சனி, 7 மார்ச், 2026

ஆண்டவரே மக்களே என்னை மன்னித்து கொள்ளுங்கள் - நடிகர் விஜய்

 நடிகர் விஜய் : இந்த நிமிடம் வரை திரைப்படங்களில்  என்னை ரசித்து பின்பு எனது அரசியலையும் ஆதரித்து கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு எனது அன்பை தெரிவித்து கொள்கிறேன்.
எல்லாவற்றிலும் மேலாக உங்களிடம் மன்னிப்பு கேட்கும் மனநிலையில்தான் நான் உள்ளேன் என்பதை முதலில் தெரிவினது விடுகிறேன்.
திரையில் எவ்வளவு வெற்றிகரமான ஒரு நடிகனாக என்னால் உயர முடிந்தது என்பது எல்லோரும் அறிந்ததுதான் 
ஆனால் அரசியலில் என்னால் கொஞ்சம் கூட உயர முடியாது என்பதை காலம் கடந்து நான் இப்போது உணர்ந்துள்ளேன்.
அரசியலுக்கும் திரைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது 
இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளாதது எனது தவறுதான்.
இதற்காக யார் மீதும் எனக்கு கோபம் இல்லை.
என்னை பார்க்க வந்து உயிரிழந்த அந்த 41 மனிதர்களுக்கும் இனி எந்த காலத்திலும் என்னால் எந்த பிராயச்சித்தமும் செய்து விடமுடியாது 
இவர்களின் ஆன்மா என்னை இனி ஒரு போதும் நிம்மதியாக தூங்க விடாது 
எல்லாமே ஒரு விளையாட்டு போல கருதி இருந்தேன் 
சத்தியாயமாக் சொல்கிறேன் இப்படி எல்லாம் ஆகும் என்று முன்பே உணர்ந்திருந்தால் இந்த விளையாட்டில் நான்  நிச்சயமாக இறங்கி இருக்க மாட்டேன் 
தெரிந்தோ தெரியாமலோ என்னை உசுப்பேற்றியவர்களின்  ஆலோசனைகள் இன்று என்னை மீளவே முடியாத பாவக்கிடங்கில் தள்ளிவிட்டது!

நடிகர் விஜய் மனைவி சங்கீதாவுக்கு எதுவும் கொடுக்காமலே கழற்றி விடப்பார்க்கிறார்? அது சாத்தியமா?

பிரபல நடிகர் நடிகையுடன் விஜய்யின் மனைவி சங்கீதா எடுத்த புகைப்படம்..

 tamil.oneindia.com ;  விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால்.. வீட்டிலேயே அனுமதி இல்லை என்றார் விஜய்.. சங்கீதா குற்றச்சாட்டு!
தன்னிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால், வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன் என்று வழக்கறிஞர் மூலமாக விஜய் கூறியதாக சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார். விஜய்யின் வீட்டில் வசிக்க சங்கீதா நீதிமன்றத்தை நாடியுள்ள சூழலில், நீலாங்கரை வீட்டில் தனக்கும் சரி பாதி பங்கு உள்ளது என்றும் மனுவில் கூறியுள்ளார்.
கடந்த வாரம் தவெக தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் தவெக தலைவர் விஜய் நடிகை ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். இதன்பின் கல்பாத்தி குடும்ப திருமண நிகழ்ச்சியில் விஜய் நடிகர் திரிஷாவுடன் ஒரே காரில் ஒரே டிசைனில் ஆடை அணிந்து ஒன்றாக தம்பதியை வாழ்த்தினர்.

திமுகவுக்கு தூதுவிட்ட செங்கோட்டையன் - பிடி கொடுக்காத ஸ்டாலின் .. தவேக வில் மரியாதையை இல்லயாம்

May be an image of one or more people

 tamil.asianetnews.com : பனையூரில் அவமானம்... அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!
விஜயியிடம், தான் எதிர்பார்த்த அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதை உணர்ந்த செங்கோட்டையன், இப்போது தனது அடுத்த கட்ட நகர்வைத் தொடங்கிவிட்டார்.
சென்னையில் பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில், செங்கோட்டையன் மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் கசிகின்றன. விஜய்க்கு அடுத்த இடத்தில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றும், மேடை நாகரிகம் கூட இல்லாமல் அவர் ஓரங்கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. "அரசியல் அரிச்சுவடியே தெரியாதவர்கள் எல்லாம் அண்ணனை அவமானப்படுத்துவதா?" என கொங்கு மண்டல ஆதரவாளர்கள் இப்போதே போர்க்கொடி தூக்கிவிட்டனர்.

பல்லாவரத்தில் வடமாநில சிறுமி கல்குட்டையில் சடலமாக மீட்பு... விசாரணையில் தெரியவந்தது என்ன..

  news18-tamil :  காணாமல்போன வடமாநில சிறுமி மர்மமான முறையில் கற்குட்டையில் அழுகிய நிலையில், சடலமாக மிதந்த சம்பவம் பல்லாவரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரம் அருகே காணாமல்போன வடமாநில சிறுமி, அழுகிய நிலையில் கற்குட்டையில் சடலமாக மிதந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறுமிக்கு நேர்ந்தது என்ன? போலீஸ் விசாரணையில் தெரியவந்தது என்ன?
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் 41 வயதான புள்ளுதாஸ். இவரது மனைவி ரிங்கு தேவி. இந்த தம்பதி கடந்த 15 வருடங்களாக பம்மல், நாகல்கேணி ஆதாம் நகர் பகுதியில் 15 வயது மகள் அனிசா உள்ளிட்ட நான்கு பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர்.

சென்னையில் களமிறங்கும் விசிக: விஜய்க்கு எதிராக ஷா நவாஸை நிறுத்தவும் பரிசீலனை

 hindutamil.in - கோ.யுவராஜ்:  தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று சொல்லப்படும் நிலையில், திமுக கூட்டணியில் அந்தத் தொகுதியை தங்களின் விருப்பப் பட்டியலில் வைத்திருக்கிறது விசிக. தொகுதி தங்களுக்குக் கிடைத்தால் ஆளூர் ஷா நவாஸை அங்கு நிறுத்தும் திட்டத்தில் அந்தக் கட்சி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
திமுக கூட்டணியில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, 4 இடங்களை வென்றது. தற்போது அந்தக் கட்சி மாநிலக் கட்சி அங்கீகாரத்துடன் தேர்தல் களத்துக்கு வருவதால் இம்முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை விரும்பியது. அந்தக் கட்சி 12 தொகுதிகளை எதிர்பார்த்த நிலையில், புதிய கட்சிகளின் வரவைக் காரணம் காட்டி விசிக-வுக்கு 8 தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

Persia before Khomeini - The history of Iran in 15 minutes

வெள்ளி, 6 மார்ச், 2026

ஐஆர்ஐஎஸ் புஷெர்: இலங்கை அருகே இரானின் மற்றொரு போர்க்கப்பல் - என்ன நடக்கிறது?

ஐஆர்ஐஎஸ் புஷெர், இரான், அமெரிக்கா, இலங்கை

  bbc.com - கெல்லி என்ஜி மற்றும் பிபிசி சிங்கள சேவை : இலங்கை தனது கடற்கரைப் பகுதியில் இரானிய கடற்படைக் கப்பல் ஒன்றைக் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இரானிய போர்க்கப்பல் ஒன்று அதே கடல் பகுதியில் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்டு, குறைந்தது 87 பேர் உயிரிழந்ததற்கு ஒரு நாள் கழித்து, இலங்கை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

போரை நிறுத்த அமெரிக்காவுக்கு தூதுவிட்ட ஈரான் உளவுத்துறை?

 hirunews.lk : ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர, ஈரான் உளவுத்துறை அமெரிக்காவிற்கு இரகசியத் தூது அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இப்போதைக்கு பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் உளவுத்துறை அமைச்சை சேர்ந்த அதிகாரிகள், ஒரு மூன்றாவது நாட்டின் வழியாக அமெரிக்க மத்திய புலனாய்வு முகவரகததுக்கு (CIA) செய்தி அனுப்பியுள்ளனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்க ஆளுநராகிறார்

 minnambalam.com -  Mathi : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி (Tamil Nadu R.N.Ravi) மாற்றப்பட்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆளுநராக, கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்தார்.

ஈரானின் 2ஆவது கப்பல் திருகோணமலைக்கு செல்கிறது! மனிதநேய நடவடிக்கை!

 தமிழ் மிரர் : ஈரானின் 2ஆவது கப்பல் திருகோணமலைக்கு செல்கிறது! பாதுகாப்பு ஏற்பாடு  – ஜனாதிபதி அறிவிப்பு
-208 பணியாளர்கள் இலங்கை ஜனாதிபதியால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஈரானிய கடற்படைக் கப்பல் தொடர்பில் மனிதநேய அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வியாழக்கிழமை (5) (இரவு) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், ஈரானுக்கு சொந்தமான “Iris Bushehr” எனப்படும் கப்பலின் ஒரு என்ஜின் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து,

திமுக மீண்டும் வெற்றி பெற்று விடும் என்று ஆர் எஸ் எஸ் பயப்படுகிறது - கட்டுரை

 சோழன்   ஸ்டாலின் எவ்வளவு டேஞ்சரான அரசியல்வாதி என்று நாம் உணர்வில்லை 
எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது மீண்டும் திமுக ஜெயித்து விடுமோ என்று...
திமுகவின் 
நுண் அரசியலின்
தேர்தல் வியூகத்தின் வீரியத்தை நாம் உணர வேண்டும் என்ற நோக்கில் எழுதுகிறேன்...
தேமுதிகவை திமுக சும்மா ஆதாயம் இல்லாமல் சேர்க்கவில்லை 
ஒரு சட்டமன்றத் தொகுதியில் சராசரியாக 350 (பூத்) வாக்குச்சாவடிகள் வரை இருக்கலாம். 
ஒரு பூத்துக்கு சராசரியாக 1000 - 1500 வாக்காளர்கள் உள்ளனர்...
தமிழகம் முழுவதும் பரவலாக 100சதவீதம் பூத் கமிட்டி போட்டது இரண்டே கட்சி திமுக அதிமுக இரண்டு மட்டுமே,
அடுத்து 90 சதவீதம் பூத் கமிட்டி போட்டது பாஜக, தேமுதிக இரு கட்சிகள்தான்
பாஜக அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்தால் திமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று உளவுத்துறை ரிப்போர்ட்டையும், "பென்" நிறுவனம் எடுத்து கொடுத்த கள நிலவர கணிப்பையும் பார்த்து தான் தேமுதிகவை ஸ்டாலின் கூட்டணியில் சேர்த்தார்... 

வியாழன், 5 மார்ச், 2026

'ராகுல் பனையூருக்கு வரணுமா?' - கோட்டைவிட்ட விஜய்; கொதிக்கும் கதர் சட்டைகள்; விரக்தியில் தவெக

May be an image of one or more people and beard

விகடன் : ராகுல் பனையூருக்கு வரணுமா?' - கோட்டைவிட்ட விஜய்; கொதிக்கும் கதர் சட்டைகள்; விரக்தியில் தவெக
அறிவாலயமும் சத்யமூர்த்தி பவனமும் பெரும் போராட்டத்தை கடந்து ஒருவழியாக தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டனர்.
இந்த விவகாரத்தில் இலவு காத்த கிளியாக வெறும் கையோடு நிற்பது விஜய் மட்டும்தான். 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு என நாம் கொளுத்திப் போட்ட வெடிகுண்டு எல்லா கூட்டணியிலும் வெடித்துக் கொண்டிருக்கிறது' என விஜய் பெருமிதம் பேசியிருந்தார்.
 TVK Vijay - தவெக விஜய்

Iris dena மூழ்கடிப்பு! இந்திய விருந்தினராக வந்த கப்பலை பாதுகாக்க தவறிய இந்தியா

May be a doodle of submarine and text that says "அமைதியான மரணம் மர மார்ச் 4, 2026 அன்று ஐரிஸ் டேனா மூழ்கடிக்கப்பட்டதன் பூகோள அரசியல் அதிர்வுகள். W M eT NotebookLM"

May be an illustration of ‎boat, map and ‎text that says "‎எதிர்பாராத தாக்குதலும் அமைதியான மரணமும்' மார்ச் 4, 2026 அதிகாலை. சர்வதேசக் கடற்பரப்பில் பயணம் செய்து கொண்டிருந்த ஈரானிய கப்பல் ஐரிஸ் டேனா (IRIS Dana), அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலால் குறிவைக்கப்பட்டது. இலங்கை 'IRISDana' IRIS Dana' அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் வர்ணிப்பு: 'அமைதியான மரணம்' (Quiet Death). ر சர்வதேசக் கடற்பரப்பு தாக்குதல் முறை: நீர்மூழ்கிக் கப்பல் மேல்தளத்திற்கு வராமலேயே துல்லியமாகத் தாக்கியது. அமெரிக்கரர்ழ்கிக்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்‎"‎‎

May be an image of helicopter and text that says "இலங்கையின் நடுநிலைமை மற்றும் மனிதாபிமான உதவி தேடல் மற்றும் மீட்பு (SAR): அபாய சமிக்தைக்குப் பதிலளித்து மீட்புப் பணிகளை மட்டுமே முன்னெடுத்தது. உறுதிப்படுத்த மறுப்பு: தொடக்கத்தில் இது ஒரு விபத்து என்றே கூறியது. வீடியோ காட்சிகளை வெளியிட மறுப்பு. சந்தேகம்: தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன், அமெரிக்க பசிபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் ஸ்டிவ் கோஹ்லர் வருகை தந்தது. ล NotebookLM"

 Sinnakuddy Thasan :  ஐரிஸ் டேனா மூழ்கடிப்பு: இந்தியப் பெருங்கடலை உலுக்கிய சம்பவம்
மார்ச் 4, 2026 அன்று அதிகாலை வேளை. இந்தியப் பெருங்கடலின் ஆழமான நீல அலைகளுக்கு மேலே 'ஐரிஸ் டேனா' (Iris Dana) கப்பல், சர்வதேசக் கடற்பரப்பில் தான் பாதுகாப்பாக இருப்பதாகக் கருதிப் பயணம் செய்து கொண்டிருந்தது. ஆனால், அந்த அமைதிக்கு அடியில் ஒரு "அமைதியான மரணம்" (Quiet Death) பதுங்கியிருந்தது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஒரு சாதாரணப் பயணமாகத் தொடங்கிய அந்த விடியல், சில நிமிடங்களிலேயே ஒரு சர்வதேசப் பதற்றமாகவும், நவீன கடற்போர் வரலாற்றின் ஒரு கறைபடிந்த அத்தியாயமாகவும் மாறியது.
2. "அமைதியான மரணம்": 
நவீன நீர்மூழ்கிக் கப்பல் போரின் கோர முகம்
அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஐரிஸ் டேனாவைக் குறிவைத்து நடத்திய இந்தத் தாக்குதல், வெறும் இராணுவ நடவடிக்கை அல்ல; அது ஒரு தொழில்நுட்ப எச்சரிக்கை. இத்தாக்குதலில் அமெரிக்காவின் அதிநவீன மார்க் 48 (Mark 48) ரக கனரக டார்பிடோ பயன்படுத்தப்பட்டது.

ஈரானை தாக்க இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா...

 tamil.oneindia.com - Halley Karthik  :  டெல்லி: ஈரான் கப்பல் மீது, இன்று அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதில் 80க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, இந்தியாவின் துறைமுகத்தை பயன்படுத்தியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
ஈரானுக்கு எதிரான போரில், அமெரிக்கக் கடற்படை இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்த இந்தியா அனுமதித்ததாக வெளியான தகவல்களை, இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் டக்ளஸ் மெக்ரிகர், தீவிர வலதுசாரி ஒன் அமெரிக்கா நியூஸ் நெட்வொர்க் (OAN) தொலைக்காட்சியில் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்ததாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

ராகுலை சமாதானப்படுத்திய கார்கே - ஓட்டு வங்கியை விஜய் நிரூபிக்கட்டும்!

 தினமலர் : சென்னை: 'த.வெ.க., தன் ஓட்டு வங்கியை நிரூபிக்கட்டும்; விஜய்க்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தால், அடுத்து வரும் தேர்தலில் கூட்டணி வைக்கலாம்' என கூறி, காங்., - எம்.பி., ராகுலை, அக்கட்சியின் தலைவர் கார்கே சமாதானப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில், 2016ல் போட்டியிட்டது போல் 41 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் தர வேண்டும் என காங்கிரஸ் பிடிவாதமாக இருந்ததால், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடித்தது.

ஈரான் . உச்சத்தில் இருந்த ஒரு நாடு மதவாதிகளால் விழுந்த கதை

 Chowkidar Baburaj Babu : "பெர்சியா" (இன்றைய ஈரான்)! இது ஒரு காலத்தில் நம் நாட்டின் தேநீர் கடைகளிலும் வீடுகளிலும் ஆச்சரியத்துடனும் மரியாதையுடனும் விவாதிக்கப்பட்ட ஒரு பெயர். 
இன்றைய பாலைவனங்களின் அற்புதமான நகரங்கள் பிறப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, கடல் கடந்து வந்த ஒரு தலைமுறையின் வியர்வை மற்றும் கனவுகள் விழுந்த நிலம் அது. 
1950 களில் இருந்து 70 களின் பிற்பகுதி வரை ஈரானை ஆண்ட ஷா முகமது ரெசா பஹ்லவியின் ஆட்சிக் காலத்தில், அந்த நாடு உலகத்தின் முன் ஒரு கனவு போன்ற இடமாக இருந்தது. 
மேற்கத்திய நாடுகளைக் கூட விஞ்சிய அதன் நவீனத்துவமும், எண்ணெய் பணத்திலிருந்து பாயும் செல்வமும் பெர்சியாவை இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு ஒரு அதிர்ஷ்டமான பூமியாக மாற்றியது. 

புதன், 4 மார்ச், 2026

ஸ்டாலின் 28! ராகுல் 30! தொடரும் திமுக- காங்கிரஸ் இழுபறி!

 மின்னம்பலம் -Mathi : திமுக கூட்டணியில் தங்களுக்கு 30 தொகுதிகள்தான் வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது.
காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் என பைனல் செய்து நேற்று இரவு ப.சிதம்பரத்திடம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதனையே ப.சிதம்பரமும் டெல்லிக்கு தெரிவித்தார்.
இதனையடுத்து இன்று இறுதி கட்டப் பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் குழு வரும் என திமுக காத்திருக்கிறது. இதுவரை காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.
இது பற்றி விசாரித்த போது, ”திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 30 தொகுதிகள்தான் வேண்டும் என்பதில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார். ஆனால் ஸ்டாலின் 28 தொகுதிகள்தான் தர முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் பேச்சுவார்த்தையில் மீண்டும் இழுபறி ஏற்பட்டுள்ளது” என்கின்றனர்

காங்கிரஸ் திமுக கூட்டணி உறுதி!

 tamil.oneindia.com - Shyamsundar : சென்னை: தமிழக அரசியல் களம் இப்போது அனல் பறக்கும் 'கிளைமாக்ஸ்' காட்சியில் இருக்கிறது. "கொடுப்பதைப் பெற்றுக்கொள்வதா... அல்லது கேட்டதை வாங்குவதா?" என கடந்த சில நாட்களாக அறிவாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் இடையே நடந்த 'மைண்ட் கேம்' ஒருவழியாக இன்று அதிகாலை ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.
நேற்று இரவு வரை நீடித்த இழுபறி, நள்ளிரவுத் தாண்டியும் 'சஸ்பென்ஸ்' ரகமாகவே நகர்ந்தது. டெல்லியில் இருந்து வந்த 'அசைன்மென்ட்', சென்னையில் நடந்த ரகசியப் பேச்சுவார்த்தைகள் என அத்தனையும் முடிந்து, இன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் அந்த 'சீல்' வைக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை கடலில் ஈரான் கப்பல்! 101 பேரை காணவில்லை உதவிக்கு விரைந்த இலங்கை கடற்படை

 hirunews.lk : இலங்கை கடல் வலயத்திற்குள் ஈரானிய கப்பல் தாக்கப்பட்டதா?
இலங்கை கடற்படை பாதுகாப்பு வழங்க வேண்டிய ஒரு வலயத்திற்குள் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலுக்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார் .
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) அல்லது அதற்கு மிக அருகாமையிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதுச்சேரியில் தனித்து போட்டியிட தி.மு.க., முடிவு: வேட்பாளர்கள் பட்டியலும் ரெடி

 தினமலர் : புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், இதுவரை நடந்த 15 சட்டசபை பொது தேர்தல்களில் காங்., 7 முறையும், தி.மு.க., 4 முறையும், அ.தி.மு.க., மற்றும் என்.ஆர்.காங்., தலா இரு முறை ஆட்சியை கைப்பற்றியுள்ளன.
மாநிலத்தில் பிரதான கட்சியான காங்., கடந்த 2021 சட்டசபை தேர்தலில், 'இண்டி' கூட்டணி சார்பில் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
அதில், மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்., 15 தொகுதிகளிலும், தி.மு.க., 13 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூ., மற்றும் வி.சி., தலா ஒரு தொகுதிகளில் போட்டியிட்டன. அதில், கூட்டணிக்கு தலைமை தாங்கிய காங்., 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, பெரும் பின்னடைவை சந்தித்தது. தி.மு.க., 6 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்தது.

சோனியாவின் Operation PC சக்சஸ்? காங்கிரஸுக்கு 29? ப.சிதம்பரத்திடம் ஸ்டாலின்

 மின்னம்பலம் - Mathi  :  வாருமய்யா.. ஸ்டாலின்- ப.சிதம்பரம் சந்திப்புல என்ன நடந்துச்சாம்?
ஆமாய்யா… காலையில 10.03 மணிக்கே நாமதான் ஸ்டாலினை ப.சிதம்பரம் சந்திக்கப் போறாருன்னு முதல்ல சொன்னோம்.. அப்புறமா சிதம்பரம் வீட்டுக்கு செல்வப்பெருந்தகை போனது, அங்கே நடந்த டிஸ்கஷன், ஸ்டாலினை சந்திக்க புறப்படுறதுக்கு முன்னாடி சோனியாகிட்ட ப.சிதம்பரம் பேசுனதுன்னு லைவ்வா நியூஸ்ல அப்டேட் செஞ்சோம்.
சிதம்பரம் வர்றதுக்கு முன்னாடியே சபரீசன், கனிமொழியை ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலை வீட்டுக்கு வர சொன்னார்.. அங்கே மூணு பேரும் சீரியஸ் டிஸ்கஷன் செஞ்சாங்க..
”ராகுல் காந்திகிட்ட கனிமொழி ஏற்கனவே 27+1-ன்னு சொல்லி இருந்தாங்க.. பேச்சுவார்த்தை குழு முதல் கட்டமாக 25+1-ன்னு சொல்லி இருந்தது.. இப்ப காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்பாங்க.. அதுக்குதான் ப.சிதம்பரம் வர்றாரு.. நாம என்ன பதில் சொல்றது?”ன்னு விவாதிச்சாங்க..

ஈரான் புதிய தலைவர் உட்பட 88 பேர் உயிரிழப்பு! இவர்கள் பங்கேற்ற மஜ்லிஸ் (Assembly of Experts ) கட்டடத்தின் மீது குண்டு வீச்சு!

 Almashoora Latest News - BREAKING NEWS
ஈரானின் அடுத்த உச்ச தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஈரானின் மிக முக்கிய  மார்க்க மற்றும் அறிவியல் தலவர்கள் 88 பேர் பங்கேற்ற  மஜ்லிஸ் (Assembly of Experts ) கட்டடத்தின் மீது இஸ்ரேல் பாரிய குண்டு வீச்சு!
உள்ளிருந்து உரிய நேரத்தில் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த தாக்குதலை மொஸாட் மேற்கொண்டுள்ளது.
கட்டடம் முற்றாக நொறுங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரானின் Assembly of Experts என்றால் “நிபுணர்கள் சபை” அல்லது “நிபுணர்கள் பேரவை” (Assembly of Experts of the Leadership) ஆகும்.
இது ஈரானின் அரசியலமைப்பு படி மிக முக்கியமான ஒரு மத-அரசியல் அமைப்பு.

செவ்வாய், 3 மார்ச், 2026

ஈரான் மீதான இஸ்ரேல் அமெரிக்க தாக்குதலின் பின்னணியில் சவூதி அரேபியா?

 புதிய தலைமுறை : ஈரானை இஸ்ரேல் அமெரிக்கா தாக்கிய பின்னணியில் சவூதி அரேபியா இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவலை பிரபல அமெரிக்க நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் தலைநகர் தெக்ரான் மீது தாக்குதல் நடத்தியதில், ஈரானின் தலைமை தலைவர் கமேனி கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலுக்கு பின்னால் சவூதி அரேபியா இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், ட்ரம்ப்புடன் ரகசியமாக பேசி, ஈரானின் அணுசக்தி திட்டங்களை தகர்க்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்?

May be an image of one or more people and people smiling

tamil.oneindia.com  :   உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா?
பெண்கள் பாதுகாப்பு என்று மேடைக்கு எம்டி முழக்கத்துடன் அரசியல் களத்தில் குதித்திருக்கும் 'தவெக' விஜய்க்கு, இப்போது சொந்த மனைவியும் குடும்பப் பக்கமுமே பெரும் சவாலாக உருவெடுத்திருப்பதாகத் தகவல். 
குறிப்பாக, நீண்ட நாட்களாகத் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும் விவாகரத்து விவகாரமும், அதில் சங்கீதா மற்றும் ஜேசன் சஞ்சய் எடுக்கப்போகும் முடிவுகளுமே கட்சியின் 'திங்க் டேங்க்' டீமை தூக்கமிழக்கச் செய்துள்ளன.
உளவுத் துறையையும் தாண்டிய அச்சம்
பொதுவாக அரசியல் தலைவர்களுக்கு எதிர்க்கட்சிகளின் வியூகங்கள், உளவுத்துறை கண்காணிப்பு தான் பயத்தை உண்டாக்கும். 

தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை: காங்கிரஸூக்கு திமுக விதித்த கெடு இன்றுடன் நிறைவு!

 

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் காங்கிரஸ்? – டெல்லி ஆலோசனையில் பரபரப்பு

 :Arivazhagan T -     news18-tamil :  திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத நிலையில், காங்கிரஸ் வேறு வழிகளை ஆராய்வதாக சொல்லப்படுகிறது.
iதிமுக கூட்டணியில் காங்கிரஸ் 40 முதல் 35 தொகுதிகளை கேட்ட நிலையில், திமுக 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக சொன்னதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் டெல்லியில் மேற்கொண்ட ஆலோசனையில் கூட்டணியில் இருந்து வெளியேற திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது.

மத்திய கிழக்கில் இந்திய போர்க்கப்பல்கள் - உக்கிரமாகும் ஈரான் போர்

 tamil.oneindia.com - Nantha Kumar R  : டெல்லி: ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து போரை தொடங்கி உள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான், அமெரிக்காவின் நட்பு நாடுகளை குறிவைத்து தாக்கி வருகிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ரஸ், கத்தார், பஹ்ரைன், ஓமன், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 
இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்கள் சிக்கலில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் மத்திய கிழக்கில் இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

திமுக ராஜ்யசபாவுக்கு கொன்ஸ்டான்ரைன் திருச்சி சிவா சுஜித் யார் அந்த நாலாவது?

tamil.oneindia.com - Vishnupriya R :  சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 
மொத்தம் 4 இடங்களில் 2 இடங்களில் திமுகவும் தலா ஒரு இடத்தை காங்கிரஸ், தேமுதிகவுக்கு கொடுக்க திமுக முடிவு செய்துள்ளது. ஒரு வேளை சட்டசபை தேர்தலில் கூட்டணியை காங்கிரஸ் இறுதி செய்யாவிட்டால் 3ஆவது வேட்பாளராக யார் நிறுத்தப்படுவர் என்பதையும் திமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாகின்றன. இந்த 6-ல் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப திமுகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

ரிவென்ஜ் வைக்கும் காங்கிரஸ் ?கடுப்பில் ஸ்டாலின்

சங்கீதாவுக்கு எதிராக ஆபாச விமர்சனங்கள்.. விஜய் மவுனம்..ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்

 மின்னம்பலம் - Mathi : விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள சங்கீதாவை தவெக தொண்டர்கள் ஆபாசமாக இழிவுபடுத்தி வருவதை அவரது கணவரும் தவெக தலைவருமான விஜய் கண்டிக்காமல் மவுனமாக இருப்பதற்கு ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் ஜி.பிரமிளா, பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: திரைப்பட நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி, பொது வாழ்வில் நேரடியாக செயல்பட்டு வருகிறார். இந்தச் சூழலில், விஜய்யின் இணையர் சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில், விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருப்பது ஒரு தனிப்பட்ட சட்ட நடைமுறை ஆகும்.

திமுகவுடன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இணைப்பு விழா: மதுரை அருகே மார்ச் 7-ல் ஸ்டாலின் தலைமையில் நிகழ்வு

 
hindutamil.in - ஒய்.ஆண்டனி செல்வராஜ்  :  மதுரை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை அக்கட்சியில் இணைக்கும் விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரை அருகே வரும் 7-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், எவ்வித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக தொடர்ந்து தெரிவித்து வந்தார். 
ஆனால் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, எக்காரணம் கொண்டும் அவரை சேர்த்துக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23-ல் தீர்ப்பு

 hindutamil.in - கி.மகாராஜன் :  மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், மார்ச் 23-ல் தீர்ப்பளிக்கப்படும் என விசாரணை நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் செல்போன் கடை நடத்தி வந்தனர். 
கடந்த 2020 ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கு நேரக் கட்டுப்பாடு தாண்டி கடையை திறந்து வைதிருந்ததாக கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் போலீஸார் விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

ஞாயிறு, 1 மார்ச், 2026

ஈரான் பாதுகாப்பில் சீனாவின் HQ-9B ‛டிபென்ஸ் சிஸ்டம்’ காலை வாரியது! சீன டபுள் கேம் விளையாடியதா?

 tamil.oneindia.com - Nantha Kumar R :  டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சேர்ந்து மேற்கொண்ட போர் நடவடிக்கையால் மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதல்களால் ஈரான் பெரும் அழிவை சந்தித்துள்ளன. ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் ஈரானின் இந்த பேரழிவுக்கு சீனாவை நம்பியதும், சீனாவின் வான்வெளி பாதுகாப்பு சாதனம் காலை வாரியதும் தான் முக்கிய காரணம் என்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஈரானை குறிவைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் பந்தாடி வருகின்றன.

29 இடங்களைக் கேட்கும் காங்கிரஸ்... 23-க்கு இழுக்கும் திமுக!

 hindutamil.in  : தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் பொறுப்பாளர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
திமுக உடனான அதிகாரபூர்வ தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் 29 தொகுதிகளைக் கேட்டதாகவும், திமுக தரப்பில் 23 தொகுதிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது. முன்னதாக, ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் கோரிக்கையை காங்கிரஸ் எழுப்பியதால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் திமுக - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.

:ஈரானிய பட்டத்து இளவரசர் : சரண் அடைந்து அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும்!

 தினமலர் : வாஷிங்டன்: கமேனியுடன் இணைந்து ஆட்சி நடத்தியவர்களில் மீதமுள்ள அனைவரும் உடனடியாக சரண் அடைய வேண்டும். அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்காவில் வசிக்கும் ஈரானிய பட்டத்து இளவரசர் ரெசா பஹலவி கூறியுள்ளார்.
ஈரான் ஆட்சியாளரான மதகுரு கமேனி கொல்லப்பட்ட நிலையில், 50 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ஈரானின் பட்டத்து இளவரசர் ரெசா பஹல்வி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான ஈரானின் குடிமக்களை படுகொலை செய்ய உத்தரவிட்ட அரக்கன் கமேனி மறைந்துவிட்டார்.

அமெரிக்க தாக்குதலில் ஈரான் சர்வாதிகாரி அலி காமனி உயிரிழந்துள்ளார்

ராதா மனோகர்  :  ஈரான் சர்வாதிகாரி அலி காமனி அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்துள்ளார் 
இந்த செய்தியை ஈரான் அரசு தொலைக்காட்சி உறுதி செய்துள்ளது 
இந்த செய்தி பெரும்பான்மையான ஈரான்  மக்களுக்கு பெரும் மகிழ்சியை அளித்திருக்கிறது என்றே கருதுகிறேன்.
ஒரு மிக சிறந்த நாட்டை வெறும்   மத அடிப்படை வாதிகள் கைப்பற்றி எப்படி எப்படி எல்லாம் சீரழித்தார்கள் என்பதை இனி வரலாறு தெளிவாக கூறும்.
இந்த செய்தியை அறிந்த ஈரான் மக்கள்  ஒரு விடுதலை உணர்வு  பெற்று தெருக்களில் ஆடி பாடும் காட்சிகள் உலகம் இன்று பார்த்துக்கொண்டிருக்கிறது. 
குறிப்பாக பெண்கள் மீதான அடிப்படை மத ஒடுக்குமுறைக்கு  ஒரு முடிவு ஏற்றப்பட்டிருக்கிறது.
 மறைந்த மன்னர் Mohammad Reza Pahlavi ஷாவின் மகன்   Reza Pahlavi ரெஸா பல்லவி அமேரிக்கா இஸ்ரேல் போன்ற நாடுகளின் உதவியோடு இந்த ஈரான் மீட்பு நடவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளார் என்று தெரிகிறது.

கமேனி மகள், மருமகன் உயிரிழப்பு.. உறுதி செய்த ஈரான்.. மொத்தமாக காலி செய்த அமெரிக்கா!

 tamil.oneindia.com -Vigneshkumar  : தெஹ்ரான்: ஈரானை குறிவைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் மிகத் தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. 
இதற்கிடையே கமேனியின் மகள், மருமகன், பேரக்குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதை ஈரானின் அரசு ஊடகமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
ஈரானை சுற்றிலும் கடந்த சில வாரங்களாகவே அமெரிக்கா தனது படைகளைக் குவித்து வந்தது. கடந்த வாரமே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தும் எனச் சொல்லப்பட்டது. 
இருப்பினும், சில காரணங்களால் கடந்த வாரம் தாக்குதல் நடத்தப்படவில்லை. 

மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!

dinamani.com : துருக்கிஷ் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ், ஏர் பிரான்ஸ், ஐபீரியா எக்ஸ்பிரஸ், ஜெர்மனியின் லுஃப்தான்ஸா, ஹங்கேரியின் விஸ் ஏர், ஃப்லை துபை, ஓமன் ஏர், டச்சு நாட்டின் கேஎல்எம் உள்பட முக்கிய விமான சேவைகள் பல பாதிக்கப்பட்டுள்ளன.
 

ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார்? டொனால்ட் ட்ரம்ப் டுவீட்

 hirunews.lk  :  ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
தனது 'ட்ரூத்சோஷியல்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை உறுதிப்படுத்தியுள்ள அவர், இது ஈரானிய மக்களுக்கும், ஈரானால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளுக்கும் கிடைத்த நீதி எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிநவீன உளவுத்துறை மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் உதவியுடன், இஸ்ரேலுடன் இணைந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கமேனியுடன் இருந்த மற்ற தலைவர்களும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மகளிர் பாடசாலை மீது ஏவுகணைத் தாக்குதல் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்வு!

 hirunews.lk :  ஈரானின் மினாப் (Minab) பகுதியில் அமைந்துள்ள மகளிர் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் மெஹ்ர் (Mehr) செய்தி நிறுவனம், மினாப் வழக்கு தொடுநரை மேற்கோள்காட்டி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
ஆரம்பத்தில் 53 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.

1983 கலவரத்தில் உண்மையிலேயே எத்தனைபேர் கொல்லப்பட்டிருந்தனர் ?

 

வெலிகடையில் குட்டிமணியின் கண்கள் தோண்டப்பட்டு கொல்லப்பட்டாரா ?

திடீர் டிமாண்ட்.. அதிர்ந்த அறிவாலயம்..அதிரடி ரிப்ளை.. திமுக- காங். பேச்சுவார்த்தையில் என்ன

 மின்னம்பலம் - Mathi :  என்னய்யா எலக்‌ஷன் களைகட்டுதோ?
ஆமாய்யா.. அதுவும் திமுகவோட அண்ணா அறிவாலயம் பக்கம் போகவே முடியலையே.. அவ்வளவு கூட்டம் குவிஞ்சு கிடக்கு..
திமுகவில தேர்தலில் போட்டியிட விரும்புறவங்க பிப்ரவரி 20-ந் தேதியில இருந்து விருப்ப மனு கொடுத்துட்டு இருக்காங்க.. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பேர் ஆதரவாளர்கள் படையோடு அறிவாலயத்துல விருப்ப மனு கொடுக்கிறாங்க.. அதுவும் நல்ல நாளா இருந்துட்டா போதும்.. அறிவாலயம் இருக்கிற தேனாம்பேட்டை சிக்னல் பக்கம் போகவே கூடாதுங்கிற அளவுக்கு கூட்டம் அலை மோதுதுய்யா..
இன்னொரு பக்கம், பிப்ரவரி 22-ந் தேதியில இருந்து கூட்டணி கட்சிகளோட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையும் அறிவாலயத்தில நடக்குது… ஒவ்வொரு கட்சி குழுவும் அவங்க கட்சிகாரர்களோடு வந்து பேசிட்டு போறாங்க..