நமது இந்திய நாட்டிற்கான புதிய அமெரிக்கத் தூதராக ரிச்சர்ட் வர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க வாழ் இந்தியரான ரிச்சர்ட் வர்மா, 2009 ஆம் ஆண்டு முதல் 2011ஆம்
ஆண்டு வரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அதிகாரியாக பணிபுரிந்தார்.
மேலும் இவர்,இந்தியாவின் அமெரிக்க தூதராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர்
என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். இப்பொறுப்பில் இருந்த நான்சி பாவெல்,
கடந்த மார்ச் மாதம் பதவி விலகியதை தொடர்ந்து, தற்போது ரிச்சர்டு வர்மா
புதிய அமெரிக்க தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை அமெரிக்க
அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக