கணித
மேதை ராமானுஜம் வாழ்க்கை தமிழில் படமானதையடுத்து அதற்குபோட்டியாக அதே படம்
ஹாலிவுட்டில் படமாகிறது. கடந்த 2 மாதத்துக்கு முன் கணித மேதை
ராமானுஜத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘ராமானுஜன் படத்தை இயக்கினார் ஞான
ராஜசேகரன். இதில் ராமானுஜனாக அபிநய் நடித்திருந்தார். இவர்
ஜெமினி-சாவித்திரியின் பேரன். ‘எல்லாம் அவன் செயல் பாமா மனைவியாக
நடித்திருந்தார். கும்பகோணத்தில் ராமானுஜம் வாழ்ந்த வீட்டில் ஷூட்டிங்
நடந்ததுடன் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்திலும்
படப்பிடிப்பு நடந்தது. தற்போது ‘தி மேன் ஹு நியு இன்பினிடி என்ற பெயரில்
ஹாலிவுட்டில் ராமானுஜன் வாழ்க்கை சரித்திரம் படமாகிறது. ‘ஸ்லம் டாக்
மிலினர் படத்தில் நடித்த தேவ் படேல் ராமானுஜனாக நடிக்கிறார். அவரது
மனைவியாக தேவிகா பிசே நடிக்கிறார். இதன் ஷூட்டிங்கும் கும்கோணம்,
புதுச்சேரியில் நடந்தது. சில நாட்கள் சென்னையில் ஷூட்டிங் நடத்தப்படுகிறது.
ஏற்கனவே துறைமுகம் அருகில் இதன் ஷூட்டிங் நடந்திருக்கிறது. இதில்
நடிக்கும் நடிகர் நடிகைகளின் மேக் அப் ஸ்டில்களை வெளியிடாமல் ரகசியமாக
வைத்திருக்கிறது பட குழு. - .tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக