செவ்வாய், 16 செப்டம்பர், 2014

ஜெயலலிதா சொத்து குவிப்பு தீர்ப்பு 27-ம் தேதிக்கு மாற்றம் ! அதிஷ்ட தேதி ராசி ?

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு தேதி 27-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இறுதி வாதம் நிறைவடைந்து வருகிற 20–ந் தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களூர் தனிக்கோர்ட்டு அறிவித்தது. இந்த நிலையில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் ஜெயலலிதா சார்பில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாதுகாப்பு காரணங்களை கருதி தனிக்கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்த மனு மனு மீது விசாரணை இன்று நடைபெற்றது.


மனுவை விசாரித்த நீதிபதி சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு தேதியை 27ம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு கருதி பரப்பான அக்ரஹாரம் சிறை வளாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். தற்போது நீதிமன்றம் அமைந்துள்ள இடத்தில் தீர்ப்பு நாளன்று பாதுகாப்பு தருவது கடினம் என்று போலீஸ் கருத்து தெரிவித்தை அடுத்து நீதிமன்றம் தீர்ப்பு தேதியை மாற்றியுள்ளது. தீர்ப்பு கூறப்படுவதை அக்ரஹாரம் சிறை வளாக நீதிமன்றத்திற்கு மாற்றவும் போலீஸ் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டது. வழக்கு ஆவணங்களை 20-ம் தேதிக்குள் அக்ரஹாரம் சிறை வளாக நீதிமன்றத்திற்கு மாற்றுவது மிகவும் கடினம் என்று போலீஸ் தெரிவித்தது. இதனையடுத்து பரிந்துரையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கில் தீர்ப்பு தேதியை 27-ம் தேதிக்கு மாற்றியுள்ளதுdaillythanthi.com

கருத்துகள் இல்லை: