சனி, 24 ஜனவரி, 2015

கிருஷ்ணகிரி Bank of Baroda கொள்ளை ! 2000 பவுன் நகைகள் கொள்ளை போனதாக தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அடுத்த குந்தாரப்பள்ளியில் உள்ள பாங்க் அஃப் பரோடா வங்கியில் சுமார் 2000 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குந்தாரப்பள்ளியில் உள்ளது பாங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளை. நேற்றிரவு வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர்கள், வங்கி லாக்கரை உடைத்து சுமார் 2000 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் கொண்டு வரப்பட்டன. தடயவியல் நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட எஸ்.பி. கண்ணம்மாள் உட்பட போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வங்கியில் இருந்து எத்தனை பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது என்பதை வங்கி மேலாளரோ இல்லை போலீஸ் அதிகாரிகளோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

கிரண் பேடி IPS flashback : விளம்பரத்திற்காக திரிக்கப்பட்ட கதைகளில் உருவான ஒரு போலீஸ் / அரசியல் போலி கதாநாயகி?

கிரண் பேடி என்றாலே உடனே நினைவுக்கு வருவது கிரேன் பேடி என்ற அடைமொழி. பிரதமரின் காரையே கிரேன் வைத்து அகற்றியவர் என்று ஒரு கதை உலவுகிறது. அவரும் அதை பல இடங்களில் சொல்லிக்கொள்ளவும், அதனால்தான் பழிவாங்கலாக கோவாவுக்கு மறுநாளே மாற்றப்பட்டதாகும் சொல்லவும் செய்கிறார். உண்மை என்ன? என்பது குறித்து அதுபற்றி வெளியான தகவலை தேடினால் கிடைப்பது
காரை கிரேன் வைத்து தூக்கிய சம்பவம் நிகழ்ந்தது கனாட் பிளேசில். சம்பவத்திற்கு உள்ளான கார் பிரதமர் அலுவலகத்துக்கு சொந்தமானது. அப்போது பிரதமரும்கூட இந்தியாவிலேயே இல்லை. யாரோ ஒரு டிரைவர், தன் சொந்த வேலைக்கு காரை எடுத்துச் சென்று கடை முன்னால் பார்க் செய்திருக்கிறார். அதைப் பார்த்த காவல்துறை ஆய்வாளர் ஒருவர் சலான் வழங்கியிருக்கிறார்.

ட்ராபிக் ராமசாமி திருச்சி போலீஸ் கமிஷனரை மாற்ற வைத்தார்! ஸ்ரீ ரங்கம் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவான சைலேஷ் குமாரை....

சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை கவனித்து வந்த திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ், அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறுகிறது. இதனிடையே, ஆளும்கட்சிக்கு சாதகமான திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வந்தன. இந்நிலையில், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவை தேர்தல் ஆணையம் அதிரடியாக இன்று இடமாற்றம் செய்துள்ளது. சைலேஷ் குமார், மதுரை மாநகர காவல்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

தயாநிதிமாறன் கூறுவது அப்பட்டமான பொய்: குருமூர்த்தி

சென்னை ‘‘தயாநிதிமாறன் கூறுவது அப்பட்டமான பொய்’’ என்றும், என் மீது மானநஷ்ட வழக்கு போடுவதாக கூறி, ஏன் போடவில்லை என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து, ஆடிட்டர் குருமூர்த்தி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்று தயாநிதிமாறன் சொன்னதை பற்றி நான் சந்தோஷப்படுகிறேன். ஆனால், 2007-ம் ஆண்டு தான் இந்த விசாரணை தொடங்கியது. குற்றச்சாட்டை சி.பி.ஐ. பதிவு செய்தது அப்போது. 323 ஐ.எஸ்.டி. இணைப்புகள் தயாநிதிமாறன் வீட்டில் பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் பெயரில் பதுக்கப்பட்டு இருந்தது. அதாவது, கம்ப்யூட்டரில் இல்லாத, யாருக்குமே தெரியாத, சில பேருக்கு மாத்திரம் தெரிந்த மாதிரி இந்த 323 இணைப்புகள் பதுக்கப்பட்டு, அதில் இருந்து பாதாள குழி தோண்டி கேபிள் மூலம் சன் டி.வி.யில் இணைத்தார்கள். இதுபற்றி விசாரித்த சி.பி.ஐ., இது உண்மை, இது பற்றி மேல் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அனுமதி தேவை என்று 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினார்கள்.

உச்ச நீதிமன்றம்/ சிமென்ட் சீனிவாசன்/ ஏவிஎம் குருநாத் /கிரிகெட் வாரியம் / மேட்ச் பிக்சிங் / ஐ பி எல் அணி எல்லாமே கூட்டணியா?

ஊழல் கிரிக்கெட்டுக்கு புனித விளக்கேற்றும் உச்ச நீதிமன்றம்  
ந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரும், இன்றைய உலகக் கிரிக்கெட்டின் ‘ஜாம்பவானுமான’ இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனின் மருமகன் குருநாதன் மெய்யப்பன ஐ.பி.எல் போட்டிகள் தொடர்பாக சூதாடியது குறித்த வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
1. குருநாதன் மெய்யப்பனும் ராஜ் குந்த்ராவும் சூதாடினார்கள். தங்களுக்கு உள் விவகாரங்கள் தெரிந்த சென்னை அணி, ராஜஸ்தான் அணி ஆடும் ஐ.பி.எல் போட்டிகள் தொடர்பாகவும் பந்தயம் வைத்து சூதாடினார்கள்.

தியாகி ஜெயலலிதா விடுதலையாக ஆயிரம் மணி நேரம் செலவிட்டுள்ளேன்! உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தினந்தோறும் அனல் பறக்கிறது.
கடந்த 18 ஆண்டுகளாக இவ்வழக்கில் சிக்கி தவிக்கும் ஜெயலலிதாவை மீட்பதற்காக நாட்டின் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவரும், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலு மான நாகேஸ்வர ராவ் களமிறக்கப்பட்டுள்ளார்.
அடுக்கடுக்கான ஆதாரங்களை யும், இதுவரை சொல்லாத புதிய தரவுகளையும் நாகேஸ்வர ராவ் தனது வாதத்தின்போது எடுத்துரைத்தார். அவரை `தி இந்து' சார்பாக சந்தித்தோம். அவர் அளித்த சிறப்பு பேட்டி:
ஜெயலலிதாவின் வழக்கில் 8 நாட்கள் இறுதி வாதம் நிகழ்த்தி யுள்ளீர்கள். உங்களுடைய வாதம் திருப்திகரமாக இருந்ததா?
கடந்த 8 நாட்களில் 40 மணி நேரத்துக்கும் மேலாக 10 நிமிடம் கூட இடைவேளை எடுத்துக்கொள்ளாமல் வாதிட்டுள்ளேன். இந்தஆளு வாழ்க்கையில நிச்சயமாகஒரு நல்ல காரியமும் செஞ்சிருக்க மாட்டாய்ன் ?

போதைக்கு அடிமையாகியுள்ள கால்சென்டர் ஊழியர்கள்


தானே,ஜன.23 (டி.என்.எஸ்) மும்பையில் கைதான போதை பொருள் கும்பலிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், அவர்களிடம் வாடிக்கையாளர்களாக உள்ளவர்களில் 60 சதவீதம் பேர் கால் சென்டரில் பணிபுரிபவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.கடந்த புதன்கிழமை தானே மாவட்டத்தில் உள்ள மும்புரா நகரில் அல்தாப் ஆருண் (32) என்ற போதை மருந்து வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த தகவலை அடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் இன்று சையது சிக்கந்தர் (21), முகமது ஜாகித் (23) என்ற இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 15,000 ரூபாய் மதிப்புள்ள 30 கிராம் எடை கொண்ட மெபெட்ரோன் எனும் போதை மருந்தை பறிமுதல் செய்தனர்.

SEX இப்படி தூண்டிவிடுகிறோம் அல்லவா? அதற்கு என்ன வடிகால் வைத்திருக்கிறோம்?

nisaptham.com
இப்பொழுதெல்லாம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் சில்மிஷங்களில் ஈடுபடுவது சர்வசாதாரணம். தாராசுரம் கோவிலுக்கு முன்பாக ஒரு பெரிய புல்தரை இருக்கிறது. அந்தத் தரையில் அத்தனை இளஞ்சோடிகள். பெரும்பாலும் பள்ளி மாணவர்கள்தான். இதை எதற்கு உதாரணமாகச் சொல்ல வேண் டியிருக்கிறது என்றால் கும்பகோணம் போன்ற ஊரிலேயே இப்படியான சம்பவங்கள் சாதாரணமாக நடக்கும் போது பெங்களூர் போன்ற பெருநகரங்களில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. மூன்று கிலோமீட்டர் பைக் ஓட்டிப் பார்த்தால் தெரிந்துவிடும். எத்தனை பெரிய தட்டிகள். மார்பு தெரியும்படியும், தொப்புள் தெரியும்படியுமான தட்டிகளால் இந்த ஊரை நிரப்பியிருக்கிறார்கள். ஒரு சாதாரண நகைக்கடை விளம்பரமாக இருக்கும். மாராப்பை விலக்கிவிட்டபடிதான் அந்தப் பெண் தான் அணிந்திருக்கும் நகையைக் காட்டுவாள். பெண்கள் மட்டும்தான் என்றில்லை. ஆண்கள் அணியும் ஜட்டிக்கு பதினைந்தடி உயரத்தில் தட்டி வைத்திருக்கிறார்கள். கண்கள் மேயத்தானே செய்யும்?

வெள்ளி, 23 ஜனவரி, 2015

வரலாறு காணாத சுயநலவாதி பன்னீர்செல்வம் ! தப்பி தவறியும் ரோஷம் காட்டாத அடிமைதொழில் . காசு.... பதவி ..கண்றாவி?

ஓ பன்னீர்செல்வம்ராமனின் பாதரக்ஷையை அரியணையில் அமர்த்தி பரதன் அயோத்தியை ஆண்ட புராணக் கதையை இன்றைய தமிழகம் புதிய வடிவில் கண்டு வருகிறது. பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போகுமாறு விதிக்கப்பட்ட ராமனின் இடத்தில் ஊழல் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட ஜெயா. ராமனின் செருப்பு இருந்த இடத்தில் ஓ.பன்னீர்செல்வம். தலைமைச் செயலகத்துக்கும் போயசு தோட்டத்துக்கும் தூரம் அதிகமில்லை என்பதாலும், அ.தி.மு.க.வில் செகண்ட் ஹீரோக்களுக்கு இடமில்லை என்பதாலும் இந்த நவீன இராமாயணத்தில் பரதன் கதாபாத்திரம் ரத்து செயப்பட்டுவிட்டது.
அரியணையில் அமர வைக்கப்பட்ட ராமனின் செருப்பிற்குக்கூடக் கொஞ்சம் தலைக்கனம் ஏறியிருக்கலாம். ஆனால், பன்னீர்? தன் பெயருக்கு முன்னால் முதலமைச்சர் எனப் போட்டுக் கொள்வதில்லை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருக்குரிய அறையைப் பயன்படுத்துவதில்லை, சட்டசபையில் முதலமைச்சருக்குரிய நாற்காலியில் அமருவதில்லை, சட்டசபை வளாகத்தில் ஜெயாவின் காரை நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில்கூடத் தனது காரை நிறுத்துவதில்லை என அவரது பணிவு கொடிகட்டிப் பறக்கிறது.

பெருமாள் முருகனுக்கு தடை போட்ட கவுண்டர் ஆர்.எஸ்.எஸ் கூட்டணி

கோவை சூலூர்அருகே உள்ள தேநீர் கடையின் புறவாசல் - தலித்துக்கள் மட்டும் டீ சாப்பிடும் இடம். (நன்றி: டெக்கான் குரோனிக்கிள்)கவுண்டர் பெண்களை களங்கப்படுத்தியது பெருமாள் முருகனா ? பாகம்1 பெருமாள் முருகன் : பிரச்சினை சாதியா – பாலுறவா ? பாகம் 2 பாகம் 3 கொங்கு வேளாளக் கவுண்டர்கள்தான் மேற்கு தமிழகத்தின் முதன்மையான ஆதிக்க சாதி. பிற்படுத்தப்பட்ட பட்டியிலில் வரும் வன்னியர், முக்குலத்தோர் போன்ற ஏனைய ஆதிக்க சாதிகளை விடவும் இவர்கள் சமூக ரீதியில் மேல் தட்டில் இருக்கிறார்கள். தற்போது திருப்பூர் தொழிலதிபர்கள், நாமக்கல் வட்டார பிராயலர் பள்ளிகள், வட்டார கோழிப்பண்ணைகள், லாரி நிறுவனங்கள் அனைத்திலும் இவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். கணிசமானோர் விவசாயிகளாகவும் நீடிக்கிறார்கள்.
காருண்யா கல்லூரி வழியில் இருக்கும் நாதே கவுண்டன் புதூரில், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு “ஆதித்தமிழர் பேரவை” எனும் அருந்ததியருக்கான இயக்கத்தின் கொடி, பெயர்ப்பலகை நட்ட போது கவுண்டர்கள் பொருளாதாரத் தடை விதித்தனர்.
பொருளாதார வாழ்க்கையில் கவுண்டர்களையே சார்ந்து இருக்கும் அம்மக்கள் தடையை மீறி தாக்குப்பிடிக்க முடியுமா?

ஊதாரித்தனமான திருமணங்களை தடை செய்தாலே இந்தியாவின் பல பிரச்சனைகள் தீரும்! மதிமாறன்

முகூர்த்தநாள்’ என்று ஒரே நாளில் பல திருமணங்களை வைத்து, லட்சக்கணக்கானவர்கள் ஓரே நாளில் ஒரே நேரத்தில் கார்களில், பஸ்சில் இனனும் பொது இடங்களில் குவிந்து, குழப்பம் ஏற்படுத்தி;
வேலைகளுக்குப் போகிறவர்கள், உயிர்காக்க அவசரமாக மருத்துவமனைக்குச் செல்கிறவர்கள் இப்படி அதிமுக்கியமாகப் பயணக்கிறவர்களைச் சாலை மறியல் செய்வதுப்போல் தடுத்து, துன்புறுத்துகிறார்கள்.
இதை ஒரே வரியில் சொல்வதென்றால்: யாரோ சிலர் தாலிக் கட்றதுக்கு நம்மத் தாலிய அறுக்குறாங்க.
ஊதாரித்தனமான இந்தத் திருமணத்தைத் தடை செய்தாலே இந்தியாவின் பெரும் பிரச்சினையான; பட்டினிச் சாவு, பொருளாதர நெருக்கடி, பெண்களுக்கான எதிரான வன்முறை, ஜாதி வெறி இப்படியான பல பிரச்சினைகள் தீர்வுக்கு வந்து விடும்.
‘கல்யாணத்தை நடத்தி கடுப்பேத்துறாங்க மை மை லாட்’

ஸ்ரீ ரங்கத்தில் எதிர்கட்சிகளின் பொது வேட்பளராக ட்ராபிக் ராமசாமியை ஆதரிக்க வேண்டும்! Traffic Ramasamy is having courage Why not tamils Kalaigner speech

அதிமுகவினரின் சகலவிதமான அத்து மீறல்களையும் தேர்தல் கமிஷனர்களின்  மற்றும்  அதிகாரிகளினதும்  அதிமுக ஜால்ரா அடாவடிகளையும் துணிந்து  கட்சி பேதமில்லாமல்  தோலுரித்து  காட்டக்கூடிய ஒரே வேட்பாளர் இன்றைய தேதியில்  டிராபிக் ராமசாமிதான்!  
பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் டிராபிக்ராமசாமி போட்டி ஸ்ரீரங்க இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த டிராபிக்ராமசாமி செய்தியாளர்களிடம் பேசும் போது..... பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் போட்டியிடுகிறேன்.தமிழக மக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்கிற உணர்வை பிரதிபலிக்க வேண்டும் என்றும், ஸ்ரீரங்கம் தொகுதி எனக்கு அறிமுகமான தொகுதி மட்டும் இல்லாமல் நான் தமிழகம் முழுவதும் நன்கு அறிமுகமான நபர் என்பதாலும் போட்டியிடுகிறேன் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் ’’ கைலேஷ் குமார் யாதவ் 3 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து திருச்சியில் நீடிப்பதால் ஸ்ரீரங்கத்தில் நேர்மையான முறையில் தேர்தல் நடக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது என்றும் அவரை 48 மணிநேரத்தில் மாற்ற வேண்டும் என்றும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.சி.பழனிசாமியிடம் புகார் மனு கொடுத்துள்ளேன். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை போராட்டம் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வோம்.ஸ்ரீரங்கத்தில் அடிப்படை பிரச்சனையான அடிமனை பிரச்சனை குறித்து மக்களிடம் பேசி அவர்களி்டம் வாக்கு சேகரிப்பேன்.nakkheeran.in

EVKS இளங்கோவன் :உங்களை ஏன் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது? ஜி67" கார்த்தி சிதம்பரத்துக்கு விளக்கம் கோரி நோட்டீஸ்

சென்னை : கட்சி மேலிட அனுமதி பெறாமல் தனது ஆதரவாளர்களுடன் கார்த்தி சிதம்பரம் ஆலோசனை நடத்தியது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதற்கு உரிய விளக்கம் அளிக்காத பட்சத்தில் கார்த்தி சிதம்பரம் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப் படுவார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் பெருந்தலைவர் காமராஜர் பற்றி விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கினார் கார்த்தி சிதம்பரம். ‘‘காமராஜர் பற்றி பேசாவிட்டால் காங்கிரஸ் இல்லை'' என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி கொடுத்தார்.அய்யா இந்த வெளங்காத  கார்த்தி தம்பியை அந்த வீணாய்ப்போன  ராகுல் தம்பி திடீரென்று கூப்பிட்டு பதவி குடுத்தா  என்ன பண்ணுவீங்க? இரண்டுமே ஒரே ரகம்தான்! நீங்க பாவம் சார் !   

தமிழகத்தில் இன்னொரு அதிமுக உதயமாகிவிட்டது? உபயம் ஸ்டாலின்!

தமிழ் மக்களின் அடிமைத்தனத்துக்கு தீனி போட ஒரு அதிமுகவால் முடியுமா என்ற சந்தேகம் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.அதன் காரணமாக மேலும் பல தமிழர்களின் அடிமைபுத்தியை பேணி பராமரிப்பதற்கு வசதியாக திமுகவிலும் அதிமுகவை போலவே காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெறக்கூடிய  வாய்ப்பை கழக தொண்டர் மற்றும் குண்டர்களுக்கு வழங்கி உள்ளார். இந்த பாத நமஸ்கார ஆசனம் பந்தம் பிடித்து முன்னேற நல்லது.அது மட்டுமல்ல ஸ்டாலினுக்கும் மனதில் ஏற்படும் விகாரங்களுக்கும் நல்ல மருந்தாக பயன்படும் என்றும் தெரிகிறது. இப்படிதானே ஜெயலலிதாவும் தனது ஈகோவுக்கு தீனி போடுகிறார்? இருவருக்கும் உள்ள ஒற்றுமை இருவருமே பிறர் தமது கால்களில் விழுந்து வணங்கும் போது மிகவும் மகிழ்சியாக இருப்பதுதான் ,.

Chennai Book Fair ரூ15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை 700 கடைகள் 12 லட்சம் பார்வையாளர்கள்...

சென்னை,ஜன.22 (டி.என்.எஸ்) கடந்த 13 நாட்களாக நடந்து வந்த 38வது சென்னை புத்தக கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த 13 நாட்களில் ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளன. 12 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர்.700 அரங்குகளுடன் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வந்த சென்னை புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இரா.தாண்டவன் கலந்து கொண்டு பேசினார்.

சசி தரூர் பாஜக வருண் காந்தியுடன் ரகசிய பேச்சு? இரு மேட்டுக்குடி கிரிமினல்கள் meets......

பாரதீய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான வருண்காந்தி நேற்று முன்தினம் மாலையில் டெல்லி லோகி எஸ்டேட்டில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். சசிதரூரை சந்தித்தது பற்றி நிருபர்கள் வருண்காந்தியிடம் கேட்டதற்கு அவர் பதில் ஏதும் அளிக்காமல் சென்று விட்டார். பின்னர் வருண்காந்தி தனது டுவிட்டர் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் சசிதரூரை சந்தித்தது பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் ‘பாராளுமன்ற வெளிவிவகாரத்துறை கமிட்டி அடுத்த கூட்டம் தொடர்பாக 10 நிமிடம் சசிதரூரை சந்தித்து பேசியதாக’ குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதுகுறித்து பாரதீய ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில்‘ சசிதரூர் வருண்காந்தியை தனது வீட்டுக்கு அழைத்து பேசியது அவரது தந்திரங்களில் ஒன்று’ என தெரிவித்து உள்ளார்.

ரிசர்வ் வங்கியை நாடும் இலங்கை: கறுப்பு பணத்தை மீட்க புதிய அரசு திட்டம்

கொழும்பு: இலங்கையில், முன்னாள் அதிபர் ராஜபக் ஷே தலைமையிலான ஆட்சியின் போது, வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கறுப்பு பணம் குறித்த தகவல்களை பெறவும், பதுக்கப்பட்ட பணத்தை மீட்கவும், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் உலக வங்கியின் உதவியை நாட, அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான, புதிய அரசு திட்டமிட்டு உள்ளது.இதுகுறித்து, அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சரும், அரசின் செய்தித் தொடர்பாளருமான, ரஜித் சேனரத்னே கூறியதாவது: முன்னாள் அதிபர் ராஜபக் ஷேவின் ஆட்சிக் காலத் தில், பல்வேறு அரசியல் பிரபலங்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள், முறைகேடான வகையில், சொத்துகளை குவித்து உள்ளனர். இவற்றில் பல, வெளிநாடுகளில் குவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டு வங்கிகளில், கோடிக்கணக்கான பணம் பதுக்கப்பட்டு உள்ளது. விரைவில், கறுப்பு பணம் மீட்கப்பட்டு, பதுக்கல்காரர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் உதவியை நாடவுள்ளோம். அந்த அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள், இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி, கறுப்பு பணத்தை மீட்டெடுக்க உதவுவர் என, நம்புகிறோம். இவ்வாறு, அவர் கூறினார். 
ஹிஹிஹி எங்க பணத்தையே இன்சுரன்ஸ் சிட்பண்ட் என்று போட்டதயே திருப்பி கொடுக்க மாட்டார்கள் இதுல நீங்கவேறயா ,,,

வியாழன், 22 ஜனவரி, 2015

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் (AVM) குற்றவாளி, சீனிவாசன் குற்றமற்றவர்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பிசிசிஐ தலைவர் பதவிக்கு சீனிவாசன் போட்டியிட வேண்டுமெனில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அணி உரிமையாளர் என்ற பொறுப்பை அவர் உதற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அடுத்த 6 வாரங்களில் பிசிசிஐ தேர்தல்களை நடத்தலாம் என்று கூறிய உச்ச நீதிமன்றம், அதில் சீனிவாசன் போட்டியிட முடியாது என்று தெரிவித்துள்ளது. 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் ஸ்பாட் பிக்சிங் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வாசித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தாக்கூர் மற்றும் கலிபுல்லா லாபநோக்கிலான இரட்டை நலன்களை முடிவுக்குக் கொண்டு வந்தனர். இதன்படி சீனிவாசன் ஒன்று பிசிசிஐ பதவிகளில் போட்டியிடுவதைத் தவிர்க்க வேண்டும், அல்லது பிசிசிஐ பதவி முக்கியமெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் பொறுப்பை உதற வேண்டும்.

நம் காலடி மண்ணிலிருந்தே கேன்சரை குணப்படுத்தும் அடுத்த தலைமுறை மருந்துகள் உருவாக வாய்ப்பு

உலகின் அடுத்த தலைமுறை ஆன்டிபயாடிக் மற்றும் கேன்சரை குணப்படுத்தும் மருந்து நமது காலடி மண்ணிலிருந்து உருவாகும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், ஐந்து கண்டங்களில் (வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா) உள்ள கடற்கரை, மழைக்காடுகள் மற்றும் பாலைவனங்களில் சேகரிக்கப்பட்ட 185 மண் மாதிரிகளை வைத்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வில், இதுவரை அறியப்படாத ஆன்டிபயாடிக் மற்றும் கேன்சரை குணப்படுத்தும் மருந்துகளை மண்ணிலிருக்கும் நுண்ணுயிரிகளிலிருந்தே கண்டுபிடிக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.  அதானே பாத்தேன் நம்ம வீட்டு நாய் எப்ப பாத்தாலும் மண்ணை கிண்டி கிண்டி..... அடடே

'தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுங்கள் இந்தியர்களே..' யாசிதி குழு தலைவி பேட்டி!

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் படும் துன்பங்களை எடுத்துக்கூறி ஆதரவு திரட்ட யாசிதி இன குழு லைலா கவுதெய்தா தலைமையில் இந்தியாவில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளது. ஈராக்கில் கணிசமாக வசிக்கும் யாசிதி இன மக்கள் தங்களது வழிபாட்டு முறைகளாலும், சமய நம்பிக்கைகளாலும், இந்துக்களோடு ஒத்துப்போகக்கூடியவர்கள். இந்நிலையில், ஈராக்கில் எழுச்சி பெற்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் யாசிதி இன மக்களை குறிவைத்து கொலை செய்து வருகின்றனர். பெண்களை செக்ஸ் அடிமைகளாக்கி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தியாவிடம் ஆதரவு திரட்டுவதற்காக, யாசிதி அமைப்பு ஒன்று லைலா என்ற பெண் தலைமையில் டெல்லி வந்துள்ளது. ஒன்இந்தியாவுக்கு லைலா அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டி: மனிதாபிமானம் உள்ள இந்தியர்கள் யாசிதி இன மக்கள் கஷ்டப்படும்போது இந்தியர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர்.

ஷங்கரின் 'ஐ த மெகா பொய்'! ரசிகன் தலையில் மெகா மிளகாய் அரைப்பு! சினிமாக்காரன் சாலை -1

முத்துராமலிங்கன்:
'மாதத்தின் முதல் வாரம் ஷங்கர் படம் போல் உற்சாகமாகவும், கடைசி வாரம் தங்கர் படம் போல் ஒரே அழுகாச்சியாகவும் ஆகிவிடுகிறது!'. இது மாதச் சம்பளக்காரர்களின் மைண்ட் வாய்ஸ். ‘ஜெண்டில்மேன்' முதல் ‘எந்திரன்' வரை மேற்படி கூற்று ஷங்கருக்கு ஓரளவு பொருந்தலாம். ‘ஐ' விவகாரத்தில் ஷங்கர் அதை இயக்கியதை நினைத்து இன்னும் பல ஆண்டுகளுக்கு வருந்தலாம். ‘ஐ' படம் பார்த்ததிலிருந்து, இது ஷங்கர் தன்னை டிங்கரிங் பண்ணி பட்டி பார்த்துக்கொள்ள வேண்டிய சமயம் வந்து விட்டதாகவே தோன்றுகிறது. முதலில் அவர் தான் ஒரு பிரம்மாண்ட இயக்குநர் என்று மாட்டிக் கொண்ட கோட்டை கழட்டி தூர எறியவேண்டும். அப்படி செய்தால் லட்சம் பூக்களுக்கு மத்தியில் ஒரு வீடு போன்ற தட்டையான சிந்தனைகளை எல்லாம் எழுதத் தோன்றாது. ஒவ்வொரு படத்துக்கும் கதை 'செய்ய'த் துவங்கும் முன்பே பட்ஜெட் மட்டும் முந்தின படத்துக்கும் மேல.. அதுக்கும் மேல' என்று யோசிப்பதை நிறுத்தவேண்டும்.

அந்த 323 தொலைபேசி இணைப்புக்கள் ! தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர், சன் டி.வி. ஊழியர்கள் இருவர் கைது

சன் தொலைகாட்சிக்கு முறைகேடாக நவீன தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்ட வழக்கில், மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த கெளதமன், சன் டி.வி. ஊழியர்கள் இருவரை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
இது குறித்த விவரம்: திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக தனது சகோதரர் கலாநிதி மாறனின் நிறுவனமான சன் தொலைக்காட்சிக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

வளர்ச்சி திட்டங்களுக்கு கோவில் நிதிகளை பயன்படுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு கி.வீரமணி யோசனை

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. மத்திய அரசு தனது நிதிப் பற்றாக்குறைக்காக நல்ல லாபம் தரும், ‘‘பொன் முட்டை இடும் வாத்தைக் கொல்வது’’ போன்று, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதில், நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் ஈடுபட்டு வருகிறது. மக்களின் சுகாதார திட்டத்துக்கு செலவு செய்வதில் 20 சதவீதம் வெட்டு. உயர் கல்வி துறை வளர்ச்சிக்கான ஒதுக்கீட்டில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் வெட்டு. பெட்ரோல்-டீசல் உலகச்சந்தை விலை சரி பாதிக்கு மேல் வீழ்ச்சி அடைந்தும், அதன் பயனை நுகருவோரான மக்களை சென்று அடையாமல், மத்திய அரசு வரி விதிப்பின் மூலம் இடையே பறித்துக் கொள்கிறது.

அண்ணாதுரையும், எம்.ஜி.ஆரும் பெரிய தலைவர்கள்: ஜெ., அப்பீல் விசாரணையில் நீதிபதி புகழாரம்

பெங்களூரு: தமிழகத்தில், அண்ணாதுரையும், எம்.ஜி.ஆரும் பெரிய தலைவர்கள் என புகழாரம் செய்த நீதிபதி குமாரசாமி அதிமுகவினர் வயிற்றில் பால்வார்த்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்துக் குவிப்பு வழக்கின், மேல் முறையீட்டு மனு விசாரணை, 11வது நாளாக, நேற்று நடந்தது.ஜெ., வக்கீல் நாகேஸ்வரவராவ் வாதிட்டதாவது:
முந்தைய சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, ஊழல் தடுப்பு போலீஸாருக்கு சம்மன் அனுப்பி, ஜெயலலிதா சொத்து ஆய்வு குறித்த, அறிக்கையை, விளக்கும்படி, நீதிமன்றமே கேட்டது. இதற்காக, டெபுடி எஸ்.பி., சம்பந்தம் ஆஜராகி, தான் ஆய்வு செய்த அறிக்கையை விளக்கினார். ஆனால், அவரது விளக்கத்தை ஏற்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், நீங்கள் எப்படி ஆஜராகலாம் என்று கூறி, அவரது விளக்கத்தை ஏற்க மறுத்தது. இதை, தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.ஜெயலலிதா வீட்டில் ரெய்டு நடத்தி, வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த போது, அவர் வீட்டில் இல்லை. பறிமுதலான, வெள்ளியின் எடை, 1,116 கிலோ என்றும், அதன் மதிப்பு, 48 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிட்டனர். உண்மையில், அங்கிருந்த, வெள்ளி பொருட்களின் எடை, 1,250 கிலோவாகும். இதன் மதிப்பு, 83 லட்சத்து, 7,000 ரூபாய்.இந்த வெள்ளி பொருட்கள், ஜெயலலிதா மீது குற்றம் சாட்டப்பட்ட, 1991ம் ஆண்டுக்கு முன்பே, அவர் சம்பாதித்தது. இதுபற்றி, போலீஸாருக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கட்டாயம் இல்லை. முறையான அனுமதி பெறாமல் ரெய்டு நடத்தினர், என்றார்.

புதன், 21 ஜனவரி, 2015

நடிகை அசின் எடை அதிகரித்து ஹிந்தி படபிடிப்பு தாமதம்

அசின் உடல் எடை அதிகரித்துவிட்டதால் அவர் நடிக்கும் ‘ஆல் ஈஸ் வெல்‘ இந்தி பட ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதுபற்றி பட குழுவினர் கூறும்போது,‘பட ஷூட்டிங் நிறுத்தப்பட்டதற்கு காரணம் இதன் படப்பிடிப்பை பொங்கல் தினத்தில் தொடங்க வேண்டும் என்பதற்காகத்தான். அன்றைய தினம் இதன் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. அபிஷேக் பச்சனுடன் அசின் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. மேலும் ஸ்மிருதி இரானியுடன் அசின் நடித்த காட்சிகள் ரீ ஷூட் செய்யப்பட்டது. இதில் சுப்ரியா பதக்குடன் அசின் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது' என்றனர். அசின் உடல் எடை பற்றி எதுவும் கூறாமல் இப்படி மழுப்பலாக பதில் சொன்னது படக்குழு - S/tamilmurasu.org

ஜல்லிக்கட்டு ஆதிக்க சாதி அடையாளமா ? மஞ்சு விரட்டு ஜல்லிகட்டு ஆக மாறியது ?

ஜல்லிக்கட்டுக்கு தடைஜல்லிக்கட்டு என்பதை தேவர் ஜெயந்திக்கு இணையான சாதிய ஆணவச் சின்னமாகத்தான் தேவர் சாதியினர் பார்க்கின்றனர். ஜல்லிக்கட்டினைப் பாரம்பரியமாக நடத்திவரும் இந்த ஆதிக்க சாதியினர், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எங்களைப் பாதிக்கின்றது என்று கூடப் பேரணி நடத்தியிருக்கின்றனர்.(2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதி மன்றம் ஜல்லிக் கட்டு நடத்துவதை தடை செய்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டதை ஒட்டி புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரை)
ல்லிக்கட்டிற்கு அண்மையில் உச்சநீதி மன்றம் தடை விதித்ததும் தமிழர்கள் பொங்கியெழுந்து வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியதாகவும் பொது மக்கள் ஆத்திரமடைந்து கருப்புப் பொங்கலாக அறிவித்துப் பொங்கல் விழாக்களைப் புறக்கணித்து விட்டதாகவும் செய்தி ஊடகங்கள் பரபரப்பூட்டின. முரட்டுத்தனமான இந்த விளையாட்டில், மனிதர்கள் மாண்டு போகும் கவலையைவிட, காளை மாடுகள் மீது கரிசனம் கொண்டு, ஜல்லிக்கட்டுக்குத் தடைகோரி சென்ற ஆண்டு ஜூலையில் விலங்கு நல வாரியம் உச்சநீதி மன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கில் நீலச்சிலுவை சங்கமும் (புளூ கிராஸ்) தன்னை இணைத்துக் கொண்டது.

கவுண்டர் பெண்களை களங்கப்படுத்தியது பெருமாள் முருகனா ?

எழுத்தாளர் பெருமாள் முருகன்
பிள்ளை வரம் வேண்டி கோவிலுக்கு செல்லும் ஆதிக்க சாதி பெண்களோடு உறவு கொண்டு அபயமளித்து கோரிக்கையை நிறைவேற்றும் ஆண்களை சாமிகளாக கருதுகிறார்கள் மக்கள். சாமிகளில் தீண்டாச் சாதியினரும் பாதிக்கு பாதி இருப்பதாக நாவல் கூறுகிறது. ஆதிக்க சாதியின் மொழியில் சொல்வதாக இருந்தால், “கவுண்டச்சி வயிற்றில் சக்கிலியின் பிள்ளையா?”. எழுத்தாளர் பெருமாள் முருகன்
“மாதொரு பாகன்” நாவலை தடை செய்யுமாறும், நூலை எரித்தும் திருச்செங்கோட்டில் போராட்டம் நடைபெற்றதை அறிந்திருப்பீர்கள். நாமக்கல் வருவாய்த்துறை அலுவலகத்தில் அரசு அதிகாரத்தினால் நாவலாசிரியர் பெருமாள் முருகன் சித்ரவதை செய்யப் பட்டதும், இறுதியில் தனது அனைத்து எழுத்துக்களையும் திரும்ப பெறுவதோடு இலக்கிய வாழ்வையே முடித்துக் கொள்வதாக அவர் அறிவித்திருக்கிறார். அந்த வகையில் ‘மறுபிறப்பில்’ நம்பிக்கையற்றவனாகிய தான் ‘இறந்து விட்டதாக’வும் கூறியிருக்கிறார்.

அசோகமித்ரனும், வாஸந்தியும், ஜெயமோகனும் பெருமாள் முருகன் பிரச்சனயில் கருத்து கந்தசாமியாகி .......

IndTodayஇந்திய டுடே ;கெட்டப்பை மாத்தனாலும் கேரக்டர மாத்த மாட்டேங்குதே
வே.மதிமாறன் :  இந்தியா டுடே யில் பெருமாள் முருகன் பிரச்சினையை ஒட்டி கருத்துச் சுதந்திரம் குறித்துக் கருத்துச் சொல்லியிருக்கிறார் அசோகமித்ரன், ‘நீ போன தகராறு ஆயிடும். நான் போயி அவன செருப்பால அடிச்சுட்டு வரேன்’ ன்னு ஒருத்தர் சொன்னா எப்படி இருக்கும்? அது மாதிரி இருக்கு அவருடைய கருத்து.
பெருமாள் முருகன் கதையைப் பேசச் சொன்னால், அவரு தன் கதையைப் பேசுறாரு.
‘தென்னாட்டில் சிவவாக்கியர் காலத்திலிருந்தே சிறுபான்மை சமூகம் எப்படியெல்லாம் இழிவுப்படுத்தப்படுகிறது. அந்தச் சமூகத்தினர் அதைத் தலைவிதியாக நினைத்துதான் செயல்படுகிறார்கள்’ என்று வேதனைப் படுகிறார்.

திடீர் தடை? வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனும், வாட்ஸ் அப் அப்ளிகேஷனும் வெவ்வேறு.....

புதுடெல்லி: ஆப்ஸ் ( app's)  சேவைகளுக்கான விதிமுறைகளை மீறியதாக வாட்ஸ் அப் பயனாளிகள் பலருக்கு திடீரென 24 மணி நேர தடை விதிக்கப்பட்டதால் அவர்களிடையே குழப்பமும், பரபரப்பும் நிலவியது.
வாட்ஸ் அப் போன்றே வாட்ஸ் அப் பிளஸ் ( WhatsApp+) என்ற அப்ளிகேஷனை ஆன்ட்ராய்ட் ரக போன் வைத்திருப்பவர்கள் சிலர் பயன்படுத்தி தங்களது நண்பர்கள் மற்றும் உறவு வட்டாரங்களுக்கு தகவல், புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றை அனுப்பி பகிர்ந்துகொண்டுள்ளனர். ஆனால் இவர்களில் பலர் வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனும், வாட்ஸ் அப் அப்ளிகேஷனும் வெவ்வேறு என்ற விவரம் தெரியவில்லை.

ஏர் ஏசியா விமானத்தின் எச்சரிக்கை அலாரம் ஒலி கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ளது

விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம் ஜாவா கடலில் விழுவதற்கு முன் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ளது. இந்தோனேசியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கடந்த மாதம் 28–ம் தேதி 162 பயணிகளுடன் ஜாவா கடல் பகுதியில் உள்ள பங்காலன் பன் என்ற இடத்தில் விழுந்தது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கடலுக்குள் கிடந்த விமானத்தின் கருப்பு பெட்டி சமீபத்தில் மீட்கப்பட்டது. அதில் உள்ள பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், கருப்பு பெட்டியில் இரைச்சலுடன் பல அலாரங்கள் பதிவாகியிருப்பதாகவும், அதில் ஒன்று விமானம் கட்டுப்பாட்டை இழந்து செல்வதை குறிக்கும் வகையில் இருப்பதாகவும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்த எச்சரிக்கை அலாரத்தில், பைலட்டும் துணை பைலட்டும் விமானத்தை நிலைப்படுத்தி விபத்தை தவிர்க்க கடுமையாக முயற்சி செய்வது கேட்பதாகவும், இரைச்சல் காரணமாக அவர்கள் பேசுவது சரியாக பதிவாகவில்லை என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார். விமானம் கடலில் விழுவதற்கு முன், மோசமான வானிலை காரணமாக வழக்கத்திற்கு மாறான உயரத்தில் பறந்ததாக இந்தோனேசிய போக்குவரத்து துறை மந்திரி கூறியதையடுத்து இந்த தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. maalaimalar.com

சுனந்தா உயிரைகாக்க போராடினாரா? சுனந்தா கொலை வழக்கு கிடைக்கும் 'திடுக்' தகவல்கள்!

டெல்லி: சுனந்தா கொலையை மூடி மறைக்க முயற்சி நடந்துள்ளதை இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு குழு கண்டுபிடித்துள்ளது. சுனந்தா இறந்த பிறகு அவரது அறையில் இருந்த அவருடைய பொருட்கள் சில மாயமாகியுள்ளன. யாரோ சாட்சியங்களை அழிக்க முயற்சி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுனந்தாவின் காலணிகள், உடைகள் ஆகியவை மாயமாகியுள்ளன. ஒருவர் மர்மமான முறையில் இறந்த இடத்தில் வழக்கமாக இது போன்று நடக்காது என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  மூடி மறைக்க முயற்சி: இது கொலை தான் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அவர் தற்கொலை செய்திருந்தால் அவரது அறையில் இருந்த பொருட்களை ஏன் அகற்றியிருக்க வேண்டும் என்று அந்த விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். சுனந்தா இறந்து அது வெளியே தெரியும் முன்பு அவரது அறைக்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அறையில் கண்ணாடி உடைந்து கிடந்துள்ளது, அவரது உடைகள், காலணி ஆகியவை மாயமாகியுள்ளது. கண்ணாடி உடைந்து கிடந்ததை பார்க்கையில் அறையில் சண்டை நடந்திருக்கலாம் அல்லது கொலையை மறைக்க முயல்கையில் கண்ணாடி உடைந்திருக்கலாம் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். சுனந்தா தனது உயிரை காக்க போராடியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ராமஜெயம் சயனைட் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் ! விஷம் கொடுத்த பின்புதான் தாக்கப்பட்டார்?

ராமஜெயம் கொலை வழக்கு... திகில் ஃப்ளாஷ்பேக்! (மினி தொடர்-2)இறந்தும் ராமஜெயத்தைத் துரத்திய வழக்குகள்! ராமஜெயம் கொலை செய்யப்படுவதற்கு முன்பு வரை ராமஜெயத்தின் தில்லை நகர் அலுவலகத்தில் எப்போதும் ஜெஜெயென மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கட்சிக்காரர்களுக்கு பிரச்னை என்றால்,  அடுத்த நிமிடம் போன் பறக்கும். உடனுக்குடன் சரிசெய்வார். வருடா வருடம் பள்ளி அட்மிஷன் நேரங்களில், இவரது தில்லை நகர் ஆபீஸுக்கு  தங்கள் குழந்தைகளுக்கு பிரபல பள்ளிகளில் சீட் வேண்டும் என கியூவில் நிற்பார்கள். தங்கள் ஊர்களில் கோயில் கட்ட பணம் வேண்டும் என பலர் வரிசையில் நிற்பார்கள். அவற்றையெல்ல்லாம் சட்டென முடிக்கும் ராமஜெயத்தின் பாணியே வித்தியாசமானது.; இது ராமஜெயத்தின் ஒரு முகம். அவருக்கு மற்றொரு முகமும் உண்டு. வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு என பேசும் கோபக்காரர். திருச்சி ஏரியாவில் சர்ச்சைக்குரிய நிலங்கள் விற்பனைக்கு வந்தால், அதில் அங்கு அரங்கேறும்  பிசினஸ் பிரச்னை, நிலம் கொடுக்கல் வாங்கல் என அனைத்திலும் ராமஜெயம் பெயர் அடிப்படாமல் இருக்காது. இதையெல்லாம் வைத்துதான் ஒரு கட்டத்தில், திருச்சியையே இவர் வளைத்துப் போட்டுவிட்டதாகவே சாதாரணமானவர்களைக்கூட பேச வைத்தது.

டெல்லி சட்டசபை தேர்தல்: கவர்ச்சி புயல்களின் பின்னால் சென்ற பாஜக!

புதுடெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.டெல்லியில் 2013 டிசம்பரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுடன் இணைந்து அமைந்த ஆட்சி 49 நாட்களில் முடிவுக்கு வந்தது. கெஜ்ரிவால் பதவி விலகியதை அடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. வருகிற பிப்ரவரி 7ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை தவற விட்ட ஆட்சியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வழக்கம் போல் தனது ஸ்டைலில் தெருவில் இறங்கி மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறது. பெரும்பான்மை பெற ஓரிரு இடங்களை தவற விட்ட பாஜ இம்முறை நட்சத்திர வேட்பாளர்களையும், அமைச்சர்களையும், எம்பிக்களையும் களமிறக்கி சூறாவளி பிரசாரம் செய்து வருகிறது.

கிரண் Bedi நழுவி விட்டார்? கெஜ்ரிவாலின் நேருக்கு நேர் சவாலை ஏற்க பாஜக தயக்கம்?

அடுத்த மாதம் 7ல், நடைபெற உள்ள டில்லி சட்டசபைத் தேர்தலில், பா.ஜ., முதல்வர் வேட்பாளராக, நாட்டின் முதல் பெண், ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடி, 65, அறிவிக்கப்பட்டு உள்ளார். ஆட்சியை மீண்டும் கைப்பற்றி விடலாம் என எண்ணிய, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, 46, இதனால், மிகுந்த பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. 'இரும்பு மனுஷிக்கும், ஓடிப்போன நபருக்கும் இடையிலான போட்டி இது' என, பா.ஜ., வர்ணனை செய்துள்ளதை அடுத்து, தேர்தல் பிரசாரம் கடும் சூட்டையும் கிளப்பியுள்ளது.சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயின், 'ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பில் முக்கிய பங்காற்றியவர்கள் தான், கிரண் பேடியும், கெஜ்ரிவாலும். இப்போது, இருவரும், அரசியலில் நேருக்கு நேர் எதிரிகளாக மாறியுள்ளனர்.
இருவருக்கும் இடையே, நேற்று நடைபெற்ற அறிக்கை விவாதம்:

கெஜ்ரிவால்: பொது மேடையில், என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா? ஜாதி, மதத்தை பார்த்து தான் மக்கள், ஓட்டளிக்கின்றனர். முக்கிய விவகாரங்கள் பற்றி, அவர்கள் யோசிப்பதில்லை. வாருங்கள், 12 மணி நேரம் வேண்டுமானாலும் விவாதம் நடத்தலாம்.

கிரண் பேடி: நான், தெரு விவாதத்திற்கு தயாரில்லை; வேண்டுமென்றால், சட்டசபையில் சந்திப்போம். நேற்று வரை நேர்மை சிங்கம் வேஷம் போட்ட கிரண் பேடி  எப்படியாவது குறுக்கு வழியில்  முதல்வராகலாம் என்று நினைப்பது கேவலம் 

செவ்வாய், 20 ஜனவரி, 2015

ஓட்டுக்கு 2,000 ரூபாயாம்...களைகட்டும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்!

இடைத்தேர்தல் என்றாலே குவார்ட்டர் பாட்டில், பிரியாணி மற்றும் தாராள கரன்சி சப்ளை என தொகுதி முழுவதும் அமர்க்களப்படும். தற்போது ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைய தொடங்கிவிட்ட நிலையில், இந்த தேர்தலிலும் ஓட்டு ஒன்றுக்கு 2,000 வரை கொடுத்து வாக்குகளை அள்ள முக்கிய கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அதிமுக பொதுச் செயலாளரான ஜெயலலிதா. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் முதல்வர் பதவியோடு சேர்த்து, எம்எல்ஏ பதவியையும் இழந்துவிட்டார். இத்தொகுதிக்கு அடுத்த மாதம் 13 ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் எஸ்.வளர்மதி. திருச்சி மாவட்ட அதிமுக இணை செயலாளரான வளர்மதி, திருச்சி மாநகராட்சி  58 ஆவது வார்டு உறுப்பினராகவும் உள்ளார். திக் திக்  அள்ளணும்  அள்ளணும்  மொத்தமாக அள்ளணும்  கொஞ்சம் குறைஞ்சாலும்  ஹீல்ஸ் செருப்பால அடிவாங்கணுமோ? ஏற்கனவே  வாங்கினவிங்கதானே?

சீனாவின் அதிர்ச்சி ? அருணாச்சல் பிரதேஷ் இந்தியாவின் ஒரு பகுதியாமே?

அருணாசலப் பிரதேச மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி என்று ஜப்பான் கூறியதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்த ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிடா, இந்திய வடகிழக்கு மாநிலங்களில் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஜப்பான் தயாராக இருப்பதாகவும், ஆனால், அருணாச்சலப் பிரதேசத்தில் மட்டும் முதலீடு செய்ய முடியாது என்றும் கூறியது.
மேலும், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாகவே ஜப்பான் பார்க்கிறது. எனினும், அப்பகுதியில் முதலீடு செய்யும் திட்டம் இல்லை என்று கூறியிருந்தார்.

மதிமாறன் : அடுத்து திமுக ஆட்சி அமைக்கும்!

10917827_591455767654529_8815641090252831910_nதிட்டு வரும் கண்ட னங்கள் வரும்.. விருது வந்திருக்கிறது  ‘எழுத்துப் போராளிக்கு பெரியார் விருது!’ என்று தலைப்பிட்டு ‘விடுதலை’ என்னை கவுரவித்திருக்கிறது. நன்றி :ஆசிரியருக்கும் – கவிஞருக்கும்.
தொடர்ந்து எழுத்தாளர் வே. மதிமாறனுக்கு, தமிழர் தலைவர் பெரியார் விருது வழங்கி சிறப்பித்தார். முன்னதாக அவரைப்பற்றிய ஒளிப்படக் காட்சி திரையிடப்பட்டது.
தொடர்ந்து வே. மதிமாறன் ஏற்புரையாற்றினார். அவர் தனது உரையில், தான் எழுத்தாளர் ஆவதற்கு முக்கியக் காரணம் பேராசிரியர் சுப. வீரபாண்டியன்தான் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பிறகு, பெரியார் மாதிரி பேசினால் திட்டு வரும். கண்ட னங்கள் வரும். இப்பொழுதுதான் விருது வந்திருக்கிறது என்று பலத்த கைதட்டல்களுக்கிடையில் கூறிவிட்டு, பெரியாரை எதிர்க்கின்றவர்களை நன்றாக விமரிசனம் செய்.உனக்குப் பின்னால் நாங்கள் இருக்கின்றோம் என்று கூறுவதாகத்தான் இந்த விருதை எனக்கு அளித்ததாக தான் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு,

பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் கைதி வெட்டி படுகொலை ! பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்திற்குள் !

கடந்த 2010ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வரதன் என்பவரை, வேலூர் சிறையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணி அளவில் பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர்.அப்போது, பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மறைந்திருந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். பட்டப்பகலில் நீதிமன்றத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கொலை சம்பவம் நடந்த பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்ற பகுதியை அம்பத்தூர் துணை காவல்துறை ஆணையர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.படுகொலை செய்யப்பட்ட வரதன் மீது இரண்டு கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி வழக்கும் இருந்துள்ளது. வரதன் நெசப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர். இந்த கொலை சம்பவம் பழிவாங்கும் செயலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இரண்டு பேர் என்றும், தப்பியோடிய அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.nakkheeran.in

Chennai சுரங்கம் தோண்டும் பணியால் பூமிக்குள் இறங்கிய வீடு!



சென்னை,ஜன.19 (டி.என்.எஸ்) மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை தோண்டும் பணியால், சென்னையில் இரண்டு அடுக்கு வீடு ஒன்றை பூமியில் இறங்கிய சம்பவம் பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை தோண்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. திருமங்கலம் ஷெனாய் நகர் இடையே 5 கிலோ மீட்டர் தூர சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் தண்டவாளம் அமைக்கும்பணி நடந்து வருகிறது. அவசரகால வழி அமைத்தல் மின்சார உபகரணங்கள் பொருத்துதல் போன்ற வேலைகள் நேற்று இரவு நடந்தது. ஏராளமான மெட்ரோ ரயில் ஊழியர்கள் இதில் ஈடுபட்டிருந்தனர். இரவு 11.30 மணியளவில் ஷெனாய்நகர் பில்லா அவென்யூ சாலையும், 8–வது குறுக்கு தெருவும் சந்திக்கும் இடத்தில் உள்ள ஒரு கட்டிடம் திடீர் என்று 2 அடி மண்ணுக்குள் இறங்கியது. இதனால் அருகில் உள்ள வீடுகளும் அதிர்ந்தன.

டெல்லி மாநில BJP முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி:


டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முதல் அமைச்சர் வேட்பாளராக கிரண்பேடி போட்டியிடுவார் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார். கிருஷ்ணா நகர் தொகுதியில் கிரண் பேடி போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும், டெல்லி சட்டமன்றத் தேர்தலை பாஜக கிரண்பேடி தலைமையில் சந்திக்கும். டெல்லியில் நடந்த பாஜக தேர்தல் குழு கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதில் டெல்லி பாஜக தலைவர்களிடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. நடைபெற உள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., முதல்வர் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி என தெரிவித்தார்.nakkheeran.in

ஸ்டாலின்: சகல ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் ஜெயாவை விடுவிக்க பாஜக முயல்கிறது?

ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்ததற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ஜனநாயக நாட்டின் சரித்திரத்தில் முதல் முறையாக மத்திய நிதியமைச்சர் ஒருவர் ஊழல வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்றவரின் வீட்டிற்கே சென்று அவரை சந்தித்திருக்கிறார். இதை அவமானம் என்று அழைப்பது நடந்த நிகழ்வை மிகச் சாராரணமாக எடுத்துக்கொள்வது போலாகும். ஆனால், இதன்பிறகும் பாஜக தலைமை தாங்கும் மத்திய அரசுக்கு ஏதாவது நேர்மை மிச்சமிருக்கிறதா? ஆட்சிக்கு வந்தால் தூய்மையான, ஊழலற்ற அரசைக் கொடுப்போம் என்று தேர்தல் நேரத்தில் இந்திய மக்களுக்கு பாஜகவினர் வாக்குறுதி கொடுத்தார்களே? அது இப்படி செயல்படுவதற்குத்தானா? இனி அடுத்தது என்ன செய்யப் போகிறார்கள்? கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஊழல் வழக்கு மேல்முறையீட்டிலிருந்து ஜெயலலிதாவை விடுவிக்க ஒட்டுமொத்த மத்திய அரசும் செயல்படப்போகிறதா? இந்தக் கேள்விகளுக்கான பதில் தான் இப்போது தேவை. இவ்வாறு கூறியுள்ளார் nakkheeran.in

திங்கள், 19 ஜனவரி, 2015

"ஐ" திருநங்கைகளை கேவலமாக சித்தரித்த டைரக்டர் ஷங்கர்! திருநங்கைகள் ஆவேசம்! கமிஷனர் அலுவலகம் முன்பாக முற்றுகை !


சென்னை: ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'ஐ' படம் பொங்கலன்று வெளியானது. இந்த படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதத்தில் காட்சிகள்  அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதை நீக்கும்படியும் திருநங்கைகள் கோரிக்கை விடுத்திருந்தனர். காட்சிகளை நீக்காமல் தொடர்ந்து படம் வெளியாகி ஓடுவதால் இன்று  காலை திரைப்பட தணிக்கைதுறை (சென்சார் போர்டு) அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர். இதையொட்டி சென்னை சாஸ்திரி பவன்  அலுவலகத்தில் உள்ள சென்சார் அலுவலகம் அருகே காலை முதலே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். காலையில் அங்கு திருநங்கைகள் வந்தனர். 'ஐ'  படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் காட்சிகளை நீக்கும்படி கோஷமிட்டனர். பின்னர் கமிஷனர் அலுவலகம் புறப்பட்டு சென்றனர். கமிஷனர் அலுவலகத்தில்  15க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் தோழி அமைப்பினர் கூட்டாக கமிஷனரிடம் கடிதம் ஒன்றை அளித்தனர்.

EVKS இளங்கோவன்:ஜெயலலிதா அருண் ஜெட்லியை சந்தித்தது வெட்ககேடானது! நீதியை கேலியாக்கும் கள்ள உறவு .....

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. ஊழல் வழக்கில் 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு முதலமைச்சர் பதவியிழந்து விடுதலையாகியுள்ள ஜெயலலிதாவை அருண் ஜெட்லி சந்தித்ததன் மூலம் அரசியல் தார்மீக நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்திருக்கிறார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவரை நிதியமைச்சர் பொறுப்பிலே இருக்கிற ஒருவர் சந்திக்கலாமா? இதன் மூலம் ஊழல் எதிர்ப்பு வேடம் போட்ட பா.ஜ.க.வின் முகமூடி கிழிந்திருக்கிறது.கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்த ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் 37 இடங்களில் வெற்றி பெறச்செய்தனர். இத்தகைய தீர்ப்பை பெற்ற ஜெயலலிதா சமீபகாலமாக மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்கள் எழுப்புவதை தவிர்த்து வருவதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் பதவியில் இருந்து பிரகாஷ் காரத் அதிரடி நீக்கம்?

ஹைதராபாத்: லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து தோல்வியைத் தழுவி வரும் நிலையில் அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலர் பிரகாஷ்காரத் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்படக் கூடும் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக பிரகாஷ்காரத் இருந்து வருகிறார். அவர் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வரும் தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியை தழுவி வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அசைக்க முடியாத ஆளும் கட்சியாக இருந்தது. தற்போது அந்த கட்சி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசிடம் தோற்று எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டு விட்டது. கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் பல தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பறி கொடுத்தது. இந்த தொடர் தோல்வி பிரகாஷ்காரத் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் அகில இந்திய ரசிகர் பிரகாஷ் கரத் போனாலும் தமிழக ரசிகர் பாண்டியன் இருப்பாரே? 

ஊழல் குற்றவாளியை மத்திய நிதியமைச்சர் வீடு தேடிப் போய்ச் சந்தித்தது... ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: ஜனநாயக நாட்டின் சரித்திரத்தில் முதல் முறையாக மத்திய நிதி அமைச்சர் ஒருவர் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்றவரின் வீட்டிற்கே சென்று அவரைச் சந்தித்துள்ளார். இதை அவமானம் என்று அழைப்பது நடந்த நிகழ்வை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்வது போலாகும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.  ஜெயலலிதாவை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவரது போயஸ் தோட்ட வீட்டுக்குப் போய் சந்தித்துப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி கடும் விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ள கருத்து: ஜனநாயக நாட்டின் சரித்திரத்தில் முதல் முறையாக மத்திய நிதி அமைச்சர் ஒருவர் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்றவரின் வீட்டிற்கே சென்று அவரைச் சந்தித்துள்ளார்.

டெல்லியில் இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீராவும், சுஷ்மா சுவராஜும் ஆலோசனை.


புதுடெல்லி,
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பாக, டெல்லியில் நேற்று இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீராவும், சுஷ்மா சுவராஜும் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்தியாவுடன் நல்லுறவு இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே பெரும் தோல்வியை சந்தித்தார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட்ட சிறிசேனா வெற்றி பெற்றார். அங்கு அவரது தலைமையில் புதிய அரசு பதவி ஏற்று உள்ளது.
அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது ஆகும். எனவே பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொண்டு, இந்தியாவுடனான உறவை பலப்படுத்துவதில், சிறிசேனா அரசு அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக அதிபர் சிறிசேனா விரைவில் இந்தியா வர இருக்கிறார்.

திபெத் அகதிகளுக்கு குடியுரிமை!

புதுடில்லி:இந்தியாவில் வாழும் திபெத் அகதிகள், வரும் டில்லி சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க வசதியாக, வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என, தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. வாக்காளர் அடையாள அட்டை பெறுவதன் மூலம் திபெத் அகதிகள், இந்திய குடியுரிமை பெறுவார்கள். ஆனால், இதற்கு திபெத் அகதிகள் இடையே பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, திபெத் அகதிகள் குழுவின் தேசிய அமைப்பாளர் என்.கே. திரிக்கா
''சீன ஆக்கிரமிப்பில் இருந்து திபெத் விடுதலையாகும் நாளுக்காக, அகதிகளாக இங்கு வாழ்கிறோம். இந்திய குடியுரிமை பெற்றால், இந்த அடிப்படை நோக்கமே பாழாகிவிடும்'' என்றார்.

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

ஸ்ரீரங்கம் ! கட்சிகளுக்கு 91 வகையான கட்டுப்பாடுகள் ! 144 போட்டு ஜெயிச்சவிங்க 91 போட்டு ஜெயிக்க மாட்டாகளா?

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. தேர்தலையொட்டி அமைச்சர்கள், அரசியல் கட்சிகளுக்கான 91 வகை கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களுக்கான 84 சின்னங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் நாளை (19-ம் தேதி) தொடங்குகிறது. 27-ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால், ஸ்ரீரங்கம் நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதியாக கருதப்படுகிறது. இதனால், தேர்தல் நடைமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. திமுக, அதிமுக மட்டுமே இதுவரை வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதிமுக சார்பில் திருச்சி மாநகராட்சி கவுன்சிலராக இருந்த எஸ்.வளர்மதி, திமுக சார்பில் என்.ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்து’ என்.ராம்: படைப்பாற்றல் சுதந்திரம், கருத்துரிமை ஆகியவற்றை காத்துக்கொள்ள போராடவேண்டும்

படைப்பாற்றல் சுதந்திரம், கருத்துரிமை ஆகியவற்றை காத்துக்கொள்ள படைப்பாளிகள் தீரத்துடன் போராடவேண்டும் என்று ‘இந்து’ என்.ராம் கூறினார். ‘லிட் ஃபார் லைஃப்’ என்ற பெயரில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் நடத்தும் இலக்கிய விழா சென்னையில் நேற்று தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, ‘அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கருத்துரிமை’ என்ற தலைப்பில் குழு விவாதம் நடந்தது. அதில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:
‘இந்து’ என்.ராம்:
அமைதி ஒப்பந்தத்தில் பெருமாள்முருகன் கையெழுத்து போட்டதாலேயே அவரது எழுத்து இறந்துவிட்டதாக அர்த்தமல்ல. அரசியலமைப்புச் சட்ட வரையறைக்கு உட்பட்டு படைப்பாற்றல் சுதந்திரம், கருத்துரிமையைக் காத்துக்கொள்ள நாம் உறுதியான முடிவுகளை எடுக்கவேண்டும்.
இந்தியாவில் கருத்துரிமை தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகிவருகிறது.

லீலா சாம்சன் ராஜினாமா! Messenger of God தடையை ரத்து செய்தது தவறு?

மத்திய திரைப்பட தணிக்கைக்குழு வாரியத்தின் தலைவராக இருந்த லீலா சாம்சனின் ராஜினாமா ஏற்கப்பட்டது. புதிய வாரியம் விரைவில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ‘மெசேஞ்சர் ஆப் காட்’ (கடவுளின் தூதர்) என்ற படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கைக்குழு வாரியம் அனுமதி மறுத்தது. ஆனால், திரைப்பட தணிக்கைக்குழு தீர்ப்பாயம் ஒப்புதல் வழங்கியது. இதில் அதிருப்தி அடைந்த தணிக்கைக்குழு வாரியத்தின் தலைவர் லீலா சாம்சன் நேற்று முன்தினம் பதவி விலகினார். தணிக்கைக்குழு வாரியத்தில் தலையீடுகள் வந்ததாகவும், நிதி ஒதுக்கப்படாததால் 9 மாதங்களாக உறுப்பினர்கள் சந்திப்பு நடைபெறாததாகவும் அவர் குற்றம் சாட்டினார். அவரைத் தொடர்ந்து 12 உறுப்பினர்களும் பதவி விலகி உள்ளனர்.

மேனகா காந்தி : ஜல்லிகட்டை தொடர்ந்து பாஜக எதிர்க்கும்! இறைச்சிக்கு மாடுகளை பாஜக தொடர்ந்து வரவேற்கும்?

அப்படி பா ஜ க சொல்வது உண்மையானால் பா ஜ கவின் அடிப்படை கொள்கையே தவறானதுதானே? மதம் சார்ந்த தீவிரவாதம் எந்த வகையை சேர்த்தி? இந்தியாவில் பா ஜ க அதனை செய்வது ஐ எஸ் ஐ எஸ் போன்ற அமைப்பினை விட சற்று குறைவானதே என்றாலும் அதற்கு நிகரகாதானே இருக்கின்றது. அதனால் பா ஜ கவையே தடை செய்திடலாமோ? இவர்கள் ஆளும் குஜராத் மாநிலம்தான் நம்பர் ஒன்..எதில்? பசுக்களை கொன்று மேலை நாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதில்? இவர்கள் பசுக்கள் மேல் அக்கறை கொள்பவர்கலாமே? இந்த லட்சணத்தில் உள்ளபோது..மாடுகளை யார் இங்கே சித்திரவதை செய்கின்றார்கள். இது காலம் தோறும் நடைமுறையில் உள்ள ஓர் தனிப்பட்ட இனத்தின் கலாச்சாரம்..ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுவரும் கலாச்சாரம். மேலை நாடுகளில் உள்ளது போல மாட்டின் மீது அம்பை எய்து கொடுமை படுத்துவது போன்றல்ல..இது இளைஞர்களுக்கு ஓர் சவாலான வீரவிளையாட்டு. எல்லையில் கூடத்தான் பாகிஸ்தான் நமது வீரர்களை சுட்டுகொல்கின்றது..தலையை தனியே எடுத்து சென்று பந்து போன்று விளையாடுகின்றது..அதனால் எல்லையில் வீரர்களை திரும்ப பெற்றுகொல்வோமா? உங்களுக்குத்தான் வாயில்லா ஜீவன்கள் மேலே அவ்வளவு பற்று உள்ளதே..அப்புறம் ஏன் இந்த வீரர்கள்? அவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் உள்ளதுதானே? எல்லையோரம் எல்லாம் வெள்ளை கொடியை நட்டுவைத்துவிட்டு உயிர் பலியாவதை தடுக்கலாமே? மேனகா ஏன் இந்திரா காந்தி அவர்களால் ஒதுக்கப்பட்டார் என்பது புரிகின்றது. இந்த ப்ளூ கிராஸ் உறுப்பினர்களின் தொல்லை தாங்கமுடியலையே..வீம்புக்கு பேசுவது இதுதான்..எவராவது மாடுகளை கொல்வார்களே என்றாலோ..அல்லது மாட்டிறைச்சி விற்பதை செய்தாலோ..அவர்களுக்கு இந்த மேனகா என்ன சொல்லப்போகிறார்? பா ஜ கவின் ஒவ்வோர் புள்ளிகளும் சும்மா புகுந்து விளையாடுகின்றார்கள்..ஷ்யூர் அடுத்த ஆட்சி பா ஜ கவசம் கிடையவே கிடையாது..குறைந்த பட்சம் எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தை கூட இழக்க நேரிடும்..அதற்க்கான அத்தாட்சிதான் மேனகாவின் அதிபுத்திசாலித்தன வியாக்கியானம்.  இவர் தான் நதிநீர் இணைப்பை எதிர்த்தவர். இவர் தமிழ்நாட்டு விவசாயிகளின் எதிரி
சேகர் சேகரன்
தினமலர்.com

ஜெயலலிதா Flashback :என்னை அரசியலில் இருந்து ஒழித்துகட்ட எம்ஜியார் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்கிறார்!

1.1.1989 ‘மக்கள் குரல்’ இதழில், ஜெயலலிதாவைப் பற்றி, எம்.ஜி.ஆர். கூறும்போது, “அம்முவின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. எதையோ நினைத்து அம்முவை அரசியலில் ஈடுபடுத்தினேன். பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காய் முடிந்துவிட்டது. சூதும், வாதும், வஞ்சகமும், சூழ்ச்சியும் கற்ற இந்த அம்மு எனக்கே உலை வைக்கிறாள். 

எம்.ஜி.ஆருக்கு தற்போது புகழ் மாலை சூடும் ஜெயலலிதா, அவர் உயிரோடு இருந்தபோது, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு சேலம் கண்ணன் மூலமாக ஒரு கடிதம் அனுப்பியது தமிழ்நாட்டு மக்களுக்கு மறந்து விட்டதா என்ன? ஜெயலலிதா அப்போது தன் கைப்பட எழுதிய அந்தக் கடிதம் “மக்கள் குரல்” ஏட்டிலேயே அப்போது “பிளாக்” செய்து வெளியிடப்பட் டிருந்ததே?

அதாவது, “மிகுந்த செல்வாக்குடன் நான் (ஜெயலலிதா) பிரபலம் அடைந்திருப்பதை பார்த்து முதலமைச்சர் (எம்.ஜி.ஆர்) மிகவும் பொறாமைப் படுகிறார்.
இதுதான் இங்கு நடைபெறும் ஒவ்வொரு செயலுக்கும் மூலகாரணம். நான் மிகவும் பிரபலம் அடைந்துள்ளதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
எனவே, அரசியலில் இருந்தும், பொதுவாழ்வில் இருந்தும் என்னை ஒழித்துக் கட்ட தன்னால் முடிந்ததையெல்லாம் அவர் (எம்.ஜி.ஆர்) செய்து வருகிறார்” என்று எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதினார்.

அது மாத்திரமல்ல; அதே கடிதத்தில், (எனக்கு உரிய முக்கியத்துவம் தர விரும்பாத எம்.ஜி.ஆர்., என்னை அமைச்சரவையில் சேர்க்கவும் விரும்பவில்லை. அவரை எதிர்க்க இங்கு யாருக்கும் தைரியமில்லை. ஏனென்றால் அவரில்லாவிட்டால் மற்றவர்கள் எல்லாம் பூஜ்யங்கள்) என்றெல்லாம் எழுதியவர், இன்றைக்கு தானே முன் வந்து சென்னை விமான நிலையத்திற்கு அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டுமென்று கேட்க முன் வந்திருப்பது கண்டு, பாசத்தாலா அல்லது பதவி ஆசையினாலா எனத் தமிழ் மக்கள் சந்தேகிப்பது இயல்பானதுதானே?  http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=136251

தொழிற்சாலைகள் தமிழகத்தை விட்டு ஓடுவது ஏன்? கலைஞர் அறிக்கை!

கேள்வி :- ஜல்லிக்கட்டுப் போட்டியை இந்த ஆண்டு நடத்த நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுத் தர அ.தி.மு.க. அரசு தவறி விட்டதே?

கலைஞர் :- அ.தி.மு.க. அரசு எல்லாவற்றையும் போல, இந்தப் பிரச்சினையிலும் முன்கூட்டியே முயற்சி எடுத்து உச்ச நீதிமன்றத் தில் முறையான அனுமதியைப் பெற்றுத் தரத் தவறி விட்டது. மக்களை ஏமாற்றுவதற்காக முயற்சி எடுப்பது போல, பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம், அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறோம், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறோம் என்று நொண்டிச் சமாதானங்களைச் சொல்லி, அறிக்கைகள் விட்ட போதிலும், அ.தி.மு.க. அரசு தமிழ் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற உண்மையான நோக்கத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே உண்மை. ஜல்லிக்கட்டுக்குப் பெயர் பெற்ற பகுதியிலிருந்து வந்திருக்கும் பன்னீர் செல்வமே, அந்த மக்களின் நியாயமான எதிர்பார்ப்பை நிறைவேற்றிடத் தவறி விட்டார்.

;கேள்வி :- தொழிற்சாலைகளை மூடுவதில் தமிழகம்தான் முன்னிலை வகிப்பதாக ஒரு செய்தி வந்துள்ளதே?