minnambalam.com -Mathi : புதுச்சேரியில் ஏப்ரல் 6-ந் தேதி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இருவரும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தமிழகம், புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலும் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 16 இடங்களிலும் திமுகவும் கூட்டணி கட்சிகளும் 14 இடங்களிலும் போட்டியிட முடிவு எட்டப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் காங்கிரஸ் நிர்வாகிகள், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்ததை திரும்பப் பெற மறுத்ததால் குழப்பம் நீடிக்கிறது.
சனி, 4 ஏப்ரல், 2026
ஸ்டாலின், ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரசாரம்- புதுச்சேரியில் ஏப்.6-ல்
வியாழன், 2 ஏப்ரல், 2026
RSS இல் கடந்த 100 ஆண்டுகளில் எந்த அறிவியல் வளர்ச்சியும் ஏற்படவில்லை
Sridhar Subramaniam : ஐஐடியில் ஒரு அறிவீனம்!
. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக கருதப்படும் முத்துசுவாமி தீட்சிதரின் 250ஆவது நிகழ்ச்சி ஐஐடி மெட்ராஸில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆடிட்டர் எஸ் குருமூர்த்தி பேசி இருக்கிறார். அந்த உரையைக் கேட்டேன்.
'நியூட்டனின் அறிவியல் பார்வை' எழுத்தறிவற்ற பார்வை என்றுதான் ஆரம்பிக்கிறார். ஃபர்ஸ்ட் பாலே சிக்சர்! அடுத்ததாக ஐன்ஸ்டைனின் ரிலேடிவிடி தியரியை எடுத்துக் கொள்கிறார். அந்த ஃபார்முலாவில் ஐன்ஸ்டைன் ஒரு மாபெரும் தவறு செய்திருக்கிறார். காரணம், இந்தப் பிரபஞ்சத்தை ஐன்ஸ்டைன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, என்கிறார்.
புதன், 1 ஏப்ரல், 2026
காங். தேர்தல் குழு பொறுப்பில் இருந்து மாணிக்கம் தாகூர் விலகல்
தினமலர் : புதுடில்லி: காங்கிரசின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியை அக்கட்சி எம்பி மாணிக்கம் தாகூர் ராஜினாமா செய்துள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்த உடனடியாக பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால், காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் தாமதம் செய்து வருகிறது.
காங். வேட்பாளர் பட்டியல் எப்போது; ராகுல் வரணும் என்கிறார் செல்வப்பெருந்தகை
திமுக, அதிமுக, தவெக – லோக்பால் அமைப்பின் கருத்து கணிப்பு
minnambalam.com -Pandeeswari Gurusamy : தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 181 முதல் 189 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என லோக்பால் என்ற தனியார் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
திருமாவின் ஜாதிப்பாசம் - பொற்கொடிக்கு ஆதரவு
மதுரம் சந்திரசேகர் ; பொற்கொடிக்கு பிரதிநிதித்துவம் அளித்த அதிமுக அளித்துள்ளதால் அண்ணன் திருமாவளவன் அவருக்கு ஆதரவா இரட்டை இலைச்சின்னத்தில் வாக்கு கேட்பார் போல..
ஒரு பக்கம் சனாதன எதிர்ப்பு பேசிவிட்டார் என்கிறீர்கள்..
பூவை மூர்த்தி பாஜகவுடன் கூட்டு.ரஞ்சித் சங்கிகளுடன் கைகோர்த்திருக்கிறார்..
இவர்களெல்லாம் அவர்களது சாதியவர்கள் பிரதிநிதித்துவம் பெற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிர் சித்தாந்தாந்தத்தை ஆதரிக்கின்றனர்.
இவர்களுக்கு எதிராக அண்ணன் சனாதன எதிர்ப்புக்குரல் எழுப்புவதில்லை.
அதிமுக இவருக்கு எதிர் கூட்டணி..
திங்கள், 30 மார்ச், 2026
நடிகர் கருணாஸ் சிவகங்கை அதிருப்தியாளர்களை சமரசப்படுத்த முயற்சி!
hindutamil.in : சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிருப்தியாளர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் நடிகர் கருணாஸ் ஈடுபட்டுள்ளார்.
சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியை இந்த முறை எப்படியாவது பெற்றுவிட வேண்டுமென திமுகவினரும், காங்கிரஸாரும் அவர்களது தலைமையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
திமுகவில் மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன், நகராட்சித் தலைவர் சி.எம்.துரை ஆனந்த் உள்ளிட்டோரும், காங்கிரஸில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம்.சுதர்சனநாச்சியப்பன், மாநிலப் பொதுச்செயலாளர் சி.ஆர்.சுந்தர்ராஜன், மாவட்டத் தலைவர் சஞ்சய்காந்தி, முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரெத்தினம் உள்ளிட்டோரும் சீட் பெற முயற்சித்தனர்.
திருமாவளவன் வெற்றி பெற்றால் சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை யார் ஏற்பார்கள்; சீமான் கேள்வி
தினமலர் : காரைக்குடி: காட்டுமன்னார்கோவில் வேட்பாளராக களம் இறங்கி உள்ள திருமாவளவன் அதில் வெற்றி பெற்றால் சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை யார் ஏற்பார்கள் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர் அளித்த பேட்டி;
சிதம்பரம் எம்பியாக இருக்கும் திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் சட்டசபை வேட்பாளராக ஏன் போட்டியிடுகிறார்? அந்த முடிவை அவர் ஏன் எடுத்தார் என்பது எனக்கு தெரியாது. ஒருவர் இரு தொகுதிகளில் போட்டி போடுவதை நான் எதிர்த்தேன். வசந்தகுமார் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த போது, கன்னியாகுமரி எம்பி தேர்தலில் நின்றார்.
திருமாவளவன் அமைச்சர் பதவிக்காக சட்டமன்ற தேர்தலில் போட்டி! பேராசை பெரும் வினையாகும்
மின்னம்பலம் -Mathi : அமைச்சர் பதவிக்காகவா சட்டசபை தேர்தலில் போட்டி? திருமா சொன்ன பதில் என்ன? முழுமையாக!
தமிழக சட்டசபை தேர்தலில், மக்களவை எம்.பி.யாக இருக்கும் நிலையில் தாம் போட்டியிடுவது அமைச்சர் பதவிக்காக அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணிக் கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று மார்ச் 30-ந் தேதி மாலை நடைபெற்றது.
ஞாயிறு, 29 மார்ச், 2026
மத்திய கிழக்கு போர் - 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளும் சம்பவங்களும்
hirunews.lk : 1. ஹவுதிகளின் தொடர் தாக்குதல்
ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது இரண்டாவது முறையாக ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி (Drone) தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களை நிறுத்தும் வரை இந்த நடவடிக்கைகள் தொடரும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
2. ஈரான் மீதான தாக்குதல்களும் பதிலடி எச்சரிக்கையும்
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. புஷெர் (Bushehr) மாகாணத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டதுடன், குசிஸ்தான் (Khuzestan) மாகாணத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையமும் சேதமடைந்துள்ளது.
பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் Vs சுந்தர் சி - நட்சத்திர தகுதி பெற்ற மதுரை மத்தி
hindutamil.in - ஒய்.ஆண்டனி செல்வராஜ் : மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதிமுக போட்டி யிடவில்லை என்று வருத்தத்தில் இருந்த அக்கட்சியினருக்கு சுந்தர் சிபோட்டியிடுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மத்திய தொகுதியில் 2016. 2021 தேர்தல்களில் போட்டியிட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெற்றி பெற்றுள்ளார். 2016-ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் பேராசிரியர் ஜெயபாலிடம் வெறும் 5,762 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2021-ம் ஆண்டு அதிமுக போட்டியிடாமல் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால், பழனிவேல் தியாகராஜன் எளிதாக வெற்றி பெற்றார்.
ஒரு கட்சி ஆட்சியும் பல கட்சி ஜனநாயக ஆட்சி முறையும்
Santhirapalan Saminathar : ஜனநாயக நாடுகளில் பலர் குறிப்பிடும் குறைகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஜனநாயகம் தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதை .
இதை வளர்த்து எடுப்பது மக்கள் தான்.
நவீன உற்பத்தி முறை வளர்ச்சி, மக்களை சிந்தனையிலும் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இலங்கை இந்தியாவில் இருக்கும் ஜனநாயக அரசுகளுக்கும் நோர்வே, சுவீடன், சுவிஸ் அரசுகளுக்கும் இடையே ஜனநாயக வளர்ச்சி பாரிய அளவு வித்தியாசம் ஆகும்
நோர்வே,டேன்மார்க், சுவீடன், நியூசிலாந்து, ஜஸ்லாந்து அரசுகளின் ஜனநாயகம் நல்ல வளர்ச்சி அடைந்தவை. ஜனநாயகத்தில் குறைகள் இருக்கு என்பதற்காக மன்னர் ஆட்சிக்கு சென்று விட முடியாது.
அல்லது அதன் சாயலான ரஸ்சியா, சீனா, வடகொரியா, ஈரான் சர்வாதிகார ஆட்சிக்கு சென்றுவிட முடியாது. ஜனநாயகத்தின் அடிப்படை பல கருத்துக்களும் மோதி மக்கள் தெளிவடைவதற்கான களமாக இருப்பதுதான். பல கட்சிகளின் தேர்தலில் மக்கள் தமது ஆட்சியாளரை தெரிவு செய்யும் முறையாகும்.
‘தனி ஆவர்த்தனம்’ செய்யும் செல்வப்பெருந்தகை: கொந்தளிக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் செய்திப்பிரிவு
hindutamil.in : தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தன்னிச்சையாகச் செயல்பட்டு வருவது, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
"ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், 40 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்" என மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்கள் போர்க்கொடி தூக்கியதால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடக்கம் முதலே முரண்பாடுகள் தலைதூக்கின.
இறுதிக் கட்டமாக, காங்கிரஸ் கட்சிக்கு 35 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் வேண்டும் என்பதில் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பிடிவாதமாக இருந்தார்.
ஆனால், அதற்கு ஸ்டாலின் உடன்படவில்லை. இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் உதவியுடன் 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு ஒத்துக்கொண்டு காங்கிரஸை கையெழுத்திட வைத்தார் செல்வப்பெருந்தகை. அவரது இந்த தடாலடி முடிவு, ஒட்டுமொத்த காங்கிரஸ் சீனியர்களையும் அதிரவைத்தது.
திமுக வேட்பாளர்கள்: 4 முஸ்லிம்கள், 18 பெண்களுக்கு வாய்ப்பு!
minnambalam.com - Mathi : திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் 5 பேர் முஸ்லிம்கள்.
1) ஆவடி- சா.மு.நாசர்
2) பாளையங்கோட்டை- அப்துல் வஹாப்
3) ராமநாதபுரம்- காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம்
4) செஞ்சி- கே.எஸ். மஸ்தான்.
5) டாக்டர் சுபேர் கான்- ராயபுரம்
ஆனால் அதிமுக அறிவித்த 150 வேட்பாளர்களில் பாளையங்கோட்டை தொகுதியில் எஸ். செய்யது சுல்தான் சம்சுதீன் என்ற ஒரே ஒரு இஸ்லாமியருக்கு மட்டுமே வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
மேலும் திமுக கூட்டணியில்
முஸ்லிம் லீக்- 2
