காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 2 சட்டசபை
தொகுதிகளை காங்கிரசிடம் பாரதிய ஜனதா கட்சி பறிகொடுத்திருக்கிறது.
நாடு முழுவதும் 33 சட்டசபை, 3 லோக்சபா தொகுதிகளுக்கு செப்டம்பர் 13ல்
இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று
எண்ணப்பட்டன.
இதில் குஜராத்தில் மணிநகர், டீசா, தங்கரா, கம்பாலியா, மங்ரோல், தலஜா,
ஆனந்த், மத்தார், லிம்கேடா ஆகிய 9 சட்டசபை தொகுதிகளும் வதோதரா லோக்சபா
தொகுதியும் அடங்கும்.
மணிநகர் சட்டசபை தொகுதி மற்றும் வதோதரா லோக்சபா தொகுதி பிரதமர் மோடி
ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தலை எதிர்கொண்டது. மணிநகர் தொகுதியில்
தமிழர்கள் பெருமளவில் வசிக்கின்றனர்.
இடைத்தேர்தலை எதிர்கொண்ட 9 தொகுதிகளுமே பாரதிய ஜனதா வசம் இருந்தவை. தற்போது
இதில் 7 ல்தான் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. தங்கள் வசம் இருந்த
2 தொகுதிகளை காங்கிரஸிடம் பாஜக பறிகொடுத்துள்ளது.
இது குஜராத்திலும் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவாகவே
கருதப்படுகிறது.
tamil.oneindia.in/
tamil.oneindia.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக