யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே.... அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே....
எழுதுவது தேசியத்தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் சயனைட் குப்பியை கடிக்காமல் எதிரியின் கையால் கொல்லப்பட்டதையடுத்து வெளிநாடுகளிலிருக்கும் அவரது ஆதரவாளர்கள் யாரை எங்கே வைப்பது என்று தெரியாமல் பலத்திக்கிலும் பிரிந்து ஒருவரை ஒருவர் துரோகிப்பட்டம் சூட்டிக்கொண்டு வழிதெரியாமல் விழிபிதுங்கி நிற்கும்போது....
நாம்தமிழர் இயக்கத்தலைவர் சீமான் ஈழத்தமிழர்களுக்காக சிறையில் வாடிக்கொண்டிருக்கும்போது.... வைக்கோ தான் யுத்தத்தை நடத்த சொல்லவில்லை என கண்கலங்கும் வேளையில்
இங்கே ஆலோசகரதும் தேசியத்தலைவரதும் பெயரில் நடமாடும் வானொலி அறிவிப்பாளர்தான் இன்றைய நிலையில் தமிழ்த்தேசியத்தின் பாதுகாவலராக மாறியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய தமிழர் பேரவை எண்டாங்கள்.....
வட்டுக்கோட்டை தீர்மானம் எண்டாங்கள்.....
நாடுகடந்த தமிழ் ஈழம் எண்டாங்கள்.....
ஆனால்.... ஒன்றுமே ஈழத்தமிழர்களுக்காக நடக்கவில்லை.
ஆஸ்திரேலிய தமிழர் பேரவை எண்டாங்கள்.....
வட்டுக்கோட்டை தீர்மானம் எண்டாங்கள்.....
நாடுகடந்த தமிழ் ஈழம் எண்டாங்கள்.....
ஆனால்.... ஒன்றுமே ஈழத்தமிழர்களுக்காக நடக்கவில்லை.
நாடுகடந்த தமிழ் ஈழத்தேர்தலுக்கு 40 ஆயிரம் வெள்ளிகளை ஏப்பம்விட்டதுதான் மிச்சம். இப்படியே ஒருகூட்டம் இங்கே பிழைப்பு நடத்திக்கொண்டிருக்க இவர்களின் தானைத்தலைவன் இவர் இங்கு அமைதியாக தனது பிழைப்பை கனகச்சிதமாக நடத்துகிறார்.
இது இந்தக் கண்டத்து தமிழ்த்தேசிய புத்திஜீவி டாக்குத்தர்மாருக்கும் அப்புக்காத்துமாருக்கும் எஞ்சினியர்மாருக்கும் கணக்குப்பார்ப்பவர்களுக்கும் தெரியாமல் இருக்கிறதா? அல்லது சுருட்டும்வரையும் சுருட்டு மச்சான் என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்களா? நாடுகடந்த தமிழ் ஈழத்துக்காக சிட்னியிலிருந்து தெரிவாகியிருக்கும் ஒருவரின் சில தகைமைகளை இங்கு பார்க்கலாம்.
- தகைமை இலக்கம் 1 :- பிரகாசம் என்ற தொலைக்காட்சி சேவையை இந்த நாட்டில் ஒளிபரப்புவதற்காக ஒரு மலேசியா அம்மணியிடம் 20,0000 ஆயிரம் வெள்ளிகளை வாங்கி அபேஸ் செய்தது.
- தகைமை இலக்கம் 2 :- 35,000 ஆயிரம் அவுஸ்திரேலியன் வெள்ளிகளை ஒரு பெண்ணிடம் கடனாகப்பெற்று அதனை மீளக்கொடாமல் ஏமாற்றியது.
- தகைமை இலக்கம் 3 :- மற்றுமொரு பெண்ணிடம் பணமோசடி செய்த்து
- தகைமை இலக்கம் 4 )ஆஸ்திரேலியா தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திற்காக சேர்க்கப்பட்ட பணத்தில் பெருந்தொகையை மச்சான் சுருட்டிக்கொண்டார். எல்லாம் அந்த ஈஸ்வரனுக்கே வெளிச்சம்.
- தகைமை இலக்கம் 5 பலரது கிறடிக் காட்டுகளில் ஒரு முறைக்கு பதிலாக பலமுறை பணம் எடுத்தது.
- தகைமை இலக்கம் 6 சக்தி நிறுவனத்திடம் பல்லாயிரக்கணக்கில் பணம் வேண்டியபின் திருப்பி செலுத்தாமை
இங்கே நாடுகடந்த தமிழ் ஈழத்தின் பிரதிநிதி...
இவர்தான் ஐக்கியநாடுகள் சபையில் ஈழமக்களுக்காக குரல் கொடுக்கப்போகிறார். கோவிந்தா... கோவிந்தா... ஈஸ்வரா....ஈஸ்வரா....
இன்னும் இவரது வெட்கக்கேடுகள் களவுகள் வெளிவரும். இவருக்கு வாக்களித்த 1000 சின்ன வெங்காயங்களுக்கும் இவரது நாடுகடந்த ஈழத்து தலைமை பம்பாய் வெங்காயத்துக்கும் இது தெரியுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக