![]() |
கருப்பு எழுத்துக் கழகம்.: வீரமணி போக்சோ வழக்கு: மூன்று அதிகாரிகளின் பெயர்கள் மறைக்கப்பட்டதா? – காவல் ஆணையர் அருண், கூடுதல் ஆணையர் ராதிகா, உதவி ஆணையர் யாஸ்மின் மீது சவுக்கு சங்கர் கடும் குற்றச்சாட்டு!
"மேல் நடவடிக்கை கைவிடப்படுகிறது" – பிப்ரவரி 19, 2026 அன்று தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கை; சிறப்பு போக்சோ நீதிமன்றம் மறுத்ததால் வழக்கு மீண்டும் திறக்கப்பட்டது!
சென்னை, செப்டம்பர் 19 – தொழிலதிபர் ஆர்.வீரமணி மீதான போக்சோ வழக்கில், கைது செய்யப்பட்ட குற்ற எண் 174/2025-ல், பிப்ரவரி 19, 2026 அன்று "மேல் நடவடிக்கை கைவிடப்படுகிறது" (Further Action Dropped) என்று இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்தவர் உதவி ஆணையர் யாஸ்மின். அப்போது குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்தவர் ராதிகா ஐபிஎஸ். சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தவர் அருண் ஐபிஎஸ்.
இந்த மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களும், வீரமணி விவகாரம் தொடர்பான பெரும்பாலான ஊடகச் செய்திகளில் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. "இவர்கள் இல்லாமல் வீரமணி காப்பாற்றப்பட்டிருப்பாரா?" என்ற கேள்வி எழுந்துள்ளது.

tamil.oneindia.com - Halley Karthik : சென்னை: தவெக ஆட்சி அமைக்க ஒரு வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஎம்) என இரண்டு கட்சிகளும் காரணமாக இருந்தன. இருப்பினும் ஆட்சியில் தங்கள் கொள்கைக்கு எதிரான செயல்பாடுகள், திட்டங்கள் அமல்படுத்தப்படும்போது அவரை எதிர்க்கின்றன. இது தவெகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதால், தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகளை எப்படி தடை செய்வது என்று தவெக ஆதரவாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்க தொடங்கியிருக்கின்றனர்.

