சனி, 28 மார்ச், 2026

மத்திய கிழக்கை சீரழிக்க ஈரான் இஸ்லாமிய கடும்போக்கு அரசு முயல்கிறது.

 ராதா மனோகர் : உலகம் முழுவதும் இஸ்ரேலை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் 
இதை விட முக்கியமான லெபனானை பற்றி பேசுவதிலை 
லெபனானுக்குள் ஊடுருவி இருக்கும் ஹிஸ்புல்லா என்பது வெறும்  ஒரு  பயங்கரவாத இயக்கம் அல்ல 
அது ஈரானின் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை அரங்கேற்ற ஈரானால் பணமும் ஆயுதங்களும் பயிற்சியும் கொடுத்து லெபனானுக்குள் ஊடுருவிய அமைப்பாகும் 
இந்த ஹிஸ்புல்லா அமைப்பானது ஈரானிய இஸ்லாமிய தீவிரவாத அரசை லெபனானுக்குள் அமைக்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறது 
லெபனானுக்குள் மட்டுமல்லாமல் முழு மத்திய கிழக்கையும் ஈரான் போன்று ஒரு அடிப்படை வாத மதவெறி ஆட்சியை அமைப்பதற்காக ஈரான் ஆட்சியாளர்களால் ஹிஸ்புல்லா ஹமா ஐ எஸ் ஐ எஸ் ஹுத்தி போன்ற இயக்கங்கள் வழி நடத்த படுகின்றன 
இன்று லெபனானில் என்ன நடக்கிறது?

திமுக வேட்பாளர்கள் பட்டியல் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

 தினமலர் : சென்னை: 164 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் 60க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். அமைச்சராக இருந்த காந்தி, மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சென்னையில் நிருபர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது .கூட்டணி கட்சிகள் 11 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், 59 தொகுதிகளில் கூட்டணி கட்சி சின்னங்களிலும் போட்டியிடுகிறோம் என்றார்.
தொடர்ந்து அவர் வெளியிட்ட பட்டியலில் வாய்ப்பு கிடைத்தவர்கள் விவரம்
1. கன்னியாகுமரி - மகேஷ்
2. நாகர்கோயில் - ஆஸ்டின்
3. ராதாபுரம்- அப்பாவு

யாழ்மாவட்டம் திருட்டு மணல் உழவு இயந்திரம் மோதி போலீஸ் உயிரிழப்பு!

hirunews : சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் மோதியதில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன். மற்றுமொரு காவல்துறை உத்தியோகத்தர் படுகாயம் அடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் தென்மராட்சி கெற்பேலி பகுதியில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சட்ட விரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து கொடிகாமம் காவல்துறையினர் இருவர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்..வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணங்கள்

 tamil.oneindia.com-  Mani Singh S  :  சென்னை: திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் மற்றும் வேட்பாளர் லிஸ்ட் நேற்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாமதம் ஆகியுள்ளது. 
எப்போதும் ரேசில் முந்தும் திமுக இந்த முறை வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு கூட்டணி கட்சிகள் வைக்கும் நெருக்கடியே காரணம் என்று சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலில் திமுக 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ்-28, தேமுதிக -10, விடுதலைச் சிறுத்தைகள்-8, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு-5, இந்திய கம்யூனிஸ்டு-5, ம.தி.மு.க.-4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-2, மனிதநேய மக்கள் கட்சி-2, கொங்குநாடு மக்கள் கட்சி-2 என்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

புதுசேரியிலும் முதுகில் குத்திய காங்கிரஸ் - ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்!

 tamil.oneindia.com -  Shyamsundar : அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்?
சென்னை: திமுக கூட்டணியில் 28 இடங்களை காங்கிரஸ் தட்டித் தூக்கிய போதே, உடன்பிறப்புகள் மத்தியில் ஒருவித சலசலப்பு இருந்தது. இப்போது அது எரிமலையாய் வெடித்திருக்கிறது. காரணம், காங்கிரஸ் கேட்டிருக்கும் தொகுதிகள் அனைத்தும் திமுகவின் 'கோட்டை' என்று சொல்லப்படும் வலுவான இடங்கள்.
"ஜெயிக்கவே முடியாத தொகுதிகளை எங்களிடம் தள்ளிவிட்டு, நாங்கள் ரத்தம் சிந்தி வளர்த்த தொகுதிகளை அவர்கள் கேட்பதா?" என மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
புதுச்சேரி 'நட்பு ரீதியான' மோதல்? ஸ்டாலின் செம அப்செட்!
தமிழ்நாட்டை விட புதுச்சேரியில் நிலைமை படுமோசம். அங்கே காங்கிரஸ் - திமுக - விசிக இடையே தொகுதிப் பங்கீடு இழுபறியாக இருந்த நிலையில், பல தொகுதிகளில் திமுக மற்றும் விசிக வேட்பாளர்களுக்கு எதிராக காங்கிரஸ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. "இதைவிட ஒரு மோசமான 'நட்பு ரீதியான' போட்டியை பார்க்க முடியாது" என புதுவை திமுகவினர் கொந்தளிக்கின்றனர்.
ராகுல் காந்தி மீது பாயும் கோபம்!

வெள்ளி, 27 மார்ச், 2026

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகள் லிஸ்ட்!

minnambalm :மின்னம்பலம் Mathi :  திமுக (DMK) கூட்டணியில் காங்கிரஸ் (Congress) கட்சி மொத்தம் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 23 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளன. 5 தொகுதிகளுக்கு மட்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகள்
1) பொன்னேரி (தனி)
2) திருப்பெரும்புதூர் (தனி)
3) சோளிங்கர்
4) உதகமண்டலம்
5) ஈரோடு கிழக்கு

காங். தொகுதிகள் தேர்வு ரகசியமாகவே நடந்தது, வெளிப்படைத் தன்மை இல்லை; ஜோதிமணி புகார்

  தினமலர் : சென்னை;காங்கிரஸ் தொகுதிகள் தேர்வு அனைத்தும் ரகசியமாகவே நடந்தது, வெளிப்படைத்தன்மை இல்லை என்று அக்கட்சியின் எம்பி ஜோதிமணி புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது பதிவு;
காங்கிரஸ் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. வெளிப்படைத் தன்மையோடும், விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 
அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது.

மோடியோடு படுத்து பதவி வாங்கிய பெண்கள்?

May be an image of one or more people Ethiraj Madhavan Madhavan  ;  இந்திய அரசியலில் மாபெரும் வெடிப்பு......
இந்தப் பெண் மது கிஷ்வர், இவர் இந்துத்துவா சித்தாந்தத்தின் ஆதரவாளர், 
இவர் 2013-2014 இல் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளரானார். 
மோடியை பற்றி ("Modi, Muslims and Media") புத்தகம் எழுதி, ஊடகங்களை விமர்சித்து, மோடியை டெவலப்மெண்ட் மேன் என்று அழைத்தார்.
இந்திய அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக நேற்று இரவு ட்வீட், பிரதமர் மோடி மீது தீவிர குற்றச்சாட்டு... இதுதான் முழு ட்வீட் 👇
"2014 மே மாதம் மோடி ஆட்சியை கைப்பற்றிய போது அவரிடம் இருந்து நான் என் பாதுகாப்பான தூரத்தை கடைபிடித்தேன். என் புத்தகத்தின் நகலை நானே அவர்களுக்குக் கொடுக்கவில்லை. 
இப்போதுதான் கையொப்பமிடாத பிரதியை அவருக்கு பிடித்த பீரோ பாரத் லால் வழியாக அனுப்பி வைத்தேன்!

வியாழன், 26 மார்ச், 2026

இத்தாலி பொலிஸில் பணியாற்றிய இலங்கையர் பலி

 வீரகேசரி : இத்தாலி பொலிஸ் சேவையில் பணியாற்றிய ஒரேயொரு இலங்கை அதிகாரி என அறியப்படும் ஷெஹான் பெர்னாண்டோ, மிலானோ நகரில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
வென்னப்புவ – தல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய ஷெஹான் பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மிலானோ நகரில் அமைந்துள்ள பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், உடலுக்கு அருகில் அவரது சேவை துப்பாக்கி மீட்கப்பட்டதாகவும் இத்தாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஈரான் அமெரிக்காவின் 15 அம்ச திட்டம் குறித்து பரிசீலிக்கிறது- ஈரானிய வெளிவிவகார அமைச்சர்!

  hirunews.lk  : மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்மொழிந்துள்ளதாகக் கூறப்படும் '15 அம்ச சமாதானத் திட்டத்தை' ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராகச்சி உடனடியாக நிராகரிக்கவில்லை.
எனினும், அந்தத் திட்டம் குறித்த ஈரானின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் இன்னும் தெளிவற்ற தன்மையே காணப்படுகின்றது.
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்துத் தெரிவித்த அவர், அமைதிப் பேச்சுவார்த்தைக்காகச் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டதுடன், அவை ஒருசில இடங்களில் '15 அம்சத் திட்டம்' என அழைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

புதன், 25 மார்ச், 2026

ஒற்றை வதந்தி.. 10 தொகுதிகளை அள்ளி தந்த திமுக.. தேமுதிகவுக்கு ‘ஜாக்பாட்’ அடித்தது எப்படி

 minnambalam.com - Mathi  :   “அவனுக்கு என்ன தூங்கிவிட்டான்.. அகப்பட்டவன் நானல்லவா..”என பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. இந்த நேரத்துல தத்துவ பாடல்?
தத்துவம் காலத்துக்கும் பொருந்துமே.. அந்த டிபேட் இப்ப எதுக்குய்யா? நாம ஏற்கனவே சொன்ன மாதிரி தேமுதிக 10 சீட்டை வாங்கி கையெழுத்து போட்டிருச்சே..
தேமுதிகவுக்கு இந்த 10 சீட்டை திமுக கொடுத்ததுக்கு பின்னாடி ‘நிறைய’ சம்பவங்கள் இருக்குய்யா.. வரிசையா சொல்றேன்..
தேமுதிகவை அதிமுக கூட்டணியில இருந்து திமுக கூட்டணிக்கு கொண்டு வரனும்னு 2 மாசத்துக்கு மேல தொடர்ந்து பிரேமலதாகிட்ட பேசிகிட்டு இருந்தவர் எ.வ.வேலு..

கமல் முடிவுக்கு காரணம் என்ன? தியாகமா; தந்திரமா?

https://images.dinamalar.com/data/large_2025/Tamil_News_lrg_4182037.jpg

தினமலர் : கமல்ஹாசனுக்கு ஒரு ராஜ்யசபா ‛சீட்' கொடுத்து அமுக்கியது போதும் என திமுக நினைத்துவிட்டது போலும். அதனாலேயே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் என மக்கள் நீதி மய்யத்திற்கு திமுக அழுத்தம் கொடுத்தது. 
அந்த அழுத்தத்தின் வெப்பத்தை உணர்ந்து கொண்ட கமல், தன் விருப்பமின்மையை வெளிப்படுத்தும் வகையில், 'தேர்தலிலேயே போட்டியிடவில்லை' என்று ஜகா வாங்கி விட்டார்.
இந்த ‛‛டுவிஸ்ட்' யாரும் எதிர்பாராதது. இது, கமலின் தந்திரமான, புத்திசாலித்தனமான முடிவு, என்று சிலரும், தேர்தலில் போட்டியிடாத கட்சி, களத்தில் இருந்து காணாமல் போகும் என்று சிலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமேரிக்கா ஈரான் பேச்சு வார்த்தை -15 நிபந்தனைகளுடன் - இஸ்ரேல் தரப்பு அச்சம்

 டைம்ஸ் ஆப் இந்திய : 15 நிபந்தனைகளுடன் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம்! – இது குறித்து இஸ்ரேல் தரப்பு அச்சம்
– அந்த 15 நிபந்தனைகள் எவை முழுவிபரங்கள்…
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாக டிரம்ப் கூறுகிறார், முன்கூட்டியே போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் என இஸ்ரேல் அஞ்சுவதாகக் கூறப்படுகிறது.
ஒப்பந்தத்திற்காக வாஷிங்டன் தெஹ்ரானுக்கு 15 நிபந்தனைகளை அனுப்பியதாக அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் உறுதிப்படுத்தியுள்ளார்;
உச்சிமாநாடு சில நாட்களில் பாகிஸ்தானில் நடைபெறக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன;
 அமெரிக்காவிற்கு ‘மிகப் பெரிய பரிசை’ வழங்கியதாக அமெரிக்க அதிபர் கூறுகிறார்.

ரணில் விக்கிரமசிங்கா (24 March 1949) அவர்களுக்கு இன்று 76 ஆவது பிறந்தநாள்.

 முன்னாள் ஜனாதிபதி திரு  ரணில் விக்கிரமசிங்கா (24 March 1949) அவர்களுக்கு இன்று 76 ஆவது பிறந்தநாள். 
எப்போதும் தன்னை ஒரு மாணவனாகவே கருதும்  ஒப்பற்ற கல்வியாளர்தான்  திரு ரணில் விக்கிரமசிங்க அவர்கள்.
இவரின் வரலாறு இன்னும் முறையாக எழுதப்படவில்லை.
இவர் தொடர்புடைய சில விடயங்களை தற்போது குறிப்பிடலாம் என்றெண்ணுகிறேன் 
நாட்டில் அமைதியை ஏற்படுத்த புலிகளோடு ஆறு சுற்று சமாதான பேச்சுவார்த்தையை மேற்கொண்டார் 
 16–18 September 2002, Bangkok
31 October-3 November 2002, Bangkok
2–5 December 2002, Oslo
6–9 January 2003, Bangkok
7–8 February 2003, Berlin
18–21 March 2003, Tokyo
(இந்த பேச்சுக்களில் கலந்து கொள்ள தாய்லாந்து சென்ற புலி தலைவர்கள் இரவு நேரங்களில் உல்லாச விடுதிகளில் சல்லாபித்த கதைகளை திரு அன்டன் பாலசிங்கம் விலாவரியாக கூறி இருந்தது தெரிந்ததே)

1996 இல் ஜெயலலிதாவின் 100 கோடியை புறக்கணித்த கமல் ஹாசன்

Kalaignar 100 Ceremony Updates: Kamal Haasan Rajnikanth Full Speech Check  Here | Kalaignar 100: நான் நெருப்பு இல்லை... செருப்பு - ரஜினியிடம் சொல்லிய  கலைஞர் - நினைவுக்கூர்ந்த கமல் ...

ராதா மனோகர் :  அம்மையார் ஜெயலலிதாவின் 100 கோடியை புறக்கணித்த கமலஹாசன்!  ஒரு பிளாஷ் பேக் ( மீள் பதிவு 28 -5-2025)
சுதாகரன் ஆடம்பர திருமணத்திற்கு பின்பு (1996 இல்) நடந்த தேர்தலில் அம்மையார் ஜெயலலிதா தன் தோல்வியை ஓரளவு ஊகித்து விட்டார்.
எப்படியாவது என்ன விலை கொடுத்தாவது ஆட்சியை தக்கவைத்து கொள்ள கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்
அந்த தேர்தலில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் திரு கமலஹாசனுக்கு 100 கோடி தருவதாக தூண்டில் விட்டு பார்த்தார்! 
1996 இல் நூறு கோடி என்பது சாதாரண தொகை அல்ல.
ஆனாலும் கமலஹாசன் அதை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்து விட்டு அமேரிக்கா சென்றுவிட்டார்
செல்லும்போது கலைஞரை சந்தித்து அய்யா நீங்கள் வெற்றி பெறப்போகிறீர்கள்,
இதை அம்மையாரின் டீல் முயற்சியை பற்றியும் கலைஞரிடம் கூறிவிட்டு சென்றார்.

செவ்வாய், 24 மார்ச், 2026

கமலுக்கு எப்படி நன்றி சொல்வதென தெரியவில்லை : ஸ்டாலின் பதிவு! I

 மின்னம்பலம் -  Kavi :  2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 
தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும் ஏற்புடையதாக இல்லை என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ள கமல்ஹாசன், திமுக கூட்டணிக்கு  முழு ஆதரவு கொடுப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
இதைத்தொடர்ந்து முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், கமல்ஹாசனுக்கு நன்றி கூறியுள்ளார். 

சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை: கமல் அறிவிப்பு

 தினமலர் : சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் மநீம போட்டியிடாது என அக்கட்சி தலைவர் கமல் அறிவித்துள்ளார்.
கூட்டணி தர்மம்
இது தொடர்பாக கமல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த லோக்சபா தேர்தலில், தேச நன்மைக்காக திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தோம். 
கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். 
அதன் விளைவாக, மக்கள் நீதி மய்யத்தின் குரல் ராஜ்யசபாவில் ஒலித்தது. அன்று முதல் இன்று வரை நம்முடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், கூட்டணி தர்மத்தை பேணி வருகிறோம்.

திங்கள், 23 மார்ச், 2026

ஈரான் பணிந்தது- பேச்சு வார்த்தைக்கு தயார் - தாக்குதலை 5 நாட்கள் நிறுத்துவதாக டிரம்ப் அறிவிப்பு

 BBC News தமிழ்   மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஒரு 'முழுமையான தீர்வு' காண்பது குறித்து இரானுடன் 'பயனுள்ள பேச்சுவார்த்தை' நடைபெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.
ட்ரூத் சோஷியல் தளத்தில், வெளியிட்ட ஒரு பதிவில், "அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே, கடந்த இரண்டு நாட்களாக, மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஒரு முழுமையான தீர்வு காண்பது குறித்து, மிகச் சிறந்த மற்றும் பயனுள்ள உரையாடல்கள் நடைபெற்றுள்ளன" என்று கூறியுள்ளார் டிரம்ப் .

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீஸாரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

 hindutamil.in - கி.மகாராஜன்  :  மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், 
அவரது மகன் பென்னிக்ஸ். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். 
கரோனா ஊரடங்கின்போது கட்டுப்பாட்டு நேரத்தை தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறி இவர்கள் இருவரையும் போலீஸார் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி இரவு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, 

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 180 + தொகுதிகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்! தமிழ்நாடு

 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 180 + தொகுதிகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.
சென்னை பிரஸ் கிளப்பில் கருத்து கணிப்பு வெளியீடு!

Air Canada ஓடுதளத்தில் இருந்த தீயணைப்பு வாகனம் மீது மோதிய விமானம்!L: இருவர் உயிரிழப்பு

 மாலைமலர் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இன்று (23) அதிகாலை ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மாண்ட்ரியலில் இருந்து வந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுதளத்தில் தரையிறங்கியபோது அங்கு குறுக்கே வந்த ‘ட்ரக் 1’ என்ற தீயணைப்பு வாகனத்தின் மீது மோதியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், இரு தீயணைப்பு வீரர்கள் உட்பட 70 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் இருந்த பயணிகள் அவசரகால கதவுகள் மூலம் வெளியேற்றப்பட்டனர். 

மகாராஷ்ட்ரா ஆசிரமத்தில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் .. சி சி டிவியில் மாட்டிய பாஜக பிரமுகர்கள்

 Maha Laxmi  :  சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டம், கனடா பகுதியில் இருக்கும், மிர்கௌம் கிராமத்தில்,
இஷனேஷ்வர் மகாதேவ் கோவில் டிரஸ்ட் தலைவரும்
ஹெர்மிடேஜ் ஆசிரம சாமியாரும்,
பாஜக சாதுக்கள் செயலக தலைவருமான அஷோக் கராத்(67) போந்து பாபா என்றும் இவரை அழைப்பதுண்டு.‌
இந்த சாமியார் தன் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து ஜல்சா வேலைகளில் ஈடுபட்டுள்ளார். 
மேலும் அந்தப் பெண்களிடம் இந்த காணொளியை காண்பித்து மிரட்டி தன்னுடைய காம இச்சையை பல வருடங்களாக தீர்த்து வந்துள்ளார். கூடுதலாக பாஜக தலைவர்களுக்கும் அந்தப் பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். 

ஞாயிறு, 22 மார்ச், 2026

ஈரான் அல் காமினிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் இந்திய இடதுசாரிகள்

 Sridhar Subramaniam : ஈரான்-அமெரிக்கப் போரில் எழும் எதிர்வினைகளில் என்னை ரொம்பவும் ஆச்சரியமூட்டியது ஒரு விஷயம்: 
கமேய்னிக்கு இந்திய இடதுசாரிகள் கொடுத்த / கொடுக்கும் ஆதரவும் மரியாதையும்தான். 
பலர் கமேய்னியின் ஃபோட்டோவை முகநூல் முகப்புப் படமாகவே வைத்திருக்கிறார்கள். 
கமேய்னி ஒரு ஆயதொல்லா. ஆயதொல்லா என்றால் 'அல்லாஹ்வின் பிரதிபலிப்பு' அல்லது 'அல்லாஹ்வின் அறிகுறி' என்று அர்த்தம். 
அதாவது அவர் உண்மையில் ஒரு மதத் தலைவர். 
அவருடன் மோடியைக் கூட ஒப்பிட முடியாது. 
காரணம் மோடி மதத்தலைவர் அல்ல. மோகன் பகவத்தையும் ஒப்பிட முடியாது. 
காரணம், அவரிடம் மத அதிகாரம், அரசியல் அதிகாரம் இரண்டுமே இல்லை.     வேண்டுமானால் யோகி ஆதித்யநாத்துடன் ஓரளவுக்கு ஒப்பிடலாம், 
அவரும் ஒரு மடத்தின் தலைவர் என்பதால். 'ஓரளவுக்கு' என்று சொன்னதற்குக் காரணம், யோகி மக்களால் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர். கமேய்னி அது கூட இல்லை. 'நிரந்தர முதல்வர்' என்பது போல 'நிரந்தர அதிபர்'.