காங்கிரஸ் எம்.பி. குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் பலி உத்திரப்பிரதேச
மாநிலம், அமேதியில் ராஜ குடும்பத்து வாரிசான காங்கிரஸ் எம்.பி. சஞ்சய்
சிங். காங்கிரஸ் எம்.பியாக உள்ள சஞ்சய் சிங்குக்கு 2 மனைவிகள். முதல் மனைவி
பெயர் கரீமா சிங். 2வது மனைவி பெயர் அமீதா>இந்நிலையில் அமேதியில் இருந்த விலகியிருந்த சஞ்செய் சிங் ஞாயிற்றுக்கிழமை திடீரென அமேதி அரண்மனைக்கு வந்தார்.இத்தகவல்
அறிந்த கரிமா சிங், அவரது 3 குழந்தைகள் ஆனந்த், மகிமா மற்றும் சைவ்வியா
ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். இதனால் அங்கு
மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர்.இதில்
போலீசாருக்கும் கரிமா சிங் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர். அப்போது எதிர்
தாக்குதல் நடத்தியதில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் அங்கு
பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர் மறைந்த பிரதமர் வி பி சிங்கின் தூரத்து உறவினராவார் , nakkheeran,in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக