ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

15 கொலைகளை ஒப்புக்கொண்ட SF ராஜு – இலங்கை கரந்தெனியா வாக்குமூலம்

 ilakkiyainfo.com  : பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘கரந்தெனிய சுத்தா’வின் சகோதரரான ‘SF ராஜு’ என அழைக்கப்படும் சோபனஹந்தி சனத் டி சில்வா என்பவரது வீட்டுத் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இன்று (25) காலை மீட்கப்பட்டுள்ளன.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இவர், 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார். இன்று காலை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 15 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

"மே 4-ல் விஜய் அவுஸ்திரேலியா பயணம்! கிரேட் எஸ்கேப் ? தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் ஏன் வெளிநாட்டு பயணம்

 Dailyhunt : "மே 4-ல் ஒரு மெகா ட்விஸ்ட். ஆஸ்திரேலியா டிக்கெட் கன்பார்ம்.. விஜய்யின் மாஸ்டர் பிளான் இதுதான். அதிர்ச்சியில் அரசியல் களம்".!!!
தமிழக சட்டசபைத் தேர்தலில் 85.15% என்ற வரலாறு காணாத வாக்குப்பதிவு பதிவாகியுள்ள நிலையில், முக்கிய அரசியல் தலைவர்கள் இளைப்பாறுவதற்காகச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே துபாய் சென்றுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம் மேற்கொள்கிறார். வழக்கமாகத் தனது திரைப்படப் பணிகள் முடிந்ததும் வெளிநாடு செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தற்போது தேர்தல் முடிந்தும் இன்னும் பயணத்தைத் தொடங்காமல் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.