: ·
சீமானின் பேச்சை நான் இரண்டு தளங்களில் முழுமையாக பார்த்திருக்கிறேன். ..
அவரின் உடல் மொழி சிலவற்றை சொல்லும். மேடைப்பேச்சு. அது ஒரு அருவியாக ஓடும். ஒரு தன்னம்பிக்கை வார்த்தை சொல்லுவார்கள்,..... 1.உரையாடலுக்கான உரையை கேட்பவர் எல்லாம் அறிவாளிகள் என நினைத்து உருவாக்கு,
2..பேசும் போது முன்னால் இருப்பவர்கள் எல்லாரும் முட்டாள்கள் என நினைத்து பேசு என்பார்கள். ..
சீமான் முதல் விசயத்தை செய்கிறாரோ இல்லையே இரண்டாம் விசயத்தை நிச்சயம் செய்வார்.
பிரபாகரன் இடத்தில் மட்டும் சீமான் இருந்திருந்தால் என்றால் கைதட்டுவார்கள்.....நா அப்ப ஒல்லியா கருப்பா இருப்பேன். என்னைய பெரிய பயில்வான்கள் கூட மோதுவிடுவானுக என மான்கராத்தே கதையை ரீமேக் செய்து சொன்னாலும் கைதட்டுவார்கள்....சிவாஜியப்பா நடித்த முடித்ததும் இவர் முகம் பார்த்து ஒகே என்றவுடன் தான் அவருக்கு திருப்தி என்றாலும் கைதட்டுவார்கள்.....அது சரி... அண்ணனுக்கு ஏற்ற தம்பிகள்.

தேர்வுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார்.
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற இருக்கும் நேரத்தில், இந்த வாரத்தில் மட்டும் தமிழகத்தில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஏற்கனவே இதே காரணத்தால் மதுரையை சேர்ந்த ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி இன்று காலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கடந்த
வாரம் அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகிவந்த மாணவர் ஒருவர்
கிணற்றில் குதித்துத் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்தது.











tamil.indianexpress.com :தமிழகத்தில் முதல் முறையாக முழுவதும் திருநங்கைகளால் நடத்தப்படும்
‘கோவை டிரான்ஸ் கிட்சன்’ என்ற உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை
பொதுமக்கள் வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் முதன்முறையாக கோவை, ஆர்.எஸ்.புரத்தில் திருநங்கைகள்
ஒன்றிணந்து ‘கோவை டிரான்ஸ் கிச்சன்’ என்ற உணவகத்தை தொடங்கியுள்ளனர். இது
தமிழகத்தில் திருநங்கைகளால் தொடங்கப்பட்ட முதல் உணவகம் என்று
கருதப்படுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் இடம் பேசிய கோயம்புத்தூர் மாவட்ட திருநங்கைகள்
சங்கத் தலைவர் சங்கீதா, கோவிட் -19 காரணமாக அவர்களது சமூக உறுப்பினர்கள்
பலரும் வேலைகளை இழந்துவிட்டதாகவும், இது அவர்களுக்கு சொந்தமாக ஒரு தொழிலைத்
தொடங்க வேண்டிய சூழலுக்கு தள்ளியது என்று கூறினார்.







இலங்கையில் பசுவதை தடைச் சட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானம் எட்ட இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இந்து அமைப்புக்கள் பாராட்டுக்களை தெரிவித்தாலும், முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
மாடறுப்பு செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தின் போது இந்த யோசனை நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டது. 





.dailythanthi.com
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரின்
கணவரை நிதி மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். 






dinamani.com :தமிழகத்தில் செப்டம்பா் 7 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், வெளிமாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளை இயக்க உள்ள ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவுரைகளை வழங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல்
மாவட்டத்துக்குள் மட்டுமே பஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து
மாவட்டங்களுக்கு இடையே பஸ் சேவை இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள்
கோரிக்கை விடுத்ததை அடுத்து தமிழகத்தில் செப்டம்பா் 7 ஆம் தேதி முதல்
முதல் கட்டமாக 524 அரசு விரைவு போக்குவரத்து மாவட்டங்களுக்கு இடையே இயக்க
அரசு அனுமதி அளித்துள்ளது.
