சனி, 22 ஆகஸ்ட், 2026

பிரகாஷ் ராஜ் : 3,000 ஆண்டுகளாக இந்தியா மாதிரி அசிங்கமான கலாசாரம் உலகத்திலேயே இருந்தது இல்லை!

 tamil.oneindia.com - Nantha Kumar R  : சென்னை: ''அரசியலமைப்பை திருத்தணும்னு இருக்காங்களே திருட்டு பசங்க.. இவங்க மூன்றாயிரம் வருடங்களாக இருக்கிறார்கள். இந்த திருட்டு பசங்க சொல்வாங்க எங்களுடைய நாடு அற்புதமாக இருந்தது. பொன் இருந்தது என்று பொய்யாக சொல்வார்கள். 2 ஆயிரம், 3 ஆயிரம் வருடங்களாக இந்தியா மாதிரியான அசிங்கமான கலாசாரம் உலகத்திலேயே இருந்தது இல்லை. அதில் இருந்து தப்பிப்பதற்காக தான் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை எழுதினார்'' என்று நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.

இலங்கை: யாழ் கோவில் திருவிழாவில் விபரீதம்- 385 பேருக்கு கண் பாதிப்பு

 மின்னம்பலம் - மதி :இலங்கை யாழ்ப்பாணத்தில் ( Jaffna) கோவில் திருவிழாவில் கண் பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் 385 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் ஆகஸ்ட் 20-ந் தேதி இரவு பெருமளவில் வாண வேடிக்கைகள் மற்றும் அதீத சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து கண்களில் பாதிப்பு ஏற்பட்டதாக அடுத்தடுத்து பொதுமக்கள் மருத்துவமனைகளில் தஞ்சமடைந்தனர். நேற்று இரவு நிலவரப்படி 385 பேர் யாழ்ப்பாணம் மருத்துவமனைகளில் ‘கண்’ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி முதல்வரை கொன்ற 10ஆம் வகுப்பு மாணவர்கள் - தெலங்கானாவில்

 தினமணி : பாபு' - இந்த ஒற்றை வார்த்தைதான், ஒரு கொடூரக் கொலை வழக்கில் சந்தேக நபர்களைக் கண்டறியவும், விசாரணையை முன்னெடுத்துச் செல்லவும் உதவியதாக போலீசார் கூறுகின்றனர்.
நல்கொண்டா மாவட்டம், கொண்டமல்லேபள்ளியைச் சேர்ந்த பள்ளி முதல்வர் கல்லு ரூபா ரெட்டி கொலை வழக்கில், இரண்டு மாணவர்களைக் கைது செய்துள்ளதாக நல்கொண்டா போலீசார் அறிவித்துள்ளனர்.
"ஆடம்பர வாழ்க்கைக்குப் பழகிய அவர்கள், பணத்திற்காகவே முதல்வரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். திருடுவதற்காகச் சென்றபோது, ​​முதல்வர் அவர்களை அடையாளம் கண்டுகொண்டதால் அவரைக் கொன்றுவிட்டனர்," என்று காவல் கண்காணிப்பாளர் சரத் சந்திர பவார் தெரிவித்தார்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

எம்.எல்.ஏ.,க்களுக்கு சொகுசு கார் தேர்வு செய்யும் பணிகள் தீவிரம்

Image 1611226

 தினமலர் :சென்னை: தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு, எந்த வகை கார் வழங்கலாம் என தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
'அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் இலவசமாக கார் வழங்கப்படும்; தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என, சட்டசபையில் 110 விதியின் கீழ் நேற்று முன்தினம் முதல்வர் விஜய் அறிவித்தார்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2026

அமித்ஷா கூட்டத்தில் விஜய் பேச்சு - தமிழ்நாட்டின் நலன் என்று வந்துவிட்டால் திமுகவின் நிலைப்பாட்டுக்கு தான் வந்தாக வேண்டும்

 minnambalam.com -Mathi : தொகுதி மறுவரையறை தொடர்பாக தென் மண்டல கவுன்சில் கூட்டதில் மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் தெரிவித்த கருத்துகளுக்கு திமுக, அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளன.
சென்னையை அடுத்த கோவளத்தில் தென் மண்டல கவுன்சிலின் 31-வது கூட்டம் இன்று ஆகஸ்ட் 20-ந் தேதி நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடகா முதல்வர் டிகே சிவகுமார், கேரளா முதல்வர் சதீஷன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நான்கு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்குத் தண்டனை

 dinamalar.com : திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேலஇலந்தகுளத்தில் நான்கு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்தவ பாதிரியார் ஆபிரகாம், 47, என்பவருக்கு தூக்குத் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம், மதபோதகராக ஊழியம் செய்து வந்தார். பல்வேறு மாவட்டங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்று ஊழியம் செய்து வந்துள்ளார்.

கிழக்கு பல்கலை கழக விடுதியில் மாணவியின் சடலம் மீட்பு: இரு மாணவிகள் மயங்கினர்

  ilakkiyainfo.com  : கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில், மாணவி ஒருவர் புதன்கிழமை (19) பிற்பகல் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 84 பேர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய கே. யாழினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எதையுமே விளங்கிக் கொள்ள முடியாத ஒருவர் தவேக + காங்கிரஸ் கல்வி அமைச்சராக இருப்பது வெட்கக்கேடு

No photo description available.

 சாவித்திரி கண்ணன் :  விளக்கெண்ணை போல ஒரு விளக்கம்!
கடைந்தெடுத்த ஒரு மூடரா, அமைச்சரென கல்வித் துறையை நிர்வகிக்கிறார் ! 
நம்ப முடியவில்லை!
அனுப்பப்பட்ட அறிக்கை கல்வி வளாகத்தின் ஒழுங்கமைவு சம்பந்தப்பட்டதாம்! 
அதில் தவறுதலாக சில வாசகங்கள் இடம் பெற்றுவிட்டதாம்…! 
அதை அவர்களே உணர்ந்து வாபஸ் வாங்கிவிட்டார்களாம்..!
அதிகாரிகள் தந்த விளக்கத்தை அப்படியே எடுத்து வந்து அவையில் வாசிக்கிறார், அமைச்சர்!
ஆக, இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிட்ட அதிகாரியிடம் அமைச்சர் விசாரணை கூட மேற்கொள்ளவில்லை. 

புதன், 19 ஆகஸ்ட், 2026

இம்ரான் கான்9 மாதங்களுக்கு பின் மனைவி சகோதரியை சந்தித்தார் - உச்சநீதிமன்ற தீர்ப்பு

 தினமலர் : இஸ்லாமாபாத்: உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, 9 மாதங்களுக்கு பின்னர் இம்ரான் கான் அவரது மனைவி, சகோதரியை சிறையில் சந்தித்து பேசினர்.
ஊழல் வழக்குகளில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 2023ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆனால் சிறையில் அவர் மரண படுக்கையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதுபோன்ற தொடர்ச்சியான செய்திகளை தொடர்ந்து இம்ரானை இஸ்லாமாபாதில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை குடும்பத்தினர் வாரம்தோறும் சந்திக்க, மகன்களிடம் தொலைபேசியில் பேசவும் அனுமதி அளித்தது.

இலங்கை விகாரையில் மரத்தில் தொங்கிய வெளி நாட்டவரின் சடலம் : நடந்தது என்ன?

 ilakkiyainfo.com : திக்கோவிட்ட விகாரையில் 54 வயது ஸ்காட்லாந்து நாட்டவரின் சடலம் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மாத்தறை, திக்கோவிட்ட பலோல்பிட்டியாவில் உள்ள ஒரு விகாரையில், 54 வயதான ஸ்காட்லாந்து நாட்டவர் ஒருவர் வேப்பமரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு அருகில் ஒரு ஜோடி காலணிகள், ஒரு மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மற்றும் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளன.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

விசிகவின் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு- 125 தீர்மானங்கள்- கட்டுக் கடங்காத கூட்டம்

 மின்னம்பலம் - மதி : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இம்மாநாட்டில் 125 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருமாவளவன் பிறந்த நாளான நேற்று ஆகஸ்ட் 17-ந் தேதி உளுந்தூர்பேட்டையில் விசிகவின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு காலை முதலே சாரை சாரையாக தமிழ்நாடு முழுவதும் இருந்தும் விசிக தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் வருகை தந்தனர்.

அனிருத் - காவ்யா மாறன் ( கலாநிதி மாறன் மகள்) திருமணம் கிரீஸில் நடக்கப் போகிறது

 தினமலர் : சென்னை: ராக் ஸ்டார் அனிருத் சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறனை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. 
இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்னரே ஒய்ஜி மகேந்திரன் பேட்டி ஒன்றில் அம்பலப்படுத்திய நிலையில், இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவது உறுதியானது. 

கொழும்பு சிவசுப்பிரமணியர் ஆலய நகைகள் திருட்டு - குருக்கள் கைது

 ilakkiyainfo.com  :குருக்களை கைதுசெய்து ஆஜர்படுத்த கோட்டை நீதிவான் உத்தரவு.
கொம்பனித்தெரு  சிவசுப்பிரமணியர் ஆலயத்திலிருந்த  தங்க நகைகளை திருடி அடகு வைத்த அவ்வாலயத்தின் பிரதான குருவான சதீஸ்குமாரகுருக்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் திங்கட்கிழமை (17) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது மன்றில் முன்னிலையான கொம்பனித் தெரு பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் விளக்கமளிக்கையில், கொம்பனித்தெரு ஸ்ரீசிவசுப்பிரமணியர் சிவசுப்பிரமணியர் ஆலயத்திலிருந்த நகை திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினரால் முறைபாடளிக்கப்பட்டிருந்த நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

பாக்கெட் சப்பாத்தியில் 100% கோதுமையா? ஃப்ரோசன் பரோட்டா? பிளேட்டை திருப்பிப் போடும் திடுக் உண்மை

tamil.oneindia.com -Hema Vandhana : சென்னை: பாக்கெட் தோசை மாவு எந்த அளவுக்கு பயன்படுத்துவதை குறைத்து கொள்ள வேண்டுமோ, அதே போல தவிர்க்க வேண்டியதும், குறைக்க வேண்டியதும் பாக்கெட் பரோட்டா, சப்பாத்தி எனலாம்.. அவசர சமையலுக்காக இதை பெரும்பாலானோர் பயன்படுத்துகிறார்கள்.. அதேசமயம், அதில் கலக்கப்படும் பொருட்களை பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
இன்றைய அவசர உலகத்தில் சமையல் நேரத்தை குறைக்க கடைகளில் விற்கப்படும் "ரெடிமேட் சப்பாத்தி". ஃப்ரோசன் பரோட்டா பாக்கெட்டுகளை வாங்கி சாப்பிடும் பழக்கம் பல குடும்பங்களில் அதிகரித்துவிட்டது.

கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொலை! பாரபட்சமற்ற நீதி விசாரணை தேவை” - மு.க.ஸ்டாலின்

 hindutamil.in -அனலி  : சென்னை: “கர்நாடகாவில் நிகழ்ந்த 3 தமிழர்கள் கொலையில் வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்திக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணிக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

கல்முனை வைத்தியசாலையில் ஹிஜாப்!

 Satha Thambirajah : கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் அண்மையில் சுகாதார சிற்றூழியர் அனுமதிபெற்று போன 9 பேரில் ஐந்துபேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
@என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நஜீம் எனப்படும் security service incharge ன் மனைவி மனைவியின் தங்கை நஜீமின் தங்கை என ஐவர் அம்பாறையில் இடம்பெற்ற ஒரு மாதகால பயிற்சிக்கே செல்லாமல் அனுமதி பெற்று வந்திருக்கிறார்கள்.
இவர்கள் இவ்வாறு அனுமதிபெற்று போனது எப்படி?  
இதுபற்றி வைத்தியசாலையின் பணிப்பாளர் கவனத்தில் எடுத்தாரா?
இந்த புள்ளியில் நடந்தது மத அனுமதியா?  அரச 
 அனுமதியா?
இவர்களே முக்கிய குழப்பவாதிகளாகும்.

ஸ்டாலினை கவிழ்க்க ராகுலின் திட்டம்! நொறுக்கிய உதயநிதி! வாயடைத்து நின்ற விஜய்!

 May be an image of text that says "인두 ေပ "கூத்தாடி கையில் நாட்டை கொடுங்கள், அவன் கூத்தியாள் கையில் நாட்டை கொண்டு கொடுப்பான்" -முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராசர்"