திருவொற்றியூர்:
தேர்தல் வெற்றி பெறுவதற்காக அதிமுகவினர் ஜனநாயகமற்ற முறையில்
செயல்பட்டதாகவும், அதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருந்ததாகவும் பாஜ
மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.காஷ்மீரில்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி பெறும் நிகழ்ச்சி,
திருவொற்றியூர் நகர பாஜ சார்பில் தேரடி தெருவில் நேற்று நடந்தது. நகர
தலைவர் ஜெய்கணேஷ் தலைமை வகித்தார். பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,
நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம்
கூறியதாவது:இந்த உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற
நோக்கத்தில் அதிமுகவினர், வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது, கள்ள ஓட்டு
போடுவது போன்ற ஜனநாயகமற்ற முறையில் செயல்பட்டுள்ளனர்.உங்க ஆட்சிதானே மத்தியில் ? தேர்தல் கமிஷனை பிடிச்சு உள்ளே போடவேண்டியது தானே ?
இதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருந்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகதமாக இருக்கும் என்பதால், மற்ற கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமல் விட்டது தவறு. எதிர்க்காட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு இருக்க வேண்டும். திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க மத்திய அரசு முனைப்புடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து சன்னதி தெரு, வடக்கு மாடவீதி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கான நிதியுதவியை பாஜவினர் பெற்றனர். மாவட்ட தலைவர் வெங்கடகிருஷ்ணன், நகர செயலாளர் விஷ்வகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்/tamilmurasu.org

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக