தினத்தந்தி : சென்னை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரிக்கும் வாக்குகள் திமுகவின் வெற்றியை தவிடுபொடியாக்கும் என்று மு.க.அழகிரியின் மகள் கயல்விழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சனி, 18 ஏப்ரல், 2026
திமுக விஜய்யை குறைத்து எடைபோடுகிறது - மு.க.அழகிரி மகள் கயல்விழி
“ஸ்டாலினை பணியவைக்க மோடி, அமித் ஷாவால் முடியாது” - திருச்சியில் ராகுல் காந்தி பேச்சு
hindutamil.in- எம்.கே.விஜயகோபால் : திருச்சி: “தமிழக முதல்வர் ஸ்டாலினை மோடியும், அமித் ஷாவும் மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது” என்று திருச்சியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “டெல்லியில் தமிழக மக்களின் சிப்பாயாக செயல்படுவேன்” என்றும் உருக்கமாக கூறினார்.
திருச்சி துறையூரில் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத், திமுக வேட்பாளர்கள் அமைச்சர் கே.என்.நேரு, கதிரவன், கருணைராஜா, சேலம் ஆத்தூர் வேட்பாளர் அர்த்தநாரி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.
வெள்ளி, 17 ஏப்ரல், 2026
'பேமென்ட் 1 லட்சம்; 2 AC ரூம் கட்டாயம்' - பில் போடும் நாஞ்சில் சம்பத்! ஒரு காலி டப்பாவுக்கு வந்த வாழ்வு!
விகடன் : கட்சி சார்பில் பரப்புரைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் நாஞ்சில் சம்பத். பரப்புரையில் ஈடுபட வேண்டியது அவரது பொறுப்பு. அதற்கு இத்தனை கறாராக பில் போடுவது என்ன நியாயம்? என்கின்றனர் நிர்வாகிகள்.
தவெகவின் பரப்புரைச் செயலாளரான நாஞ்சில் சம்பத் வாகன பிரசாரங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் பேச விதிக்கும் கண்டிஷன்களாலும் பாக்கெட்டை பதம் பார்க்கும் அளவுக்கு போடும் பில்லாலும் தவெக வேட்பாளர்களும் நிர்வாகிகளும் விழிபிதுங்கி போயிருப்பதாக கிசுகிசுக்கின்றனர் கட்சி வட்டாரத்தினர்.
நாஞ்சில் சம்பத்தை தங்கள் ஊர் பிரசாரத்திற்கு பேச அழைத்து அனுபவப்பட்ட தவெக நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், 'எங்கள் தலைவர் எல்லா ஊருக்கும் எல்லா தொகுதிக்கும் போய் பிரசாரம் செய்வார் என எதிர்பார்த்தோம். அது நடக்கவில்லை. பொதுச்செயலாளர் தொடங்கி இரண்டாம் கட்ட தலைவர்கள் வரைக்கும் ஏன் தொலைக்காட்சி விவாதங்களில் பேசும் செய்தித் தொடர்பாளர்கள் வரைக்கும் எல்லாரும் ஆளுக்கொரு தொகுதியை பிடித்துக் கொண்டு வேட்பாளராக நிற்கிறார்கள்.
“டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு!” - மசோதா தோல்விக்குப் பின் முதல்வர் ஸ்டாலின் பதிவு
hindutamil.in - வேட்டையன் : சென்னை: மத்திய பாஜக அரசு மக்களவையில் தாக்கல் செய்த தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அது குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! டெல்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்!” என பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவின் கீழ் மசோதா நகலை தீயிட்டு எரித்த படத்தை பகிர்ந்துள்ளார்.
வியாழன், 16 ஏப்ரல், 2026
கிருஷ்ணகிரி கணவன் சுரேஷ் மனைவி காவியாவை கத்தியால் குத்திக்கொலை - தற்கொலை, மூன்று வயது மகள் உயிருடன் கண்டெடுக்கப்பட்டார்.
News18 : கருத்து வேறுபாட்டில் மனைவியை குத்திக்கொலை செய்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தொட்டமெட்டரை கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் 30 வயதான சுரேஷ். ஓசூரில் தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி காவியா டாட்டா நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு மூன்று வயதில் வைஷ்ணவி என்ற பெண் குழந்தை உள்ளது.
பிரேமலதா திருமாவை அவமதித்தாரா?
Mkishore Kumar : ஒரு காலத்தில சேரிகளில் எம்.ஜி.ஆருக்கு பிறகு கேப்டன் விஜய்காந்திற்கு தான் அதிக ரசிகர் மன்றங்கள் இருந்துச்சு... படங்கள் மூலம் தன்னை உழைக்கும் மக்களில் ஒருவரா பிரதிபலிச்சாரு ஆரம்ப காலங்கள...
பட்டியல் மக்களின் பேரன்ப கொண்டவரா இருந்தாரு..
இருந்து ஒரு பயனுமில்ல பட்டியல் மக்களுக்காக என்ன போராடினாரு, சாதி ஒழிப்புக்கு எதிராக என்ன போராடினாரு கேட்டா எந்த ஒரு பெரும் வரலாறும் கிடையாது.
பட்டியல் மக்களின் நம்பிக்கையை சுரண்டி கொண்ட மற்றுமோர் சாதி இந்து சூப்பர் ஸ்டார் சொல்லலாம் விஜய்காந்த். ஆனா வெளிப்படையான தன் சாதிய அதிகாரத்தை எங்கையும் மக்கள் மீது திணிச்சதான சம்பவங்கள் தெரிஞ்சி இல்ல.
ஆனா ப்ரேமலதா படுபயங்கரமான சாதி வெறியர் என்பதை மேடை போட்டு அவரே தன்னை பிரசூரபடுத்தியுள்ளார்.
மின்னம்பலத்தின் கருத்து கணிப்பு - உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.யார்? எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? ஆட்சி அமைக்கப் போவது யார்?
minnambalam.com - Mathi : உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.யார்? எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? ஆட்சி அமைக்கப் போவது யார்? மின்னம்பலத்தின் விரிவான சர்வே முடிவுகள்
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026 முடிவுகள் குறித்து நமது மின்னம்பலம் மீடியா தொடர்ந்து கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதியின் கள நிலவரத்தை துல்லியமாக நாம் வெளியிட்டு வருகிறோம்.
மின்னம்பலம் மீடியா இந்த சர்வேவை எப்படி மேற்கொண்டது?
இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- SIR ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டசபை தொகுதியின் வாக்காளர் விவரங்களை வெளியிட்டது.
2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம்- அதாவது SIR- க்கு முன்னர் தமிழக வாக்காளர்கள் மொத்த எண்ணிக்கை 6.41 கோடி.
SIR- மேற்கொள்ளப்பட்டதால் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 97.30 லட்சம் பேர்.
SIR-க்குப் பின்னர் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அத்துடன் தேர்தல் ஆணையம்
வயது வாரியாக
18 – 29
30 – 39
40 – 49
50 – 59
60 – 69
70 – 79 வயது உள்ள வாக்காளர்கள் விவரங்களை வெளியிட்டிருந்தது. இந்த தரவுகளை நாம் எடுத்துக் கொண்டோம்.
அடுத்ததாக ஜாதி அடிப்படையிலானது. ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள் தேர்வில் ஜாதி முக்கிய காரணியாக இருக்கிறது. அரசியல் கட்சிகள் வெளிப்படையாக ஜாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவிப்பது இல்லை. ஆனால் அதைத்தான் நடைமுறையில் பின்பற்றுகின்றன.
“நாளை தமிழ்நாட்டின் வீடு, வீதி, கடைகளில் கருப்புக் கொடி பறக்கட்டும்..” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
tamil.news18.com Karthi K ; தொகுதி மறுவரையறை எதிர்ப்பில், தமிழர் உரிமை பாதிக்கப்படும் என கூறி, மு.க.ஸ்டாலின் நாளை தமிழ்நாடு முழுவதும் வீடுகள் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றுமாறு அழைப்பு விடுத்தார்
CM MK Stalin : சண்டை செய்ய நான் ரெடி, பக்கபலமாக இருக்க நீங்கள் ரெடியா?
வார இறுதி கோடை விடுமுறைக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம், முன்பதிவு www.tnstc.in மொபைல் ஆப் மூலம் கேட்டுக்கோள்
புதன், 15 ஏப்ரல், 2026
இலங்கை வடகிழக்கு மாகாண அரசும் இந்திய ஆதிக்கமும்
ராதா மனோகர் : இலங்கையின் இணைந்த வடகிழக்கு மாகாண அரசு பற்றிய சில விடயங்களை கொஞ்சம் பின்னோக்கி பார்க்கலாம் என்றெண்ணுகிறேன்.
இந்த மாகாண அரசு உருவாவதற்கு முன்பே ஒரு முக்கிய இந்திய தலையீடு ஈ பி ஆர் எல் எப் இயக்கத்திற்குள் இருந்திருக்கிறது என்று நம்புவதற்கு முகாந்திரம் உள்ளது..
ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா தோழர் பத்மநாபா தோழர் கேதீஸ்வரன் போன்ற பலர் இருந்தாலும் இந்தியாவின் விருப்பத்திற்கு ஏற்பவே ஒருவரை இந்தியா திணித்தது என்பது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
எந்த அரசியல் கட்சியும் சார்பற்று உருவாகிய தமிழ் மாணவர் பேரவைக்கு எதிராக தமிழர் விடுதலை கூட்டணியால் செயற்கையாக தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கப்பட்டது
இது பின்னர் இயக்கங்களுக்குள் ஊடுருவியது எல்லோரும் அறிந்ததே.
தமிழர் விடுதலை கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த தோழர் வரதராஜ பெருமாள் ஈ பி ஆர் எல் எப்க்குள் வந்தார்
தோழர் டக்ளஸ் தேவானந்தாவே இவரை அழைத்து வந்தார்
ஈரானின் பாரசீக விரிவாக்க திட்டம்தான் அரபு நாடுகளை இஸ்ரேலை நோக்கி தள்ளியது
ஈரானின் பாரசீக விரிவாக்க திட்டம்
Ahmed Ashraff : எமிரேட்ஸ்சை, இஸ்ரேலுடன் உறவு ஏற்படுத்தும் நிலைக்கி தள்ளிவிட்டது யார் ?
வளைகுடா நாடுகள் , இஸ்ரேலுடன் எந்தவிதமான உறவுகளையும் கொண்டிருக்கவில்லை . ,
ஈராக் , லெபனான் , சிரியா , யமன் நாடுகளை, ஈரான் , கூலிப்படைகள் மூலம் தனது ஆதிக்கத்துக்கு உட்படுத்தியது .
இதைக் கண்டு, எமிரேட்ஸ் சிறிய நாடு என்ற வகையில் பயந்தது .
குறிப்பாக ஈரான் , எமிரேட்ஸுக்கு சொந்தமான அபூ மூஸா , தன்புல் குப்ரா , தன்புஸ் ஸுக்ரா என்ற மூன்று தீவுகளை ஆக்கிரமித்துள்ளது .
நேரடி பேச்சுவார்த்தைகள் மூலமாகவோ அல்லது சர்வதேச மத்தியஸ்த்தம் மூலமாகவோ சர்ச்சையைத் தீர்க்க ஈரான் மறுக்கின்றது .
காரணம் உத்மானிய , பிரிட்டிஷ் ஆவணங்கள் எமிரேட்ஸுக்கு சொந்தமானவை எனஉறுதிப்படுத்துகின்றன
செவ்வாய், 14 ஏப்ரல், 2026
90 லட்சம் கொடுத்தால் தான் உடலுறவு!” முதலிரவில் பெண் சொன்ன வார்த்தை.. கதி கலங்கிய மாப்பிள்ளை ஆக்ரா
மாலைமலர் : ஆக்ரா: திருமணத்திற்குப் பிறகு முதலிரவுக்கு ஆசையாகச் சென்ற இளைஞருக்கு இளம்பெண் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
இந்த மாப்பிள்ளைக்கு அந்த இரவு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு ‘க்ரைம் த்ரில்லர்’ படமாகவே மாறியுள்ளது. 90 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் உடலுறவு என மணமகள் போட்ட கண்டிஷனை கேட்டு அவர் அதிர்ந்து போனார்.
கல்யாணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்பட்டது என பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், அனைவருக்கும் சொர்க்கத்தைப் போன்ற வாழ்க்கை கிடைப்பதில்லை.
மாறாகச் சிலருக்கு மிக மோசமான வாழ்க்கையில் மறக்கவே முடியாத சம்பவங்கள் நடந்துவிடுகிறது. அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
ஆபரேஷன் பூமாலையை கண்டு மிரண்ட பிரபாகரன்
ராதா மனோகர் : 1987 ஆண்டு மே மாதத்தில் இலங்கை ராணுவம் யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றும் முயற்சியில் வெற்றியின் விளிம்பில் நின்றது.
அச்சுவேலி வரை வந்துவிட்டது ராணுவம்.
இலங்கை ராணுவத்தின் ஆபரேஷன் லிபேரேஷன் என்ற ராணுவ முன்னெடுப்பு வடமராட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் நடத்தப்பட்டது
சுமார் 4000 படையினர் குவிக்கப்பட்டு ஈவு இரக்கம் இல்லாமல் கடுமையாக ராணுவம் போரிட்டது
அன்றைய உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலீயின் நேரடி கண்காணிப்பில் நடத்தப்பட்டது (லலித் அத்துலத் முதலி ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தின் மாணவர் தலைவராக இருந்தவர்)
அந்த ஆபரேஷன் லிபேரேஷன் ஈழப்போராட்டத்தின் முடிவுரையை எழுதி கொண்டிருந்த காலம் அது.
இலங்கை சிங்கள இனவாதிகளோடு கைகோர்த்த சிங்கள இடதுசாரிகள் - வரலாறு
![]() |
![]() |
Sarawanan Komathi Nadarasa : 1966 - மொழிப்போராட்ட தியாகி ரதனசார தேரர்!
1966 இல் மொழிப்போராட்டத்தில் உயிர்நீத்த தியாகியாக அறியப்படுபவர் தம்பராவே ரதனசார தேரர். 1966 ஜனவரி 8 கொண்டு வரப்பட்ட தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்தை எதிர்த்து அன்றே பேரினவாத சக்திகள் நடத்திய மாபெரும் ஊர்வலத்தில் கலந்துகொண்ட பிக்கு கொள்ளுபிட்டியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி இறந்தார்.
இந்த நிகழ்வுகளைப் பற்றி விரிவான ஒரு கட்டுரையை தொடங்கினேன். அது ஒரு சிறு நூலாக உருப்பெருமளவுக்கு நீண்டுவிட்டது.
தமிழர்களுக்கு மொழி அந்தஸ்து கிடைக்கக்கூடாது என்று போராடிய அந்தத் “தியாகியை” ஆண்டுதோறும் ஜனவரி 8 அன்று நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
இடதுசாரிக் கட்சிகளின் அழிவு ஆரம்பமான இடம் அந்த சட்டமே. அந்த சட்ட விவாதம் 1966 ஜனவரி 8 ஆரம்பித்து ஜனவரி 11 நள்ளிரவு வரை நீண்டது.
ஈரானிய துறைமுகங்களுக்கு அமெரிக்கா முற்றுகை: சர்வதேச கடற் பகுதியில் பதற்றம்
hirunews.lk : ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடல்வழித் தடை ஆரம்பமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் பொருளாதாரத்தை முடக்கவும், அவர்கள் ஹோர்முஸ் நீரிணையில் வசூலிக்கும் கட்டணங்களைத் தடுக்கவும் இந்த அதிரடி நடவடிக்கையை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தத் தடையை மீறும் அல்லது அமெரிக்கக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் எவரும் கடுமையாகத் தாக்கப்படுவார்கள் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஐஸ்கிரீம் கடையில் மின்சார வாகன பாட்டரி வெடித்து தீ . தம்பதி உயிரிழப்பு . ஆற்காட்டில் சோகம்!
News18 on ஆற்காடு தேவி நகர் மகாவீர் ஐஸ்கிரீம் கடையில் மின்சார வாகன பேட்டரி வெடித்து தீ, உரிமையாளர் பவன்லால் மனைவி சுந்தரி உயிரிழப்பு, போலீஸ் விசாரணை தொடர்கிறது
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் ஐஸ்கிரீம் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், தம்பதி உயிரிழந்தனர்.
ஆற்காடு அடுத்த தேவி நகர் பகுதியில் 'மகாவீர் ஐஸ்கிரீம்' என்ற பெயரில் கடை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளரான பவன்லால் மற்றும் அவரது மனைவி சுந்தரி ஆகியோர் திங்கள்கிழமை அதிகாலை ஐஸ்கிரீம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கடையின் உள்ளே இருந்த மின்சார வாகனத்தின் பேட்டரி பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வருகிறார்! புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் - அட்லீ அல்லது நெல்சன் இயக்குவார் என்று தெரிகிறது
James Vasanthan : விஜய்யின் அரசியல் ஆலோசகராக இருந்து அவரைப்பற்றிய எல்லாம் அறிந்த பிறகு வெளியேறிய ஒருவருடன் நேற்று பேசிக்கொண்டிருந்தேன்.
"முதல்வர் நாற்காலியில் அமரவேண்டும் என்கிற அதிகார வெறியில்தானங்க அவர் அரசியலுக்கே வந்தாரு. He just wants power to show his might. உதயநிதியின் வளர்ச்சியை அவரால் தாங்கமுடியல."
"போதாததுக்கு அங்க இங்க இருந்து கூட ஒட்டிக்கொண்ட எல்லாரும் அவருக்கு ஆசை வார்த்தை காட்ட, தான் அந்த இடத்தை சந்தேகமே இல்லாமல் எளிதாகப் பிடித்துவிடுவோம் என்று நினைத்து, அவர்கள் சொன்னதையெல்லாம் நம்பி களத்தில் இறங்கினார்."
"முதலில் ரொம்ப நம்பிக்கையாகத்தான் இருந்தார். போகப்போகத்தான் அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விளங்க ஆரம்பித்தது. நிச்சயம் இது நடக்காது என்று தெரியத் தொடங்கும்போது, பல பித்தலாட்டங்களைச் செய்யத் தொடங்கினார்."
"திமுகவால் தனக்குத் தொல்லை என்பது போல பொய்யாகப் பேசத் தொடங்கினார். அவருடைய ரசிகர்களும் அதை நம்பினார்கள். கூட இருக்கிற நரிகளின் ஆலோசனைப்படி 'ஜனநாயகன்' படத்தையும் leak செய்தார்."
திங்கள், 13 ஏப்ரல், 2026
சவுக்கு சங்கரின் தாயார் கமலா காலமானார்
hindutamil.in -வேட்டையன் : சென்னை: சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரியான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் தாயார் கமலா காலமானார். சவுக்கு சங்கர் சிறையில் உள்ள நிலையில் தன் மகனை பார்க்காமலேயே அவரது உயிர் பிரிந்தது.
சவுக்கு மீடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீஸார் 2 மோசடி வழக்குகளைப் பதிவு செய்து கடந்த டிச.13 அன்று கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் மார்ச் 25 வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
யாழ் – தொல்புரம் கோயிலில் இளைஞர் அடித்து கொலை
வீரகேசரி யாழ்ப்பாணம் – தொல்புரத்தில் இரு இளைஞர் குழுக்கள் இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று (12) இரவு 11 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஒரே கிராமத்தினை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக முரண்பாடு நிலவி வந்துள்ளது.
இந்நிலையில் அங்குள்ள ஆலயம் ஒன்றின் நிர்மாணப்பணிகளின் போது, நேற்று மேலும் இரண்டு இளைஞர்களுடன் வந்த சந்தேகநபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வவுனியா ஓமந்தை இந்திய ராணுவ முகாமில் புலிக்கொடி!. 7-august 1987
ராதா மனோகர் : ராஜிவ் ஜேயார் ஒப்பந்தத்தின் காரணமாக இலங்கை வந்த இந்திய அமைதி படையை புலிகள் கோலாகலமாக வரவேற்றார்கள்!
இவர்களுக்கு இடையே ஒரு கல்யாண வீட்டுக்கு நிகரான கொண்டாட்டம் இருந்தது
இந்திய ஹெலிகாப்டர்களில் தங்கள் தளபதியின் மணப்பெண்ணை அழைத்து வந்த கூத்தெல்லாம் கூட நடந்தது.
பரஸ்பரம் உணவு பரிமாறினார்கள்.
இந்திய படையினரும் கூட புலிகளை இட்டு பெருமிதம் கொண்டிருந்தனர்
ஒருவேளை புலிகளை ஒரு இந்து வீரர்கள் என்ற நோக்கத்தில் அணுகினார்களோ தெரியவில்லை.
இவர்களுக்கு இடையேயான அந்த தேன்நிலவு எப்படி கசந்தது?
பச்சையாக சொன்னால் புலிகளுக்கே உரித்தான பேராசையும் முரட்டுத்தனமும் கத்துக்குட்டித்தனமும் எல்லையற்ற பாசிச குணாம்சம் அதில் அடங்கி இருக்கிறது!
.7-august 1987 -ஈழநாடு பத்திரிகை
வவுனியாவில் இந்திய இராணுவத்தினர்
ஓமந்தை ராணுவ முகாமில் புலிக்கொடி!
ஞாயிறு, 12 ஏப்ரல், 2026
நீங்கள் ஏன் பதவி இறக்கப்பட்டீர்கள்? - பழனிவேல் தியாகராஜனுக்கு குஷ்பு கேள்வி
hindutamil.in - ஒய்.டேவிட் ராஜா : மதுரை: “நீங்கள் ஏன் பதவி இறக்கப்பட்டீர்கள் என்பதை தெரியப்படுத்துங்கள்” என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளராக சிட்டிங் எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் 3வது முறையாக போட்டியிடுகிறார். இவருக்கும், இவரை எதிர்த்து புதிய நீதி கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக வார்த்தை போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆஷா போஸ்லே காலமானார் – 9 வயத்தில் இருந்து 92 வயது வரை
BBCTamil : 9 வயதில் தொடங்கிய இசைப் பயணம்.. யார் இந்த ஆஷா போஸ்லே.? கடந்துவந்த பாதை!
இசை உலகில் கொடிக்கட்டிப்பறந்த பாடகி ஆஷா போஸ்லே தன்னுடைய 92 வயதில் வயதுமூப்பு காரணமாக இயற்கை எய்தினார்.
ஆஷா போஸ்லே.. இந்திய இசையின் மயக்கும் குரல். இசை உலகில் பல சாதனைகள் புரிந்த குரலை இன்று மரணம் மௌனமாக்கி இருக்கிறது. ஏகப்பட்ட பாடல்கள் மூலம் அனைத்து மொழி ரசிகர்களின் மனங்களிலும் இடம்பெற்றவர், வாழ்க்கை பயணமும், இசைபயணமும் கவனிக்க தக்கது.
டொமினிக்கன் குடியரசும் மிராபேல் சகோதரிகளும் - வரலாறு
Neander Selvan : டொமினிக்கன் குடியரசை 31 ஆண்டுகள் (1930 - 1961) தனது இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்தவர் ரஃபேல் ட்ருஜிலோ. சுமார் 50,000 பேரின் கொலைகளுக்குக் காரணமான இவர், பயப்பட்டது இருவருக்கு மட்டுமே. ஒன்று கத்தோலிக்க திருச்சபை, இரண்டு மிராபெல் சகோதரிகள்.
டொமினிக்கன் ரிபப்ளிக்கின் சகல சக்திகளும் வாய்ந்த அந்தச் சர்வாதிகாரி ஒருமுறை, "எனக்கு இருக்கும் இரண்டு பெரிய பிரச்சினைகள் கத்தோலிக்க திருச்சபையும், மிராபெல் சகோதரிகளும்தான்" என்று குறிப்பிட்டார். ஆனால் அவர் பயந்தது போலக் கத்தோலிக்க சபை அவரை வீழ்த்தவில்லை, மிராபெல் சகோதரிகள் தான் வீழ்த்தினார்கள்.
நல்லதொரு சைவ உணவகம் KMS மெஸ்
![]() |
![]() |
ந. சரவணன் : மதிய உணவிற்கு அருகில் உணவகம் இருக்கிறதா என்று அலுவலக தோழர் ஒருவரிடம் கேட்க விபரம் கூறி அனுப்பி வைத்தார்.
ஆனால் அவர் கூறிய உணவகம் இன்று விடுமுறை. அருகிலிருந்தவர்களிடம் வேறு உணவகம் இருக்கிறதா என கேட்க, இன்னும் சற்று முன்னே செல்லுங்கள் இடப்புற ஒழுங்கையில் உணவகங்கள் இருக்கிறது என்றார் ஒருவர்.
சென்று பார்த்தால், சுமாரான முகப்பு தோற்றத்துடன் KMS மெஸ் என இருந்தது. சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்திற்கு பின்புறம் இருக்கும் பெரும்பாலான கட்டிடங்கள் மேன்சன்களாக இருப்பதால் அநேக மெஸ் இருக்கிறது. சென்னை வந்த ஒரு வாரத்தில் பல்வேறு மெஸ்களில் சாப்பிட்டு மெஸ் இப்படிதான் இருக்கும் எனும் அனுமானம் இருந்தது. திருச்சி அனுபவமும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களின் மெஸ் அனுபவமும் இருந்ததால் கற்பனையில் இப்படித்தான் இருக்கும் சமாளித்துக்கொள்ளலாம் என்று சென்று சாப்பாட்டிற்கான டோக்கன் வாங்கியதும் நெய் பருப்பு வேண்டுமா என கேட்டு அதற்கும் தனியாக டோக்கன் கொடுத்தார் ஒருவர். ஒரு இடம் காலியாக இருக்க அங்கு அமரப்போகையில், காத்திருங்கள் அனைவரும் எழுந்த பின் அமரலாம் என்றார். பசி அதிகமாக இருந்தது. டோக்கன் வாங்கியாயிற்று என அங்கேயே நின்றுக்கொண்டிருந்தேன்.
இந்திய நிரந்தர விசா உள்ள இலங்கையர்களுக்கு (OCI card) தமிழகத்தில் வேலை வாய்ப்பு
Sudee Subee (சுடீ சுபீ) திறமைகளை இணைக்கிறது, எதிர்காலத்தை உருவாக்குகிறது
இலங்கை கடவுச்சீட்டு மற்றும் OCI அட்டைதாரர்களுக்கு பிரத்தியேகமானது
இந்தியாவில் உள்ள எங்கள் தயாரிப்புக் குழுக்களில் சேர ஆர்வமுள்ள நபர்களை நாங்கள் தேடுகிறோம்
நீங்கள் அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநராக இருந்தாலும் சரி அல்லது ஊக்கமுள்ள புதியவராக இருந்தாலும் சரி, உங்களுக்கென எங்களிடம் இடம் உண்டு.
பதவிகள் அனுபவம் சம்பளம்
உற்பத்தி மேலாளர் 5 - 10 ஆண்டுகள் 40,000- 90,000
சரக்கு மேலாளர் 2 - 5 ஆண்டுகள் 20,000 - 35,000
மேற்பார்வையாளர் 3 - 6 ஆண்டுகள் 18,000 - 30,000
இயந்திர இயக்குபவர் 2- 5 ஆண்டுகள் 15,000 -25,000
தரச் சரிபார்ப்பாளர் 1-3 ஆண்டுகள் 12,000 -18,000
தையல்காரர் / தையல் வேலை 1-3 ஆண்டுகள் 12,000 -20,000
பொதியிடல் பணியாளர் 0- 2 ஆண்டுகள் 10,000 - 14,000
உதவியாளர் / இயக்குபவர் 0-1 ஆண்டு 10,000 - 15,000
நன்மைகள் மற்றும் தகவல்
வழங்கப்படும் பயிற்சி : புதியவர்களுக்கு அனைத்து திறன் சார்ந்த வேலைகளுக்கும் முழுமையான பயிற்சி வழங்கப்படும்
தகுதி : அனைவருக்கும் பொருந்தும் செல்லுபடியாகும் OCI அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகளைக் கொண்ட அனைத்து இலங்கை குடிமக்களும்
பணிபுரியும் இடம் : இந்தியா ( இடமாற்றத்திற்கான உதவி வழங்கப்படும்)
விண்ணப்பிக்க எங்களைத் தொடர்பு கொள்ளவும் : +91 9843680194






