திருமணத்தை பற்றி என்னி டம் கேட்காதீர்கள் என்று எரிந்து விழுந்தார்
தபு.‘சிறைச்சாலை‘, ‘கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்‘ உள்ளிட்ட படங்களில்
நடித்திருப்பவர் தபு. இந்தி, தெலுங்கு படங்களில் ஏராளமாக
நடித்திருக்கிறார். இவருடன் நடித்த நடிகைகள், இவருக்கு பிறகு நடிக்க வந்த
நடிகைகள் பலர் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டனர். இவரும் பாலிவுட்
நடிகர் சல்மான்கானும் காதலிப்பதாக முன்பு கிசுகிசு உலவியது. இருவரும்
திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. இன்று வரை இது
கிசுகிசுவாகவே நீடித்தாலும் சல்மான் கானின் காதலிகளாகவும், கேர்ள்
பிரண்டாகவும் ஐஸ்வர்யா ராய் உள்பட பல நடிகைகள் இருந்தனர். அவர்களிலும்
பலருக்கு திருமணம் ஆகிவிட்டது.
சல்மான், தபு மட்டும் திருமணம் செய்யாமல் உள்ளனர். இருவரும் சேர்ந்து ‘ஜெய் ஹோ‘, ‘ஹம் சாத் சாத் ஹெய்ன் உள்பட 5 படங்களில் நடித்திருக்கின்றனர். மீண்டும் புதிய படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.இதையடுத்து இந்த ஜோடி பற்றி பாலிவுட்டில் மீண்டும் பரபரப்பான கிசுகிசுக்கள் புகைய ஆரம்பித்திருக்கின்றன. சல்மான்கான் எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்ற தேடலில் பாலிவுட் பத்திரிகைகள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு கண்காணித்து வருகின்றன. திருமணம்பற்றி தபுவிடம் சிலர் கேள்வி எழுப்பியபோது, ‘எனது திருமணம் பற்றி எதுவும் கேட்கக்கூடாது என்று கடும் கோபப்பட்டார். - See more at: tamilmurasu.org

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக