சனி, 11 ஏப்ரல், 2020

கொரோனா தொற்று குணமாகி வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி !


veerakesari :கொரோனாவின் கோரப்பிடியில் முழு உலகமே சிக்கித்தவித்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடுதிரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று இருப்பது உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தென்கொரியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான டாயிகு, கொரோனா தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பிரபல வைத்தியசாலையொன்றில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த 51 பேர் குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்நிலையில், வீட்டிற்கு அனுப்பப்பட்ட பின்னர், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து மருத்துவ பரிசோதனை செய்தபோது மீண்டும் கொரோனா இருப்பது தெரிய வந்தது .
இதையடுத்து அவர்கள் மறுபடியும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுபற்றி தென்கொரிய விஞ்ஞானிகள் கூறும்போது, “இது வியக்க வைக்கும் விஷயம். மனித உடலில் பல்லாயிரம் கோடி செல்கள் உள்ளன. இதில் ஏதோ ஒரு செல்லில் கொரோனா வைரஸ் பிரிக்க முடியாத அளவிற்கு ஒட்டிக்கொண்டுள்ளது.

இலங்கை ஊரடங்கால் தேங்கும் விவசாய உற்பத்திகள் ..

Jeevan Prasad : பொருளாதார மையங்கள் குறித்த அரச நடைமுறைகள்
சரியில்லை! விவசாயிகள் நிலை பரிதாபம்!
நாட்டில் உணவு பற்றாக்குறை உள்ளது. அது அடுத்த மாதம் முதல் கடுமையான ஒரு நிலைக்கு நிச்சயம் தள்ளப்படும். அதை அரசு உணர்ந்துள்ளது.
இப்படி உணர்ந்தும் இதுவரை உற்பத்தி செய்த மரக்கறிகளை விற்க முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. நெல் போல மரக்கறியை வைத்திருக்க முடியாது. அதையாவது அரசு உணர வேண்டும். விவசாயிகள் தங்கள் மரக்கறிகளை கொண்டு வந்து சந்தைப்படுத்தும் பொருளாதார மையங்களை அரசு மூடி விட்டது.
அப்படியானால் இதுவரை தோட்ட தொழில் செய்த விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட மரக்கறிகளை என்ன செய்வார்கள்?
ஒன்று அரசே வாங்கி மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் அல்லது பொருளாதார மையங்களை வாரத்தில் குறிப்பிட்ட ஓரிரு நாட்களாவது திறந்து விற்கவும் - வாங்கவும் வழி செய்ய வேண்டும்.

இந்துமதம் .. ரொம்ப சுரண்டாதே . அந்த ஆள் கலரே அப்படித்தான்

All most all of Ambedkar followers does not want to give up Hindu religion We all name our caste on our forehead and talking about abolishing it 
Karthikeyan Fastura : மிகச்சரியாக சொன்னீர்கள். ஆனால் இந்த சாதிய சமூகத்தின் மீது விமர்சனம் வைக்கும்போது தான் அதிலிருந்து வெளியேற வேண்டும் என்ற வேட்கை பிறக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற விவாதம் தோன்றும்.
நான் இப்போது சொல்வது உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் போகலாம். ஆனால் சமூக பொருளாதார பார்வையில் சாதிவாரி இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். சாதி நுணுக்கமாக இருக்கும்போது இடஒதுக்கீடு மட்டும் மேலெழுந்தவாரியாக இருப்பது எப்படி சரிசமமான பலனை கொடுக்கும். குறைந்தபட்சம் இப்போது இருக்கும் இடஒதுக்கீடாவது கடுமையாக பின்பற்றப்பட வேண்டும். ஜெனரல் கேட்டகரியில் ரேங்கிங் அடிப்படையில் எல்லோரும் அனுமதிக்கப்பட வேண்டும். அது அரசியல்அமைப்பு சட்டம் சொல்கிறது. நடைமுறையில் இது உயர்சாதிகளுக்கு மட்டும் என்று அநீதியாக சுருக்கிவிடுகிறார்கள். அதாவது நல்ல ரேங்கிங்கில் வந்த ஒரு OBC, SC/ST பொதுபிரிவில் விடாமல் அவர்களை இடஒதுக்கீட்டில் தள்ளிவிடுகிறார்கள்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பான EWS நீக்கப்பட வேண்டும்.அப்படியும் அது வேண்டும் என்று வாதிட்டால் கலப்பு திருமணங்கள் செய்த மக்களுக்கு மட்டுமே EWS என்பது கொடுக்கப்பட வேண்டும். அது தான் சரி.
கலப்பு திருமணம் என்பது இயல்பாகாத வரை சாதி ஒழியாது. சாதிய சமூகத்தைவிட்டு உளப்பூர்வமாக

சிவகங்கை பட்டினியால் உயிரிழந்த முதியவர் - ஊரடங்கால் உணவு தர யாருமில்லை”#CoronaLockdown

.kalaignarseithigal.com - Vignesh Selvaraj  :சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சக்குடி பஸ் ஸ்டாப்பில் தங்கியிருந்த முதியவர் பட்டினியால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. : மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சக்குடி பஸ் ஸ்டாப்பில் தங்கியிருந்த முதியவர் பட்டினியால் உயிரிழந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலையில் பயணம் செய்பவர்கள் தரும் உணவைச் சாப்பிட்டு அப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவருக்கு உணவளிக்க யாரும் வராத சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக உணவின்றி வாடி, பசியால் மயங்கிய நிலையில் இன்று மாலை அந்த முதியவர் உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து திருப்புவனம் போலிஸார் உடலை கைப்பற்றி, பட்டினியால் இறந்தவர் பற்றி விசாரித்து வருகின்றனர்.

மூக்கரட்டை (மூக்கரைச்சி) பல நோய்களுக்கான மருந்து… பல உறுப்புகளின் பாதுகாவலன்

த.தமிழினியன் : ஒரே ஒரு மூலிகைதான்… ஆனால், பல நோய்களுக்கான
மருந்து… பல உறுப்புகளின் பாதுகாவலன்…’ இந்த வாக்கியம் ‘மூக்கிரட்டை’ மூலிகைக்குப் பொருந்தும். மழை இல்லாமல் வறட்சி தாண்டவமாடும் போதுகூட, மூக்கிரட்டை முளைத்திருப்பதைப் பார்க்க முடியும். வயல்களில் அல்லது காடுகளில்தாம் முளைக்கும் என்றில்லை. வாய்ப்புக் கிடைத்தால் சாலை ஓரத்தில்கூடப் படர்ந்து, லேசாகத் தலைதூக்கிப் பார்த்து, தனது இருப்பை உறுதிசெய்யும்.
பெயர்க் காரணம்: புட்பகம், மூக்குறட்டை ஆகிய வேறுபெயர்களுடன் உலா வருகிறது மூக்கிரட்டை. சிறிது செம்மை கலந்த ஊதா நிறத்தில் மலர்வதால் ‘ரத்த’ புட்பிகா எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். உடலுறுப்புகளின் செயல்பாடுகளைப் புதுப்பிக்கும் தாவரம் என்பதால், ‘புனர்நவா’ என்ற பெயர். (புனர்-மீண்டும்; நவா-புதிது)
அடையாளம்: தரையோடு படர்ந்து வளரும் தாவரம். ஊதா நிறத்திலான பூக்களைச் சூடியிருக்கும். இலைகளின் மேற்புறம் அடர்ந்த பச்சை நிறமாகவும், கீழ்புறம் சற்று வெளுத்தும் காணப்படும். வேர்கள் சற்றுத் தடிமனாகப் பூமிக்குள் மறைந்திருக்கும். ‘போயர்ஹேவியா டிஃப்யூசா’ (Boerhavia diffusa) எனும் தவாரவியல் பெயர் கொண்ட மூக்கிரட்டையின் குடும்பம் ‘நிக்டாஜினேசி’ (Nyctaginaceae). சாந்தோன்கள் (Xanthones), லிக்னன்கள் (Lignans), ரொடினாய்ட்கள் (Rotenoids), அராகிடிக் அமிலம் (Arachidic acid) போன்றவை மூக்கிரட்டையில் உள்ள தாவர வேதிப்பொருட்கள்.

நாடளாவிய ஊரடங்கு நீட்டிப்பு.. விரைவில் அறிவிக்கப்படும்

  nakkeeran : உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.8 லட்சம் என்ற அளவிலும் உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால் 7000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 200 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசின் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் நிலையில், அதன்பின் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப் பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளிக்காட்சி மூலம் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "ஒவ்வொரு குடிமகனின் உயிரையும் காப்பாற்ற, ஊரடங்கு மற்றும் சமூக விலகல் மிகவும் முக்கியம் என்று நான் மக்களிடம் உரையாற்றும்போது சொன்னேன். பெரும்பாலான மக்கள் இதைப் புரிந்துகொண்டு வீட்டிலேயே தங்கினர். இனிவரும் காலங்களில் மக்கள் தங்களது பணிகளைக் கவனித்தலோடு, அரசு வழிகாட்டுதலின்படி, நடப்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். இந்தியாவின் வளமான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு இது முக்கியமானதாக இருக்கும்" எனத் தெரிவித்திருந்தார்

இந்தியாவின் மிகப்பெரிய சவால் .. முன்னாள் மத்திய வங்கி(RBI) ஆளுநர் ரகுராம் ராஜன் பேட்டி .. India's Greatest Challenge in Recent Times"

Perhaps  India's Greatest Challenge in Recent Times"
Muralidharan Pb : முன்னாள் இந்திய மத்திய வங்கி(RBI) ஆளுநர் ரகுராம் ராஜனின் பேட்டியை நண்பர் அனுப்பி இருந்தார்.
பொருளாதார வல்லுநர் ரகுராம் ராஜன், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் இன்று கொரோனா தாக்குதலில் இருந்து வருங்காலங்களில் வரப்போகும முன்னேற்பாடுகளில், கொள்கை சிக்கல்கள் மற்றும் விதிவிலக்குகளுக்குட்படாத சவால்களை கண்டறிய ஐஎம்எப்(IMF) அமைத்த குழுவில் உள்ள 11 பேரில் ரகுராம் ராஜன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. திறமைகளை நம்மைக் காட்டிலும் வெளிநாட்டுக்காரன் நன்றாகவே உணர்ந்துள்ளான்.
இருப்பினும் ரகுராம் ராஜன், நான் இந்திய அரசு கேட்டுக்கொண்டால் உதவிட தயாராக இருக்கிறேன் என்று நேரடியாக கூறியுள்ளார். ஒரு ஊடகத்தின் பேட்டியில் பல விவரங்களை அவர் மேற்கோள் காட்டி பேசியுள்ளார். அதன் சுருக்கம்.
200 க்கும் மேற்பட்ட உயிர்களை குடித்த கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதார அழுத்தத்தை உணர்கிறேன், அரசு அழைத்தால் வைரஸ் ஏற்படுத்தக்கூடிய பொருளாதார நெருக்கடியால் ஏற்படப்போகும் பின்னடைவில் இருந்து வெளியேற நான் நமது அரசுக்கு உதவத் தயார்.
தற்போதைய பொருளாதார பின்னடைவை விட மிக மோசமான பின்னடைவை நாடு சந்திக்க உள்ளது என்பதை குறிப்பிடுகிறார். பொருளாதாரம் இதனால் ஓராண்டு கழித்து தான் மீளும் என்று நம்புகிறார். குறிப்பாக அந்நிய செலாவணி தான் பெரிய நெருக்கடிக்குள்ளாக்கப் போகிறது. ஆனால் ஆர்பிஐயின் முயற்சியால் நாம் பாதுகாப்பாகவே இருக்கிறோம். குறைந்த அளவிலே சேதாரம் ஏற்பட்டுள்ளது ஆனால் நம்மை போல வளரும் நாடான பிரேசில் 25% மேல் சென்றுவிட்டது. நாம் அவர்களை விட மேலாகவே இருக்கிறோம்.

கொரோனா இஸ்லாமியர்களுக்கு எதிரான வைரஸ் ஆக தமிழக மத்திய அரசுகளால் ..

தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பரப்பப்படும் வெறுப்பினைக் குறித்து நேற்று காலை ஒரு கடிதம் வரைந்தேன். அதை தமிழக முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக சிஎம் செல்லில் பதிய நினைத்தேன். உமாநாத், ஒடியன் ஆகியோருக்கும் அந்த அஞ்சலைக் காட்டினேன். ஆனால் பல முறை முயற்சி செய்தும் தமிழில் எழுதியதை பதிவேற்றவே முடியவில்லை. எனவே நேற்று மதியம் முதல்வருக்கு மின்னஞ்சலில் அனுப்பினேன்.
தீண்டாமையைவிட மோசமான சமூக விலக்கம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. வருகிற தகவல்களும் வீடியோக்களும் அச்சம் தருகின்றன. எனக்கு வந்த வீடியோவை நான் இங்கே பகிர விரும்பவில்லை.
அனைத்து எதிர்க்கட்சிகளும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல் பிரச்சினையின் தீவிரத்தைத் தணிக்க முடியாது.
நான் அனுப்பிய கடிதம் கீழே:
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு
வணக்கம்.
கொரோனா வைரஸ் நாடெங்கும் பரவத் துவங்கியிருக்கிறது. இதர நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவுதான். 21 நாள் ஊரடங்கு காரணமாக தொற்றின் வேகம் குறைவாகவே இருக்கிறது.
இப்போது ஏற்பட்டிருக்கிற தொற்றுகளுக்கு தில்லியில் நடத்தப்பட்ட தப்லிக் ஜமாத் கூட்டத்தில் வெளிநாட்டவர்கள் பங்கேற்றதும், அவர்களிடமிருந்து தொற்று பரவியதும் முதன்மைக் காரணமாக உள்ளது. இந்தத் தொற்றுகளால் பெரிய அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும் தொற்று பரவியது உண்மைதான். தமிழ்நாட்டிலிருந்து சென்ற 1500 பேரில் 1480 பேரும் பரிசோதனக்கு வந்து விட்டார்கள் என்று தமிழக அரசின் சுகாதாரச் செயலர் தெரிவித்திருக்கிறார்.

சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா


மாலைமலர் : சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் மன்னரும், பட்டத்து இளவரசரும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகளவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. 16 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சவுதி அரேபியாவில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சவுதி மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் பின் சல்மான் ஆகிய இருவரும் மருத்துவர்களின் ஆலோசனை படி தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியு யார்க்கில் சடலங்களை ஒரே இடத்தில் மொத்தமாகப் புதைக்கும் அவலம்

AP10-04-2020_000024Bதினமணி : அமெரிக்காவில் நியு யார்க் நகரில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருவதால் சடலங்களை ஒரே இடத்தில் பெரும் பள்ளம் வெட்டி அடுக்கடுக்காகப் புதைக்கிறார்கள். கரோனா நோய்த் தொற்றால் வேறெந்தவொ
ரு நாட்டையும்விட மிக அதிக அளவில் அமெரிக்காவில் மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இறந்தவர்களைத் தனித்தனியே அலங்கார சவப்பெட்டிகளில் வைத்துப் புதைப்பதற்கெல்லாம் நேரமும் இல்லை, ஆள்களும் இல்லை.
எனவே, ஒரே இடத்தில் பெரும் பள்ளங்களை வெட்டி மொத்தமாக சாதாரண பெட்டிகளில் உடல்களை வைத்து அடுக்கடுக்காக வைத்துப் புதைக்கிறார்கள்.

ஜாதியை முன்னிறுத்தும் சீமான் ...

Karthikeyan Fastura : நான் ஆரம்பத்தில் நாம் தமிழர் கட்சி திராவிட
கருத்தியல்களோடு முற்போக்கு சிந்தனைகளோடு ஒட்டி இயங்கியபோது ரசித்தேன். தமிழர்களாக ஒன்றிணைவார்கள் என்று நம்பினேன்.
ஆனால் வெகு சில நாட்களிலேயே அவர்கள் என் முடிவை மாற்றினார்கள். அடிமட்ட தொண்டர்களை தவிர அந்தகட்சியில் இருந்தவர்கள் அனைவரும் போலிகள். அதிலும் சீமான் உச்சம். என் வாழ்நாளில் அப்படி ஒரு நாக்கு பிரண்டு பேசும் ஒரு தலைமையை நான் பார்த்ததில்லை. இந்த இடத்தில் அவர் மோடியை கூட தோற்கடித்தார். வலதுசாரிகளை விட மிக மோசமான சந்தர்ப்பவாதியாக திகழ்ந்தார். பாஜகவின் தமிழிசை சவுந்தர்ராஜனை கூட ஏற்றுக்கொள்ளும் மனம் சீமானை மிகஅற்பமாக பார்க்கிறது.
சங்கிகளை நாம் எதிர்தரப்பில் வைத்து மோதலாம். வெளுத்துக்கட்டலாம். அதற்கான தெளிவான காரணத்தை அவர்கள் நமக்கு தருவார்கள். தீவிர சனாதனவாதியாக இருப்பார்கள். எப்போதும் அபத்தமாகவே அலைவார்கள். மதத்தை தூக்கிக்கொண்டு அலைவார்கள். அதன் உட்புறம் சாதியை வைத்திருப்பார்கள்.
சீமான் இனத்தோடு சாதியை கலந்து முன்னிறுத்துவார். இனப்பற்று இயல்பானது மொழியோடு நெருக்கமானது அதனுடன் சாதியை சரி என்பார். இனம் என்று வந்துவிட்டால் சாதிய கலாச்சாரத்தை ஏற்கக்கூடாது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இந்தியா ஏற்றுமதி செய்ய போகும் 13 நாடுகளின் முதல் பட்டியல்

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இந்தியா ஏற்றுமதி செய்ய போகும் 13 நாடுகளின் முதல் பட்டியல் தினத்தந்தி :  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (எச்.சி.க்யூ) ஏற்றுமதி செய்ய போகும் 13 நாடுகளின் முதல் பட்டியலை இந்தியா அனுமதி வழங்கி உள்ளது. > புதுடெல்லி:;ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (எச்.சி.க்யூ) ஏற்றுமதி செய்ய போகும்  13 நாடுகளின் முதல் பட்டியலை இந்தியா அனுமதி வழங்கி உள்ளது  இதில் பக்கத்து நாடுகளுக்கு முன்னுரிமை கிடைக்கிறது. மொத்தம் 25 நாடுகளுக்கு இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் பாராசிட்டமால் சப்ளை செய்யவுள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் 1.4 கோடி மாத்திரைகள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதி செய்ய இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (எச்.சி.க்யூ) வழங்கப்போகும்  முன்னுரிமை பட்டியலில் உள்ள 13 நாடுகளில் - அமெரிக்கா, 2 ஐரோப்பிய நாடுகள் - ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி, 2 தென் அமெரிக்க நாடுகள் - டொமினிகன் குடியரசு மற்றும் பிரேசில், மேற்கு ஆசியாவிலிருந்து ஒன்று, பஹ்ரைன் மற்றும் 5 அண்டை நாடுகளை உள்ளடக்கியது - இதில் நேபாளம், பூட்டான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு மற்றும் வங்காள தேசம் அடங்கும்.

தமிழக வண்ணார் - வரலாறும் வழக்காறுகளும் நூல் விமர்சனம் - முனைவர்.க.சுபாஷிணி

Subashini Thf : தமிழக வண்ணார் - வரலாறும் வழக்காறுகளும்
நூல் விமர்சனம் - முனைவர்.க.சுபாஷிணி
(பகுதி 1)
மாதப் பூப்பின் போது வடியும் குருதியைத் தடுத்து நிறுத்த பழைய துணிகளைப் பயன்படுத்தும் வழக்கம் முன்பிருந்தது. துணிகளைத் துவைத்து மீண்டும் பயன்படுத்தி வந்தனர். பூப்புக் குருதி கரையும் துர்நாற்றமும் கொண்ட துணிகளையும் அப்போது உடுத்தியிருந்த சேலைகளையும் பொட்டலமாகக் கட்டி வீட்டின் கொல்லை பகுதியில் வைத்து விடுவர். ஊர்ச்சோறு எடுக்க வரும்போது இச்செய்தி வண்ணாரப் பெண்ணிடம் தெரிவிக்கப்படும். அவர் மறுநாள் வந்து அவற்றை எடுத்துச் செல்வார். வீட்டுக்காரப் பெண் குச்சியால் எடுக்கும் துணிகளை அவர் சுமந்து செல்ல வேண்டிய அவலநிலை. `மூட்டு துணி` என்று தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் `தீட்டுத்துணி`, `தீண்டல் துணி` என்று தென் மாவட்டங்களிலும் அழைக்கப்பட்ட துணியை வெளுத்துத்தரும் பணி என்பது வண்ணார் மீது திணிக்கப்பட்ட கொடுமையான பணியாகும். சானிடரி நாப்கின் அறிமுகம் இக்கொடுமையில் இருந்து மக்களை விடுவித்துள்ளது என்றாலும், சில கிராமங்களில் இக்கொடுமை தொடரத்தான் செய்கிறது.
- திரு.ஆ.சிவசுப்பிரமணியன், (பக் 47)

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

Karthikeyan Fastura : Investment Workshopல் இந்த Moral Investment பற்றியும் சொல்ல இருக்கிறேன்.

Karthikeyan Fastura : கொரோனா இறப்புகள் உலகம் முழுக்க 1,00,261 என்ற ஆறு
இலக்கத்தை தொட்டுவிட்டது. தனிமைப்படுத்துதல் நிகழ்ந்தபிறகும் வேகம் குறையாமல் பரவுகிறது. பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. மூன்றாம் உலகநாடுகளான இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் சரியாக திட்டமிடப்படாத ஊரடங்கினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம். ஒரு பக்கம் வைரஸ் நோய் மறுபக்கம் வருமான இழப்பினால் உண்டான பொருளாதார சிக்கல் என்று இரண்டுக்கும் இடையில் மனித சமூகம் இன்று நசுங்குகிறது.
உலகப் பொருளாதாரம் மொத்தமும் முடங்கி போயுள்ளதால் எழுந்துள்ள பொருளாதார சிக்கல் என்னும் பெரும் சுனாமி அலை வேறு வந்துகொண்டிருக்கிறது. நோயில் இருந்து தப்பினாலும் இதிலிருந்து மீள உலகத்திற்கு மிகப் பெரும் வலிமை வேண்டும் சிறிதுகாலம் வேறு பிடிக்கும். இது அத்தனையிலும் தாக்குப்பிடித்து மீளும்போது பெரும் உலகப்போரில் ஏற்பட்ட உயிரிழப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படும்.

புலிகளின் வெருகல் (கிழக்கு மாகாணம்) படுகொலைகள் 16 ஆண்டு நினைவு .. 2004 ஏப்ரல்10 ம் திகதி

புலிகளின் தோல்வி முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றதாக கருதுவது ஒரு வரலாற்று தவறு . உண்மையில்  புலிகளின் வெருகல் படுகொலைகள்தான் அதற்கு மூல காரணம் . நாம் எமது உரிமைகளை கேட்ட மாத்திரத்தில் ஒரே நாளில் துரோகிகளாக்கப்பட்டோம். அப்படிஎன்றால் பிரிந்து செல்வோம் என்றார்கள். விளைவு  புலிகள் தங்களின் போராளிகள்  (கிழக்கு) மீதே  படுகொலைகளை கட்டவிழ்த்து விட்டார்கள்.
ilankainet.com - பீமன் :
புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறுவதாக கருணா அறிவித்த பின்னர், கிழக்கை புலிகள் கனரக ஆயுதங்களுடன் ஆக்கிரமித்து அந்த மண்ணின் புதல்வர் புதல்வியரை கொடூரமாக கொன்றொழித்த அந்த கரிநாளுக்கு இன்றுடன் 16 வருடங்கள். இலங்கை அரசாங்கத்துடன் செய்துகொண்ட கபட ஒப்பந்தத்தூடாக கிழக்கினை ஆக்கிரமித்த வன்னிப்புலிகள் தங்களுடன் ஒன்றாக உண்டு , உறங்கி , உறவாடிய சகதோழர்-தோழியரின் உடல்களின் மீதேறிநின்று விடுதலைப் போராட்டத்திற்கு கிழக்கின் மக்கள் செய்த அர்ப்பணிப்புக்களுக்கு நன்றிக்கடன் செலுத்திய நாளுக்கு இன்றுடன் 16 வருடங்கள்.
இந்தநாளில் புலிகள் மேற்கொண்ட கொடூரங்களை வரலாறு என்ன நிபந்தனையுடன் இலகுவாக மன்னித்துவிட்டது என்ற கேள்வியுடன் சிலரது மனச்சாட்சியின் கதவுகளை தட்ட முயற்சிக்கின்றேன்.
சுதந்திர தமிழீழத்திற்காக போராடுகின்றோம் என்று பறைசாற்றிய அமைப்பொன்றிலிருந்து ஒரு பிராந்தியத்தை ( கிழக்கு மாகாணம்)  சேர்ந்த போராளிகள் அதே இலக்கிற்காக நாம் தனித்து போரிடப்போகின்றோம் எங்களுக்கு அதற்கு அனுமதி தாருங்கள் , வழிவிடுங்கள் என்று அனுமதிகோரியபோது, அடிமை ஒப்பந்தத்தை மீறியதாக அவர்கள் மீது ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் 1 லட்சம் உயிரிழப்பு ....பாதிப்பு 16 லட்சத்தை கடந்தது

தினகரன் : பெய்ஜிங்: உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,00,090 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா வைரசால் 16,38,214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து சிகிச்சைபெற்று குணமானவர்கள் எண்ணிக்கை  3,68,017 ஆக உள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 4.75 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

கொரோனா வைரசை கட்டுப்படுத்த இதுதான் வழி - சீனா வாழ் இந்திய விஞ்ஞானிகள்

கொரோனா வைரசை கட்டுப்படுத்த இதுதான் வழி - சீனா வாழ் இந்திய விஞ்ஞானிகள்மாலைமலர் : பூமிப்பந்தில் உள்ள அத்தனை பேருக்கும் இப்போது ஒரே ஒரு எதிரிதான் பொதுவான எதிரி.
இந்த எதிரிக்கு பெயர், கொரோனா வைரஸ்!
இந்த எதிரியை வீழ்த்திக்காட்ட வேண்டும் என்று உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. அதனால்தான் இந்த ஒற்றை எதிரிக்கு எதிராக உலகளாவிய போர் தொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனாலும் எதற்கும் அஞ்சாமல், தனது ஆதிக்கத்தை நாளுக்கு நாள், பல நாடுகளிலும் இந்த எதிரி வலுப்படுத்திக் கொண்டே போவதுதான் உலகுக்கே புரியாத புதிராக இருக்கிறது.
கொரோனா வைரஸ், சீன நாட்டில் பரவத்தொடங்கியதுமே அங்கு வாழ்ந்து வந்த இந்தியர்கள் குறிப்பாக வேலை பார்த்து வந்தவர்கள், படித்து வந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் எங்களை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று விடுங்கள் என்றுதான் குரல் கொடுத்தனர். பயம், பீதி, தவிப்பு அத்தனையும் அவர்களிடம் வெளிப்பட்டது.
இதையடுத்து சீன அரசுடன் இந்தியா தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு வாழ்ந்து வந்த சுமார் 700 இந்தியர்களை இருமுறை ஏர் இந்தியா விமானங்களில் அழைத்து வந்து சேர்த்தது. இங்கே இரு வார காலம், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டபோதும்கூட, “தாய் மண்ணில் கால் பதித்ததே போதும், இதுவல்லவா சொர்க்கம்” என அந்த இந்தியர்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.

ஜெ. நினைவிட கட்டுமான பணிகள் இப்போது தேவையா? ராஜேஸ்வரி பிரியா கண்டனம்


rajeshwari priyaநக்கீரன் : இந்த நிலையில் சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு  காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என்பது உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டது.
இதுகுறித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவன தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா பேசுகையில், கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அனைவரும் தனித்திருக்க வேண்டும், வீட்டில் இருக்க வேண்டும், சமுதாய தொற்றாக அது மாறாமல் இருக்க ஒருவருக்கொருவர் இடைவெளிவிட்டு இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அரசும் இதைத்தான் சொல்கிறது, அதனால்தான் தற்போது ஊரடங்கும் போடப்பட்டுள்ளது. நாடு முழுக்க அனைத்து மக்களுக்கும் இது பொருந்தும்.
இந்த நேரத்தில் ஜெ. நினைவிட கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருவது வருத்தம் அளிக்கிறது. வடமாநில தொழிலாளர்கள் அங்கேயே தங்கி பணியாற்றுகிறார்கள். அங்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்.

கொரோனா .. டானிக் வாட்டர் .. இன்றைய பேசுபொருளின் வரலாற்று பின்னணியும் ..உண்மைகளும்


Dr. Mohammed Sayee : இன்றைய கொரொனா கால கட்டத்தில் அதிகம் பேசப்படும் தலைப்பு, வேண்டப்படும் பொருள், உண்ணப்படும் மருந்து, ஆராயப்படும் வேதி பொருள் - ஹைட்ராக்சி க்லோரொக்வின்.
இந்த மருந்தினை உலகமே இந்தியாவிடம் கேட்கும் நிலைமைக்கு காரணம் மன்னர் டிப்பு சுல்தான், காலஞ்சென்ற பிரதமர் இந்திரா காந்தி, காலஞ்சென்ற முன்னாள் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோர்.
தோஹா ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு இந்தியாவின் ஏற்றுமதி கொள்கை இந்தியாவிற்கு சாதகமானது. இதற்கு காரணமாக விளங்கியவர் திரு முரசொலி மாறன் அவர்கள். அவரிடம் விவாதிக்க அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் சியாட்டில் நகரத்தில் தயங்கியது வரலாற்று சிறப்பு. இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் தனது இல்லத்தில் அதே முரசொலி மாறன் அவர்களுக்கு விருந்து கொடுத்தவர் விவாதித்து மதித்தவர் என்பதும் ஒரு நாட்டின் பிரதமருக்கு வழங்கப்படும்
மரியாதையினை அமைச்சராக இருந்த முரசொலி மாறன் அவர்களுக்கு வழங்கினார் என்பதும் வரலாறு. காட் ஒப்பந்தம், டன்கல் வரையொப்பம், தோஹா ஒப்பந்தம் ஆகியவற்றை படித்துப் பார்த்தால் உலக வல்லரசுகள் இந்தியா மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் வியாபாரம் உற்பத்தி மற்றும் மானிய கொள்கைகளை கட்டுப்படுத்திய விதத்தையும் அவற்றை முறியடிக்க முரசொலி மாறன் அவர்களும் அவருக்கு முன் இந்திரா காந்தி அம்மையார் உருவாக்கி வைத்த தன்னிறைவு நோக்கிய நகர்வுகளையும் நன்கறியலாம்.

கொரோனா எச்சரிக்கையை அலட்சியம் செய்த அமெரிக்க அதிபர் .. ஜனவரியிலேயே ..


வீரகேசரி :கொரோனா வைரஸ் முழுமையான நோய் தொற்றாக மாறி மில்லியன் கணக்காணவர்களின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் டிரில்லியன் டொலர் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் பீட்டர் நவரோ ஜனவரி மாத பிற்பகுதியில் எச்சரித்தமை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் இரு தடவை வைரஸ் குறித்து எச்சரிக்கும் அறிக்கைகளை அனுப்பியுள்ளார்.
முதல் அறிக்கையில் கொரோனா வைரசினால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளை சுட்டிக்காட்டியுள்ளார். அரைமில்லியன் அமெரிக்கர்கள் உயிரிழக்கலாம் என எச்சரித்திருந்த அவர் இரண்டாவது அறிக்கையில் 1.2 மில்லியன் உயிரிழப்புகள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளார்.
ஜனவரி மா நடுப்பகுதியில் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் சீனாவிற்கான போக்குவரத்து தடையை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவரும் சில அதிகாரிகளும் முன்னரே வலியுறுத்த ஆரம்பித்திருந்தனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

திருவிழாக்கள், ஊர்வலத்திற்கு அனுமதியா?

திருவிழாக்கள், ஊர்வலத்திற்கு அனுமதியா?minnambalam.com :ஊரடங்கு காலத்தில் திருவிழாக்கள், ஊர்வலங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதோடு, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் நாட்களில் ஈஸ்டர் பண்டிகை, தமிழ் வருடப் பிறப்பு, கேரளாவில் விஷு ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படும். மேலும், தமிழகத்திலுள்ள பெரும்பாலான ஊர்களில் சித்திரை மாதத்தில்தான் திருவிழாக்கள் நடைபெறும்ஊரடங்கு ஏப்ரல் 14ஆம் தேதியுடன் முடியவுள்ளதால் அதற்கடுத்து வரும் நாட்களில் திருவிழா போன்றவற்றிற்கு அனுமதி கேட்டு காவல் துறையினரிடம் மனுக்கள் குவிந்தன. எனினும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன. இதனிடையே பல இடங்களில் காவல் துறைக்கு தெரியாமல் இரவோடு இரவாக திருவிழாவை நடத்தி முடிக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

தமிழகத்தில் மேலும் 14 நாட்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: 19 பேர் கொண்ட நிபுணர் குழு பரிந்துரை


extend-14-days-of-curfew-in-tamil-nadu-19-expert-panel-recommendation

.hindutamil.in :தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்திய 19 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் மேலும் 14 நாட்கள் ஊரடங்கை நீட்டிக்கப் பரிந்துரை செய்துள்ளனர்.
கரோனா தொற்று நடவடிக்கையாக தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டாஸ்க் போர்ஸ் அமைக்கப்பட்டு அதன் தலைவராக தலைமைச் செயலர் சண்முகம் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் அடங்கிய 12 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டனஇது தவிர நச்சுயிரியல் துறை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் மற்றும் அரசுத்துறை சார்ந்த 19 பேர் கொண்ட நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டு, அந்தக் குழு ஆய்வு நடத்தி அறிக்கை தர உத்தரவிடப்பட்டது.

தமிழில் கெட்ட சொற்கள் .. எப்படி உருவாயின? அவை பற்றிய ஒரு அறிவியல் ஆய்வு!

பார்வையற்றவன் : தமிழ் இலக்கிய நெடும்பரப்பில் அல்குல் பற்றிய பதிவுகள் பல உள்ளன. அல்குலின் வடிவம், அமைப்பு பற்றிய வருணனைகள் ஏராளம். ஆனால் ஆண்குறி பற்றிய பதிவுகள் உள்ளனவா?
தீராநதி நவம்பர் 2008 இதழில் கோவை ஞானியை நகைச்சுவைப் பாத்திரமாக்கித் ‘தமிழியம் ஓர் ஆய்வு’ என்னும் தலைப்பில் ஜெயமோகன் எழுதியிருந்த கட்டுரையில் ஒரு தமிழறிஞர் பேசுவதாக வரும் பகுதி: ‘சங்கம் தொட்டு இங்குவரை நீளும் நந்தமிழர் மரபில் எங்கும் ஆண்குறி குறித்து ஒரு சொல்லேனும் இல்லை. ஐயம் தெளிவுபெற அடியேன் சிற்பங்களில் நோக்கினேன். அங்கும் பெண்டிருக்குக் குறியுளதே அல்லாமல் ஆண்களுக்குக் காணப்படவில்லை. தொல் தமிழருக்குக் குறியுளதா என்ற ஐயம் என்னை வாட்டுகிறது’ (ப.40). இப்படி எல்லாம் எகத்தாளம் செய்யும்படி இருக்கிறது நிலைமை. ஆனால் ஆண்குறி பற்றிய பதிவு இல்லை என்று சொல்ல முடியாது.
ஆண்குறிக்கான சொல்லாகிய ‘சுண்ணி’ என்பதை நம் செவ்விலக்கியத்திற்குள் காளமேகம் இரண்டு இடங்களில் பதிவு செய்திருக்கிறார்சுண்ணி என்னும் இந்தச் சொல் பேச்சுவழக்கில் ‘சுணி’ என்று வழங்கும். நடுவில் உள்ள ஓர் எழுத்தை உச்சரிக்காமல் விட்டுவிடும் வழக்கம் நம் மொழியில் உண்டு. யாப்பிலக்கணத்தில் இதை இடைக்குறை என்று சொல்வார்கள். உள்ளம் என்னும் சொல் உளம் என்று வரும். ஓந்தி என்பது ஓதி என்றாகும். அவற்றைப் போலத்தான் சுண்ணி சுணி ஆதலும். இடைக்குறைச் சொல்லாகிய சுணியைத்தான் காளமேகம் தம் பாடல்களில் தமக்கே உரிய சமயோசிதத்துடன் பயன்படுத்தியுள்ளார்.

நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன் என்று நினைத்தேன்: கரோனாவிலிருந்து மீண்ட பெண்ணின் அனுபவம்

.hindutamil.in  : நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன் என்று நினைத்துவிட்டேன். நான் சுவாசிப்பதற்கு அவ்வளவு சிரமம் அடைந்தேன் என்கிறார் லண்டனில் வசிந்து வரும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவரான ரியா லங்கானி.
உலகம் முழுவதும் கரோனா வைரஸலிருந்து 3 லட்சத்துக்கும் லண்டன் வசித்து வரும் ரியா லங்கானி. கரோனா வைரஸிலிருந்து மீண்டுள்ள ரியா தற்போது தனது இல்லத்தில் தொடர்ந்து தனித்து இருப்பதையே பின்பற்றி வருகிறார்.
அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான்
இந்த நிலையில் கரோனா வைரஸிலிருந்து மீண்ட அனுபவத்தை ரியா தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் பகிர்ந்து கொண்டார்.

கொரோனா 95,000 பேர் உயிரிழப்பு .. 16 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை;

BBC : இந்திய / இலங்கை நேரப்படி வெள்ளி காலை 05.51 மணி நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 15,96,496 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களில் 95,506 பேர் உயிரிழந்துள்ளனர்.
3,54,006 பேர் குணமடைந்துள்ளனர் என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடான அமெரிக்காவில் இதுவரை 4,62,135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக இத்தாலியில் 18,279 பேர் இறந்துள்ளனர்;
ஸ்பெயினில் 15,447 பேர் இறந்துள்ளனர்.
 பிரான்ஸ் நாட்டில் 7,978 பேர் இறந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் கட்டத்திற்குச் செல்கிறதா?
 தமிழ்நாட்டில் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள 96 பேரில் 84 பேர் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள்.
மீதமுள்ள 12 பேரில் மூன்று பேர் வெளிமாநிலங்களுக்குச் சென்று திரும்பியவர்கள்.
8 பேர் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
மீதமுள்ள ஒருவர் மருத்துவர். தனியார் மருத்துமனையில் பணியாற்றிவந்த இவருக்கு நோயாளிகள் மூலம் தொற்று ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. விரிவாகப் படிக்க: தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் கட்டத்திற்குச் செல்கிறதா?

கொரோனாவை பரப்பிய மத நிறுவனங்கள் .. ஈஷா... அமிர்தா ..ஹரே கிருஷ்ணா .....அல்லலூயா

ishacoronanakkheeran.in - தாமோதரன் பிரகாஷ் : இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் சமூகத் தொற்று என்கிற மூன்றாவது நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.இப்பொழுது யார் மூலமாக யாருக்கு கரோனா வைரஸ் பரவியது எனத் தெரிந்துகொள்ள முடியாத நிலைக்கு இந்தியா சென்று கொண்டிருக்கிறது.மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டுக்குப் பக்கத்தில் டீக்கடை நடத்துபவருக்கு கரோனா நோய் வந்திருக்கிறது.அவருக்கு யார் மூலம் வந்தது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் முதல்வரின் பாதுகாவல் படையில் இருக்கக்கூடிய நூற்றுக் கணக்கானோரை கரோனா பரிசோதனைக்கு மகாராஷ்டிரா அரசு உள்ளாக்கியுள்ளது.<
அதேபோல் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டது என ஒரு முதியவர் அட்மிட் ஆகி இறந்தார்.அவர் இறந்த பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதனால் அந்த மருத்துவமனையில் வேலை பார்த்த செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள் பல பேருக்கு கரோனா நோய் பரவியுள்ளது. இப்படி யாரிடம் இருந்து கரோனா நோய் எப்படி பரவும் எனக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இந்தியா முழுவதும் மாநில அரசுகள் கரோனா நோய் பாதிப்பு என சந்தேகப்படும் இடங்களில் மருத்துவப் பரிசோதனைகள் செய்து வருகின்றன.

மதுவந்தியும் 2000 கோடி பெண்களும் .. அபத்தத்தின் உச்சியில் ரஜினி குடும்ப விளக்கு


 வளன்பிச்சை வளன்    மதுவந்தி யின் காணொளி இவர் ஒரு பள்ளி யின் தாளாளர் என்பது இவரின் கல்வி அறிவை பறை சாற்றும் ஒன்று.
இவரின் அடிப்படை அதாவது பொது அறிவு நம்மை வியக்க வைக்கிறது உலகத்தின் மொத்த மக்கள் தொகை 760 கோடி ஆனால் இவர் இந்தியாவில் மட்டும் 8, 000 கோடி மக்கள் இருப்பதாக கூறுகிறார் இவரின் பொது அறிவு?
பள்ளி நடத்தும் இவரின் கணித அறிவு அற்புதம் 30 000 கோடியில் 40 %20, 000 கோடி என்று கூறுகிறார் 5 ம் வகுப்பு மாணவனிடம் கேட்டால் மிக துல்லியமாக 12 000 கோடி என சொல்லிவிடுவான் இந்த கணித மேதை சொல்கிறார் 20,000 கோடி என்று
பிரதமரின் மாபெரும் சாதனை 8,000 கோடி மக்களுக்கு ரூபாய் 5,000 கோடி ஒதுக்கி உள்ளார் ஒவ்வொரு வரின் வங்கி கனக்கிலும் இவர் கூற்றின் படி இந்த 5 000 கோடி ரூபாயை 8,000 கோடி மக்களுக்கு பிரித்தால் ஒரு முழு ஒரு ரூபாய் தேறாது ரூ 0.63 பைசா தான் கிடைக்கும்
இன்று நாம் கேள்வி கேட்கிறோம். அதன் மூலம் அவர்களின் அறிவு விசாலத்தை வெளிச்சம் போட்டு மூக்கை உடைக்கிறோம். இப்போது புரிகிறதா? இவர்கள் எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்கு கல்வியை தராதே.
என்று எதற்காக சொன்னார்கள் என்று. நாம் படித்தால் அறிவு வந்துவிடும். அப்படி அறிவு வந்தால் கேள்வி கேட்போம் அல்லவா? அதனால் கல்வியை தராதே என்றார்கள்

திரு விடுதலை விரும்பி அவர்களின் காணொளி உரை


தென்னிந்தியாவில்  ஒரு ஆழமான கருத்து  நிலவுகிறது . மத்திய சர்கார்  ஒரே ஒரு மொழியை மட்டுமே வளர்க்கிறது  அது உண்மையும் கூட .. சொல்லி விட்டு சொன்னேன் . If we go to the annual reports of the all ministries , we will find the chapter describing the actions taken or propose to be taken to develop the hindi language ..
இங்கே இருக்க கூடிய மந்திரிசபைகளின் ஆண்டறிக்கைகளில் பார்த்து சொன்னால் .
ஒவ்வொரு துறையில் உள்ள ஆண்டறிக்கையிலும்  இந்தி மொழியை வளர்ப்பதற்காக திட்டங்கள் அல்லது இனி வளர்ப்பதற்கான திட்டங்கள் என்று ஒரு தனி  அத்தியாயம் போட்டு எழுதுறான்..
but in a same time we do  not find a single sentence to develop of  other indian languages.
ஆனால் மற்றையை இந்திய மொழிகளின் வளர்ச்சி குறித்தது ஒரு வாக்கியம் கூட அந்த ஆண்டறிக்கையில் பார்க்க முடிவதில்லை.
there for எனவே I like to know from the  honorable Prime Minister there were any proposal to develop other indian languages in a way it has done for the development of hindi language.
நீங்கள் இந்தி மொழி வளர்ப்பதற்கு எப்படி செய்தீர்களோ அதைப்போல மற்ற மொழிகளையும் வளர்ப்பதற்கு அரசாங்கத்திடம் திட்டம் ஏதாவது இருக்கிறதா என்று நம்முடைய மாண்பு மிகு பிரதமர் பதிலளிக்க வேண்டும் .
It is a very important question , Unity and intergrety of the nation lies in this question
இந்த கேள்வியில் இந்தியாவின் ஒற்றுமையும் ஒருமைப்படும் அடங்கி இருக்கிற காரணத்தால் இந்த கேள்வி முக்கியமானது என்று கருதுகிறேன் .
பிரதமரிடத்திலே பதிலை எதிர்பார்க்கிறேன் என்றேன்
உடனே நான் கேள்வி கேட்டதும் பிரதமர் எழுந்திருச்சு எனக்கு பதில் சொல்கிறார்

வியாழன், 9 ஏப்ரல், 2020

இலங்கை முஸ்லிம்களின் இறந்த உடலை எரிக்க முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு.


இனிமேல் தொற்றுக்குள்ளாகும் முஸ்லிம்கள் வெளியில் வர மாட்டார்கள் - அதாவுல்லா அதனால் வரும் பாதிப்புகள் அவர்களுக்கே ! - மஹிந்த ராஜபக்ச !
முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதா? சீறினார் அதாவுல்லா ,மாற்றமில்லையென்றார் மஹிந்த.. கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யாமல் தகனம் செய்ய வேண்டுமென்ற அரசின் முடிவை ஆளுங்கட்சி குழுக் கூட்டத்தில் கடுமையாக எதிர்த்தார் தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம் அதாவுல்லா.
இதனால் இன்று மாலை இடம்பெற்ற ஆளுங்கட்சிக் குழுக்கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.
“சர்வதேச நியமங்களுக்கு விரோதமாக முஸ்லிம்களின் உடல்கள் கொரோனா வைரஸை காரணம் காட்டி எரிக்கப்படுகின்றன. அதனை அனுமதிக்க முடியாது.
அரசு இதனை நிறுத்தி கொரோனாவால் இறக்கும் உடல்களை அடக்கம் செய்ய முன்வரவேண்டும்” என்றார் அதாவுல்லா.

கொரோனா பாதிப்பு.. தோழர் இராயகரனின் சோக கடிதம் புலம் பெயர் தேசத்தில்

ndpfront.com - இரயாகரன் : கொரோனா (SARS-CoV-2) வைரஸ் என் உடலைத் தின்று வருகின்றது 
எனது நோய் எதிர்ப்புச் சக்தி, என் உயிருக்காக போராடுகின்றது. அந்தப் போராட்டம் உடல் வேதனையைத் தருகின்றது. எது வெற்றி பெறும் என்பதை, காலம் தீர்மானிக்கும். எனக்காக போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவ மருந்தில்லை. ஒட்சிசனை வழங்கி போராட்டத்தை வீரியமாக்கும் இடத்தில் அரசு இல்லை. வைரஸ்சுக்கு எதிராக யுத்தம், ஆயத்தம் என்று கொக்கரித்த அரசியல் பின்னணியில், அவையின்றி மரணங்கள் தொடருகின்றது. நோயாளிகள் கவனிப்பாரின்றி கைவிடப்படுகின்றனர். நாளை எனக்கு – உனக்கு இதுவே கதியாகலாம்!
என் வீட்டுக்குள்ளும் வரும், மரணம் என்னைச் சுற்றியும் நிகழும் என்பது கற்பனையல்ல – கடந்த நான்கு நாட்களாக என்னைக் கொரோனா (SARS-CoV-2) வைரஸ் மெதுவாக தின்று வருகின்றது. இன்று கொரோனா (SARS-CoV-2) வைரஸ் தொற்று என்று, மருத்துவரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது வயது மற்றும் வைரஸ் இலகுவாக பலியெடுக்கும் நோய்களைக் கொண்ட எனது உடல், இந்தச் சூழலில் எனக்கான சுயபலம் - கடந்த 40 வருடமாக நான் நேசித்த சமூகத்தைக் குறித்து தொடர்ந்து அக்கறையோடு எழுதுவது மட்டும் தான். அண்மையில் பொதுவில் கொரோனா குறித்த 20க்கும் மேற்பட்ட கட்டுரையில் எதை பேசினேனோ, அதை என்னிலையில் இருந்து எழுதுகின்றேன்.

திருச்சி அடுத்தடுத்து கைதாகும் டாஸ்மார்க் அதிகாரிகள் .. வீடியோ

ஜெ.டி.ஆர்.  நக்கீரன் : கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு பிறகு, இந்தியாவில் ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பிறகு, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் முற்றிலும் மூடப்பட்டது. இதற்கு இடையில் திருச்சியில் அடுத்தடுத்து டாஸ்மாக் கடைகளை உடைத்து மதுபாட்டில்கள் திருடும் சம்பவமும் நடைபெற்றது. மதுபாட்டிகளை திருடுவது யார் என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றார்கள் டாஸ்மார்க் அதிகாரிகள்.
இந்த நிலையில் டாஸ்மார்க் கடைகளில் இருந்து கள்ளத்தனமாக அதிகாரிகள் துணையோடு மதுபாட்டில்கள் திருடப்பட்டு கிராமங்களில் கள்ள சந்தையில் விற்கப்பட்டு வருகிறது என்கிற தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு புகாராக வந்தது.
இதனால் மதுபாட்டில்களை பாதுகாக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் கடைகளில் இருந்த இருப்புகளை சோதனை செய்து அதனை ஒரு இடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் பணிகளை திருச்சியில் ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ச. அய்யம்பாளையம் ஊராட்சியில் உள்ளது கருங்காடு கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசு மதுபான டாஸ்மாக் கடையினை திறந்து, மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக மண்ணச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் அகிலனுக்கு தகவல் வந்தது.

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக உயர்வு

மாலைமலர் :தமிழகத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக உயர்வு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
சென்னை: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 690 ஆக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 84 பேர் டெல்லி சென்று வந்தவர்கள். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்

Trance நவீன மத வியாபார மோசடிகளை இதை விட தெளிவாக காட்டி விட முடியமா? full movie


பெரியார் நேசன் : கன்னியாகுமரியில் half time motivationall பேச்சாளராகவும் ..half time chefஆகவும்
வாழ்க்கை வண்டியை ஓட்டும் பஹத் பாசில், மனநலன் பாதிக்கப்பட்டட தன் தம்பியின் மரணத்திற்கு பிறகு அங்கே வாழப்பிடிக்காமல் மும்பை வருகிறார். மும்பையில் அறிமுகமாகும் கௌதம் மேனன் மற்றும் செம்பான் வினோத் இருவரும் பஹத் பாசிலை மேடை பிரசங்கம் செய்யும் ஒரு பாதிரியாராக மாற்றுகின்றனர். இவருக்கு பயிற்சி அளிக்கிறார் பயிற்சியாளர் திலீஷ் போத்தன்.. மதத்தின் பெயரை வைத்து கோடிகளில் சம்பாதிப்பது தான் கௌதம் மேனனின் திட்டம். மதம்தான் மனிதர்களின் மிகப்பெரிய போதை அந்த போதையை கொடுத்து நாம் பணம் சம்பாதிக்க போகின்றோம் என கெளதம் விளக்கும் இடம் நிதர்சனம்..
ஆறு மாத பயிற்சிக்கு பின்பு போலி மத போதகராக மேடை பிரசங்கங்கம் செய்கின்றார் பஹத் பாசில்..கடவுள் அருளால் அற்புதம் நிகழ்கிறது என மேடையிலேயே பலர் முன்னிலையில் சிலரின் நோய்களை குணமாக்கும் நாடகம் நிகழ்த்தப்படுகின்றது அதை நம்பும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்து பணத்தை கொட்டுகின்றனர் அதே போல் மற்றொரு பக்கம் ஒரு கட்டத்தில் பஹத் பாசிலின் புகழ் அதிகமாக, கௌதம் மேனனின் கட்டுப்பாடுகளை மீறி, தன்னிச்சையாக செயல்பட நினைக்கும் பஹத் செயலால் கெளதம்மிற்கும் இருவருக்கும் நடக்கும் பிரச்சனையில் மீண்டாரா..

சுகாதார செயலரோ கொரோனா வைரசை பரப்பிய கொடுமை .. மத்திய பிரேதேசம் . பல்லவி ஜெயின்


இந்த அம்மா யார் தெரியுமா?
மத்தியப் பிரதேசத்தின் சுகாதாரத் துறைச் செயலாளர் பல்லவி ஜெயின்.
அதிகாரமும் செல்வாக்கும் இருந்தால் இந்த நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இவருடைய மகன் வெளிநாட்டிலிருந்து வந்த செய்தியை இவர் மறைத்துவிட்டார்.
விளைவு? மகன் மூலமாக இவருக்கும் கொரோனா நோய் தொற்றிவிட்டது. என்றாலும் அந்த அறிகுறிகள் வந்த பிறகும் அலட்டிக்கொள்ளாமல் அரசு பணிகளைத் தொடர்ந்தார். மீட்டிங்குகள் நடத்தினார்.
இதனால் இன்று இவருடன் பணியாற்றிய சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள் இரண்டு டஜன் பேருக்கு கொரோனா தொற்றிவிட்டது. இவரால் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 100 இருக்கும் என அஞ்சப்படுகின்றது.
ஆனால் இந்த அளவுக்கு அலட்சியத்துடன் நடந்து கொண்ட இந்த அம்மையார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்குப் பதிலாக கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்து சிகிச்சை பெற இவருக்க வசதி செய்து தரப்பட்டது.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் செவிலியர்களின் பற்றாக்குறை இருக்கின்றது. ஆனால் படத்தைப் பாருங்கள், இவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக நிறைய பேர் திரண்டிருக்கின்றார்கள்.
விடுங்க, மேடம் தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவரா, என்ன?
-Azeez Luthfullah

மைக்ரோசாஃப்ட் அனைத்து நிகழ்வுகளும் டிஜிட்டல் முறையில் ... ஜூலை 2021 வரை

வெப்துனி - Sugapriya Prakash| : இனி ஜூலை 2021 வரை அனைத்து நிகழ்வுகளும் டிஜிட்டல் முறையில் நடைபெறும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. கடந்த மாத இறுதியில் சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தொழில்துரை கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அனைத்து நிகழ்வுகளும் 2021 ஜூலை வரை டிஜிட்டல் முறையில் மட்டுமே நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. மேலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஊழியர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளின் கால அட்டவணையையும் மாற்றியமைத்து வருகிறது என தகவல் வருகிறது.

ராமாயணத்தில் அனுமன், பைபிளில் இயேசு போல் இந்தியா உதவ வேண்டும் - பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்

ராமாயணத்தில் அனுமன், பைபிளில் இயேசு போல் இந்தியா உதவ வேண்டும் - பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்வெப்துனியா : ராமாயணத்தில் அனுமன் போலவும், பைபிளில் இயேசு போலவும் இந்தியா உதவ வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் பிரேசில் அதிபர் குறிப்பிட்டுள்ளார். பிரேசிலியா, சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ்  தற்போது, அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும், 14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 86 ஆயிரத்து 744 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3 லட்சத்து 16 ஆயிரத்து 855 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.< கொரோனா  வைரஸ் நோய்க்கு தற்போது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் அல்லது தடுப்பு தடுப்பூசிகள் எதுவும் இல்லை. மலேரியா மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின், நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சாத்தியமான சிகிச்சையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்றாக உள்ளது. 

மனோ கணேசன் : நிவாரணம் பெறுவோர் பட்டியலில் தோட்ட தொழிலாளர்களுக்கு இடமில்லை.

Mano Ganesan - மனோ : நிவாரணம் பெறுவோர் பட்டியலில் இம்முறையும்
தோட்ட தொழிலாளர்களுக்கு இடமில்லை. இனி இதற்கு யார் பதில் கூறுவது?;
கடந்த 2ம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற, கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச உரையாற்றியபோது, நிவாரணங்கள் பெறுவோர் பட்டியலை விளக்கமாக வாசித்தார்.
அதன் பிறகு (சிங்கள மொழியில்) பேசிய நான், என் உரையின் ஒரு கட்டத்தில், “இங்கு எனக்கு முன் உரையாற்றிய திரு. பசில் ராஜபக்ச அவர்கள் தனது நிவாரணங்கள் பெறுவோர் பட்டியலில், விவசாயிகளை பற்றி, மீனவர்களை பற்றி சொன்னார். ஆனால், தோட்ட தொழிலாளர்களை பற்றி குறிப்பிட மறந்து விட்டார்” என்று சொல்லி ஒரு கணம் நிறுத்தி, “ஒருவேளை அவர் சொன்னதை நான் சரியாக கவனிக்க மறந்து விட்டேன் என்றால், திரு. பசில் ராஜபக்ச, என் பிழையை திருத்தலாம்” என மிகவும் நாகரீகமாக சொன்னேன்.

ஆதி சங்கரரின் மூட பிடிவாதமும் சன்னியாசிகளை நெருப்பில் தள்ளிய குருரமும்

Dhinakaran Chelliah : இந்தியாவில் பௌத்தம் காணாமற் போனதற்கான முக்கிய காரணங்களில் ஆதி சங்கரரும் ஒருவர்.இந்த விடயத்தில் சுவாமி
விவேகானந்தர் ஆதிசங்கரர் பற்றி கூறும் வரிகளை நாம் அனைவரும் உற்று நோக்குவது அவசியம்.
விவேகானந்தர் ஆதி சங்கரர் பற்றி பின்வருமாறு எழுதுகிறார்:
சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப்போல மிகவும் கூர்மையாய் இருந்தது; அவர் வாதம் புரிவதில் வல்லவர்; மஹா பண்டிதர்; அதில் அய்யமில்லை. என்றாலும், அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை; அவருடைய இதயமும் அத்தகைய தாகவே காணப்பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத்துவத்தில் பெருமை பாராட்டுபவர். வாதத்திலே தோல்வியடைந்த எத்தனையோ புத்த சந்நியாசிகளை நெருப்புக்கு இரையாக்கின அவருடைய இதயத்தை என்னவென்று சொல்வது! சங்கரர் இந்தச் செய்கையைச் செய்தது மூடப் பிடிவாதமன்றி வேறு என்ன? சிறு ஆட்டுக் குட்டியினுடைய உயிரைக் காப்பாற்றத் தமது உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருந்தார் புத்தர்; பஹுஜன ஹிதாய பஹுஜன ஸூகாய பலருடைய இதத்திற்காகவும் பலருடைய நலத்திற்காகவும் வாழ்ந்தார் புத்தர் எவ்வளவு அகன்ற சிந்தை! எவ்வளவு இரக்கம்!

புதன், 8 ஏப்ரல், 2020

கொரோனாவை சுற்றி சர்க்கரை.. சைலன்ட்டாக மனித உடலுக்குள் நுழையும் ரகசியம்.

Aravinthan -  /tamil.oneindia.com :  லண்டன் : புதிய ஆய்வு ஒன்றில் கொரோனா வைரஸ் எப்படி எந்த அறிகுறியும் இல்லாமல் மனித உடலுக்குள் நுழைகிறது என தெரிய வந்துள்ளது. 
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு காரணம், அந்த வைரஸ் குறித்த அதிக தகவல்கள் இல்லாததே. மேலும், மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அந்த வைரஸ் ஏமாற்றுவதால் எந்த மருந்து கொடுத்தாலும் அது பெரிய அளவில் பயனளிப்பதில்லை. 
இந்த நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை கொரோனா வைரஸ் எப்படி ஏமாற்றுகிறது? என்பது பற்றிய முக்கிய தகவல் ஆய்வில் வெளியாகி உள்ளது. மருந்து இல்லை மருந்து இல்லை உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 14 லட்சம் பேரை தாண்டி பாதித்துள்ளது. 83,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒவ்வொரு நாடும் சில மருந்துகளை கூட்டாக கொடுத்து வருகிறது. சிலர் குணமடைகிறார்கள். சிலர் பலியாகிறார்கள். 
 ஏமாற்றி உள்ளே நுழையும் கொரோனா 
 கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் எப்படி இறக்கிறார்கள், எப்படி குணமடைகிறார்கள் என்பதும் மர்மமாகவே உள்ளது. இந்த வைரஸ் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை எளிதாக ஏமாற்றி உள்ளே நுழைவது தான் இதை பற்றி புரிந்து கொள்வதில் உள்ள பெரிய சிக்கல் ஆகும்.

வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டால் மக்கள் ஊரடங்கை மீறுவார்கள்... எச்சரிக்கை?


வளன்பிச்சைவளன் :; ஊரடங்கை நீட்டிக்க மாநிலங்கள் பரிந்துறை பதிமூன்று கோடியே அறுபது  லட்சம் பேர் வேலையிழப்பர் தங்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் போது மக்கள் ஊரடங்கை மீறும் நிலை வரும்  ரகுராம்ராஜன் நாங்கள் கொரோனாவினால் சாகமாட்டோம் ஆனால்  பசியால்  சாவோம்
மாநில அரசுகள் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு நீட்டிப்பு அவசியம் என பரிந்துரை செய்துள்ளன. உலகில் கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா என பிரதமர் மோடி பெருமிதம்.
இன்று ஊரடங்கால் 42 %பேர் ஒரு நேர உணவு என பரிதவிக்கிறார்கள் என ஆய்வு அறிக்கைகள் கவலை தெரிவித்து உள்ளன.
பொருளாதார நெருக்கடி நிலை உருவாகி உள்ளது என்றும் இதனால்
13,60,00,000 பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
ஊரடங்கை நீண்ட காலத்திற்கு நீட்டிக்க முடியாது. பாதிப்பு இல்லாத பகுதிகளில் பணிகளை தொடர வேண்டும். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் போது மக்கள் ஊரடங்கை மீறுவார்கள் என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரித்து உள்ளனர்.

தூய்மைப் பணியாளர்களின் ஈடில்லா அறிப்பணிப்பு

hindutamil.in : தூய்மைப் பணியாளர்களின் ஈடில்லா உழைப்பை மக்கள் உணர்ந்துள்ளனர்!- பி.ஆர்.நடராஜன் எம்.பி. உருக்கம் கோவை எம்.பி.யான பி.ஆர்.நடராஜன் கோவை மாவட்டத்தில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டுகளைத் தெரிவித்ததோடு அவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள முகக் கவசங்களையும் வழங்கினார்.
health-workers-s-servicesகரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரப் பணியாளர்களின் உழைப்பு இன்றியமையாததாக உள்ளது. இத்தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் தேவைக்கேற்ப வழங்கப்படவில்லை என தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகிறார் பி.ஆர்.நடராஜன்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள முகக் கவசங்களைத் தருவித்து மாநகராட்சி, பேரூராட்சி பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு புதனன்று நேரில் வழங்கினார்.

சோமாலியாவை செய்திகளில்தானே பார்த்தீர்கள்? விரைவில் நாம் செய்திகள் ஆவோம்?

தமிழ் மறவன் : உண்மையைச் சொல்கிறேன், மனதிடத்தோடு படியுங்கள்!
சோமாலியாவை செய்திகளில்தானே பார்த்தீர்கள்?
விரைவில் நாம் செய்திகள் ஆவோம்... எப்படி?
இதோ....,
ஏப்ரல் 14க்கும் பிறகு வாழ்க்கை
இயல்பு நிலைக்கு திரும்பாது.
ஏனெனில் இனி இயல்பு நிலை என்று நாம் வைத்திருந்த parameters மொத்தமாக மாறும்.
Post-corona economic crisis அழுத்தி நம்மை தரையோடு சாய்க்க காத்திருக்கிறது.
இதுவரை உங்களை support செய்துவருவதாக, salary சரியாக கொடுத்துவருவதாக நினைக்கும் நிறுவனங்கள் இனி layoff கந்தாயங்களைத் தொடங்குவார்கள்.
Downsizing விளையாட்டில் காவு வாங்கப்படவிருக்கும் உயிர்களின் எண்ணிக்கையை ஊகிக்கவே முடியவில்லை.
இதில் பெருத்த அடி வாங்கப்போவது IT, Fossil Fuel , Tourism and its allied services viz Hotels. Renewable energy நொண்டுகிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
End of the day..!
இந்த மொத்த களேபரத்தின் முதல் பலி 30-45 வயதுடைய அந்த மிடில் கிளாஸ் காமன் மேன். கையில் காசு, வாயில் தோசை, சேமிப்பு என்பது கானல் நீர், Job security என்பது Pipedream , என்னேரமும் சோலி முடிக்கப்படலாம் என திவாலாக காத்திருக்கும் நிறுவனங்கள். இப்படி middle class paupers உருவாகுவார்கள்.
இதர நாடுகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் கொரோனா தான் மிகப்பெரிய பேரிடர்.2008-09 காலக்கட்டத்தை கடந்தப்பின்னர் அவர்களது பொருளாதாரம் சீரானது. இங்கே நாம் சரியான அடி வாங்கும் இடம் இதுதான்.
கொரோனாவுக்கு முன்பே நமது பொருளாதாரத்தை சூறையாடிய Man made crisis என்றால் அது demonization(பணமதிப்பிழப்பு) மட்டுமே.
Industryயின் small players, startups, cottage Industries, self reliant micro businessசை கொத்தாக கபளீகரம் செய்து முடித்தது.

பெப்சிக்கு கிடைத்த நிதியுதவி எவ்வளவு: ஆர்.கே.செல்வமணி

பெப்சிக்கு கிடைத்த நிதியுதவி எவ்வளவு: ஆர்.கே.செல்வமணி
மின்னம்பலம் : பெப்சி தொழிலாளர்களுக்கு எவ்வளவு நிதியுதவி கிடைத்துள்ளது என்ற விவரத்தை பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கிற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரைப்படத்துறையினர், திரைப்பட வணிகம் சார்ந்த பல்வேறு தரப்பினர் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். மார்ச் மாத இறுதியிலேயே படப்பிடிப்புகளை பெப்சி சங்கத்தினர் வைரஸ் தொற்றின் தீவிரத்தைக் கருதி நிறுத்தினர். இதனால் புதிய படங்களின் படப்பிடிப்பு, சீரியல்களின் படப்பிடிப்பு என அனைத்தும் நிறுத்தப்பட்டன. உலகெங்கிலும் நிகழ்ந்து வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன.
தமிழ்த் திரைப்படத் துறை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. வெளியீட்டுக்குத் தயாராக இருந்த நிறையத் திரைப்படங்கள் வெளியிட முடியாமலும், படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த திரைப்படங்கள் நிறுத்தப்பட்டதால் பல தொழிலாளர்களின் நிலை மோசமாகவுள்ளது. குறிப்பாக தினசரி தொழிலாளர்கள் எப்போது இயல்புநிலை திரும்புமோ என இந்த அசாதாரண சூழ்நிலையை கடக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
> எனவே தினசரி தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதேபோல் தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் கடிதமும் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ரஜினி, அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலரும் நிதியுதவி அளித்தனர். சிலர் அரிசி மூட்டை போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் தந்து உதவி செய்துள்ளனர்.

தமிழகத்தில் 48 பேருக்கு தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 738; உயிரிழப்பு 8 ஆக அதிகரிப்பு


a-total-of-48-people-have-become-infected-738-interview-with-beela-rajesh


hindutamil.in : தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தொற்று எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆனது.
கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தினமும் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள், வீட்டுக்கண்காணிப்பு, வீடுகளில் ஆய்வு உள்ளிட்ட சுகாதாரத்துறையின் நடவடிக்கைகள் குறித்து அதன் செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு அறிவிக்கிறார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் கூறியதாவது:
“ தமிழகத்தில் கரோனா நடவடிக்கையில் இதுவரை வீட்டுக்கண்காணிப்பில் உள்ளவர்கள் 60,739 பேர்.
* எங்களது கண்காணிப்பில் உள்ளவர்கள் 230 பேர்.
* மொத்தம் உள்ள ஆய்வகங்கள் எண்ணிக்கை 19.
* 28 நாள் கண்காணிப்பை முடித்தவர்கள் எண்ணிக்கை 32,075.
* மொத்தம் இதுவரை ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை 6,095.
* நேற்று வரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 690.
* இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 48.

தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு 8 ஆக உயர்வு!


நக்கீரன் : கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 4000க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் கரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. இருந்த போதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. கரோனா பாதிப்பு மாகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தீவிரமாக உள்ளது.

பிரான்ஸ் ஒரே நாளில் 1400 பேர் உயிரிழப்பு - 10 ஆயிரத்தை கடந்த எண்ணிக்கை... நிலை குலைந்த பிரான்ஸ்

கோப்பு படம்ஒரே நாளில் ஆயிரத்து 400 பேர் பலி - 10 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை... நிலை குலைந்த பிரான்ஸ்மாலைமலர் : பிரான்ஸ் நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 417 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. பாரிஸ் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 209 நாடுகளுக்கு பரவியுள்ளது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 14 லட்சத்து 20 ஆயிரத்து 641 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 3 லட்சத்து ஆயிரத்து 516 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 10 லட்சத்து 37 ஆயிரத்து 502 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 81 ஆயிரத்து 623 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொண்டு செல்லும் காட்சிஎன்ன நடக்கிறது அமெரிக்காவில்? ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலிதினத்தந்தி : அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 919 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க்:< சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு பரவி உள்ளது. வைரஸ் தாக்குதலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் 14 லட்சத்து 25 ஆயிரத்து 716 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 10 லட்சத்து 41 ஆயிரத்து 920 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 47 ஆயிரத்து 912 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.  வைரஸ் பரவியவர்களில் 3 லட்சத்து ஆயிரத்து 828 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 81 ஆயிரத்து 968 பேர் உயிரிழந்துள்ளனர்.

மக்களைக் காத்த மலேசிய இந்திய காங்கிரஸ்

மக்களைக் காத்த மலேசிய இந்திய காங்கிரஸ்!  மின்னம்பலம் :  உலகம் முழுவதையும் உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மலேசிய இந்தியர்களைச் சத்தமின்றி மீட்டுச் சென்றிருக்கிறது அந்நாட்டு மலேசிய இந்திய காங்கிரஸ்.
21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் அறிவிக்கப்பட்டபோது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களின் நிலைமை இந்தியர்களின் நிலைமையைக் காட்டிலும் கவலைக்கிடமானது. அதிலும் குறிப்பாக அந்த நேரத்தில் இந்தியாவிலிருந்த மலேசிய இந்தியர்கள் பலர் மீண்டும் தங்கள் நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.

உலக அளவில் கொரோனா உயிரிழப்பு 82 ஆயிரத்தை தாண்டியது


தினத்தந்தி : ஜெனீவா, சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ருத்ர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் படிப்படியாக தனது தாக்கத்தை அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அது மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் நோய்க்கிருமி பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாததால் செய்வது அறியாமல் உலக நாடுகள் திகைத்து நிற்கின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 14.30 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் சுமார் 8 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா தடுப்புக்கு ஊமத்தை பூ மருந்து: 8 பேர் கவலைக்கிடம்

tamil.samayam.com/ :
கோப்புப்படம்
கொரோனா வைரஸ் தடுப்புக்கு ஊமத்தை பூவை பயன்படுத்தி மருந்து தயாரித்து உட்கொண்ட 8 பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் >கொரோனா வைரஸ் தடுப்புக்கு ஊமத்தை பூவை பயன்படுத்தி மருந்து தயாரித்து குடித்த 8 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அந்த வகையில், கொரோனா சமூக பரவலை கட்டுப்படுத்த வருகிற 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. வதந்திகளை பரப்புபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க உலக மருத்துவ வல்லுநர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

தேவையில்லை, இந்த பாசாங்கு ... பாஜக அமைச்சர்களின் எம்பிகளின் சம்பள குறைப்பு நாடகம் !

சாவித்திரி கண்ணன் : தேவையில்லை, இந்த பாசாங்கு!
பாசாங்குத்தனத்தை போல அறுவெறுக்கதக்கதும், ஆபத்தானதும் வேறில்லை!
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சம்பளத்தில் 30% த்தை கொரானா சிகிச்சைக்கான நிதியாக  தருவதற்கு ஒரு அவசரசட்டம் இயற்றப்பட்டுள்ளது!
இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்?
இதை தியாகம் என்று மக்கள் போற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா?
இவர்களெல்லாம் எத்தனை கோடிகள் செலவழித்து அந்த பதவிக்கு வந்தவர்கள் எனத் தெரியாதா- மக்களுக்கு!
ஒரு லட்சம் சம்பளத்தில் 30,000 ஆயிரம் போனாலும், ரூபாய் 70,000 த்துடன் மற்றொரு 70,000 ஆயிரம் படியாகவும் மற்ற பல சலுகைகளும் எம்பிக்களுக்கு கொட்டிக் கொடுக்கப்படுகிறதே!

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை 144 தடை!

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை 144 தடை!மின்னம்பலம் : இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 571 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியளவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை போலீசார் மூடி சீல் வைத்து வருகின்றனர். மாவட்டங்களின் நிலை குறித்து ஆட்சியாளர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்து வருகிறார். பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அனைத்து மாநில முதல்வர்களிடம் அந்தந்த மாநிலங்களின் நிலை குறித்துக் கேட்டறிந்து வருகிறார்.அதுபோன்று அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சகமும், தங்களது மாநிலங்களின் நிலையைத் தெரிவித்து வருகிறது.

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

The death of stalin திரைப்படம் ஒரு அறிமுகம்


Yuvaraj Thirumuruga : சரித்திர படங்கள் என்றாலே எனக்கு தனி ஈர்ப்பு உண்டு.
ஹிட்லருக்கு பிறகு மிக பெரிய கொடுங்கோலன் அக்காலத்தில் ஜோசப் ஸ்டாலின் என்றால் மிகை ஆகாது. இரண்டாம் உலக போர் தொடங்கும் முன்னர் ஸ்டாலின் செய்த அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சம் இல்லை. இத்தனைக்கும் இவர் ரஷ்யாவில் பிறந்தவர் அல்ல ஜார்ஜியாவில் பிறந்தவர்.
ஜாரின் (CZAR) ஆட்சியை எதிர்த்த சோசலிஸ்ட் கட்சியும் விளாடிமிர் லெனின் ரஷியன் கம்யூனிஸ்ட் கட்சியும் முதல் உலக போர் முடிந்த கையோடு CZAR குடும்பத்தை கொன்று ஆட்சியை பிடித்தனர்.
லெனின் புரட்சி செய்த காலத்தில் ஆட்கடத்தல், கொள்ளை, கொலை போன்ற செயல்களை கட்சியின் நலனுக்காக செவ்வனே செய்து வந்தார் ஸ்டாலின். அதிகம் படித்தது இல்லை . லெனின் நெருங்கிய நண்பரும், லெனினுக்கு பின் ஆட்சியை கைப்பற்றும் வாரிசாக இருந்தவர் ட்ரொட்ஸ்கி. லெனின் எந்த காரணத்தை கொண்டும் ஸ்டாலின் தனக்கு பின் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். ஆனால் ஸ்டாலின் பின்னாளில் தனக்கு தெரிந்த வட்டாரங்களை முக்கிய பொறுப்பில் அமரவைத்து லெனின் மறைவுக்கு பின்னர் ட்ரொட்ஸ்கேயை பழிதீர்த்தார்.

பிந்திய செய்தி 13 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்க இயலாது ரசு

வெப்துனியா :ஊரடங்கு உத்தரவால் ஏழை எளிய மக்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தகவல்வெளியானது.
இந்நிலையில், தற்போது, 12 வகையான தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதில், இரும்பு, சிமெண்ட், சுத்திகரிப்பு. சர்க்கரை, காகிதம், ரசாயனம், ஜவுளித்துறை, உரம், உருக்கு, கண்ணாடி, ஃபவுண்டரி உட்பட 12 துறைகளை சேர்ந்த தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பங்குச்சந்தை வீழ்ச்சி ..அச்சத்தில் அல்ல அடிப்படையே தகர்ந்து போயுள்ளதால்

Karthikeyan Fastura : இந்திய பங்குச்சந்தை மட்டுமல்ல உலக பங்குச்சந்தைகள் அனைத்தும் 30
சதவீதத்திற்கும் மேலாக வீழ்ந்து இன்று அதிலிருந்து இன்னும் மோசமாக வீழாமல் இருக்க போராடி வருகின்றன.
ஆனால் இதை ரெம்ப நாள் பிடித்து வைக்க முடியாது. இதுவரை வீழ்ந்ததெல்லாம் அச்சத்தில் விழுந்தவை. இனிமேல் விழப்போவதெல்லாம் அச்சத்தில் அல்ல அடிப்படையே தகர்ந்து போயுள்ளதால் விழ இருப்பவை
துரதிஷ்டவசமாக இன்றைய ஆட்சியாளர்கள் பொருளாதார கட்டமைப்பை உணர்ந்தவர்களாக இல்லை. அகந்தையும் வீண்பிடிவாதமும் கொண்டவர்களாகவே உள்ளனர். இதில் சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து யாரும் விதிவிலக்கல்ல. கடந்த 12 ஆண்டுகளாக இயல்பான கரெக்சன் கூட நடக்காமல் மார்க்கெட் சரிவை காணாமல் போனதால் கிடைத்த தெம்பாக கூட இருக்கலாம். அல்லது தங்களது அணியில் உண்மையை உரைக்கும் பொருளாதார நிபுணர்களை வைத்துக்கொள்ளாமல் போனதால் இருக்கலாம்.
ஆனால் பொருளாதார நிபுணர்கள் கடந்த மூன்று வருடங்களாக கத்திக்கொண்டே இருந்தார்கள். சந்தை இப்படி இயல்புக்கு மாறாக நடக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் மிகப் பெரிய சரிவை எட்டவேண்டும் என்று. இன்று கொரோனா எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிக் கொண்டிருக்கிறது