சனி, 20 செப்டம்பர், 2014

அக்ஷரா ஹாசன் காதல் முறிந்தது

பாலிவுட் நடிகருடன்  காதலை முறித்துக்கொண்டார் அக்ஷரா ஹாசன்.கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷரா. மும்பையில் தாய் சரிகாவுடன் வசிக்கிறார். அமிதாப்பச்சன், தனுஷ் நடிக்கும் ‘ஷமிதாப் இந்தி படத்தில் நடித்து வருகிறார். நடிக்க வருவதற்கு முன் இந்தி நடிகர் நஸ்ருதீன் ஷா மகன் விவான் ஷாவை அக்ஷரா காதலித்தார். இருவரும் பல இடங்களில் ஜாலியாக சுற்றினர். இதையடுத்து இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியானது. அதை இருவரும் மறுக்கவில்லை. கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தபிறகு அக்ஷராவுக்கும் நடிப்பதற்கான நிறைய வாய்ப்புகள் வந்தது. அதை ஏற்காமல் ஒதுங்கி இருந்தார்.


இந்நிலையில் ‘ஷமிதாப்‘ படத்தில் அக்ஷராவுக்கு வாய்ப்பு தேடி வந்தது. இதில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியதையடுத்து விவான் ஷாவுடனான காதலில் தேக்கம் ஏற்பட்டதுடன் அவரை சந்திப்பதை நிறுத்திக்கொண்டார் அக்ஷரா. இது விவானின் மனதை பாதித்தது. காதல் பற்றி வெளிப்படையாக கூறாமல் இருந்த அவர் தற்போது அது பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறும்போது, ‘கடந்த 2 வருடமாக அக்ஷராவுடன் பழகி வந்தேன். தற்போது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் எங்களுக்குள் உறவு எதுவும் இல்லாமல் பிரிந்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். - See more at: tamilmurasu.org/

கருத்துகள் இல்லை: