செவ்வாய், 16 செப்டம்பர், 2014

பெண்களை வைத்து பலவீனமான அதிகாரிகளுக்கு தூண்டில்: 'பப்'பில் ஆடவைத்து உளவு பார்த்த அருண் செல்வராஜ்

ஹைடெக்' நிகழ்ச்சி தயாரிப்பாளர், போலி பத்திரிகையாளர் போல், சென்னையில் உலா வந்த பாக்., உளவாளி அருண் செல்வராஜ், பலவீனமான அதிகாரிகளை, 'பப்பு'களில் கிறங்க வைத்து, ரகசிய தகவல்களை கறந்து இருப்பது தெரிய வந்துள்ளது.சென்னை, சாலிகிராமம், கே.கே.சாலையில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பதுங்கி இருந்த, பாக்., உளவாளியும், இலங்கை தமிழருமான அருண் செல்வராஜை, 26, தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.கோடிகளில் புரண்டு, பெரும் தொழில் அதிபர் போல், ஆடம்பர வாழ்வு நடத்தி, உளவுத் தகவல்களை சேகரித்து வந்த, அருண் பற்றி, பூதம் கிளம்பியது போல் ஏராளமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன'ஐஸ் ஈவென்ட்'இது குறித்து, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:பட்டதாரி வாலிபரான அருண் செல்வராஜ், இலங்கையில் உள்ள, பாக்., துணை துாதரக அதிகாரிகள் அமீர் சுபேர் சித்திக், பாஸ் என்ற ஷா ஆகியோர் கொடுத்து அனுப்பிய, ௨ கோடி ரூபாயுடன், சென்னையில் கால்பதித்தான்.நுங்கம்பாக்கம், சத்தியமூர்த்தி பிரதான சாலையில், டி.எம்.ஏ., டவர்ஸ் குடியிருப்பில், 'பேஷன் ஷோ' நடத்தி வந்த நிறுவனத்துடன் இணைந்து, பி.ஆர்., (மக்கள் தொடர்பு) அலுவலகம் துவங்கினான்.  இலங்கை தமிழர் பாகிஸ்தான் உளவாளியாக அவதாரம் பூசியது வெட்கபடதக்கது. அவமானம். பாகிஸ்தானிற்கு சோரம் போய் புலிகளின் சுயகுணம் இதுதான் என்பதை காட்டி விட்டார் இந்த முன்னாள் புலி  . எங்கே போயிட்டாய்ங்க சீமான் வைகோ நெடுமா தமிழருவி மட்டைகள் எல்லாம் ?


விமான நிலைய அதிகாரி:

அப்போது, பெரும் நிறுவனங்களுக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்து தருதல், சினிமா பிரபலங்களை வைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்துதல் உள்ளிட்டவற்றை செய்தான்.அது தொடர்பான ஆல்பத்தை, எப்போதும் கை வசம் வைத்து இருந்த அருண் செல்ராஜ், 2009ல், நுங்கம்பாக்கத்தில் உள்ள 'பப்' ஒன்றில், மது மயக்கத்தில் இருந்த விமான நிலைய அதிகாரி ஒருவருக்கு துாண்டில் போட்டான்.அவரிடம், 'பேஷன் ஷோ' ஏற்பாட்டாளராக அறிமுகமான அருண், பளபளப்பான அந்த ஆல்பத்தை, அதிகாரியின் கைகளில் தவழவிட்டுள்ளான். அதன்பின், இருவரும் அடிக்கடி சந்தித்ததில், நட்பு வட்டம் விரிவடைந்து, பல அதிகாரிகள், அருணின் வலையில் சிக்கினர்.அதன்பின், விமான நிலைய அதிகாரிகளின் செல்லப்பிள்ளையாகவே மாறினான் அருண். இந்த யுத்தியை பயன்படுத்தியே, பல அதிகாரிகளை தன் வலையில் வீழ்த்தினான்.

சாலிகிராமத்தில் மையம்:

தனியாக, 'வெப் சைட்' துவக்கி, 'ஹைடெக்' நிகழ்ச்சி ஏற்பட்டாளர், போலி பத்திரிகையாளர் என, காட்டிக் கொண்ட அருண், தன் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக, சாதுர்யமாக, சாலிகிராமத்தில் தங்கி, சினிமா தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளான். பாகிஸ்தானில் இருந்த வந்த பணம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டில் கிடைத்த வருமானம் என, கோடிகளில் புரண்ட அருணின் நட்பு வட்டத்தில், பெண்களே அதிகம்.பெண்களை வைத்தே, அதிகாரிகளுக்கு துாண்டில் போட்டு, பல நேரங்களில் உளவுத் தகவல்களை சேகரித்துள்ளான். அது பற்றிய குறிப்புகள், அவன் டைரியில் இருந்து கிடைத்துள்ளன.

உளவு தகவல் சேகரிப்பு:

மேலும், அவனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, 'லேப்-டாப், கேமரா, ஹார்டு டிஸ்க், 'சிடி' போன்றவற்றை ஆய்வு செய்த போது, அந்த இளம் பெண்கள், ஐதராபாத், கொச்சி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்களுடன் இருக்கும் நபர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம். மொபைல் போனில், யார் பெயரும் இல்லை. ஆனால், முதல் எழுத்தை மட்டுமே பதிந்துள்ளான்.பெரிய மனிதர்களின் நட்பு, அதிகாரிகளின் செல்லப்பிள்ளையாக மாறிப்போன அருண் செல்வராஜ், பத்திரிகை குறிப்பு தயாரிப்புக்கு என, பல்வேறு இடங்களுக்கு சென்று, உளவு பார்த்துள்ளான்.அவன் எடுத்துள்ள படம் மற்றும் வீடியோ பதிவுகள் அனைத்தும், கடல் வழி ஊடுருவலை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளன. உ.பி.,யில் உள்ள, அவன் வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் இன்று ஆஜர்:

கைது செய்யப்பட்ட, அருண் செல்வராஜ், பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும்,' பொடா' கோர்ட்டில், இன்று காலை ஆஜர்படுத்தப்படுகிறான். அவனை, 10 நாட்கள், காவலில் எடுத்து விசாரிக்க, தேசிய புலனாய்வு அமைப்பினர் மனு செய்ய உள்ளனர்.

மாமல்லபுரத்தில் பாக்., உளவாளி நடமாட்டம்?

பாக்., உளவாளி அருண் செல்வராஜ், மாமல்லபுரம் வந்து சென்றதாக, பரபரப்பாக பேசப்படுகிறது. சென்னையில், தொழில் அதிபர் போர்வையில், பாக்., உளவாளியாக செயல்பட்டு வந்த, இலங்கை தமிழர் அருண் செல்வராஜை, தேசிய புலனாய்வு அமைப்பினர், கடந்த 10ம் தேதி, சென்னை, சாலிகிராமத்தில் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், சென்னை மற்றும் கல்பாக்கம் அணுசக்தி வளாகம் ஆகிய இடங்களில், பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள சதி அம்பலமானது. இதுகுறித்த செய்தி, ஊடகங்களில் வெளியானதை அடுத்து, நாடு முழுவதும், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உளவாளி அருண் செல்வராஜ், மாமல்லபுரத்தில் வலம் வந்ததாக கூறப்படுகிறது.கல்பாக்கம், அணுசக்தி வளாகத்திலிருந்து, 3 கி.மீ., தொலைவில் உள்ள மாமல்லபுரம், சர்வதேச பாரம்பரிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இதையடுத்து, உள்நாடு மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகள், இங்குள்ள விடுதிகளில் தங்குகின்றனர்.கல்பாக்கம் பாதுகாப்பு கருதி, இந்நகரமும், போலீஸ் மற்றும் உளவு ஆகிய துறைகளின் கண்காணிப்பில் உள்ள நிலையில், உளவாளி அருண் செல்வராஜ், அவ்வப்போது இங்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. முக்கிய விடுதிகள், உணவகங்கள் ஆகியவை இயங்கி வரும், ஒற்றைவாடை தெரு உட்பட சில பகுதிகளில், அவர் வலம் வந்ததாகக் கூறப்படுகிறது.சில நாட்களாக, ஊடகங்களில் வெளியான அவரின் புகைப்படத்தை கண்ட நபர்கள், ஒற்றைவாடை தெரு உணவகங்களுக்கு அவர் வந்ததாகவும், உணவு பரிமாறியவர்களுக்கு, தாராளமாக 'டிப்ஸ்' வழங்கியதாகவும் கூறுகின்றனர்.

- நமது நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: