சனி, 20 செப்டம்பர், 2014

பாகிஸ்தான் அதிகாரிகளிடம் உளவு தகவல்களை புனேயில் ஒப்படைத்தேன் ! Ex புலி அருண் செல்வராசன் வாக்குமூலம் !

தமிழகத்தில் சேகரித்த உளவு தகவல்களை, மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில், பாக்., அதிகாரிகளை சந்தித்து ஒப்படைத்தேன்,'' என, உளவாளி அருண் செல்வராஜ், தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் தெரிவித்து உள்ளான்.கடந்த 10ம் தேதி, சென்னை, சாலிகிராமத்தில் கைது செய்யப்பட்ட அருண் செல்வராஜிடம், தேசிய புலனாய்வு அமைப்பினர், இரண்டாவது நாளாக நேற்று விசாரித்தனர்.அப்போது, விடுதலைப் புலிகள் அமைப்பு எப்படியெல்லாம் உளவு தகவல்களை சேகரித்தது என்பதை, பாகிஸ்தானுக்கு நேரடியாக அழைத்துச் சென்று, பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அதிகாரிகள் கேட்டறிந்ததுடன், தான் உட்பட 10 பேர் கொண்ட குழுவினருக்கு, உளவு தகவல் சேகரிப்பது குறித்து பயிற்சி அளித்ததாகவும் தெரிவித்தான்.மேலும், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள விடுதலைப் புலிகளுடன் தனக்கு இருந்த தொடர்பு, அவர்கள் வாயிலாக சேகரித்த உளவு தகவல்கள் குறித்தும் தெரிவித்து உள்ளான்.


விசாரணையில், அருண் செல்வராஜ் கூறியதாவது:பாக்., அதிகாரிகளை, மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் சந்தித்து, தமிழகத்தில் சேகரித்த உளவு தகவல்களை ஒப்படைத்தேன்.கடைசியாக, செப்., 3ம் தேதி, பாக்., துாதரக அதிகாரிகள் அமீர் சுபேர் சித்திக், பாஸ் என்ற ஷா ஆகியோரை புனேயில் சந்தித்தேன். புனே நகரைத் தான் நாங்கள் ரகசியமாக சந்திக்கும் இடமாக வைத்திருந்தோம். அப்போது கடல்வழி மார்க்கமாக சென்னையில் ஊடுருவுவது பற்றி வரைபடத்துடன் விளக்கினேன்.இவ்வாறு, அருண் செல்வராஜ் தெரிவித்துள்ளான்.

கம்ப்யூட்டர் ஆய்வு:

அருண் செல்வராஜிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, கம்ப்யூட்டர், லேப் டாப், பென் டிரைவ், கேமரா, வரைபடங்கள், இணையதள பதிவுகள்,இ மெயிலில் அனுப்பப்பட்ட தகவல்கள் அனைத்தும், சென்னை, சி.பி.சி.ஐ.டி., அலுவலக, சைபர் கிரைம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு நடப்பதாக, தேசிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நமது நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: