சனி, 3 செப்டம்பர், 2022

அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராக வர்ணாசிரம அரசியல் செய்யும் பாஜக: முரசொலி

அரசின் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராக  பச்சை வர்ணாசிரம - சனாதன அரசியல் செய்யும் பாஜக: முரசொலி தாக்கு!

கலைஞர் செய்திகள் : முரசொலி தலையங்கம் :  பச்சை வர்ணாசிரம- சனாதன அரசியலைத்தான் அர்ச்சகர் நியமனத்திலும் செய்து வருகிறார்கள்.
முரசொலி நாளேட்டின் இன்றைய (செப்.03, 2022) தலையங்கம் வருமாறு:
கருவாட்டுக்கடையை பூனை சுற்றிவருவதைப் போல கோவிலையே சுற்றிக்கொண்டு இருக்கிறது பா.ஜ.க. இதற்கும் பக்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்களுக்கு இருப்பது அரசியல் பகல் வேஷம்தான்.
‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்பது மாபெரும் சமூகநீதித் தத்துவம் ஆகும். சாதியின் பெயரால் கோவில் அர்ச்சகர் நியமனங்கள் கூடாது என்பதுதான் அதன் உள்ளடக்கம் ஆகும். அதனை அனுமதிக்க மறுப்பதன் மூலமாக, சாதியைக் காப்பாற்ற நினைக்கிறது பா.ஜ.க. அதன் மூலம், பெரும்பான்மை மக்களுக்கு எதிராக இருக்கிறது பா.ஜ.க.

வினாத்தாள் கசிவு பாஜக சமையல்காரர், கண்டக்டர், ஆட்டோ டிரைவர் ரூ.200 கோடிக்கு அதிபதி ஆனார்

மாலைமலர் : டேராடூன்:   உத்தரகாண்ட் மாநில அரசின் சார்பில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில் கடந்தாண்டு 854 பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிலர் மீது டேராடூன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தலைமையில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
இதை தொடர்ந்து தேர்வை ரத்து செய்வதாக முதல்-மந்திரி அறிவித்தார். மேலும், இந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

கேரளாவில் தென்மண்டல கவுன்சில் கூட்டம்..அமித்ஷா தலைமை..ஸ்டாலின் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்கள் ஆலோசனை

tamil.oneindia.com  - -Mani Singh S  :  சென்னை: தென்மாநிலங்களில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக இன்று காலை கேரளாவில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்குகிறது.
 இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட தென் மாநில முதல்வர்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
 தற்போது நடப்பு ஆண்டுக்கான தென் மண்டல கவுன்சில் கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு இந்த கூட்டம் திருப்பதியில் நடந்தது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்! முக்கிய முடிவுகள் பற்றி ஆலோசனை! முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்! முக்கிய முடிவுகள் பற்றி ஆலோசனை!

முதல்வர் ஸ்டாலின் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து திராவிட மாடல் பற்றி முக்கிய ஆலோசனை

tamil.oneindia.com  :  Vigneshkumar :  "திராவிட மாடல்.." கேரளாவில் பினராயி விஜயனை சந்தித்தார் ஸ்டாலின்.. மீட்டிங்கில் ஆலோசிக்கப்பட்டது என்ன
சென்னை: கேரள சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரியில் பல பிரச்சினைகள் நிலவுகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சயா நாடு திரும்பினார்!

hirunews.lk  இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சயா நாடு திரும்பினார்!  
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையை வந்தடைந்துள்ளார்.
நேற்று நள்ளிரவு அவர் தாய்லாந்தில் இருந்து இலங்கையை வந்தடைந்தார்.
இந்தநிலையில் அவர் கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள இல்லத்துக்கு இன்று அதிகாலை 12.50 அளவில் அவர் வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை வந்தடைந்த அவரை வரவேற்பதற்காக அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மக்களின் எதிர்ப்புக் காரணமாக கோட்டாபய ராஜபக்ச ஜூலை 13ஆம் திகதியன்று இலங்கையில் மாலைத்தீவுக்கு தப்பிச்சென்றார்.

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

தோழர் கவிதா கிருஷ்ணன் சி பி ஐ ML பொறுப்புக்களில் இருந்து விலகினார்

Kavita Krishnan quits all posts in CPI(M-L) after calling Soviet regime,  China autocratic | Flipboard
சி பி ஐ  ML பொறுப்புக்களில் இருந்து தோழர் கவிதா கிருஷ்ணன் விலகினார்
கவிதா கிருஷ்ணன்: ஒரு அறிவிப்பு
CPIMLல் உள்ள எனது பதவிகள் மற்றும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன், ஏனெனில் சில சிக்கலான அரசியல் கேள்விகளைத் தொடர வேண்டியிருந்தது:
CPIML தலைவராக எனது பொறுப்புகளை ஆராய்ந்து வெளிப்படுத்த முடியாத கேள்விகள். கட்சியின் மத்திய குழு எனது கோரிக்கையை ஏற்றுள்ளது.
இந்த கேள்விகள் அடங்கும்:
1. இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் அதிகரித்து வரும் சர்வாதிகார மற்றும் பெரும்பான்மை வாதங்கள்குக்கு  எதிராக தாராளவாத ஜனநாயகங்களை அவற்றின் அனைத்து குறைபாடுகளுடன் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க வேண்டிய அவசியம்

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு தாலிபான் மதகுரு உட்பட 18 பேர் உயிரிழப்பு

hindutamil.in  :  முஜிப்  ரஹ்மான் அன்சாரி  :  காபூல்: ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள மிகப் பெரிய மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் மதகுரு உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ஹெராத் மாகாணத்தின் ஆளுநர் ஹமிதுல்லா கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் ஹெராத் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) மசூதியில் எதிர்பாராத விதமாக குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் தலிபான் ஆதரவு மதகுரு உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். 23 பேர் காயமடைந்தனர்” என்று தெரிவித்தார்.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கர்நாடக மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு கைது .

கலைஞர் செய்திகள் - KL Reshma    சிறுமிகளுக்கு 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை.. இரவோடு இரவாக கைது செய்யப்பட்டார் கர்நாடக மடாதிபதி.
சிறுமிகளுக்கு 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாக எழுந்த புகாரில்,
கர்நாடக மடாதிபதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் நெஞ்சு வலி என கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் முருக மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருக சரணரு. இவரது மடம் சார்பில் விடுதியுடன் கூடிய பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் பல்வேறு மாணவிகள் பயின்று வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழு செல்லும்; இடைக்கால பொதுச்செயலாளர் இ.பி.எஸ் - உயர்நீதிமன்றம்

நக்கீரன்  : எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய பொதுக்குழுவைச் செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில்,
.தி.மு.க.வில் ஜூன் 23- ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் எனத் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி முடிவடைந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில்,
எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய இருதரப்புக்கும் உத்தரவிட்டு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்திருந்த நிலையில்.

டீஸ்டா செதல்வாட்டுக்கு இடைக்கால பிணை! குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில்

மாலை மலர்  :  புதுடெல்லி:  கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என தீர்ப்பில் கூறப்பட்டது.
இதற்கிடையே, குஜராத் கலவர வழக்குகளில் அப்பாவி மக்களைக் கைதுசெய்ய போலியான ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறி முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமார், சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் ஜூன் 25-ம் தேதி கைது செய்தனர்.
டீஸ்டா செதல்வாட் கைது செய்யப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்தது.

ஹிந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி சுகேசிடம் இருந்து - ரூ.7.12 கோடி பெற்றதாக அமலாக்கத்துறை..

hindutamil.in : பிரபல மோசடி பேர்வழி சுகேசிடம் இருந்து நிதி பலன்களை ஜாக்குலின் பெற்று உள்ளார். ஜாக்குலின் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் சுகேசுடான உறவு மூலம் பணப் பலன்களை அடைந்துள்ளனர்.
புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக பெங்களூரை சேர்ந்த இடை தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
அவருடன் தொடர்பில் இருந்த பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசையும் அமலாக்கத்துறை விசாரித்தது.
மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் அவருக்கு பரிசு பொருட்களை அளித்து உள்ளார். இதனால் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான நிதி மோசடி வழக்கில் ஜாக்குலினை குற்றவாளியாக அமலாக்கத்துறை சேர்த்தது.

யார் அந்த “ரோலக்ஸ்?” போதை பொருளின் “ஹப்” குஜராத்.. கடத்தலுக்கு காரணம் மத்திய அரசு - பொன்முடி அதிரடி

tamil.oneindia.com  சென்னை: குஜராத்தில் இயங்கி வரும் முந்த்ரா என்ற தனியார் துறைமுகம்தான் என்றும், போதைப் பொருள் கடத்தலுக்கு காரணமே மத்திய அரசுதான் எனவும் தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டி இருக்கிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "போதைப் பொருட்கள் வெளிநாட்டில் இருந்துதான் இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது அது பலமடங்கு அதிகரித்து இருப்பதற்கு காரணம் தனியாவசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிற துறைமுகங்கள்தான்.
அவைகளின் மூலமாகவே இந்த கடத்தல் வேகமாக நடைபெறுகிறது. அதுவும் குறிப்பாக குஜராத்தில் இருக்கிற முந்த்ரா துறைமுகம்தான் இதில் நம்பர் ஒன். அங்குதான் அதிகமாக கடத்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது.

திராவிட மாதக் கொண்டாட்டம் ஏன்? டி.ஆர்.பி.ராஜா

மின்னம்பலம் : ”செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்” என்பது அலை பாயுதே படத்துக்காக கவிஞர் வைரமுத்து எழுதிய  பாடல் வரிகள் இவை.
காதலுக்காகவும்  சூழலுக்காகவும் எழுதப்பட்டதாக இருந்தாலும்,   திமுகவின் தகவல் தொழில் நுட்ப அணி இப்போது செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாகக்  கொண்டாடுவதற்கு ஒரு வகையில்  22 ஆண்டுகளுக்கு முன்பே வைரமுத்து வழிகோலியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
தமிழர்கள் தங்கள் துன்பங்களைத் தொலைத்து உரிமை இன்பங்களை அனுபவிப்பதற்கு அடித்தளமிட்ட மாதம் செப்டம்பர் மாதம்தான் என்கிறார்கள் திமுகவினர்.

மயிலாப்பூர் K.P. ஹரன் அய்யரும் இலங்கை தமிழரின் அரசியலும்... சொல்லாத செய்தி

ராதா மனோகர் :  கே பி ஹரன்  1959 இல் இருந்து 1979 வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர்
இவரின் முழுப்பெயர்  கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் என்பதாகும்
தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்தவர்
சென்னையில் சுமார் 10 ஆண்டுகள்  "தமிழ்நாடு", "ஸ்வராஜ்யா", "தாருல் இஸ்லாம்", "ஹனுமான்", "ஹிந்துஸ்தான்" ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றிய பின்பு  இலங்கையில் வீரகேசரியில் (1939-1959) 20 ஆண்டுகள் முதன்மை ஆசிரியர்.
யாழ்ப்பாணம் ஈழநாட்டில் (1959-1979) 20 ஆண்டுகள் முதன்மை ஆசிரியராகவும் பணியாற்றியவர் .
ஐய்யறன்  கேபிஎச் போன்ற பல புனைபெயர்களிலும் எழுதியவர்
இலங்கையில் பிரபல  ஆன்மீகச் சொற்பொழிவாளராகவும் அறியப்பட்டவர்  

வியாழன், 1 செப்டம்பர், 2022

முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி : நாங்கள் 70% வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்’

 Kalaignar Seithigal - Lenin  : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (1.9.2022) கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்லத் திருமண விழாவில் ஆற்றிய உரை:-
நம்முடைய முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி அவர்களுடைய அருமை பேத்தி, இளைஞர் அணியினுடைய மாநில துணை அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தம்பி பைந்தமிழ்ப் பாரி அவர்களுடைய அன்பு மகள் ஸ்ரீநிதி அவர்களுக்கும் – கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த பர்கூர் தொகுதியினுடைய சட்டப்பேரவை உறுப்பினர் திரு. மதியழகன்-திருமதி விஜயா ஆகியோருடைய அன்பு மகன் கௌசிக் தேவ் அவர்களுக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க : இலங்கையில் தூக்கு தண்டனைகளை அனுமதிக்க போவதில்ல!

தேசம் நெட் - அருண்மொழி  மரண தண்டனையை நிறைவேற்ற தான் கையொப்பமிடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (31) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற 2019 இல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருந்தார்.
இந்த தீர்மானத்தை வலுவற்றதாகக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரித்த போதே சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாட்டை நீதிமன்றுக்கு அறிவித்தார்.

பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்குவதே நோக்கம் - தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

நக்கீரன் : “பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்குவதே நோக்கம்” - தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்
பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் உதவியால் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வரானார்.
இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று நிதிஷ்குமாரைச் சந்தித்தார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், “பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்குவதே நோக்கம்" எனக் கூறியுள்ளார்.
2024 மக்களவை தேர்தலுக்கு பாஜகவிற்கு எதிரான அணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அனைத்து மாநிலங்களிலும் பாஜகவிற்கு எதிரான கட்சி தலைவர்களைச் சந்தித்து பேசி வருகிறார்.

எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மீண்டும் போராட்டம்...

தினமணி : எட்டு வழிச்சாலை: விவசாயிகள் மீண்டும் போராட்டம்
எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு,
தமிழக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் சென்னை இடையிலான பயண நேரத்தை குறைக்கும் வகையில் எட்டு வழிச்சாலை திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விவசாயிகளும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் அன்றைய அதிமுக அரசுக்கு தலைவலி ஏற்பட்டது.

சந்திரிகா பண்டாரநாயக்க - நாடு திவாலானமைக்கு ராஜபக்சர்கள்தான் காரணம்!

hirunews.lk  இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது, இரண்டு ராஜபக்சர்களின் ஆட்சிகளின்போது மேற்கொள்ளப்பட்ட ஊழல்களின் விளைவாகும் என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் இலங்கையில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு ஒரே வழி ஒரு சமூக-அரசியல் எழுச்சி ஒரு புரட்சியாகும் என்று அவர் தி ஹிந்துவிற்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை திவாலானமைக்கு ராஜபக்ச குடும்பம் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் ஊழல்களே காரணமாகும்.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் ராஜபக்சக்களின் கட்சியை நம்பியிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு செயற்படுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணிப் பெண்ணை நாக்கினால் டாய்லெட் சுத்தம் செய்ய வைத்த BJP Seemapatra tortures tribal woman while licking toilet

தினமலர் : ராஞ்சி: ஜார்க்கண்டில் பா.ஜ., பிரமுகர் சீமா பத்ரா தன் வீட்டில் பணிப்புரிந்த பழங்குடியின பெண்ணை சித்ரவதை செய்துள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் கட்சியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், சீமா பத்ராவை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ., தேசிய மகளிர் அணி உறுப்பினரான சீமா பத்ரா,
தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைபார்த்து வந்த சுனிதா என்ற பழங்குடியின பெண்ணை கொடூரமாக சித்ரவதை செய்தது தெரியவந்துள்ளது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, சீமா பத்ராவின் வீட்டிற்கு வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்டுள்ளார்.
சில காலம் சீமா பத்ராவின் மகள் வத்சலா பத்ராவின் டில்லி வீட்டிலும் பணிபுரிந்துள்ளார்.

ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள்.. குறைந்த மதிப்பெண் வழங்கினார்களாம் . ஜார்கண்ட் மாநிலம்

மாலைமலர் : ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தின் கோபிகந்தர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரசு நடத்தும் பழங்குடியினர் குடியிருப்புப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜார்கண்ட் கல்வி கவுன்சில் கடந்த சனிக்கிழமை தேர்வு முடிவுகளை வெளியிட்டது.
இதில் 9ம் வகுப்பில் படிக்கும் 32 மாணவர்களில் 11 பேர் தோல்விக்கு சமமாக கருதப்படும் டிடி கிரேடு பெற்றுள்ளனர்.
9ம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண்கள் வழங்கியதாக கூறி கணித ஆசிரியர் சுமன் குமார் மற்றும் கிளெர்க் சோன்ராம் சவுரே ஆகியோரை மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.
இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இருப்பினும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் எழுத்துப்பூர்வ புகார் எதுவும் வழங்கப்படாததால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

நாள்தோறும் 86 பாலியல் வன்புணர்வுகள்! இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த பாலியல் குற்றங்கள் - அதிர்ச்சி தகவல்

தினத்தந்தி  : கடந்த ஆண்டில் நாள்தோறும் சராசரியாக 86 கற்பழிப்புகள் நடந்ததாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் 'இந்தியாவில் நடந்த குற்றங்கள்' என்ற தலைப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு புள்ளிவிவர அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 31 ஆயிரத்து 677 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன.
அதிக அளவாக ராஜஸ்தான் மாநிலத்தில் 6 ஆயிரத்து 337 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மத்தியபிரதேசம் (2,947 வழக்குகள்), மராட்டியம் (2,496), உத்தரபிரதேசம் (2,845), டெல்லி (1,250) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ரூ.1க்கு 3 வேளையும் உணவு.. 'எனது இதயத்தையும் நனைத்துவிட்டது': ஈரோடு தம்பதிக்கு முதலமைச்சர் பாராட்டு!

கலைஞர் செய்திகள்  : ரூ.1க்கு 3 வேளையும் உணவு அளிக்கும் ஈரோடு தம்பதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் வெங்கட்ராமன், ராஜலட்சுமி. இவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனை அருகே AMV என்ற உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த உணவகத்தில், அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் தங்கி அவர்களைக் கவனித்து வருபவர்களுக்கு மூன்று வேளையும் ரூ.1-க்கு உணவு வழங்கி வருகின்றனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 20% சலுகை விலையில் உணவு வழங்கி வருகின்றனர்.
இப்படி இவர்கள் ஒருநாள் அல்ல கடந்த 15 ஆண்டுகளாக இந்த சேவையை செய்து வருகின்றனர். 

எட்டு வழிச்சாலை... நிலத்தை கையகப்படுத்திதான் ஆக வேண்டும்''-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

நக்கீரன்  : 'எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை' என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ''எட்டு வழிச் சாலையை பொறுத்த அளவிற்கு முதல்வர் பிரச்சனைகளை அலசி பார்த்து முடிவுக்குக் கொண்டு வாருங்கள்.
நிலம் கொடுப்பவரிடம் சந்தை மதிப்பிற்கான பணத்தை கொடுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
நாங்கள் இந்த திட்டத்திற்கு எதிரி கிடையாது.
நாங்கள் ஏற்கனவே ஆட்சி நடத்தி இருக்கிறோம். பல சாலைகளை நாங்களே போட்டிருக்கிறோம், கையகப்படுத்தி இருக்கிறோம். இப்பொழுது ஆட்சிக்கு வந்திருக்கிறோம்.

நிதிஷ்குமார் - சந்திரசேகர ராவ் சந்திப்பு: தேசிய அரசியலில் திருப்பம்!

மின்னம்பலம் : இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடக்க இருக்கிறது. 3-வது முறை பிரதமர் ஆவதற்காக மோடியும், மோடி அலைக்கு முடிவு கட்டுவதற்காக மாநிலக் ட்சிகளும் தற்போதே கூட்டணி குறித்து பேச களமிறங்கிவிட்டன.
தெலுங்கு தேசத்தில் கால் பதிக்கும் நோக்கோடு கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஐதராபாத்தில் வைத்து தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ சந்தித்த நிலையில்,
தேசிய அரசியலுக்கே டஃப் கொடுக்கும் விதமாக இன்று பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை சந்தித்துள்ளார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்.

கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு வழக்கு பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் பிணையில் விடுதலை

தினத்தந்தி  :  கள்ளக்குறிச்சி மாணவி மர்ம சாவு வழக்கில் கைதான பள்ளிக்கூட தாளாளர் உள்பட 5 பேர் நேற்று சேலம் சிறையில் இருந்து பிணையில்  விடுதலை  செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிபிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நிபந்தனை பிணை
இவர்கள் 5 பேரும் பிணை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதில் அவர்களுக்கு நிபந்தனை பிணை வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

புதன், 31 ஆகஸ்ட், 2022

சோனியா காந்தியின் தாயார் காலமானார். இத்தாலியில் காங்கிரஸ் தலைவர்..

Sonia Gandhi Mother Death: Gandhi family engulfed in grief, Sonia Gandhi's  mother Paola Maino dies in Italy. ? - Expresskeeda

 மாலை மலர்  :  நேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தாயாரை பார்ப்பதற்காக சோனியா காந்தி கடந்த 23ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார்.
இத்தகவலை காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை அவர் காலமானதாகவும், நேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றதாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மிக்கேயில் கோர்பச்சேவ்! சோசலிசம் கம்யூனிசம் என்ற முகமூடிகளுக்குள் பதுங்கி இருந்த பாசிசத்தை வீழ்த்திய மாபெரும் தலைவர்

Santhirapalan Saminathar  :  கோபர்சேவ் மரணித்துவிட்டார். அவரது சமுக பாத்திரம் பற்றிய மதிப்பீடுகள் மிக முக்கியமானது.
தம்மை கம்யூனிச  வாதிகளாக சோசலிச வாதிகளாக கூறிக்கொள்ளும் பல அமைப்புக்களும் அவரை துரோகி என்றும் அமேரிக்க கைக்கூலி என்றும் கூறிவருகிறார்கள்.
இதில்  ஸ்டாலினை தமது வழிகாட்டியாக கொள்வோரும், தம்மை ட்ரொஸ்கிய அமைப்பாக பிரகடனப்படுத்தும் சில அமைப்புக்களும் அடங்கும்.
             உண்மையில் கோர்பச்சேவ் யார் அவரது அரசியல் என்ன? அவர் முற்போக்கு  வாதியா? பிற்போக்கு வாதியா? என்ற பார்வை  மிக முக்கியம்.
முதலில் ரஷ்சியாவில் இருந்த ஆட்சி அமைப்பு எத்தகையது. உண்மையில் அது சோவியத்துக்களின் ஒன்றியமா என்பதில் இருந்தே பதிலைத்தேட வேண்டும் .
                         1917 ஒக்ரோவர் புரட்சி  சோவியத்துக்களின்  ஒன்றிய ஆட்சியை ஏற்படுத்துவதை இலக்காக கொண்டே நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையிலேயே சோவியத் ஒன்றியம் என பெயரும் சூட்டப்பட்டது.

அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாட்டில் புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைக்கிறார்... டெல்லி முதல்வர்

நக்கீரன் : அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அதற்கு புதிய பெயர் சூட்டி செப் 5ல் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் 18ம் தேதி தமிழக அரசு 2022- 2023ம் ஆண்டுக்காக தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 வரை பயின்ற மாணவிகளுக்கு அவர்கள்  இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் 1000 ரூபாய் அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்காக 698 கோடி ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் விற்பனை செய்ய நீதிமன்றம் அனுமதி

மாலைமலர் : தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, பெரும்பாலான உணவுப்பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உடலுக்கு தீங்கு என்பதை அறிந்தும் நாம் அதை வாங்கி உண்கிறோம் என்பது கவலையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் பிளாஸ்டிக் கவர்களில் பால் விற்பனை செய்யப்படுவதை ஏன் தடுக்கக்கூடாது என்றும் கேள்வியெழுப்பினர்.

குலாம் நபி ஆசாத்தின் புதிய காஷ்மீர் மாநில கட்சியில் பெருமளவு காங்கிரஸ் இணைகிறார்கள்

tamil.oneindia.com : ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் குலாம் நபி ஆசாத் தொடங்கப் போகும் தனி கட்சிக்கு காங்கிரஸ் கட்சியினர் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் 51 தலைவர்கள் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர்.

 Velayuthan Murali | Samayam  :  காங்கிரஸ் மூத்தத் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், கடந்த 26 ஆம் தேதி, அக்கட்சியில் இருந்து விலகினார். பல ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்த குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகியது,

புதுச்சேரியில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி- முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

மாலை மலர் :  மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்படும்
70 முதல் 80 வயது வரையிலான முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும்
புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் ரங்கசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவை வருமாறு: புதுச்சேரியில் விவசாயிகள் வாங்கிய ரூ.13 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும்.
மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்படும்.
மரபணு குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

இந்தியா முழுதும் 5G: முகேஷ் அம்பானியின் முழு உரை!

மின்னம்பலம் - srinivasan  :  2023 டிசம்பர் இறுதிக்குள் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் 5ஜி சேவை கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 45ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம் அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது.
அக்கூட்டத்தில் பல்வேறு முக்கியமான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
முகேஷ் அம்பானியின் முழு உரை இதோ…
பிரதமருக்கு நன்றி
“2 வாரத்திற்கு முன் இந்தியாவின் 75 வது சுதந்திர தினவிழாவை கொண்டாடினோம்.. அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசினார். தற்போது இந்தியாவின் வளர்ச்சிக்கு ரிலையன்ஸ் நிறுவனமும் பெரும் பங்கை அளித்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு 1.17 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க உலக நிதி நிறுவனம் IMF ஒப்புதல்

தினத்தந்தி : பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், 1.17 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க ஐ.எம்.எப். ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் விதமாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) அந்நாடு 170 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நிதியுதவி கோரி இருந்தது.

ஸ்ரீமதி மரணம்: மின்னம்பலம் புலனாய்வை உறுதிப்படுத்திய உயர் நீதிமன்றம்!

மின்னம்பலம் = பிரகாஷ் : கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கு காரணமானது பாலியல் பலாத்காரமோ, கொலையோ இல்லை என உறுதியாக கருத்து தெரிவித்திருக்கிறது உயர் நீதிமன்றம்.
இதன் மூலம் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக மின்னம்பலம்.காம் வெளியிட்ட விரிவான செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த உண்மைகளை நீதிபதி தன் கருத்தாகவும் சொல்லியிருக்கிறார்.
கடந்த ஆகஸ்டு 3 ஆம் தேதி, மாணவி ஸ்ரீமதி கொலையா, தற்கொலையா? இரவு முதல் அதிகாலை வரை நடந்தது என்ன? துல்லிய ரிப்போர்ட் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் நாம் கூறியிருந்த தகவல்கள் நீதிபதியின் இன்றைய தீர்ப்பில் இடம்பெற்றிருக்கின்றன.

சென்னை தொழில் அதிபர் கடத்தல்- பெண் டாக்டர் அமிர்தா கைது

சென்னை தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் பெண் டாக்டர் கைது

தினத்தந்தி : சென்னை தியாகராயநகர் ராமசாமி தெருவை சேர்ந்தவர் தொழில் அதிபர் சரவணன் (வயது 46). கடந்த 20-ந் தேதி இவரை வீடு புகுந்து ஒரு கும்பல் காரில் கடத்தியது. இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் சில மணி நேரத்திலேயே அவர் மீட்கப்பட்டார்.
மேலும் தொழில் அதிபரை கடத்தியதாக மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கியராஜ் (42), கோவை சிறை காவலர் நாகேந்திரன் (31), கரூர் அரவிந்த்குரு (23), திருப்பூர் கல்லூரி மாணவர் அப்ரோஸ் (23), மதுரை அஜய் (24), விஜயபாண்டி (25) என 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்; சுப்பிரமணியன் சுவாமி மனுவுக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு

மாலைமலர் : புதுடெல்லி: பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சுப்பிரமணியசுவாமி சார்பாக விஷேஷ் கனோடியா என்பவர் உச்சநீதிமன்றத்தில் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அதில் தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்யும் தி.மு.க அரசு அறிவித்துள்ள அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதன் மூலம் தமிழக கோவில்களில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்தும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கோவில்களில் அர்ச்சர்களை தமிழக அரசு நியமிக்க அனுமதிக்கக் கூடாது எனவும் அர்ச்சகர் நியமனம் தொடர்பான அந்த நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் மேற் கொள்ள வேண்டும் எனவும் கோவில் சொத்துகளின் உரிமையாளராக அரசு இருக்கக்கூடாது, சமயம் சார்ந்த செயல்பாடுகளில் அரசு தலையிடக்கூடாது எனவும் உத்தரவிட மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

காஷ்மீரில் குலாம் நபி ஆசாத் தனிக்கட்சி! காஷ்மீர் முதல்வர் வேட்பாளர்!

Oneindia Tamil  -Mathivanan Maran  :  ஶ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் அடுத்த 20 நாட்களில் தனிக் கட்சி தொடங்க உள்ளதாகவும் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் அவர்தான் என்றும் அம்மாநில முன்னாள் அமைச்சர் ஜி.எம். சரூரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் மேலிடத்தின் மிகவும் நம்பிக்கைக்குரிய வலதுகரமாக இருந்தார். மத்திய அமைச்சர் பதவிகளை வகித்தார். கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் மேலிடம் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார் குலாம் நபி ஆசாத்.

பாகிஸ்தானில் கடும் மழை வெள்ளம் உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியது

தினமலர்  : இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்து வரும் மழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5,12,275 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 4,98,442 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

Boney M பாப்'(pop) டிஸ்கோ (disco) காலத்தில் உச்சம் பெற்ற இசைக்குழுவினர்,

 Siva Ilango  :   புல்லரிக்கும் இசை தந்த போனி எம் குழுவினர்
'பாப்'(pop) இசையும், டிஸ்கோ (disco) நடனமும் உலகில் உச்சம் பெற்றிருந்த காலத்தில், அவற்றின் முடிசூடா மன்னர் என்ற முதல் இடத்தைப் பெற்றவர்கள் போனி எம் ( Boney M) குழுவினர்.
இன்னிசை நால்வராக வலம் வந்த பீட்டில்ஸ் (Beatles) இசைக்குழுவின் காலத்திற்கும், இனவெறி வெறுத்த இசைவாணன் மைக்கேல் ஜாக்சன் (Michael Jackson) காலத்திற்கும் இடைப்பட்ட இந்தக் குழுவினர்,
அப்பா (ABBA), பீகீஸ் (Bee Gees) குழுவினரின் சமகாலத்தவர்கள்.
நான்கு பேர் கொண்ட இந்த ஐரோப்பிய -  கரீபியன் குழுவை 1975 ஆம் ஆண்டில் ஒருங்கிணைத்து உருவாக்கியவர்,
பிரான்க் பரியன் என்ற ஜெர்மானியர்.

ரிஷ்வின் இஸ்மாத் : ஏன் தேவை புதியதொரு பெரியார்?

May be an image of 5 people and text that says 'NEWS UPDATE செய்திகள் பாஜக MP-க்கு நேர்ந்த அவலம்? பட்டியலின பா.ஜ.க MP ராம்சங்கர் கதேரியா, ஆசிவாங்க முயன்றபோது பூரி சங்கராச்சாரியார் காலை தூக்கி முகம் சுளித்த புகைப்படத்தால் சர்ச்சை. Kalaignar News O www.kalaignarseithigal.com 27-08-2022'

Rishvin Ismath  :   இதுதான் இந்து மதம்...  இதுதான் சாதி வெறி...  நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 522119 வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக சாதிவெறி பிடித்த மனிதனால் நிகழ்த்தப்பட்ட சாதிய வன்மமும், அவமானப் படுத்தப் படுதலும் - இந்திய ஜனநாயகமும், சட்டமும் தொடர்ந்தும் குருடாயிருக்குமா?
 
ஒரு தொழிலுமே செய்யாமல், மேல் சட்டை கூடப் போடாமல் காவியைச் சுற்றிக் கொண்டு தன் சாதி அடையாளத்தை மண்டை மீது ஏற்றி வைத்துக் கொண்டு உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே தின்று கழியும் சாதி வெறி பிடித்த தோல் தடித்த பூரி சங்கராச்சாரியாரான மஹாபாக் சரஸ்வதி எனும் அயோக்கியன்,
பொதுமக்களின் 522119 வாக்குகளைப் பெற்ற மக்கள் பிரதிநிதியின் தலையோ, மூச்சுக் காற்றோ தன் காலில் கூடப் பட்டுவிடக் கூடாது என்று பதறிப் போய்த் தன் காலைத் தூக்கி இருக்கின்றான், காரணம் அவன் உயர்ந்த சாதியாம், நாடாளுமன்ற உறுப்பினர் தாழ்த்தப்பட்டவராம்.

கலைஞரின் கோபாலபுரம் வீட்டை பார்க்கவந்த பழைய உரிமையாளர்கள் வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்


மாலைமலர் : எங்கள் குடும்பத்தின் அடையாளம் கோபாலபுரம் வீடு...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவில் கூறியிருப்பதாவது:
வீடு என்பது பலரது கனவு. கனவு இல்லத்தைச் சம்பாதிக்கும்போது நாம் அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. நம்மோடும் நம் குடும்பத்தோடும் உறவாகி, நம் அடையாளமாகவே வீடுகள் மாறி விடுகின்றன. எங்கள் குடும்பத்தின் அடையாளம் கோபாலபுரம் வீடு. தலைவர் கலைஞர் திரைத்துறையில் வெளிப்படுத்திய எழுத்தாற்றலின் வெகுமதியே கோபாலபுரம் வீடு.   இந்த வீடு, எங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இன்னொரு குடும்பத்துக்கும் உறவாகி இருந்தது. தலைவர் கலைஞர் கோபாலபுரம் வீட்டை சரபேஸ்வரர் அவர்களிடம் 1955-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாங்கினார். அதே ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது பேத்தியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர்களின் முகம் சுளிக்கும் பேச்சு...! மெளனத்துடன் கடந்து செல்லப் போகிறாரா முதலமைச்சர்... ஆர்.பி உதயகுமா

tamil.asianetnews.com -  Ajmal Khan  :  தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுகளுக்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா அல்லது எப்போதும் போல மௌனத்துடன் கடந்து செல்வாரா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு அமைந்த உடன் நிர்வாகத்தில் மாற்றம் கொண்டு வருவேன் என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலின் அறிக்கை விட்டார்,
மக்களும் இதை எதிர்பார்த்திருந்தனர்,
திமுக ஆட்சி அமையும்போதெல்லாம் மக்கள் மக்கள் விரோத போக்கினை தொடர்வதை போல் தற்போது திமுக அரசு தொடர்கிறது.

நான்கு அமைச்சர்களின் கட்சிப் பதவி பறிப்பு… ஸ்டாலின் முடிவு!

மு.க.ஸ்டாலின், துரைமுருகன் இடையே லடாய்? | Duraimurugan not happy with DMK  leadership - Tamil Oneindia

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை:  நான்கு அமைச்சர்களின் கட்சிப் பதவி பறிப்பு… ஸ்டாலின் முடிவு!
வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராம் சில போட்டோக்களை அனுப்பியிருந்தது.  ‘15 மாசெக்கள் மாற்றம் ஸ்டாலின் கையில் ரெட் லிஸ்ட் என்ற தலைப்பில் மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில்  வெளியான செய்தியை அப்படியே பிற ஏடுகளும் எடுத்தாண்டிருப்பதை சுட்டிக் காட்டியது இன்ஸ்டாகிராம். அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ‘நம் கடமையை செய்வோம்’ என்றபடியே டெலிகிராம் தனது மெசேஜை  டைப் செய்யத் தொடங்கியது.
 “ஒன்றிய செயலாளர்கள் தேர்தல் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் சென்னை போன்ற மாநகரங்களில் பகுதிச் செயலாளர் தேர்தலுக்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. 

இலங்கை வடக்கு கிழக்கு இடைக்கால நிர்வாகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சகல தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு

Trial begins in 30-year-old Douglas Devananda case | Page 21 | Daily News

samugammedia.con  வடக்கு, கிழக்குக்கென இடைக்கால நிர்வாகம்!
தமிழ்க் கட்சிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிரங்க அழைப்பு.
“வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் சூழல் தற்போது இல்லாத பட்சத்தில் அந்த மாகாணங்களை நிர்வாகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் உள்ள சகல அரசியல் தரப்புகளையும் ஒன்றிணைத்து இடைக்கால நிர்வாகம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.”
இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
தமிழ்க் கட்சிகள் இது குறித்துப் பேசி தமக்குள் ஒரு பொது முடிவுக்கு வரவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-

காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான உட்கட்சி தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறும்

நக்கீரன் : காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவருக்கான உட்கட்சி தேர்தல் தேதி அறிவிப்பு
கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகி நேற்று தனிக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கட்சியின் உயர் அதிகாரம் கொண்டவர்கள் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.
சோனியா காந்தி,  ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதால் மூவரும் காணொளி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Noida Twin Towers: நொய்டா இரட்டை கோபுர கட்டிடத்தை இடிக்கப்பட்ட 5 முக்கிய காரணங்கள் தரைமட்டமான 40 மாடிகள்!

tamil.oneindia.com குதூப் மினாரை விட உயரம்! நொய்டா இரட்டை கோபுர கட்டிடத்தை ஏன் இடிக்கிறார்கள்  தெரியுமா?
முக்கிய 5 பாயிண்ட்
இந்த இரட்டை கோபுரங்கள் இடிப்பின் பின்னணியில் 5 முக்கிய பாயிண்டுகள் உள்ளன. மேலும் 10 ஆண்டுகால சட்டப்போராட்டம் உள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றம், டெல்லி உச்சநீதிமன்றம் ஆகியவைகளின் உத்தரவுகளை தொடர்ந்தே இந்த இரட்டை கோபுர கட்டங்கள் இன்று இடித்து அகற்றப்பட உள்ளன. இந்த கட்டடம் கடந்து வந்த விஷயத்தை 5 பாயிண்டுகளாக அறிந்து கொள்ளலாம்.
முதல் பாயிண்ட்
2004ம் ஆண்டில் இந்த இரட்டை கோபுரம் கட்டட பணி துவங்கியது. 'சூப்பர்டெக்' நிறுவனத்துக்கு 9 தளங்கள் கொண்ட 14 தளங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. பிறகு இந்த திட்டம் திருத்தப்பட்டது. இதையடுத்து தான் ஒவ்வொரு டவர்களிலும் 40 தளங்கள் வரை கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான பணிகள் துவங்கி நடைபெற்ற பிறகு தான் விதிமீறல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதான் இன்றைய கட்டட இடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.
2வது பாயிண்ட்

தேடி வந்த டிக் டாக் காதலியை அறைந்த.காஞ்சிபுரம் போலீஸ் எஸ் ஐ! . நிர்வாணமாக நிற்க போவதாக மிரட்டிய இளம் பெண்.

tamil.asianetnews.com -   Ezhilarasan Babu  :  காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் தன்னைத் தேடி வந்த டிக்டாக் காதலியை மப்டி உடையில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் பளார் பளார் கன்னத்தில் அறைந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது.  
காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் தன்னைத் தேடி வந்த டிக்டாக் காதலியை மப்டி உடையில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் பளார் பளார் கன்னத்தில் அறைந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது.  இதனையடுத்து  அந்த உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்க்கும் பலரும் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் இந்த  உதவி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். முழு விபரம் பின்வருமாறு:-

எந்த கடவுளும் பார்ப்பனர் கிடையாது- மனுஸ்மிருதி பிற்போக்கானது:டெல்லி JNU துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட்

 Mathivanan Maran Oneindia   : டெல்லி: எந்த ஒரு கடவுளும் பிராமணர் கிடையாது; பெண்களை சூத்திரர்களாக வகைப்படுத்தும் மனுஸ்மிருதி மிகவும் பிற்போக்கானது என்று டெல்லி ஜவஹர்லால் நேரு (ஜே.என்.யூ).
பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட் தெரிவித்துள்ளார்.
மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் ஜே.என்.யூ. துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட் பேசியதாவது: மானுடவியல் என்பது அறிவியல் பூர்வமானது.
நமது கடவுள்களின் பூர்வோத்திரத்தைப் பாருங்கள். எந்த ஒரு கடவுளுமே பிராமணர் கிடையாது. கடவுள்களில் உயர்ந்தது சத்ரியர்கள்தான். சிவபெருமான் ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்.
பாம்புடன் சுடுகாட்டில் அமர்ந்திருப்பவர்தான் சிவபெருமான். சிவபெருமானுக்கு ஆடை என்பது குறைவுதான். பிராமணர்கள் சுடுகாட்டில் அமருவார்கள் என நான் நினைக்கவில்லை.

இலங்கையின் கடன் பிரச்சனைக்கு கைகொடுக்கும் ஜப்பான்

May be an image of 2 people and people standing

இலங்கையின் கடன் பிரச்சனையில் இருந்து மீள்வதற்கு சீனா போதியளவு ஒத்துழைப்பு வழங்க மறுத்ததை அடுத்து ஜப்பான் உதவ முன்வந்துள்ளதாக தெரிகிறது
உலக நிதி நிறுவனத்தின் இலங்கை கடன் மீட்பு கொள்கையானது சீனாவின் உதவியுடன் நடைபெறவேண்டும் என்று தெரிவித்ததை அடுத்து இலங்கை சீனாவின் உதவியை நாடியது  ஆனால் இந்த விடயத்தில் சீன கடும் போக்கை கடைப்பிடிப்பதாக தெரிகிறது
இந்நிலையில் இலங்கைக்கு கைகொடுக்க ஜப்பான் முன்வந்துள்ளது
இலங்கைக்கும் ஜப்பானுக்குமான நல்லுறவு என்பது வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.
Japan seeks to organize Sri Lanka creditors' meeting on debt crisis
 REUTERS /Kim Kyung-Hoon   :  TOKYO, Aug 26 (Reuters) - Japan is seeking to organise a Sri Lanka creditors' conference, hoping it could help solve the South Asia nation's debt crisis, but uncertainties cloud the outlook for any talks, three people with knowledge of the planning said.