tamil.oneindia.com - Velmurugan P : சென்னை: சட்டசபையில் நேற்று நடந்த நிகழ்வுகள் எல்லாமே சாதாரணமாக கடந்து போகக்கூடிய நிகழ்வு கிடையாது. ஏனெனில் வழக்கமாக திமுக ஆட்சியில் ஆளுநர் ரவி இருக்கும் போது சட்டசபை கூடினாலோ போர்க்களம் போல் பிரச்சனை வெடிக்கும்.. தமிழ்தாய் வாழ்த்து தான் முதலில் வாசிப்பார்கள். தேசிய கீதம் வாசிக்க சொல்வார் ஆளுநர். ஆனால் அதனை ஏற்க சபாநாயகர் மறுப்பார். இதனால் ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்வார். அதேபோல் அப்படியே வாசித்தாலும், பல வார்த்தைகளை பேச மாட்டார். ஆனால் இன்றுதவெக அரசின் நடவடிக்கையும், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரின் நடவடிக்கையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளி, 19 ஜூன், 2026
கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் தவெகவில் இணைந்தார்
மின்னம்பலம் - Pandeeswari Gurusamy : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் இன்று(ஜூன் 18) தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் இன்று (ஜூன் 18) சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், “ஊழலை ஒழிக்க முடியும் என்ற பெரும் நம்பிக்கையை தமிழக முதலமைச்சர் விஜய் தந்துள்ளார். தற்போதைய சமூகம் மேல் தட்டு மக்களுக்கான,
புதன், 17 ஜூன், 2026
தத்தளிக்கும் விஜயபாஸ்கர்.. கதவுகளை மூடும் திமுக, தவெக? கைமாறும் டிவி சேனல்கள்
மின்னம்பலம் : வாங்க ப்ரோ.. அங்கிட்டும் இங்கிட்டும் தத்தித் தாவுற கேரக்டர் யாராம்?
வேற யாரு.. விராலிமலை விஜயபாஸ்கர்தான்.. அவரோட ஒவ்வொரு மூவ் பத்தியும் நாம டிஜிட்டல் திண்ணையில பேசிகிட்டு இருக்கிறோம்..
விஜயபாஸ்கர் நேத்து திடீர்னு சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்திச்சு தான் கைப்பட எழுதுன ராஜினாமா கடிதத்தை கொடுத்தாரு.. சபாநாயகரும் அதை ஏத்துகிட்டாரு..
அதோட நிற்காத விஜயபாஸ்கர், ”தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் நான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
துரை வைகோ : “தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழல்.
hindutamil.in - க.ராதாகிருஷ்ணன்: கரூர்: “தவெக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அவற்றை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது. ஆளுங்கட்சி வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் ரூ.13.18 லட்சம் கோடி கடன் உள்ளதாக கூறப்பபட்டுள்ளது. இது இதுவரை இல்லாத கடன் அளவாகும்” என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 17) நடந்த கிருஷ்ணராயபரம் மதிமுக பேரூர் செயலாளர் வெங்கடாசலம் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
1995 இல் யாழ்ப்பாணத்தை கட்டி எழுப்பிய சந்திரிகா பண்டாரநாயக்க
![]() |
ராதா மனோகர் : 1995 இல் நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் பெரும் தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்று கொண்டே இருந்தது.
யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் முடிவோடு யாழ்ப்பாணத்தை பல முனைகளிலும் முற்றுகை இட்டு நகர்ந்த ராணுவம் பல இழப்புக்களின் மத்தியில் 1995 ஆக்டொபர் மாதம் யாழ்ப்பாணத்தை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது
தென்னிலங்கையிலும் பலவிதமான பங்கரவாத செயல்கள் இடம்பெற்ற வண்ணமே இருந்தது
எளிதில் விளங்க வைக்க முடியாத அளவு மிக பயங்கரமான சூழல் எங்கும் நிலவியது.
சந்திரிகா அம்மையாரின் நிலைமையும் படுமோசமாக இருந்தது
ஆளும் கட்சியிலும் பலர் அதிருப்தியோடு இருந்தார்கள்
நாட்டின் நிச்சயமற்ற தன்மையும் பாதுகாப்பு தளம்பல்களும் சேர்ந்து பல அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஆட்டி படைத்தன.
மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக
tamil.oneindia.com - Velmurugan P : சென்னை: அனைத்து அமைச்சர்களும் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் அலப்பறை போடுகிறார்களே, நாம் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருக்கிறோமே என்ற விரக்தியில் "வெள்ளை அறிக்கை" என வெற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நிதியமைச்சர் மரியவில்சன் . தி.மு.கழகத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கையிலேயே வருவாய் & நிதிப் பற்றாக்குறை, அரசின் கடன், வருவாய் வரவினங்கள், மாநில அரசின் சொந்த வரி வருவாய், ஒன்றிய வரிகளில் மாநில அரசின் பங்கு, வருவாய் செலவுகள்,மூலதனக் கணக்கு எவ்வளவு, வரும் காலங்களில் இவை எவ்வளவு இருக்கும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என திமுக ஐடி விங்க் விமர்சித்துள்ளது.
2 மாதங்களுக்கு பின்னர் கடலுக்குச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள்: ரூ.10 கோடி மதிப்புள்ள மீன்களை அள்ளி வந்தனர்
hindutamil.in -எஸ்.முஹம்மது ராஃபி : ராமேசுவரம்: மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் அதிக மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் ஜுன் 14 அன்றுடன் முடிவடைந்த நிலையில் விசைப்படகு மீனவர்கள் தற்போது கடலுக்குச் சென்று வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை மாலையிலிருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் சுமார் 3,500 மீனவர்கள் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்றனர்.
செவ்வாய், 16 ஜூன், 2026
கும்மிடிப்பூண்டியில் 3 குழந்தையை வன்புணர்வு சென்ற பிகாரி கைது
நக்கீரன் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பலவேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே வெறும் 3 வயது பிஞ்சுக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் மனதை உலுக்கி, பெரும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவுவைப்பு; ரூ.2,500 எப்போது கிடைக்கும்? - பெண்கள் எதிர்பார்ப்பு
hindutamil.in : தவெக ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின்போது தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று கடந்த மே மாதம் ஆட்சியமைத்தை தொடர்ந்து, சட்டப்பேரவை விவாதத்தில் முதல்வர் விஜய் பேசும்போது, திமுக அரசின் திட்டங்கள் தொடரும் என்று அறிவித்தார். அதேபோல், தவெக அறிவித்த மகளிர் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும்.
ஞாயிறு, 14 ஜூன், 2026
AIIMS Bhopal -F எழுத்தால் விபரீதம்! மருந்துக்கு பதிலாக உடலில் இறங்கிய விஷம்! துடிதுடித்து உயிரிழந்த 3 வயது சிறுவன்
Vigneshkumar Oneindia Tamil இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், ரத்தப் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த 3 வயது சிறுவன்,
செவிலியர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருந்துக்கு பதிலாக உடலில் செலுத்தப்பட்ட ஒரு நச்சு திரவம் அந்தச் சிறுவனின் உயிரைப் பறித்துள்ளது. நமது நாட்டில் பல மருத்துவர்கள் 24 மணி நேரமும் பொதுமக்களை காக்க வேலை செய்கிறார்கள். இருப்பினும்,
சில நேரங்களில் அவர்களின் அலட்சியம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் குறித்த தகவல்கள் தான் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்தாண்டு இறுதியில் நடந்த இந்த சம்பவத்தின் விசாரணை அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது. Bhopal AIIMS Medical Negligence
