திருவள்ளுர் மணவாளன நகரில் நடைபெற்ற விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு பேசிய அவர்,ஆசிட்
வீச்சு கலாச்சாரம் தொடங்கியதே ஜெயலலிதா ஆட்சியில்தான். ஜெயலலிதாவின்
மோசமான ஆட்சியால் தமிழகத்தின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு
தள்ளப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சி கொண்டு வந்த திட்டங்களை முடக்குவதில்
அதிமுக அரசு குறியாக உள்ளது என்றார்.மேலும்
அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், மதுரையில் இளம்பெண் மீது நடைபெற்றுள்ள
ஆசிட் வீச்சு சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதோடு, பாதிக்கப்பட்ட பெண்
விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இப்படிப்பட்ட கொடுமையான சம்பவத்தை செய்த
குற்றவாளியை காவல்துறை உடனடியாக கண்டுபிடித்து அவனுக்கு கடுமையான தண்டனை
வழங்க ஆவண செய்ய கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்<nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக