மேற்கு வங்காளத்தை மையமாக வைத்து சாரதா சிட்பண்ட் என்ற நிதி நிறுவனம் நாட்டின் பல பகுதிகளில் செயல்பட்டு வந்தது.
இதன் உரிமையாளர் சுதிப்தா சென். இவரும், இவரின் நிறுவனத்தை
சேர்ந்தவர்களும், முதலீட்டாளர்களிம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக
புகார் எழுந்தது. சலுகைககள், பரிசு பொருட்கள் அளிப்பதாக, பொதுமக்களிடம்
சீட்டு பணம் வசூல் செய்து, மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த சாரதா நிறுவன தலைவர் சுதிப்தா சென்
காஷ்மீரில் கைது செய்யப்பட்டு, கொல்கத்தா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு,
சிறையில் அடைக்கப்பட்டார். அவரது சொத்துக்களும் முடக்கப்பட்டன.
சாரதா நிதி நிறுவன மோசடியில், மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல்
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் தொடர்புள்ளதாக புகார்
கூறப்படுகிறது.
இந்நிலையில், சாரதா நிதி நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக அசாம் மாநில முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யான சங்கர் பரூவா என்பவரிடம் சி.பி.ஐ.போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அவர் இன்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்துக் கொண்டார்.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக