இந்த பகிர்வு பதிவில் உள்ளவிடயம் எனக்கு புரியவில்லை புரிந்தவர் தெளிவாக்கவும்
ஷோஃபா நடிகன் விஜய் தனக்கு ஆதரவு கொடுத்த
நாலு சின்ன கட்சிகளுக்கும் ஒரு எம்எல்ஏக்கு 25 ஸ்வீட் பாக்ஸ்னு(இலட்சம்)
தலா 50 ஸ்வீட் பாக்ஸ்ஸ சோஃபாவுல வச்சி கொடுத்து இருக்கான்.
முதல்ல ஓடுன போணியாகாத காங்கிரஸ் தலைவர் தனக்கு மட்டும் தனியா 50 பாக்ஸ் வாங்கியிருக்கார்.
மிச்சம் ஐந்து எம்எல்ஏவும் எத்தனை பாக்ஸ் வாங்குனாங்கன்னு தெரியல?
இதுல காமெடி என்னன்னா போங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில இடம்னு கூட்டியாந்து அல்வா கொடுத்துருக்கானுங்க.
அந்த பக்கம் அடிமை கட்சியில அனகோண்டா மாமியா எப்படியாவது அமைச்சராயிடனும்னு எல்லா அடிமை எம் எல்ஏ கிட்டயும், " எங்கிட்ட ஒயிட் ஸ்வீட் பாக்ஸ்ஸே 4000 இருக்கு.ப்ளாக் ஸ்வீட் பாக்ஸ் எத்தனை ஆயிரம் இருக்கும்னு கணக்கு போட்டு பாருங்க.எனக்கு ஆதரவு கொடுங்கன்னு கேட்டிருக்கா!
வியாழன், 14 மே, 2026
புஷ்பாவின் சோபா ஆட்சி லாட்டரி விற்பனை கொடி கட்டிப் பறக்கும்.கந்து வட்டி தூள் கிளப்பும்.
ஸ்டாலின் கேள்வி : ரூ.2,500 அறிவித்துவிட்டு மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-க்கே இழுத்தடிப்பதா?”
![]() |
இது தொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “மே மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்போது எதற்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு செய்யப் போகிறீர்கள்?
கடைசில லாமா ரோஸ், திரிஷாவோட டேர்டி ஆட்சியா இருக்கும் போல!
இந்த பகிர்வு பதிவில் உள்ளவிடயம் எனக்கு புரியவில்லை புரிந்தவர்களை தெளிவாக்கவும்
ஷோஃபா நடிகன் விஜய் தனக்கு ஆதரவு கொடுத்த
நாலு சின்ன கட்சிகளுக்கும் ஒரு எம்எல்ஏக்கு 25 ஸ்வீட் பாக்ஸ்னு(இலட்சம்)
தலா 50 ஸ்வீட் பாக்ஸ்ஸ சோஃபாவுல வச்சி கொடுத்து இருக்கான்.
முதல்ல ஓடுன போணியாகாத காங்கிரஸ் தலைவர் தனக்கு மட்டும் தனியா 50 பாக்ஸ் வாங்கியிருக்கார்.
மிச்சம் ஐந்து எம்எல்ஏவும் எத்தனை பாக்ஸ் வாங்குனாங்கன்னு தெரியல?
இதுல காமெடி என்னன்னா போங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில இடம்னு கூட்டியாந்து அல்வா கொடுத்துருக்கானுங்க.
அந்த பக்கம் அடிமை கட்சியில அனகோண்டா மாமியா எப்படியாவது அமைச்சராயிடனும்னு எல்லா அடிமை எம் எல்ஏ கிட்டயும், " எங்கிட்ட ஒயிட் ஸ்வீட் பாக்ஸ்ஸே 4000 இருக்கு.ப்ளாக் ஸ்வீட் பாக்ஸ் எத்தனை ஆயிரம் இருக்கும்னு கணக்கு போட்டு பாருங்க.எனக்கு ஆதரவு கொடுங்கன்னு கேட்டிருக்கா!
சட்டமன்றத்தில் தயவு செய்து தனி நபர் தாக்குதலை முற்றாக தவிருங்கள்
![]() |
ராதா மனோகர் : நடிகர் விஜயின் அரசுக்கு எதிராக விமர்சனங்களை வைப்பதில் சிலர் அவசரம் காட்டுவது சரியல்ல என்று தோன்றுகிறது
பொதுவாகவே ஒரு புதிய அரசு பதவி ஏற்றால் மக்களுக்கு கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கும்
அதிலும் விஜய் அரசியலுக்கு புதியவராக இருப்பதால் கொஞ்சம் அனுதாபமும் இருக்கும்
அவரும் பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரி முகத்தை வைத்துக்கொண்டிருக்கிறார்
41 கொலைகளையே தனக்கு ஒன்றும் தெரியாது என்றும்,
அது தன்மீது ஏவிவிட்ட சதியென்று பலரையும் நம்பவைத்த காரிய களவாணி அது.
ஆனாலும் ஆட்சிக்கும் அரசுக்கும் புதுசு
அவரின் அப்பாவி முகத்தை கொஞ்சம் அண்டர் எஸ்டிமேட் பண்ணாமல் இருப்பது நல்லது
கொஞ்சம் பொறுத்தால் அவரின் சுயரூபம் மக்களுக்கு தெளிவாக தெரியக்கூடிய விதத்தில் வெளிவரும்
அதுவரை பொறுத்தல் நல்லது
பிரபாகரனின் குருநாதர் செட்டி தனபாலசிங்கம் முதல் வெள்ளைக்கொடி சரணடைவு வரை
ராதா மனோகர் : தமிழ் தேசிய கூட்டணியின் முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் எம்பி திரு கனகேந்திரன் அவர்களின் பேட்டி!
புலிகள் இயக்கம் உருவானது கல்வியின் காட்டில்தான்!
வல்வெட்டி துறையில் அல்ல
அதை உருவாக்கியது செட்டி தனபாலசிங்கம்
செட்டி தனபாலசந்ததின் சிஷ்யனாகத்தான் பிரபாகரன் போராட்டத்திற்கே வந்தார்
புலிகள் இயக்கத்தின் முதல் பெரிய தாக்குதலை மேற்கொண்டவர் திரு செல்லக்கிளி
இவர் திரு செட்டி தனபாலசிங்கத்தின் ஒன்றுவிட்ட சகோதரன் ஆகும்.
இந்த செல்லக்கிளியின் அண்ணன்தான் இந்த காணொளியில் பேட்டி வழங்கும் திரு கனகேந்திரன் அவர்கள்.
இவர் முல்லை தீவு மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்
இவரை தமிழ் தேசிய கூட்டணி வேட்பாளராக பிரபாகரன்தான் நியமித்தார்
புதன், 13 மே, 2026
TVK அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு- வெளிநடப்பு செய்யும் திமுக
மின்னம்பலம் - Mathi : முதல்வர் விஜய் அரசு மீது இன்று மே 13-ந் தேதி சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்ய கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வென்றது தமிழக வெற்றிக் கழகம். ஆனால் மெஜாரிட்டி இல்லாததால் உடனே ஆட்சி அமைக்க முடியவில்லை. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை.
இதனையடுத்து தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், முஸ்லிம் லீக் கட்சிகளின் 13 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருவதாக அறிவித்தனர்.
செவ்வாய், 12 மே, 2026
ஆசிரியை கர்ப்பம்: மாணவனுடன் உடலுறவு: 3 ஆண்டுகள் கழித்து கிடைத்த சடலம்
மாலைமலர் : இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாடசாலை மாணவன் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் ஒட்டுமொத்த நகரையும் உலுக்கியது. எங்கு தேடியும் கிடைக்காத அந்த மர்மத்தின் முடிச்சு, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சிறிய செல்போன் பழுது நீக்கும் கடையிலிருந்து அவிழ்ந்திருக்கிறது. இந்த சம்பவத்தால் கொல்கத்தா மாநகரம் இன்றும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
யார் இந்த அருண் முகர்ஜி?
கொல்கத்தாவின் புகழ்பெற்ற ‘ஸ்டார் உயர்நிலைப்பள்ளி’யில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவன் அருண் முகர்ஜி. படிப்பில் கெட்டிக்காரன், அமைதியான குணம் என எல்லோராலும் நேசிக்கப்பட்டவன். 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு நாள், பள்ளிக்குச் சென்ற அருண் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவனது பெற்றோர் ராஜேஷ் மற்றும் மாலதி முகர்ஜி, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்தும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. காலப்போக்கில் அந்த வழக்கு ‘கிடப்பில்’ போடப்பட்டது.
ஆளுநரின் பிடியில் சிக்கிய 'ஆதரவு கடிதம்' - நீதிமன்றம் சென்றாலும் பலன் இல்லை?
![]() |
Guna Pdkgobi : கோட்டை விட்ட விஜய்.. ஆளுநரின் பிடியில் சிக்கிய 'ஆதரவு கடிதம்' - நீதிமன்றம் சென்றாலும் பலன் இல்லை?
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு சட்டச் சிக்கலில் சிக்கியிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். "தனிப்பெரும் கட்சிக்குத்தான் முதல் முன்னுரிமை" என்ற ஜனநாயக மரபு, விஜய்யின் ஒரே ஒரு 'நிர்வாகத் தவறால்' தற்போது அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது. ஆளுநர் ஆர்லேகரின் பிடிவாதம் ஒருபுறமிருக்க, இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
விஜய் செய்த அந்த விபரீத 'பிளண்டர்'!
சட்டசபைத் தேர்தலில் 107 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக தவெக நின்றபோது, விஜய் அமைதியாக இருந்திருக்கலாம். ஆளுநர் அழைக்கும் வரை காத்திருந்து, பிறகு சட்டசபையில் தனது பலத்தை நிரூபித்திருக்கலாம். அல்லது நான்தான் பெரிய கட்சி என்று சொல்லி இருக்கலாம். ஆனால், கிண்டி ஆளுநர் மாளிகையில் அவர் சமர்ப்பித்த அந்த ஆதரவுக் கடிதம்தான் இப்போது அவருக்குப் பெரும் வினையாக முடிந்துள்ளது.
தெற்காசியாவில் இந்த அளவு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றிய அரசு திமுக அரசு மட்டுமே
![]() |
தெற்காசியாவில் திராவிட மாடல் அரசுக்கு நிகராக ஒரு அரசு இல்லை
இந்த அளவு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றிய அரசு திமுக அரசு மட்டுமே
எதிரிகளும் மறுக்க முடியாத வளர்ச்சி புள்ளி விபரங்கள்
திராவிட ஒவ்வாமையாளர்களே கண்களை அகல திறந்து உண்மையை பாருங்கள்
1.மகளிர் உரிமைத் தொகை ரூ.1000
2.மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்
3.காலை உணவுத் திட்டம்
4.புதுமைப்பெண் திட்டம் ரூ.1000
5.தமிழ்ப்புதல்வன் திட்டம் ரூ.1000
6.நான் முதல்வன் திட்டம்
7.கல்லூரிக் கனவு திட்டம்
8.சிகரம் தொடு திட்டம்
9.உயர்வுக்குப் படி திட்டம்
10.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
11.வெற்றி நிச்சயம் திட்டம்
12.தோழி விடுதிகள்
13.மகளிருக்கான இட ஒதுக்கீடு 40%
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் விடயத்தில் டேமேஜான விஜய்யின் இமேஜ் ரிப்பேர் ஸ்டண்ட்தான் ஸ்டாலின் வீட்டு விசிட்
மின்னம்பலம் - மதி : , “வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகின்றான்”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்ன ப்ரோ.. சிச்சுவேஷன் ஷாங்கா?
இல்லை ப்ரோ.. இன்னைக்கு மாஜி சிஎம் ஸ்டாலினை சிஎம் விஜய் சந்திச்சு பேசுனார் இல்லையா.. அதுக்கு இந்த பாட்டை வெச்சுதான் ரீல்ஸ் போட்டுகிட்டு இருக்காங்க.. உங்க இன்ஸ்டாவை திறந்து பாருங்க..
ஸ்டாலினை விஜய் சந்திச்சதுல என்ன விஷேசம் இருக்கு ப்ரோ?
விஜய் நேத்து சிஎம்மா பதவியேற்ற பங்ஷன்ல தமிழ்த் தாய் வாழ்த்தை 3-வதாக பாடுனது, சம்பந்தமே இல்லாம வந்தே மாதரம் பாட்டை முதலில் பாடுனது எல்லாமே பிரச்சனையாகிடுச்சு..
2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்
hindutamil.in : சென்னை: சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இடையே கடும் போட்டி நிலவுவதால் இரு அணிகளாக அதிமுக பிரிந்துள்ளது. குழுத் தலைவர் பதவி கோரி இரு தரப்பினரும் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவரை தனித்தனியே சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸின் 5 எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல், விசிகவின் தலா 2 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். இதைத் தொடர்ந்து, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 10-ம் தேதி நடைபெற்ற விழாவில் முதல்வராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றார். சட்டப்பேரவையில் 13-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் அர்லேகர் உத்தரவிட்டுள்ளார்.
ஞாயிறு, 10 மே, 2026
விஜய் முதல்வராக பதவி ஏற்றார் 9 அமைச்சர்களும் பதவி ஏற்பு
தினமலர் : தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றார். விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் ஆண்டவன் மேல் ஆணையிட்டு என உறுதிமொழி எடுத்து கொண்டனர். ஆதவ் அர்ஜூனா மட்டும் ஆண்டவனை தவிர்த்து உளமாற என்று கூறினார்.
தமிழகத்தில் இன்று தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்தது; அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார். தற்போது, தமிழக அமைச்சரவை இடம்பெற்றுள்ளவர்கள் விபரம் பின்வருமாறு:
1. விஜய்
2. ஆனந்த்
3. ஆதவ் அர்ஜூனா
4. அருண் ராஜ்
5. செங்கோட்டையன்
6. வெங்கட்ரமணன்
7. நிர்மல்குமார்
8. ராஜ்மோகன்,
9. பிரபு
10. கீர்த்தனா
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழாவில் விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் ஆண்டவன் மேல் ஆணையிட்டு என உறுதிமொழி எடுத்து கொண்டனர். ஆனால் ஆதவ்அர்ஜூனா மட்டும் ஆண்டவனை தவிர்த்து உளமாற என்று கூறினார்.
சங்கீதாவுக்கும் மகன் ஜேசனுக்கும் மகள் ஷாஷாவுக்கும் மன அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கவேண்டும்
![]() |
ராதா மனோகர் : இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்?
எந்த குழந்தைகளுக்கும் தந்தை தாயன்பு என்பது அடிப்படை உரிமை!
அடிப்படை ஆதாரம்!
அதிலும் தந்தை நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்கிறார்!
இதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல எங்கோ ஒரு தூரத்தில் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள்
இத்தனைக்கும் காரணமான அப்பன்காரன் நாட்டுக்கே எழுச்சியும் உயர்ச்சியும் வழங்க போகிறேன் என்று ஊரை கூட்டி கதை அளந்து கொண்டிருக்கிறான்.
ஏற்கனவே 41 உயிர்களை கொன்றுவிட்டு . அதை பற்றி எந்த கவலையும் அற்று அதைப்பற்றி ஏதோதோ கதைகள் எல்லாம் கூறிவிட்டு,
![]() |
அந்த அப்பாவி உயிர்களின் குடும்பத்தினரை தன்வீட்டிற்கே அழைத்து ரொம்ப சாரிங்க என்று கூறிவிட்டு அலட்சியமாக கடந்து விடுகிறார்!
இவர்தான் நாட்டை காக்கப்போகிறேன் நாகரிக கோமாளி வந்தேன்ங்க என்று கூறுகிறார்
ஒரு மனிதன் தன்குடும்பத்தினரோடு எப்படி நடந்து கொள்கிறார் என்பது முக்கியமாக கவனத்தில் எடுத்து கொள்ளவேண்டிய விடயம்தான்
முதல்வர் விஜய்யுடன் நாளை பதவியேற்கும் அமைச்சர்கள்!- பார்ப்பனர் வெங்கட்ராமன் – பள்ளி கல்வித்துறை
minnambalam.com -Mathi : முதல்வர் விஜய்யுடன் பதவியேற்கும் அமைச்சர்கள்- உத்தேச பட்டியல்- காங்-க்கு 1 இடம்- ராகுல் காந்தி வருகை!
தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் நாளை (மே 10) காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் நாளை பதவியேற்கின்றனர். விஜய் பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.
பதவியேற்போர் விவரம் (உத்தேச பட்டியல்)
விஜய்- முதலமைச்சர் -பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை
அமைச்சர்கள்
1) புஸ்ஸி ஆனந்த்- நகராட்சி நிர்வாகத்துறை
2) செங்கோட்டையன் – பொதுப்பணித்துறை –
3) ஆதவ் அர்ஜூனா – விளையாட்டு மற்றும் மது விலக்குத்துறை
4) அருண்ராஜ் – பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை
5) வெங்கட்ராமன் – பள்ளி கல்வித்துறை
6) ஜேசிடி பிரபாகர்
7) ராஜேஷ்குமார் (கிள்ளியூர் தொகுதி, காங்கிரஸ்)
8) நிர்மல்குமார்- மின்சாரத்துறை
9) ராஜ்மோகன் – ஆதிதிராவிடர் நலத்துறை
ஜோசியர் ஆலோசனைப்படி..
முதல்வராகும் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப்படி நாளை விஜய்யுடன் 9 அமைச்சர்கள் மட்டும் பதவியேற்கின்றனர்.
ராகுல் காந்தி வருகை
தமிழகத்தில் 1967-க்குப் பின்னர் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக இடம் பெறுகிறது. இதனால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை விஜய் பதவியேற்பு விழாவுக்கு வருகை தருகிறார்.
EVM மோடி மோசடியால் திமுக தோற்கடிக்கப்பட்டது!
![]() |
Giri Sundar : திமுக எங்கேயும் தோற்கவில்லை! EVM மோசடியால்! மோடியால்! தோற்கடிக்கப்பட்டது!
திமுக மக்களால் புறக்கணித்து தோற்கவில்லை!
புதுச்சேரியில் தவெக தடந்தெறியவில்லை! காரணமே அங்கே பாஜக கூட்டணியாட்சி! EVM மோசடியை நிகழ்த்தவில்லை!
EVMல் சந்தேகம் வலுக்கிறது VVPADஐ எண்ண வைத்தால் ஞானேஷ்குமார் மோசடி அம்பலமாகிவிடும்! 48Hours கடந்ததும் Automatic program Zonal zip டையோடு மூலமாக VOTE TRANSFER ஆகிவிடும் என்று பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் நிபுணர்கள் கூறுவதை நாம் புறந்தள்ள முடியாது!
மக்கள் வாக்களித்தது திமுகவுக்கு என்பதும் முழு உண்மைதான்!
திமுக கூட்டணியின் உள்ளடி துரோகத்தால் வீழ்ந்ததா? என்றால்! ஆம்! வீழ்த்தப்பட்டது! உண்மைதான்!
வேறென்ன? திமுக கட்சிக்குள்ளும் உள்ளடி வேலையைச் செய்தார்களா? ஆம் செய்தார்கள்தான்! தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற உட்புற ஆதங்கவேட்டையுணர்வும் வேட்டுவைத்தது என்பதும் உண்மைதான்!






