சனி, 20 செப்டம்பர், 2014

அம்மா வேடத்தில் நடிக்கும் நித்தியா மேனன்

இளம் ஹீரோவுடன் நித்யா மேனன் கெமிஸ்ட்ரி ஒத்துப்போவதால் அவருடன் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.‘நூற்றெண்பது, ‘உருமி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். இளம் ஹீரோயினாக நடித்து வரும் நித்யா மேனன் திடீரென்று மற்றொரு இளம் ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். தெலுங்கில் ‘ஐஸ்கிரீம் என்ற படத்தில் நடித்த தேஜஸ்வி மதிவாடாவுக்கு அம்மாவாக நித்யா நடிக்கிறார்.


இதுபற்றி பட தரப்பில் கூறும்போது,‘படத்தின் ஸ்கிரிப்ட்  நித்யாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே அம்மா வேடத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். எப்போதும் மாறுபட்ட கதாபாத்திரங்களையே நித்யா எதிர்பார்க்கிறார். அதுபோன்ற வாய்ப்புகள் எப்போதாவது ஒருமுறைதான் வரும். அப்படியொரு வாய்ப்பாக இந்த கேரக்டர் இருந்ததால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் என்றனர். இதில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கிறார் நித்யா. சர்வானந்துடன் நித்யா நடிக்கும் 2வது படம் இது. இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒத்துப்போவதால் நித்யா உடனே ஒ.கே சொல்லிவிட்டாராம். - See more at: .tamilmurasu.org/

கருத்துகள் இல்லை: