பறிபோகும் நிலையில் உள்ள, மாவட்ட செயலாளர்கள் சிலர், தலைமை நிலையச் செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவிகளை கைப்பற்ற காய் நகர்த்தி வருகின்றனர். பதவிகளை கைப்பற்ற, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி மற்றும் துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஆகிய இருவரின் ஆதரவாளர்கள் மத்தியில், கடும் போட்டி உருவாகி உள்ளது.
தேர்தல் தோல்விக்கு பின், கட்சியை பலப்படுத்தவும், இளம் தலைமுறைக்கு வாய்ப்பளிக்கவும், திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கட்சியின் தலைமையகமான அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், செயற்குழுக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்ட எண்ணிக்கை 77ல் இருந்து, 110ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்களுக்கான, அதிகபட்ச வயது 70 எனவும், மூன்று முறை மட்டுமே, அப்பதவியில் இருக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு பரந்தூரில் சாவு மணி அடித்த தவேக அரசு!
Muralidharan Pb : சென்னைக்கு எதற்காக இரண்டாவது விமான நிலையம் தேவை?
ஏறத்தாழ 2 கோடி மக்கள் புழங்கும் மிகப்பெரிய நகரமான சென்னை. விமான நிலையம் உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் மூலம் சென்னை மட்டுமல்ல. தமிழ்நாட்டின் ஏனைய நகரங்கள் முதல் சிற்றூர்களுக்கு பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
2000 க்கு பிறகு இந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் வருவாய் மாறிவிட்டது. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது.
செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026
திமுகவின் 110 மாவட்டங்கள்- பொறுப்பாளர்கள் அறிவிப்பு? கனிமொழி எதிர்பார்க்கும் ‘அந்த’ பதவி-
minnambalam.com : திமுகவோட செயற்குழு ஆகஸ்ட் 22-ந் தேதி நடந்துச்சு இல்லையா.. அதுலதான், ”திமுக 110 மாவட்டங்களாக பிரிக்கப்படும்; 2 தொகுதிக்கு 1 மா.செ. நியமனம்; தேவைப்படுகிற இடத்தில் 3 தொகுதிகளும் இருக்கும்.. அனைத்து பதவிகளுக்கும் தேர்தல்தான் நடத்தப்படும். மா.செ.க்கள் உட்பட மாவட்ட அளவிலான பதவிகளுக்கு வயது வரம்புகள்”ன்னு அதிரடியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுச்சு..
பெண்ணின் உடலை துண்டு துண்டாக வெட்டி.. பிரியாணி போல் வேக வைத்து! கதிகலங்கிப் போன கூடுவாஞ்சேரி!
tamil.oneindia.com :சென்னை: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சூட்கேஸ் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கூடுவாஞ்சேரியில் கொலை செய்யப்பட்ட 45 வயது பெண்ணின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அப்பெண்ணை இளைஞர், காதலி சேர்ந்து கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பெண்ணைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி, அதன் ஒரு பகுதியை சூட்கேஸில் அடைத்து ரயிலில் அனுப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழாராய்ச்சி மன்றத்தை தமிழரசு கட்சியின் கிளை நிறுவனமாக மாற்றிய கதை!
![]() |
![]() |
ராதா மனோகர் :உலக தமிழாராய்ச்சி மன்றத்தை இலங்கை தமிழரசு கட்சியின் கிளை நிறுவனமாக மாற்றிய கதை!
இதற்காக அமைச்சர் திருச்செல்வத்தின் மனைவி திருமதி.புனிதம் திருச்செல்வம் தந்திரமாக வண தனிநாயகம் அடிகளின் இடத்தை கைப்பற்றினர்
தமிழரசு கட்சியினர் நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டை தமிழரசு கட்சி மாநாடாகவே உருமாற்றினார்கள்.
முழு தமிழரசு கட்சியும் அதன் தொண்டர் குண்டர் படைகளும் புனிதம் திருச்செல்வத்தின் ஏவல் பேய்களாக செயலாற்றினார்கள். ( இந்த தொண்டர் குண்டர் கூட்டத்தில் சிவகுமாரும் ஒருவர்)
திருமதி புனிதம் திருச்செல்வமும் + திரு முருகேசு திருச்செல்வமும்
திரு நீலன் திருச்செல்வத்தின் கொலையும்!
இலங்கை தமிழர்களின் போராட்டம் என்பது இன அடக்கு முறையின் வெளிப்பாடு என்று பொதுப்புத்தியில் கருதப்படுகிறது.
ஆனால் உண்மை அதுவல்ல
1970 வரை ஆட்சியில் இருக்கும் எந்த கட்சிக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் சுமார் பதினைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவை இருந்தது.
ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026
PTR : பொதுத் துறை நஷ்டத்தில் இயங்க காரணம் என்ன? - முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
hindutamil.in : தஞ்சாவூர்: அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் சரியான தலைமைப் பண்பு இல்லாததால் நஷ்டத்தில் இயங்குகின்றன என முன்னாள் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் தொழில், வர்த்தக சங்கம் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் பங்கேற்று, “வணிகத்தில் நெருக்கடியான சூழலில் தலைமைப்பண்பு” என்கிற தலைப்பில் முன்னாள் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியது: சிஏஜி தணிக்கை அறிக்கையில் தமிழக அரசின் நிறுவனங்களுக்கான மூலதனச் செலவு 8 சதவீதம் என்றும், சராசரி மூலதனத்தின் மீதான வருவாய் 0.8 சதவீதம் மட்டுமே என்றும் கூறப்பட்டுள்ளது.
திமுக மா.செ.க்கள் வயது 70- பதவி இழக்கும் 13 பேர் யார்?
மின்னம்பலம் - மதி :திமுகவில் மாவட்ட செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 70 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 70 வயதை கடந்த தற்போதைய மாவட்ட செயலாளர்கள் 13 பேர் தங்களது பதவிகளை இழக்க உள்ளனர்.
சென்னையில் இன்று ஆகஸ்ட் 22-ந் தேதி திமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுகவை மறுசீரமைக்கும் அதிரடி முடிவுகள் தீர்மானங்களாக நிறைவேற்றன.





