திங்கள், 29 மே, 2017

டெல்லி ..பிறந்த உடனே நடக்கும் அதிசய குழந்தை!"


டெல்லியில் பிறந்த குழந்தை ஒன்று பிறந்து சில நிமிடங்களே ஆன நிலையில் செவிலியரின் உதவியோடு நடக்கப்பழகும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கண்கள் அரைத்தூக்கத்தில் பாதியே திறந்திருக்கும். பொதுவாக குழந்தை பிறந்து சில மாதங்கள் கடந்த பிறகு தான் தவழ ஆரம்பிக்கும். பின்னர், சிறிது காலம் உட்காரத் தொடங்கி, முழங்கால்களால் மண்டியிட்டு தவழ தொடங்கி, அதன் பிறகே எழுந்து நின்று, நடக்க ஆரம்பிக்கும். ஆனால் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்த இந்த குழந்தை பிறந்து சில நிமிடங்களில் செவிலியர் ஒருவர் உதவியோடு உடலிலும், கால்களிலும் பலம் இல்லாத நிலையில் நடக்கப் பழகுகிறது. கடந்த மே 26ம் தேதியிலிருந்து பிஞ்சுக் கால்களால், இந்த குழந்தை நடக்கப் பழகும் காட்சியை தற்போது வரை 5 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து வியந்துள்ளனர்.  minnambalam

கருத்துகள் இல்லை: