hindutamil.in - எம்.நாகராஜன் : தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யாவை ஆதரித்து, திமுக தேர்தல் பணிமனையில் மகளிர் அணி கலந்தாய்வுக் கூட்டம் இன்று (செப்.28) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து கனிமொழி எம்பி பேசியதாவது:
மக்களின் தீர்ப்பை மதிக்காமல் வேறு கட்சிக்கு மாறியவர்களுக்கு இந்தத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். ‘ஒரே நாளில் மாற்றத்தைக் கொண்டு வருவேன்’ என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, சட்டம்-ஒழுங்கை முற்றிலுமாகச் சீர்குலைத்துவிட்டது. மாநிலத்தில் 300-க்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள், 10 -க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் என குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
திங்கள், 28 செப்டம்பர், 2026
பெண்களை நூற்றாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் தவெக! - கனிமொழி சாடல்
RTI இல் சட்டம் ஒழுங்கிற்கு விலக்கு அளிக்கும் அரசாணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது
minnambalam.com -Pandeeswari Gurusamy :RTI இல் சட்டம் ஒழுங்கிற்கு விலக்கு அளிக்கும் அரசாணையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்து எதிர்ப்புக்கு பிறகு ரத்து செய்தது தவெக அரசின் நிர்வாக திறமை இன்மையை காட்டுகிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது RTI-யில் இருந்து சட்டம் ஒழுங்கிற்கு விலக்கு அளிக்கப்பட்டு, மீண்டும் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, “தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) என்பது நாட்டில் என்ன நடைபெறுகிறது என்பதை மக்கள் அறிந்து கொள்வதற்காகக் கொண்டுவரப்பட்ட அவர்களின் அடிப்படை உரிமையாகும். 2005-ஆம் ஆண்டு சட்டப் பிரிவு 24(4)-ன் கீழ் இந்த உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
ஞாயிறு, 27 செப்டம்பர், 2026
வஹாபிஸப் பயங்கரவாதத்தின் தோற்றம் இஸ்லாம் உருவாகி பல நூறு ஆண்டுகளின் பின்னர்
![]() |
M R Stalin Gnanam : வஹாபிஸப் பயங்கரவாதத்தின் தோற்றம்
இஸ்லாம் உருவாகி பல நூறு ஆண்டுகளின் பின்னர் ஏற்றப்பட்ட புலப்பெயர்வுகள்,வெளியுலகுத் தொடர்புகள், காலமாற்றங்கள் காரணமாகவும் முஸ்லிம்களின் வாழ்வு மற்றும் வணக்க வழிபாடு போன்றவற்றில் பல்வேறு விடயங்கள் மாற்றம் பெறலாயின. பல முறைமைகள் அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ் போன்றவற்றை அச்சொட்டாக பின்பற்றுவது சிக்கலுக்குரியதொன்றாக மாறத்தொடங்கியது.
இதன்காரணமாக இஸ்லாம் மார்க்கம் என்பது குறித்த ஓர் இறுக்கமான அணுகுமுறையொன்றை ஏற்படுத்த வேண்டும் என சில பற்றி மார்க்க அறிஞர்கள் சிந்திக்கத் தலைப்பட்டனர். அத்தகைய அறிஞர்களில் ஒருவர்தான் இமாம் 'முஹம்மத் பின் அப்துல் வஹாப்' என்பவராகும்.
நல்லூரில் திலீபனின் உருவச்சிலை அகற்றம் - காவல்துறையினர் விளக்கம்
hirunews.lk : யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் போது, உயிர்நீத்த திலீபனின் உருவச்சிலை இன்று (27) காலை காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது.
உருவச்சிலை அமைந்திருந்த இடத்திற்கு காலை 6.30 அளவில் சுமார் 10 காவல்துறை அதிகாரிகள் வருகை தந்து, சிலையை அகற்றி அங்கிருந்து எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
திலீபனின் நினைவேந்தல் நேற்று(26) முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இன்று காலை குறித்த சிலை அகற்றப்பட்டுள்ளது.
