சனி, 27 பிப்ரவரி, 2021

அனிதாவின் பெயரை பயன்படுத்த வேண்டாம் .. அனிதாவின் தந்தை த. பகுஜன் கட்சியிடம் வேண்டுகோள்

May be an image of 2 people and outdoors
Anitha Manirathinam S A : · அப்பாவின் பதிவு..... நான் ஏற்கனவே என் மகளை இழந்துவிட்டேன்... எங்களை விட்டு விடுங்கள்... தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் அன்பு அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வணக்கம்.  என் மகள் அனிதா இறந்தபோது தமிழ்நாடே எங்களுக்கு ஆறுதல் தந்தது நீங்களும் நேரில் வந்து ஆறுதல் கூறினீர்கள்.. அது மட்டுமில்லாமல் அனிதாவிற்கு பல்வேறு நினைவேந்தல் கூட்டமும் நடத்தினீர்கள், தங்கை அனிதா பெயரில் பெரம்பூரில் "அனிதா அறிவு மையம் " தொடங்கியுள்ளீர்கள் அதற்கு நானும் எங்கள் குடும்பமும் என்றும் உங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
ஆனால், எனது மூன்றாவது மகன் பாண்டியன் அவர்களை உங்கள் கட்சியின் குன்னம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது எனக்கோ, அனிதாவின் குடும்பத்தினருக்கோ துளியும் உடன்பாடில்லை.

திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு புதிய குழு! மாநாடு, பொதுக்குழு ரத்து.... (திமுக உத்தேச பட்டியல்)

tamil.indianexpress.com : தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.  ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்மே தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரக்களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். இதில் அதிமுகவை நிராகரிப்போம் என்றும், விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்த விவாதத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வரும் மார்ச் 7-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக பொதுக்குழு கூட்டம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு
maalaimalar :தொகுதி பங்கீட்டை அறிவித்த தலைவர்கள்

சென்னை:தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது...ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே பேசி வந்தனர். அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரத்தை அக்கட்சியின் தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளனர். 

மலேசிய பள்ளிப் பாடப்புத்தகத்தில் பெரியார் பற்றிய குறிப்புகள் – மலேசிய இந்து சங்கம் எதிர்ப்பு

பாட புத்தகம்

பெரியார்

சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக, : மலேசியாவில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் தந்தை பெரியாரைப் பற்றி சில தகவல்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
அப்பகுதியை நீக்க வேண்டும் என மலேசிய இந்து சங்கம் உள்ளிட்ட சில தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெரியார் பற்றிய குறிப்புகளில் எந்தத் தவறும் இல்லை என்றும் பாடப்புத்தகத்தில் இருந்து அவற்றை நீக்கக்கூடாது என்றும் மலேசிய திராவிடர் கழகம் உள்ளிட்ட மற்றொரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வார்த்தைப்போர் நடைபெற்று வருகிறது.
மலேசிய தமிழ்ப் பள்ளிகள்
மலேசியாவில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. தமிழ்ப் பள்ளியில் 6ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் 'செம்மொழி சிற்பிகள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது.
அதில் வீரமாமுனிவர், பெருஞ்சித்திரனார், தந்தை பெரியார் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தப் புத்தகம் பயன்பாட்டில் உள்ளது.

பழ.கருப்பையாவை வீட்டில் சந்தித்து பேசிய கமல்.. கூட்டணி... ?

 கமலுடன் கைக்கோர்க்க வேண்டும்

Anbarasan Gnanamani - tamil.oneindia.com : சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், மூத்த அரசியல்வாதி பழ கருப்பையாவை சந்தித்து பேசியுள்ளார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையாவை, அவரது இல்லத்துக்குச் சென்று, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நேற்று (பிப்.26) அறிவிக்கப்பட்டது. 

ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவும், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார் இதனால், தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. சொல்ல முடியாது.. இந்நேரத்துக்கு கூட தக தகவென எரிந்து கொண்டிருக்கலாம்.                            தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக தங்களது பொதுக்குழு மற்றும் திருச்சி மாநில மாநாட்டை ஒத்தி வைத்துவிட்டது. அதுமட்டுமின்றி, தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட திமுக தலைமைக் கழகம், டி.ஆர்.பாலு தலைமையில் குழு ஒன்றையும் அறிவித்துவிட்டது.                        இப்படி மின்னல் வேக பணிகளை திமுக துவக்கிவிட, அதிமுகவும் தங்களது அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

 சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!
  மின்னம்பலம் : ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தை வைத்து சமீபத்தில் ட்விட்டர் மூலம் பொய் தகவல்கள் பரப்பப்பட்டதால், அத்தகைய 1,500 ட்விட்டர் கணக்குகளை நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. சில நாட்கள் தாமதத்துக்குப் பிறகே ‘ட்விட்டர்’ நிறுவனம் அந்த உத்தரவை அமல்படுத்தியது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தப் பின்னணியில், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளிட்டுள்ள அறிக்கையில், “சமூக வலைதளங்களில் தேச விரோதமானதாகவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடியதாகவும் அதிகாரிகள் கருதும் பதிவுகளை யார் முதலில் உருவாக்கியது என்பதை கண்டறியும் வசதி, கட்டாயம் இருக்க வேண்டும். அத்தகைய பதிவுகளை நீக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்ட 36 மணி நேரத்துக்குள் அவற்றை நீக்க வேண்டும்.

ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்

ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்
dailythanthi.com ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்
சென்னை,நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வர உள்ளார். 

காங்கிரஸ் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ராகுல் காந்தி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக தமிழகத்தில் அவர் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்... தொடர்ந்து தமிழகத்தில் 2-வது கட்டமாக அவர் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் இன்று காலை தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

ராமநாத சுவாமி கோவிலில் குருமூர்த்தி உடைத்த பழங்கால ஸ்படிக லிங்கம்! அத்துமீறிய சங்கராச்சாரியார், அடாவடியான ஆன்மீகம்…!

சாவித்திரி கண்ணன் - aramonline.in : ‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என்பது சங்கராச்சாரியார் விவகாரத்தில் மீண்டும் ஒரு முறை நிருபணம் ஆகியுள்ளது. அடாவடி அரசியல்வாதிகளான ஹெச்.ராஜா, குருமூர்த்தி புடை சூழ இராமேஸ்வரம் கோவிலில் ஆர்பாட்டமாக நுழைந்த சங்கராச்சாரியார் ஆகமவிதிகளை காலில் போட்டு மிதித்து, அத்துமீறி செயல்பட்டுவிட்டதாக ஆன்மீகவாதிகளே வருத்தப்படுகின்றனர். இது குறித்து சற்றே விபரமாகப் பார்ப்போம்;

பக்தி, ஆன்மீக விவகாரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று இராமேஸ்வரம் ராம நாதஸ்வாமி கோவிலில் நடந்தேறியது! கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 22 ந் தேதி காஞ்சி சங்கரமட பீடாதிபதி விஜயேந்திரர் பாஜகவின் ஹெச்.ராஜா, ஆடிட்டர் குருமூர்த்தி..உள்ளிட்ட படை பரிவாரங்களுடன் இராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோவிலுக்கு வந்தார்! அவருக்கு பூரணகும்ப மரியாதை எல்லாம் தரப்பட்டது. அவர் ஸ்வாமியை தரிசிக்க வருவதாக அனைவரும் கருதி இருந்த நேரத்தில், திடீரென்று கோவில் கருவறைக்குள் நுழைந்து தானே ஸ்வாமி மேனியைத் தொட்டு பூஜை செய்ய வேண்டும் என முயற்சிக்க, அதை அவருடன் வந்தவர்கள் ஆரவாரமாக ஆமோதிக்க கோவில் குருக்கள் இருவர் மிகுந்த பணிவுடன், ’’நீங்க பெரியவா..உங்களுக்கு தெரியாதது இல்லை. இந்த கோவில் கருவறையில் சிவாகம முறைப்படி தீட்சை பெற்று, பாரம்பரிய வழிமுறையில் சிவாகமத்தை ஓதுபவர்கள் மட்டுமே கருவறைக்குள் செல்ல முடியும்! பெரியவா.. நீங்களே ஆகமவிதிகளை அத்துமீறப்படாது..’’என எடுத்துச் சொல்லியுள்ளனர்.

தோழர் தா. பாண்டியனுக்கு செவ்வணக்கம்! .... அவரின் வரலாற்றில் சில பக்கங்கள்.

தோழர் தா.பாண்டியன் காலமானார்….. | E Tamil News
தோழர் தா பாண்டியன் இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம் . அந்த அளவுக்கு அவருக்கு மக்கள் மீதான நேயம் இருந்திருக்கிறது.
எல்லா அரசியல் தலைவர்களையும் போலவே  பல  விமர்சனங்களையும் தாண்டியது அவரின் அரசியல் சமூகப்பணி.
அமரர் தா. பாண்டியனின் பேச்சாற்றல் பிரமிக்கத்தக்கது.
இந்திய வரலாற்றை மட்டுமல்லாது ஈழ வரலாற்றையும் விரல்நுனியில் வைத்திருந்த வெகு சிலரில் தோழரும் ஒருவர்.
இடதுசாரி இயக்கங்களின் ஒரு முக்கிய தலைவராக இருந்தாலும் அவற்றின் வரலாற்று தவறுகளையும் நிகழ்காலத்தையும் பாரபட்சம் இல்லாதது விமர்சிக்கும் அவரது பண்பு மிகவும் பாராட்டுக்கு உரியது.
அவர் உண்மையில் ஒரு அரசியல் பல்கலை கழகம் என்றுதான் கூறவேண்டும்.
ஸ்ரீ பெரும்புதூரில் அமரர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நிகழவில்லை தோழரும் படுகாயமுற்றார்
இவர் இறந்துவிட்டார் என்றே முதலில் கருதப்பட்டது  நல்வாய்ப்பாக அவர் மீண்டுவிட்டார்  ஆனாலும் அவரது உடலில் இன்னும் சில உலோக துகள்கள் நிரந்தரமாக புதைந்திருந்தது.
அந்த சம்பவத்தின் குற்றவாளிகளை அவர் மன்னித்தது மட்டுமல்லாமல் அவர்களது விடுதலைக்காகவும் ஓங்கி குரல் கொடுத்தது அவரின் மனித நேயத்திற்கு மிகப்பெரும் சான்றாகும்.
தேர்தல் அரசியல் காரணமாக அவர் மேற்கொண்ட சமரசங்கள் இப்போதும் ஏற்று கொள்ள கூடியவை அல்ல.
அவர் கூட அவற்றை இட்டு பிற்காலத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார் என்றெண்ணுகிறேன்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்

No photo description available.
maalaimalar :சென்னை: வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தன.இதனை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது. இந்த நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. சீர்மரபினருக்கு 7 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்கவும் மசோதா வகை செய்கிறது. 

எம்பிசி-வி என்ற  பிரிவு வன்னியர்களுக்காக ஏற்படுத்தப்பட்டு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க மசோதா வகை செய்கிறது. 

5 மாநில தேர்தல் தேதிகள் : தமிழக வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ! புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அசாம்....

மின்னம்பலம் ;தமிழகம், புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் அட்டவணையையும் தேர்தல் அறிவிக்கையையும் தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் இன்று வெளியிட்டார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

தமிழகம்

234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

மார்ச் 12-  வேட்பு மனு தாக்கல்

மார்ச் 19  -வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாள்

மார்ச்- 20 வேட்பு மனு பரிசீலனை

மார்ச் 22 - வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் ,

ஏப்ரல் 6 - வாக்குப்பதிவு .

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு இதே அட்டவணையில் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.

கொரோனா தொற்று காரணமாக  வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும். வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிப்பது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரி முடிவெடுத்து கொள்ளலாம். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அரசியல் கட்சியினர் 5 பேருக்கு மட்டுமே அனுமதி. வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ளலாம்.  வேட்புமனு தாக்கலின் போது 2 பேருக்கு மட்டுமே அனுமதி.  தமிழகத்தில் தேர்தல் மேற்பார்வையாளராக தேவந்திர குமார், அலோக் வர்தன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

nakkeeran :    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்(88) உடல்நலக் குறைவால் காலமானார். முதலில் கரோனா தொற்றில் இருந்து மீண்டார். பிறகு, சிறுநீரகத் தொற்று மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக நேற்று முன்தினம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் மூலம் தமிழகத்தில் குஜராத்தி மார்வாடி கேரளா கன்னட ஆந்திர பிகார் ஓடிஸா எம் எல் ஏக்கள் . எம்பிக்கள்????

தமிழகத்திலும் இந்திய அளவிலும் தேர்தல்களில் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் தொகுதிகளில் பெற்ற வாக்கு அடிப்படையில் தெரிவு செய்யப்படாமல் ,கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் என்ற அடிப்படையில் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் முறை பற்றி அடிக்கடி பெரிதும் புகழ்ந்து பேசப்படுவதுண்டு.
அது பற்றி போதிய விபரங்கள் தெரியாமலேயே அது மிகவும் சிறந்த முறை என்று கருத்துக்கள் தெரிவிக்கின்றனர் .
இந்த விகிதாசார தேர்தல் முறை என்பது உண்மையில் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு மிகவும் ஆபத்தான முறையாகும்.
இதில் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன.
மிகவும் எளிதாக தெரியும் தீர்வுகள் சிலவேளைகளில் பல புதிய சிக்கல்களை கொண்டிருப்பவையாகும்.
Too good to be true என்பது போல் இது ஒரு சிலந்தி வலை என்பதே எனது கருத்து.
உதாரணமாக பிரான்சில் இந்த முறை முன்பு பரீட்சித்து பார்க்கப்பட்டது . அதனால் அந்த நாட்டில் மிகபெரும் இனவாத கட்சி ( Front National) தலைஎடுத்தத்து. அது வரை ஒரு தொகுதி அல்லது இரு தொகுதிகள் மட்டுமே பெற்று வந்த அந்த கட்சி 35 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்தது
அதன் பின்பு பிரான்ஸ் அரசானது விகிதாசார முறையயை கைவ்ட்டது.
தமிழகத்தில் விகிதாசார முறை அமுல்படுத்த பட்டால் ..
தமிழகத்தில் பல குஜராத்தி மார்வாடி கேரளா கன்னட ஆந்திர பிகார் ஓடிஸா எம் எல் ஏக்களும் எம்பிக்களும் தெரிவாகும் சாத்தியம் உண்டாகும்.  

எந்த தொகுதியிலும் பெரும்பான்மையாக இல்லாத மார்வாடிகளும் இதர மாநிலத்தை சேர்ந்தவர்களும் முழு மாநில அளவிலான தங்கள் கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் அடிப்படையில்,

அவர்கள் தங்கள் மொழிபேசும் எம் எல் ஏக்கள் அல்லது எம்பிக்களை தமிழ்நாட்டில் தெரிவு செய்ய முடியும்.
அவர்கள் தமிழக அரசு மீது தங்கள் அதிகாரத்தை பலவழிகளிலும் செலுத்த அது வழி சமைத்து விடும்

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் தா. பாண்டியன் காலமானார்

May be an image of 1 person

 

dhinakaran :சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார். அவருக்கு வயது (89). உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலையில் அவரது உயிர் பிரிந்தது. 1932 செப்டம்பர் 25ம் தேதி உசிலம்பட்டியில் பிறந்தவர் தா,பாண்டியன். 1989, 1992 ஆகிய இருமுறை வடசென்னை மக்களவை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்

190 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டம்..(காங்கிரசுக்கு 15 ? ) உதய சூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகள்..

 Velmurugan P - tamil.oneindia.com :  சென்னை: விரைவில் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 190 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதேநேரம் கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம்.
சில கூட்டணி கட்சிகள் சம்மதித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
10 வருடங்களாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாத திமுக இந்த முறை எப்படியும் வென்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று கடுமையாக வேலை செய்து வருகிறது.
முன் எப்போதும் இல்லா அளவிற்கு அசுரபலத்துடன் போட்டியிட வேண்டும் என்று விரும்பும் திமுக, இந்த முறை அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தையிலும் இது எதிரொலித்து வருகிறது...
தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 190 இடங்களில் திமுக போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது.
இது கிட்டத்தட்ட 80 சதவீதம் ஆகும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மதிமுக, விசிக, கொங்குநாடு மக்கள் கட்சி போன்றவற்றை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க திமுக விரும்புகிறதாம்.
அதற்கு கூட்டணி கட்கிகளிடம் தீவிரமாக பேசிவருகிறது. இதற்கு சில கூட்டணி கட்சிகள் சம்மதித்துவிட்டதாக தெரிகிறது.

ரத்தினகுமாரும் இளையராஜாவும் ....... .... போற்றி பாட என்ன இருக்கிறது?

ஏவின் : சாய் வித் சித்ரா & காபி வித் இளையராஜா - இரண்டு குவளைகள் "சாய் வித் சித்ரா" நிகழ்ச்சியில் ரத்னகுமாரின் பேச்சைத் தொடர்ந்து அது இணைய உலகில் பேசு பொருளாகி இருக்கிறது. இளைய ராஜாவின் ரசிகர்கள் அங்காங்கே கொந்தளித்த வண்ணம் இருந்தாலும், என்னளவில் ரத்னகுமார் மிகத் தெளிவாகவே பேசுகிறார். ரத்ன குமார் யார் ? கிழக்கு சீமையிலே, கருத்தம்மா போன்ற படங்களின் வசனகர்த்தா, திரைத்துறை செயல்பாட்டாளர் என்பதையெல்லாம் தாண்டி ரத்ன குமார்; வெறும் ரத்ன குமாரல்ல! அவர் ரத்ன குமார் தேவர்.
கலந்துரையாடல் ஆரம்பிச்ச அடுத்த பத்தாவது நிமிசம் தான் யாரென்பதை தெளிவா நமக்கு புரிய வெச்சிடுறாருல்ல அந்த நேர்மை மிகவும் பாராட்டிற்குரியது!
ரத்னகுமார் இளையராஜாவ எதுவும் அவதூறா பேசிட்டாரா ? இல்ல, நடக்காத விசயங்கள இட்டுக் கட்டி சொல்றாரானு கேட்டா ? அப்படியெல்லாம் இல்ல, ரத்ன குமார் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை. இங்கிட்டு ரத்ன குமார் தேவருக்கு ஒரு ஆதங்கம் இருக்குது. அதாவது, இளையராஜாவின் அண்ணனாகிய பறையன் ஒருவன், ஒக்காலிக கவுண்டர்கள் வாழும் தெருவுல செருப்பு போட்டு நடந்ததுக்காக கெட்டி வெச்சி அடிச்சப்ப எங்கப்பாதானே காப்பாத்துனாரு ?

பிரதமர் காலில் விழ முற்பட்ட அதிமுக எம்பிக்கள் ! நமக்கு வாய்த்த அடிமைகள் .

.hindutamil.in : மத்திய, மாநில அரசுகள் சார்பில் புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா கோவை கொடிசியா தொழிற்காட்சி அரங்கில் நேற்று நடைபெற்றது. அங்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது, பிரதமரை வரவேற்க நின்று கொண்டிருந்த, தேனி எம்.பி.யும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத், பிரதமரின் காலில் விழ முற்பட்டார். அவரைத் தடுத்து நிறுத்திய பிரதமர், காலில் விழக்கூடாது என புன்னகையுடன் அறிவுறுத்தினார். இதேபோல, மற்றொரு அதிமுக எம்.பி.யும் பிரதமர் காலில் விழ முற்பட்டபோது, தடுத்து நிறுத்தினர். மேலும், பாஜக மாவட்ட நிர்வாகி கணேஷ்குமார், செருப்பை கழற்றிவிட்டு, பிரதமருக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது, செருப்பை கழற்றக் கூடாது என பிரதமர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, மேடைக்குச் சென்ற பிரதமர், அங்கு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.

50 தொகுதிகள் கேட்கிறதா காங்கிரஸ்? உம்மன் சாண்டி நேரில் வந்து திமுக.வுடன் பேச்சுவார்த்தை

/tamil.indianexpress.com : திமுக – காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் இடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.  தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், தமிழக அரசியலில் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தொகுதிப்பங்கீடு குறித்த விவாதங்களும் நடைபெற்று வருகிறது.

திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டாலும், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுகளும் யூகங்களும் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.   இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில், திமுக – காங்கிரஸ் தலைவர்கள் இடையே அதிகாரப்பூர்வமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.      தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி சார்பில், காங்கிரஸ் தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் சுர்ஜித்வாலா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திமுகவை வீழ்த்த ரூ.5,000 கோடி பாஜக பட்ஜெட்: விழுமா விக்கெட்?

திமுகவை வீழ்த்த ரூ.5,000 கோடி பாஜக பட்ஜெட்: விழுமா விக்கெட்?
மின்னம்பலம் : தமிழகத்தில் அதிமுகவுடன்தான் பாஜக கூட்டணி என்பதை உறுதிப்படுத்திவிட்டுப் போய் விட்டார் பிரதமர் மோடி. தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளும்கூட தொடங்கிவிட்டன. ஆனால், தமிழகத்திலிருந்து டெல்லிக்குப் போய்ச் சேரும் உளவுத்துறை தகவல்கள், பாஜக தலைமைக்கு உவப்பானதாக இல்லை. திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்பதே எல்லா சர்வேக்களும் சொல்கின்ற சேதியாக இருக்கின்றன.கடந்த ஓராண்டுக்கு முன்பிருந்தே இத்தகைய தகவல்கள் வந்து கொண்டிருந்ததால்தான், ரஜினியை கட்சி தொடங்க வைத்து அதனுடன் கூட்டணி வைக்கலாமென்று பாஜக சார்பில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. மூன்றாவது அணி முயற்சியும் கைகூடவில்லை. முதல் அணியை பலப்படுத்த, அதிமுகவை மேலும் வலுவாக்க வேண்டுமென்று சசிகலாவை மீண்டும் இணைக்கலாம் என்று கணக்குப் போட்டது டெல்லி.

காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து கழற்றி விடப்படுகிறது? சமூகவலையில் சீரியஸ் விவாதங்கள் !

டிஜிட்டல் திண்ணை: ராகுல் சொன்ன நம்பர்: கூட்டணிப் பேச்சில் நடந்தது என்ன?

 திமுக - 200
கம்யூனிஸ்ட் - 20 (CPI 10, CPM 10)
விசிக - 10
முஸ்லிம் லீக் - 4
அண்ணன் வைகோ, பேராசிரியர். ஜவாஹிருல்லா, திரு. வேல்முருகன், திரு. ஈஸ்வரன் போன்றவர்களின் இயக்கங்கள் உதயசூரியன் சின்னத்தில்!
அப்போ காங்கிரஸ்.?  காங்கிரஸ், கமலஹாசன், தேமுதிக - மூன்றாவது அணி!!!

மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.திமுக கூட்டணியின் அதிகாரபூர்வமான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை பிப்ரவரி 25ஆம் தேதி முதல் தொடங்கியிருக்கிறது. முதன்முதலாக காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை திமுக தலைமையகமான அறிவாலயத்தில் நடந்தது. ஏற்கனவே திமுகவின் தலைவர் ஸ்டாலினுடைய பிரதிநிதியாக எ.வ.வேலு கூட்டணிக் கட்சியினருடன் சில ரவுண்டுகள் பேசி முடித்துவிட்ட நிலையில் அதிகாரபூர்வமான இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது.

திமுக சார்பில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிரணிச் செயலாளர் கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான அகில இந்திய காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

சிவகாசி பட்டாசு விபத்தில் 5 பேர் பலி: 2 வாரங்களில் இரண்டாவது சம்பவம்

தினமலர் : சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கடந்த வாரம் நடந்த பட்டாசு விபத்தில் 23 பேர் உயிரிழந்தார்கள்.
அந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் சிவகாசியில் நடந்த பட்டாசு விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  கடந்த 12-ம் தேதி சாத்தூர் அச்சன்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 23 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளையார் குறிச்சி கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து சம்பவம் நிகழ்ந்தது.
இந்த விபத்தில் 3 அறைகள் சேதமடைந்தன. அறைக்குள் சிக்கியிருந்த இரண்டு பெண் உள்பட பலர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

நடிகர் மன்சூர் அலிகான் புதிய கட்சியை தொடங்கினார்

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் செயல்பட்டு வந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அவர் போட்டியிட்டார். இந்த நிலையில் மன்சூர் அலிகான் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை இன்று தொடங்கி உள்ளார்.

2000 ஆண்டுக்கு பிறகு எலீட் இனத்தின் அடையாளம் அழிய ஆரம்பிச்சுது... ரஜினி, கமல், சகாயம் ஐஏஎஸ் அன் சோ ஆன்...

Kathir RS : ஒரு காலத்துல எலீட் எனும் மேட்டுகுடியினர் 5% தான்.. இந்த 5% எலீட்ல 5% கூட ஓட்டு போட வரமாட்டாங்க.. ஆனா இவுங்கள நம்பித்தான் மொத்த கார்பரேட் கம்பெனிகளும் FMCG கம்பெனிகளும் இயங்குச்சு. கார்லேருந்து ஷாம்பூ வரை இவர்கள்தான் மெயின் டார்கெட். அதனாலதான் அந்த காலத்து விளம்பரங்களில் இவர்களைப்போன்ற வெள்ளைத் தோல் தோற்றமுள்ளவர்களை மையப்படுத்தி வெளிவந்தன.பிற்பாடு விளம்பரம்னாலே இப்டிதான் இருக்கனும்னு ஆயிடுச்சு.
இப்படி ஓட்டு போடாத இந்த எலீட்கள் பெருசா எந்த பிரச்சனையும் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தாங்க.
வீட்டு வேலை சமையல் தோட்டம் வாகனம் ஓட்ட என எல்லாத்துக்குமே அவங்களுக்கு ஆள் இருப்பாங்க..அவுங்க எல்லாரும் எஜமான விசுவாசத்தோட பயத்தோட வேலைசெய்வாங்க..செத்தாலும் வேலையவிட மாட்டாங்க...
எங்கேயும் எதையும் அவுங்களால சாதிச்சுக்க முடியும்...போட்டி குறைவு..அல்லது போட்டியே இல்லை.எல்லா இடத்திலும் மரியாதை.சாதாரண மக்கள் கூட தாமாக முன்வந்து உதவும் ஒருவிதமான உயர்ந்த சிறப்பான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தார்கள்
வீட்டில் வேலை செய்பவர்களுக்கு
இவுங்களா பாத்து எது செஞ்சாலும் அது பெரிய கொடையாகவும் வள்ளல் தன்மையாகவும் பார்க்கப்பட்டகாலம் அது.
இதெல்லாம் 1970-80-90 வாக்குல இருந்த நிலமை.
90களுக்கு பிறகு ஏழைகள் ஒடுக்கப்பட்டவர்கள் படித்து முன்னேறத் தொடங்கிய பிறகு நிலமை மாற ஆரம்பிச்சுச்சு..

இலங்கையில் ஜாதி பாகுபாடுகள், இயக்க கொலைகள் பற்றிய ஆழமான வரலாற்று பார்வை! அருண் சித்தார்த்

இலங்கையில் இருந்து ஒரு புதிய குரல் ..  ஜாதி பாகுபாடுகள்  . இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் போன்றவற்றை பற்றிய  ஆழமான வரலாற்று பார்வை!  அருண் சித்தார்த்

வியாழன், 25 பிப்ரவரி, 2021

பாகிஸ்தான் சிறுபான்மையினரை பாதுகாப்பதில் தோல்வியடைந்துள்ளது – இ மு மு கவுன்ஸில்

Imran Khan
Rishvin Ismath : · பாகிஸ்தான் அந்நாட்டு சிறுபான்மையினரை பாதுகாப்பதில் தோல்வியடைந்துள்ளது – இலங்கை முன்னாள் முஸ்லிம்களின் கவுன்ஸில் இஸ்லாத்தை விட்டு வெளியேறும் மதமற்றவர்களுக்கான ஆதரவு அமைப்பாக இலங்கை முன்னாள் முஸ்லிம்களுக்கான கவுன்ஸில் 2016 ஆம் ஆண்டு இலங்கையில் முன்னாள் முஸ்லிம்களால் நிறுவப்பட்டது. பேச்சுச் சுதந்திரம், மனித உரிமைகள், மதச்சார்பற்ற மனிதநேய மற்றும் சுதந்திர சிந்தனைக்கு ஆகியவற்றிற்காக நாம் செயற்படுகின்றோம். இலங்கை முன்னாள் முஸ்லிம்களின் கவுன்ஸில் ஆனது முன்னாள் முஸ்லீம் அமைப்புகள், மனிதநேய மற்றும் நாத்திக அமைப்புகளின் சர்வதேச வலையமைப்பின் ஒரு அங்கமாக, இணைந்து செயற்படுகின்றது. 2021 மார்ச் 23 ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமர் திரு. இம்ரான் கான் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருவதால், திரு. கான் அவர்களின் கவனத்திற்கு பின்வருவனவற்றை முன்வைக்க இலங்கை முன்னாள் முஸ்லிம்களின் கவுன்ஸில் விரும்புகின்றது :
1. இஸ்லாத்தை விட்டு வெளியேறும் பாகிஸ்தான் குடிமக்கள் பாதுகாக்கப்படுவதையும், அவர்கள் பாகிஸ்தானில் அச்சமின்றி சுதந்திரமாக வாழ்வதையும் பாகிஸ்தான் அரசு உறுதி செய்ய வேண்டும். பாகிஸ்தானில் வாழும் முன்னாள் முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழ்வதுடன், தமது அடையாளத்தை மறைத்து வாழவும் வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள். அவர்கள் தாங்கள் வாழ்வதற்கான பாதுகாப்பு குறித்த அச்சத்தில் உள்ளனர். இந்த விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அதற்காக சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

சிபிஐ மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை... வதந்திகளை நம்ப வேண்டாம் - முத்தரசன் கோரிக்கை

Jeyalakshmi C - tamil.oneindia.com : சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரைப்பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சிபிஐ மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு 89 வயதாகிறது. வயது முதிர்வு காரணமாக உடல்நிலையில் அவ்வப்போது பாதிப்பு ஏற்படும். நேற்று காலை அவர் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். 

கமலஹாசனின் சக்கர நாற்காலி பேச்சு .. கலைஞர் மீதான பார்ப்பன விஷம் ...மீண்டும் மீண்டும்

Thamira Aathi : கமலின் மநீம 4ம் ஆண்டு துவக்கவிழா பேச்சினை முழுதும் கேட்டேன்.
கிட்டத்தட்ட 50 நிமிடங்கள். எந்தவிதமான அரசியல் புரிதலும், பொறுப்புமற்ற, வன்மம் நிறைந்த கிட்டத்தட்ட ஒரு அதிமுக அமைச்சரைப் போன்ற ஒரு பேச்சு.
எம்ஜியாருக்கு ஜால்ரா! நான் சிவாஜி, காமராசர்லேர்ந்து எல்லாரையும் பார்த்தவன் எனும் அதே சுயமோகப் பாட்டு!
ஊழல் மட்டுமே இங்கிருக்கும் ஒரே பிரச்சினை எனும் ஆபத்தான பிரச்சாரம்!
அதிமுகவும், திமுகவும் ஒன்று எனும் திட்டமிட்ட பழி!!
எல்லாவற்றையும் விட நான் மிக அதிர்ந்த விசயம், 'சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு உங்களை கஷ்டப்படுத்த மாட்டேன்' எனும் வன்மம் மிக்க வார்த்தைகள்!
'முற்போக்குப் பேசும் பாப்பான் மிக ஆபத்தானவன்' என்று பெரியார் குறிப்பிட்டது எத்தனை உண்மை என்று உறைக்கிறது.
சொல்லப்போனால், பயமாகவே கூட இருக்கிறது. நாம் சிந்திக்கிறோம் எனும் நினைப்பிலிருக்கும் நம்மையே இத்தனை வயது வரை ஒரு முற்போக்குப் பாப்பானால் நிற்க வைத்து தலையில் மிளகாய் அரைக்க முடியும் என்றால் பொதுமக்களின் நிலை?
நல்லவேளையாக அவர்கள் நம்மை விட அறிவாளிகளாகவே பல சந்தர்ப்பங்களில், தேர்தலில் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இனியும் இருப்பார்கள். இந்த பித்தலாட்டக்காரர்களை எங்கு வைக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை வருகை ..வர்த்தகம், சுற்றுலாவை பெருக்குவது பற்றி ஆலோசனை

dailythanthi :கொழும்பு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் இலங்கைக்கு சென்றார். அவர் பிரதமரான பிறகு இலங்கைக்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும். நேற்று முன்தினம், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை இம்ரான்கான் சந்தித்து பேசினார். இருதரப்பு உறவை வலுப்படுத்துவதும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் மூலம் வர்த்தகத்தை பெருக்குவதும்தான் தனது பயணத்தின் நோக்கம் என்று அவர் கூறினார். அதிபருடன் சந்திப்பு

இந்தநிலையில், நேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இம்ரான்கான் சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இச்சந்திப்பு நடந்தது.  இருவர் மட்டுமே இடம்பெற்ற அந்த சந்திப்பில், இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

கேரளா மீனவர்களோடு ராகுல் காந்தி கடலில் நீச்சலடித்து மீன் பிடித்த காட்சி

Jeyalakshmi C - tamil.oneindia.com ; கொல்லம்: வயநாடு தொகுதி எம் பி ராகுல் காந்தி கேரளா மாநிலம் கொல்லத்தில் மீனவர்களுடன் படகில் ஒன்றாக கடலுக்குச் சென்று வலை வீசி மீன் பிடித்தார்.
சட்டென்று படகில் இருந்து கடலில் குதித்து நீந்தினார்.
இதனைப் பார்த்த மீனவர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
கேரளாவில் உள்ள வயநாடு ராகுல் காந்தியின் சொந்த தொகுதி என்பதால் அடிக்கடி கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது 3 நாள் சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி கேரளா வந்துள்ளார்.
கொல்லத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகின்றனரோ, அதை போலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்வதாக கூறினார். விவசாயிகளுக்கு மத்திய அரசில் தனி அமைச்சகம் உள்ளது.

ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது: மத்திய அரசு!

மின்னம்பலம் :இந்திய திருமண சட்டத்தின் கீழ் ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரண்டு தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஒன்று, எல்ஜிபிடி(LGBT ) சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இந்து திருமண சட்டத்தின் கீழ் ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தனர். மற்றொன்று, கடந்த எட்டு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வரும் கவிதா அரோரா, அங்கிதா கன்னா தம்பதிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய முயன்றபோது, சம்பந்தப்பட்ட நீதிமன்ற அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார். அதனால், ஒரே பாலின திருமணத்தை சிறப்பு திருமண சட்டம் மற்றும் வெளிநாட்டு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.... 

இந்த மனு மீதான விசாரணையில் மத்திய அரசு, ”ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் தம்பதிகளாக ஒன்றாக வாழ்வதையும், குடும்ப வாழ்க்கையை மேற்கொள்வதையும், இந்திய குடும்ப அலகு கருத்தாக்கத்துடன் ஒப்பிட முடியாது. திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிப்பது என்பது சட்டமன்றத்தால் தீர்மானிக்கப்பட வேண்டியதே அல்லாமல், ஒருபோதும் அது நீதித்துறையின் பொருளாக இருக்க முடியாது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் தா.பாண்டியன் - முத்தரசன் அறிக்கை!

cpi party senior leader d.pandiyan admitted at hospital

 nakkeeran : சிறுநீரக பாதிப்பு, ரத்த அழுத்தம் காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் நேற்று (24/02/2021) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.     இந்த நிலையில் தா.பாண்டியன் உடல்நிலை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கவலைக்கிடமான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.           தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணி ராஜன், டாக்டர். தினேஷ் உள்ளிட்ட உயர்நிலை சிறப்பு மருந்துவர்கள் தா.பாண்டியன் உடல் நிலையைக் கண்காணித்து, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி - ஒத்திகை பார்த்த வேலு ...

டிஜிட்டல் திண்ணை:  திமுக கூட்டணி - ஒத்திகை பார்த்த வேலு - ஓங்கியடிக்கும் ஸ்டாலின்
மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது. மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. “திமுக கூட்டணியில் அதிகாரபூர்வமான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இன்று (பிப்ரவரி 25) தொடங்குகிறது. கூட்டணியில் திமுகவை அடுத்து இருக்கும் முதன்மைக் கட்சியான காங்கிரஸ் பிரதிநிதிகளோடு இன்று திமுக தலைவர் பேச்சு நடத்துகிறார். அரங்கத்தில் நடக்கும் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை இதுவென்றால், அரங்கத்துக்கு வராமல் ஏற்கனவே கூட்டணிக் கட்சிகளோடு பேசிக்கொண்டுதான் இருந்தது திமுக தலைமை. பத்து நாட்களுக்கு முன்பே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக தலைவர் ஸ்டாலினிடம், ‘தொகுதிப் பேச்சுவார்த்தைகளை எப்போது தொடங்கப் போகிறோம்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஸ்டாலின், ‘நம்ம எ.வ.வேலுவை ஒருமுறை பார்த்துடுங்களேன்’ என்று பதில் சொல்லியிருக்கிறார்.

சகாயமும் , கமலஹாசனும் , அண்ணாமலை ஐபிஎஸ்ஸும் பாஜகவின் தேர்தல் மோசடிகளை மறைக்க உதவும் முகமூடிகள்

May be an image of 1 person and text that says 'தமிழக அரசியலில் முழுமையாக களம் இறங்கி ஊழலை ஒழிப்பேன்- சகாயம் N நானும் அப்படி தான் ,மொத்த இந்தி இந்தியாவையும் ஒழிச்சேன் ஹசாரே Potitical Spot phipor'
Renganathan Rajendran : சகாயம் ஐஏஎஸ்.. பாஜகவின் மற்றுமொரு பகடைக்காய்.*
இவ்வளவு வருடங்கள் அரசியல் வேண்டாமென்றிருந்த சகாயம் ஐஏஎஸ் திடீரென்று கொடி பிடித்து அரசியலுக்கு ஏன் வருகிறார் ? அவருக்கு பின்புலமும் பணமும் திடீரென்று ஒரே நாளில் எப்படி கிடைத்தது ?
கமல்ஹாசனின் மநீமவுக்கு எப்படி திடீரென பணம் கிடைத்ததோ அப்படித்தான்.
சகாயத்தின் பேச்சைக் கவனித்தால் அவர் ஊழல் மட்டுமே தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினை போல பேசுவதை கவனிக்கலாம். 
மற்றபடி அவரது நேர்மை , எளிமை , கருமை தான் அவரது வார்த்தைகள். நீட் , விவசாய சட்டங்கள் , டீமானடைசேஷன் , பெட்ரோல் விலை உயர்வு, மதவெறி பாஜக, உழவர்கள் போராட்டம், இவையெல்லாம் சகாயம் கண்ணுக்கு ஏன் தெரியவில்லை ? 
கவனித்துப் பாருங்கள். இனியும் அவர் கண்ணுக்கு இவை தெரியாது. சகாயம் ஐஏஎஸ் பதவியில் இருந்த 6 வருடமும் ஊழல் மிகுந்த அதிமுகவாலும் , பாஜகவாலும் ஓட ஓட விரட்டப்பட்டவர். தூக்கியடிக்கப்பட்டவர். 
ஆனால் இன்று அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னும் அவர் தன்னை துன்புறுத்திய இந்தக் கட்சிகள் பற்றி வாயே திறக்கவில்லை.  ஏன்? பயமா ? எஜமான விசுவாசமா ? மோடிக்கு எதிராக இன்றுவரை சகாயம் ஒரு வார்த்தை பேசவில்லை.
வடக்கில் அன்னா ஹாசாரே காங்கிரஸ் ஊழல் மட்டுமே இந்தியாவின் பெரும் பிரச்சினை என்று பேசினாரே நியாபகம் வருகிறதா ? இப்போது அன்னா ஹாசாரே ஏன் பேசவில்லை ? மோடி ஆட்சியில் ஊழலே இல்லையா என்ன ? சகாயம் இன்னொரு ஹசாரே முகம்.
சகாயமும் , கமலஹாசனும் , அண்ணாமலை ஐபிஎஸ்ஸும் பாஜகவின் 'போலியான நேர்மை முகம்' காட்டும் பகடைக்காய்கள்.

மக்கள் பாதை அமைப்பில் இருந்து சகாயம் வெளியேற்றபட்டார்! செல்வி பேட்டி

டிரம்ப்பை விட மோசமான விதி.. பிரதமர் மோடிக்கு காத்திருக்கு - ஆக்ரோஷ மோடில் மம்தா பானர்ஜி

Anbarasan Gnanamani - /tamil.oneindia.com மேற்குவங்கம்: எங்களை வெல்வது அவ்வளவு எளிதானது அல்ல.
இந்த மண்ணில் பாஜகவுக்கு ஒரு கல்லறையை உறுதி செய்வேன் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸை எப்படியாவது இந்த தேர்தலில் காலி செய்துவிட வேண்டும் என்று இறங்கி வேலை செய்து வருகிறது பாஜக.
மம்தாவும், பதிலுக்கு மல்லுக்கு நிற்க, மாநிலத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது
இந்நிலையில், ஹூக்ளியில் நடந்த ஒரு பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மம்தா, "பிரதமர் மோடி மிகப்பெரிய கலகக்காரர். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விட மோசமான விதி பிரதமர் மோடிக்கு காத்திருக்கிறது.
வன்முறையிலிருந்து எதையும் பெற முடியாது. மோடியும் அவரது நண்பரும், இந்த இரண்டு மாதங்களில் எவ்வளவு பேச முடியுமோ பேசிக் கொள்ளுங்கள்.
ஏனெனில், அதற்கு பிறகு நாங்கள் தான் பேசுவோம். 

சிங்கப்பூரில் சித்ரவதை செய்து மியான்மார் பணிப்பெண் கொலை.. தமிழ் தம்பதிகளும் மாமியாரும் சேர்ந்து செய்த கொடுமை

Cop's wife admits starving, torturing maid to death; Myanmar victim was  just 24kg in her final days, Courts & Crime News & Top Stories - The  Straits Times

சிங்கப்பூர்

husband-woman abused-starved-domestic-worker-till-she-died-interdicted-senior-police 

மியான்மார் நாட்டை சேர்ந்த இந்த சிறுமியை வீட்டு வேலைக்காக அமர்த்திய சிங்கப்பூர் வாழ் தமிழர்களான திரு.கெவின் செல்வம் (போலீஸ்காரன்) காயத்திரி தம்பதிகளும் கணவனின் தாயாரான பிரேமா நாராயணசாமியும் சேர்ந்து சித்திர வதை செய்து கொலை செய்துள்ளார்கள்.. இவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். 

 BBC :தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் எனும் கனவோடு சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்கு வந்த 24 வயது மியான்மர் பெண் ஒருவர் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். பிரேதப் பரிசோதனையின்போது அப்பெண்ணின் உடலில் அண்மையில் ஏற்பட்ட 31 காயங்கள் தென்பட்டன என்றும், உடலின் மேற்பரப்பில் மட்டும் 47 காயங்கள் காணப்பட்டதாகவும் சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அவரை தன் வீட்டில் பணியமர்த்தி கொடுமைகள் புரிந்த 40 வயதான இந்திய வம்சாவளிப் பெண் காயத்ரி முருகையனும் அவரது கொடிய செயல்பாட்டுக்கு துணை நின்ற அவரது தாயார் பிரேமா நாராயணசாமியும் கைதாகி உள்ளனர்.

காயத்ரியின் கணவரும் காவல்துறை ஊழியருமான கெவின் செல்வம் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி உள்ளார். Gaiyathiri ,Prema Naraynasamy, Kevin Chelvam   

கலைஞர் ஜெயா மறைவை தொடர்ந்து RSS மீண்டும் சாதீய அரசியலை மூட்டி வைத்துள்ளது.

List of Political Parties-Alliances-CM Candidates- 2016 Tamilnadu Assembly  Elections
Kandasamy Mariyappan : · அதிமுக+பாமக+பாஜக கூட்டணி ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்: பெரியாரின் மிகப்பெரிய முயற்சியால் 60களில் சாதீய அடையாளம் சிறிது சிறிதாக குறைய தொடங்கிய சமயம். 70களில் திமுக சாதீயம் பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்தியது.
ஆனால் RSS அடிமை திரு. எம்ஜி. ராமச்சந்திரன் ஷுபயோக ஷுபதினத்தில் ஹோமம் வளர்த்து மும்மூர்த்திகள் ஆதரவோடு முக்கோடி தேவர்கள் பூமாரி பொழிய ஷாட்சாத் மாயத் தேவர் மூலம் மீண்டும் ஷாதீய அரசியலை ஆரம்பித்து வைத்தார். குறிப்பாக தெற்கு மண்டலத்தில் முக்கலத்தோர், மேற்கு மண்டலத்தில் கவுண்டர் என்று தீவிர சாதீய அரசியல் தீ மூட்டப்பட்டு விட்டது.
80களில் வடக்கு மண்டலத்தின் நாயகர் மருத்துவ. ராமதாஸ் இடஒதுக்கீடு என்ற போர்வையில் வன்னியர் சாதீய அரசியலை கையிலெடுத்தார். 90களில் நேரடி அரசியல் பிரவேசம் செய்கிறார். வியாபாரம் நன்றாகவே இருந்தது!!!

தமிழ் மொழியில் நீருக்கு 47 சொற்கள் உள்ளன . உலகில் வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு

Sundar P : · நிகரில்லா தமிழ் ! நீர் நிலைகளுக்கு இத்தனை நுட்பமான பெயர்கள் உலக மொழிகளில் எதிலேனும் இருந்தால் சொல்லுங்கள். நீர் நிலைகளை அவற்றின் தன்மைக்கு ஏற்ப பெயர் சூட்டியிருக்கிறார்கள் பாருங்கள் நம் தமிழ்முன்னோர்:- 1. அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
2. அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
3. ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.(ஆழி=கடல்)
4. ஆறு (River) - பெருகி ஓடும் நீர்ப்பெருக்கு( நதி).
5. இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
6. உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணறு.
7. ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.(ஊர் உண்ணி= ஊருக்கு குடி நீர்தரும் ஊற்று)
8. ஊற்று (Spring) - பூமியிலிருந்து நீர் ஊறுவது.
9. ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்
10. ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

7 நாட்களில் கொரோனா குணமடைய மருந்து: பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ அறிவிப்பு!!


Patanjali promoter, yoga guru Baba Ramdev, released a scientific research paper in this regard at the launch, presided over by Union health minister Harsh Vardhan and transport minister Nitin Gadkari. ndtv.com : பல்கலைக்கழகத்தின் உதவியோடு 95 நோயாளிகள் மீது மருத்துவ கட்டுப்பாடு ஆய்வையும் நாங்கள் மேற்கொண்டோம். நாங்கள் ஆய்வு நடத்திய 3 நாட்களில் 69 சதவீத நோயாளிகள் குணமடைந்துவிட்டனர். 7 நாட்களில் 100 சதவீத நோயாளிகள் குணமடைந்துவிட்டனர்” என்று பெருமிதத்தோடு கூறுகிறார் ராம்தேவ்...இதைப் போன்று மாற்று மருந்துகள் பற்றி உலக சுகாதார அமைப்பான WHO முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது. ‘சில மேற்கத்திய, பாரம்பரிய மற்றும் வீட்டு மருந்துகள் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும், அறிகுறிகளை போக்கவும் உதவி செய்யும்.   news link

புதன், 24 பிப்ரவரி, 2021

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

maalaimalar : புதுடெல்லி: புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் இருந்த அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்தது. இதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 14 ஆகவும், என்.ஆர்.காங்கிரஸ் -7, அ.தி.மு.க. -4, நியமனம் (பா.ஜ.க.) 3 என எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆகவும் சமநிலையில் இருந்தது. இதையடுத்து சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்- அமைச்சருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகைக்கு சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார். அதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்றுக்கொண்டார். இதன்பின் புதுவை அரசியல் நிலவரம் குறித்த விவரங்களை மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கையாக அனுப்பி வைத்தார்.

பாலியல் புகார் - ராஜேஷ் தாஸ் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

nakkeeran : தமிழகத்தில் தேர்தல்கால பணிகளுக்காக, சிறப்பு டிஜிபியாக ஏற்கனவே இருக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபியின் அதிகாரங்களைக் குறைத்து நியமிக்கப்பட்டவர் ராஜேஷ்தாஸ். இவர், சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ்தாஸின் கணவர். இவர்மீது விவகாரமான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழும். சமீபத்தில் பெரம்பலூருக்கும் திருச்சிக்கும் முதல்வர் சென்றபோது அவரது பாதுகாப்புக்காக கூடுதல் டிஜிபியான ராஜேஷ்தாஸ் சென்றார். அப்போது பணியில் இருந்த பெண் எஸ்.பி. ஒருவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அவரிடம் பாலியல் அத்துமீறல்களைச் செய்திருக்கிறார் ராஜேஷ்தாஸ். ''எனக்கு ஆளும் கட்சி சப்போர்ட் இருக்கு. உன்னால ஒன்னும் பண்ண முடியாது'' என ராஜேஷ்தாஸ் மிரட்டியுள்ளார். 

தனுஷ் புதுவீடு 80 கோடியில்.. விஜய் வீடு 120 கோடி.. அஜித் வீடு 140 கோடியில் .. ரசிகனே நீ கட்டவுட்டுக்கு பாலூற்று

minnambalam :தற்பொழுது, ஆழ்வார்பேட்டையில் குடியிருப்புப் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவருகிறார் தனுஷ். ரஜினியின் வீட்டருகில் தனுஷ் வீடு வாங்க காரணமும் சொல்லப்பட்டது. என்னவென்றால், ரஜினிக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பேரக்குழந்தைகளான யாத்ரா மற்றும் லிங்கா இருவரையும் சந்திக்கவும், அதோடு, ஐஸ்வர்யாவும் ரஜினியைக் கவனித்துக் கொள்ள அடிக்கடி போயஸ் தோட்டத்துக்கு வரவேண்டியிருக்கிறது. இந்தக் காரணத்திற்காக ரஜினியின் வீட்டருகிலேயே வீடு கட்டிவருகிறார் தனுஷ். எப்படியும் நவம்பர் மாதத்துக்குள் வீடு கட்டி முடிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

நடிகர்கள் கட்டும் வீட்டின் மதிப்பானது அவர்களுக்கு பெருமிதமான ஒன்றாக எப்போதுமே பார்க்கப்படும். சமீபத்தில் 120 கோடியில் விஜய் வீடு கட்டினார். அதுபோல, 140 கோடியில் அஜித் வீடு கட்டினார் எனச் சொல்லப்படும். அந்த மாதிரி, வீட்டினை சுமார் 80 கோடி பட்ஜெட்டில் கட்டிவருகிறாராம் தனுஷ். பெரிய தொகையில் வீடு கட்டுவதால் தான், முன்னரே சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் வி கிரியேஷன்களுக்கு அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமானார். தனுஷைப் போல, விஜய்சேதுபதியும் பெரும் தொகையில் வீடு கட்டிவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய்சேதுபதியுமே வீட்டுக்காக பெரும் தொகையைப் பயன்படுத்துவதால் தான் இரவுபகலாக அதிகப் படங்கள் கமிட்டானார் என்றும் சொல்கிறார்கள்.

சசிகலாவை நேரில் சந்தித்த சீமான், அமீர், பாரதிராஜா, சரத்குமார் ...

tamil.news18.com :சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து கடந்த ஜனவரி 27-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, கொரோனா சிகிச்சைக்குப் பின் பிப்ரவரி 9-ம் தேதி சென்னை திரும்பினார். ஏற்கெனவே தமிழக அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில் சசிகலாவின் விடுதலை தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கியது.

சசிகலாவின் அடுத்தகட்ட மூவ் எப்படியிருக்கும் என அரசியல் கட்சியினர் தொடங்கி பொதுமக்கள் வரை பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க தி.நகரில் உள்ள தனது வீட்டில் சில நாட்கள் ஓய்வெடுத்து வந்தார் சசிகலா. இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு தன்னை நேசிக்கும் தொண்டர்களிடமும் ஊடகங்கள் மத்தியிலும் பேசியுள்ளார் சசிகலா.
அவர் பேசியதாவது, “என்னுடைய அக்கா புரட்சித்தலைவியின் 73-வது பிறந்த நாள் அன்று வந்துள்ள கழக உடன்பிறப்புகளுக்கும் எனது அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவில் இருந்த போது தமிழக மக்கள் கழக உடன்பிறப்புகள் எல்லோருடைய வேண்டுதலால் நான் நலம் பெற்று தமிழகம் வந்துள்ளேன். அதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக கொடுத்த டிவி சிறப்பாக இருக்கா? உங்களுக்கு 1 லட்சம் பரிசு : அமைச்சர் ஜெயக்குமார்

அடுத்த வீட்டில் அவமானப்பட்டு டிவி பார்த்த வலி தெரியுமா.. கண்ணீர் துடைத்தது  கருணாநிதிதானே! | When Karunanidhi gives free colour TVs to change 90s kids  watching experience ...
schema.org : தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில். அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் திமுக தலைவர் ஸ்டாலின் தான் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களில் எல்லாம், அதிமுகவின் ஒவ்வொரு திட்டம் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். மேலும் அதிமுக அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் திமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
நிலவோடு ஓர் நெடும்பயணம் ~ : இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி !

தொடர்ந்து தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் பட்ஜெட் உரையை தொடங்கும்போது. அதனை கேட்க மறுத்த திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் ஸ்டாலின் முதல்வர் ஆனபின் தான் மீண்டும் சட்டசபை வருவோம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உட்பட திமுக எம்எல்ஏக்கள் சபதம் எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் தமிழகத்தில் தற்போது அரசியல் பரபரப்பு தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், திமுகவின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிமுக தரப்பில் பதிலடி கொடுத்து வரும் நிலையில், திமுக ஆட்சியில் கொடுத்த டிவி தற்போது நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு தருகிறேன் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.

புதுச்சேரியை அடுத்து தமிழ்நாடு - அமித் ஷாவின் திட்டம்!

டிஜிட்டல் திண்ணை: புதுச்சேரியை அடுத்து தமிழ்நாடு - அமித் ஷாவின் திட்டம்!
minnambalam.com : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.

“புதுச்சேரியில் தேர்தலுக்கு இரு மாதங்கள் இருக்கும்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களைக் கவிழ்த்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. நான்கு வருடம் 11 மாதங்கள் நீடித்த ஆட்சியைத் தேர்தலுக்கு முன் திடீரென எங்களால் தூக்கிப் போட முடியும் என்று டெல்லியில் இருந்து அமித் ஷா நடத்திய அரசியல் ஆபரேஷன்தான் இது.அதேபோல தமிழ்நாட்டிலும் ஓர் அரசியல் ஆபரேஷனைத் தொடங்கியிருக்கிறார் அமித் ஷா. பிப்ரவரி 22ஆம் தேதி சேலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலேயே இதை வெளிப்படையாகக் குறிப்பிட்டார் விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன், ‘புதுச்சேரியில் நடந்தது ஒரு ரிகர்சல்தான். தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பிறகு இன்னும் என்னென்ன கூத்துகள் நடக்க இருக்கிறதோ’ என்று கூறியிருந்தார் திருமா.

மு க அழகிரி ஸ்டாலின் சமரசம் ! காத்திருந்த பாஜகவுக்கு ஏமாற்றம்....

மீண்டும் அரசியல் களத்தில் மு.க. அழகிரி..! திமுகவின் கையைவிட்டு போகிறதா  தென்தமிழகம்…! புலம்பும் ஸ்டாலின் – Update News 360 | Tamil News Online |  Live News | Breaking ...
Vishnupriya R - tamil.oneindia.com : சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக பிரம்மாஸ்திரத்தை அவரது அண்ணன் மு.க.அழகிரியை வைத்து ஏவ விடலாம் என பாஜக எண்ணியிருந்த நிலையில் அக்கட்சிக்கு பெப்பே காட்டிவிட்டு மயான அமைதியில் இருக்கிறார் மு.க.அழகிரி.
இதன் பின்னணி குறித்து ஆராய்ந்த போது இவ்வளவு விஷயம் நடந்திருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது.
2014ஆம் ஆண்டு கட்சியிலிருந்து கலைஞரால் நீக்கப்பட்ட அழகிரி, அக்கட்சியில் இணைய எத்தனையோ குட்டிக் கரணங்களை போட்டார்.
தாய் விடு தூது, தங்கை விடு தூது என எத்தனையோ தூதுகளை அனுப்பியும் கலைஞர் மனம் மாறவில்லை.
இந்த நிலையில் கலைஞர்  மறைவுக்கு பிறகாவது திமுகவில் தனக்கு ஒரு இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவரை மீண்டும் கட்சியில் இணைக்கக் கூடாது என்பதில் ஸ்டாலின் திட்டவட்டமாக இருந்துவிட்டார்.
இதனால் திமுகவை எதிர்க்கும் மனப்போக்கு மு.க. அழகிரியிடம் ஏற்பட்டது.

திருவண்ணாமலையில் பள்ளி மாணவர் மீது கடும் தாக்குதல்: முன்னாள் மாணவர் கைது - இருவர் மீது வழக்குப் பதிவு

tamil.news18.com :திருவண்ணாமலை அடுத்த கீழ்பெண்ணாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனின் அண்ணனுக்கும், அதே பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் இன்னொரு மாணவனுக்கும் இடையே சிறுசிறு தகராறுகள் ஏற்பட்டுள்ளன. அந்த தகராறில், கடந்த 16ம் தேதி பள்ளி வ ளாகத்தில் வைத்து 10ம் வகுப்பு மாணவனுடன் 12ம் வகுப்பு மாணவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உச்சகட்டமாக 10ம் வகுப்பு மாணவனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். கூடவே முன்னாள் மாணவன் ஒருவரும் தாக்கியுள்ளார். இதை சக மாணவன் வீடியோ எடுத்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் போலீசார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் மாணவர்கள் நான்கு பேரின் எதிர்காலம் கருதி எச்சரித்து அனுப்பப்பட்டனர்.  இந்த நிலையில்தான், மாணவன் தாக்கப்பட்ட வீடியோ காட்சி, திங்கட்கிழமை காலை முதல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்தது.

14 வயது சிறுமியை மணந்த 54 வயது எம்.பி .. பாகிஸ்தானில்

dinamalar. :பலுசிஸ்தான்: பாகிஸ்தான் எம்.பி., ஒருவர் 14 வயது சிறுமியை திருமணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பெண்களின் திருமண வயது 16 ஆக உள்ளது. அப்படி இருக்கையில் அங்கு 54 வயதான எம்.பி., ஒருவர் 14 வயது சிறுமியை திருமணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் தொகுதியில் இருந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட மவுலானா சலாகுதீன் என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.    அவரது மனைவி, அங்குள்ள சித்ரால் பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. ஆம், வெறும் 14 வயதான பள்ளி மாணவியை அவர் திருமணம் செய்துள்ளார். தன்னை விட 40 வயது குறைவான சிறுமியை எம்.பி. ஒருவரே மணந்த செய்தி, அங்குள்ள பெண்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து தொண்டு நிறுவனம் ஒன்று, போலீசில் புகார் அளித்துள்ளது. இதனையடுத்து தலைமறைவான மவுலானாவை போலீசார் தேடி வருகின்றனர்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

தமிழர்களின் கிரானைட் தொழிலை பறித்து மார்வாடிகளிடம் கொடுத்த சகாயம் ஐ ஏ எஸ்! ஜெயலலிதாவின் உத்தரவுகளை நிறைவேற்றினார்!

 Seetha Ravi Suresh : · ஒரேகல்லில் இரண்டுமாங்காய். 750 கிமீ மேற்கு

தொடர்ச்சிமலையை உள்ளடக்கிய தமிழகத்திற்கு, குஜராத்தும், ராஜஸ்தானும் கிரானைட் சப்ளை செய்கின்றன!!!
குஜராத்,ராஜஸ்தான் கிரானைட் வியாபாரிகளுக்கு ஈடுகொடுத்துவந்த தமிழக கிரானைட் வியாபாரம் படுத்து செத்தேபோய்விட்டது.
கலைஞரின் மகன் அழகிரியும், பேரனும்தான் கிரானைட் பிஸ்னஸை, மதுரைல புடிச்சி ஆட்டுறதாக பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
அப்புறம், அழகர் கோயிலே காணாமல் போய்விட்டதுன்னு பிரச்சாரம் செய்யப்பட்டது.
நான்குவருடம் நன்றாக பிரச்சாரம் செய்தபிறகு, ஒருநாள் கொம்பை பிடித்துவிட்டார்கள்.
அதிமுகவின் பைனான்சியர்தான் குற்றவாளி என்றதும்!  அழகிரியை சம்பந்தப்படுத்த, அசுரமுயற்சியே நடந்தது.
குவாரிகளில் ரெய்டு நடத்திய சகாயம், சுடுகாட்ல படுத்து திமுகவை குற்றஞ்சுமத்தினார்.
திமுகவை களங்கப்படுத்தினமாதிரியும் ஆச்சு! கிரானைட் பிஸ்னஸை தமிழர்களிடமிருந்து பிடுங்கி, சேட்டுங்க கைல ஒப்படைச்சமாதிரியும் ஆச்சு!
ஆகமொத்தம், தமிழகத்தின் அன்னாஹசாரே செய்ததெல்லாம், மஹேஸ்வரிகளுக்கும், மக்ரானா உருதுபாய்களுக்குமான பிஸ்னஸ் டெவலப்மென்ட்தான்.

இந்திதான் குஜராத்தி வியாபாரிகளின் இரகசிய மூலதனம்! மாநில மொழிகள் காப்பரேட்டுக்களுக்கு ஒரு சுமை!

nitish: Dr.sivaji ganasan
இன்று இந்திய சினிமா என்பது இந்தி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மட்டுமே . போஜ்பூரி வங்காளி மராத்தி பஞ்சாபி மொழி ஒரியா படங்களெல்லாம் ஓரளவு காணாமலே போய்விட்டன . இம்மாநில மொழி பேசும் மக்கள் எல்லாம் இந்தி மொழியை பின்பற்றியதால் இவர்களின் சினிமா தொழில் அடியோடு காணாமல் போய் விட்டது. சென்னையை மையமாக கொண்டு தென்னிந்திய சினிமா கருக்கொண்டதால் சகல தென்னிந்திய மொழி சினிமாக்களும் இந்தி ஆதிக்கத்தில் இருந்து தப்பி பிழைத்தது .
அதுமட்டுமல்ல இவை இன்று இந்தி சினிமாவை பல வழிகளிலும் முந்துக்கொண்டுதான் செல்கிறது . தென்னிந்திய சினிமாவின் பல துறைகளும் இந்தி சினிமா வியாபாரத்தையும் கவனித்து கொள்கிறது . பல ஆயிரக்கணக்கான கோடிகளில் வர்த்தகமும் இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பும் மாநில மொழி சினிமா துறை வழங்குகிறது.
இந்தி ஆதிக்கத்தின் பின்னணியில் வெறும் பார்ப்பனர்கள் மட்டுமல்ல வடஇந்திய முதலாளிகளும் உள்ளார்கள்.
குறிப்பாக குஜராத்தி பனியாக்களுக்கு மொழி என்பது பில்லியனுக்கு மேலான வாடிக்கையாளரை சுரண்ட வசதியாக இருக்கும் ஒரு ஊடகமாகும் . பார்ப்பனருக்கோ சமஸ்கிருதத்திற்கு ஒரு முன்னோடி என்ற வியாதி . இரு சுயநலமிகள் பேராசை இந்த இந்தி ஆதிக்கத்தின் பின்னணியில் உள்ளது
மாநில மொழிகள் அழிந்தால்மாநில பொருளாதாரமும் வேலைவாய்ப்பும் கூட காணாமல் போய்விடும் என்ற கோணத்தில் இந்தி ஆதிக்கத்தை எதிர்கொள்ள வேண்டும் .
" மனிதரின் வாழ்வியலும் அறிவியலும் கலையும் உறைந்திருக்கும் மூலதனம்தான் மொழி . மொழி அழிந்தால் மொழி வழி சினிமா கூட அழிந்துவிடும்"

இலங்கையில் நாட்டார் வழிபாட்டை அழித்தொழித்த ஆறுமுக நாவலர்

May be an image of 2 people and text that says 'இயற்கை வழிபாடும் சிறுதெய்வ வழிபாடும் நிறைந்திருந்த யாழ்ப்பாணத்தில், எங்களது மண்ணுக்கு சிறிதும் தொடர்பில்லாத, ஆகம் வழிபாட்டைப் புகுத்தியவரும் நாவலரே ரே.பெரும்பாலான சிறுதெய்வக் கோயில்கள் நாவலரால் ஆகம் முறையிலமைந்த பெருங் கோவில்களாக மாற்றப்பட்டன. -அருளினியன் அவர்கள் எழுதிய 'கேரள டயரீஸ்''
Dhinakaran Chelliah : · அழிந்து போன நாட்டார் வழிபாடு!   தமிழ்நாட்டுப் பண்பாட்டின் அடையாளம் என்பதே இயற்கை வழிபாடு, பெண் தெய்வ வழிபாடு,மூத்தோர் வழிபாடு,குலதெய்வ வழிபாடு,நடுகல் வழிபாடு,நாட்டார் தெய்வ வழிபாடுகளே.தமிழ்நாட்டில் கிராமம் முதல் நகரம் வரை நாட்டார் கோயில்கள் இல்லாத இடம் இல்லை, குல தெய்வ வழிபாடு இல்லாத குடும்பங்களும் இல்லை. ஆனால், தொப்புள் கொடி உறவுகள் உள்ள ஶ்ரீலங்காவில் மருந்துக்கும் நாட்டார் வழிபாட்டு கோயில்களோ குலதெய்வ வழிபாடோ,திருவிழாக்களோ இல்லை.இது தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம்.
ஶ்ரீலங்காவில் அதிலும் யாழ்ப்பாணம் பகுதியில் நாட்டார் வழிபாடு ஏதும் இல்லை என்ற தகவலை முதன் முதலில் அறிந்தபோது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.இதற்கு முக்கிய காரணம் ஆறுமுக நாவலர் என்பதை எனது ஈழ நண்பர்கள் மூலமாகவும் பிறகு நூல்கள் வாயிலாகவும் அறிந்து கொண்டேன். இந்தச் செய்தியை உறுதிப் படுத்தும் விதமாக அருளினியன் அவர்கள் எழுதிய கேரள டயரீஸ் எனும் நூலில் எழுதிய ‘நாவலரும்-சைவ வெள்ளாள மேலாதிக்கமும்’ கட்டுரையும் அமைந்துள்ளது.
கட்டுரையின் சிறு பகுதி இதோ;
“இயற்கை வழிபாடும் சிறுதெய்வ வழிபாடும் நிறைந்திருந்த யாழ்ப்பாணத்தில், எங்களது மண்ணுக்கு சிறிதும் தொடர்பில்லாத,
ஆகம வழிபாட்டைப் புகுத்தியவரும் நாவலரே. கண்ணகி கோயில்கள், கண்ணகி அம்மன் கோயில்களாக்கப்பட்டன. வேல் கோட்டங்கள்,முருகன் கோயில்களாக்கப்பட்டன.பெரும்பாலான சிறுதெய்வக் கோயில்கள் நாவலரால் ஆகம

நேபாளம் வழியாக வரும் இந்திய பெட்ரோல்.. 22 ரூபாய் விலை குறைவு.. உத்தர பிரதேசத்தில் பெட்ரோல் கடத்தல் கொடிகட்டி பறக்கிறது

 tamil.oneindia.com -  Velmurugan P ; லக்னோ: இந்தியாவில் இருந்து சுத்திகரித்து அனுப்பப்படும் பெட்ரோல் நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் திடீரென வழக்கத்திற்கு மாறாக பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் டீசல் விற்பனை பெரும் அளவில் சரிந்துள்ளது.
நேபாளத்தில் இருந்து வரும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 வரை குறைவு என்பதால் அதை வாங்க அந்த மாநில மக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் 92.59-க்கும், டீசல் விலை லிட்டர் 85.98க்கும் விற்பனையாகிறது.
ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் பெட்ரோலின் விலை சதம் அடித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை 90க்கும் அதிகமான விற்பனையாகி வருகிறது. சில மாநிலங்களில் 100ஐ நெருங்கி வருகிறது. 

நமச்சிவாயம்.. இதான் பாஜக.. ரங்கசாமிக்கு ஆப்பு.. கொந்தளிப்பில் 2 கட்சிகள்.. புதுச்சேரி கூத்து

 ரங்கசாமி

Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: "நமச்சிவாயம், நமச்சிவாயம்" என உச்சரிப்பதே நமது லட்சியம் என்று புதுச்சேரி பாஜக மேலிடப் பார்வையாளர் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணியைச் சேர்ந்த, 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.. நாராயணசாமி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க தேவை எழுந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானமும் தோற்று போய், காங்கிரஸ் அரசு கவிழ்ந்தே விட்டது..
நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்ததும், என்ஆர் காங்கிரஸின் தலைவர் ரங்கசாமிதான் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் என்று எதிர்பார்க்கப்பட்டது..
காரணம், இவர்தான் புதுச்சேரியை அன்று கட்டிப்போட்டவர்.. மூத்த தலைவரும் கூட.. தன் அரசியல் திறனால் பல சிக்கல்களை சாமர்த்தியமாக தீர்த்தவர்..

அதனால், நாராயணசாமி கிரண்பேடியுடனான மோதலில் இந்த 5 வருடம் கட்டி உருண்ட காலத்தில், மக்களுக்கு ஒருவித சோர்வு ஏற்பட்டுவிட்டது.. அதனால்தான் பெரும்பாலானோர் கவனம், ரங்கசாமி மீது திரும்பியது. மேலும் இவர் ஒருவர்தான் முழு பதவிக்காலத்தையும் முழுமையாக நிறைவு செய்த ஒரே முதல்வர் என்பதால் மக்கள் பார்வை இவர் பக்கம் திரும்பியுள்ளது. ஆனால் பாஜகவிடம் வேறு பிளான் இருப்பது தெரிய வந்துள்ளது.

எங்களைத் தலைநிமிரச் செய்தவர் கலைஞர்! - வேட்புமனுத் தாக்கல் செய்த 'திருநங்கை' பேட்டி!

DMK has set up a board for transgender people in India says transgender Riya
DMK has set up a board for transgender people in India says transgender Riya
நக்கீரன் செய்திப்பிரிவு - பி.அசோக்குமார்: 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்டது.
அதையொட்டி, திமுக விருப்ப மனுக்களைப் பெற்றுவருகிறது. அதிமுக நாளை முதல் பெறவிருக்கிறது. இதில் திமுக சார்பில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல், திருச்செங்கோட்டில் ஊராட்சி மன்ற உறுப்பினராக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திருநங்கை ரியா, இன்று விருப்ப மனு அளித்தார்
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுக முன்னாள் தலைவர் கலைஞர்தான் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் திருநங்கைகளுக்கு முதன்முதலில் நலத்திட்டங்களை அறிமுகம் செய்தார்.
மேலும் திமுகதான் திருநங்கைகளுக்கு உறுதுணையாக இருக்கிறது. அதனால், திமுகவின் சார்பாக கடந்த உள்ளாட்சித் தேர்தலில், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடத் தலைவர் ஸ்டாலினால் வாய்ப்பு வழங்கப்பட்டது.

காங்கிரஸ் செல்வப் பெருந்தகை கமல்ஹாசனின் கட்சியில் சேர இருப்பதாக தகவல்!

கமலுடன் கை கோர்க்கும் காங்கிரஸ் புள்ளி?

மின்னம்பலம்  : தலைநகர் சென்னையில் தமிழக காங்கிரஸுக்கென சில கிரவுண்ட் ஒர்க்கர்கள் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர் கராத்தே தியாகராஜன். ஆனால் அவரை தென் சென்னை மாவட்டத் தலைவர் பதவியில் இருந்து மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி நீக்கினார். அதன் பின் காங்கிரஸில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கராத்தே தியாகராஜன் அண்மையில் பாஜகவில் சேர்ந்துவிட்டார்.

இந்த நிலையில் சென்னையில் காங்கிரஸுக்கு அடுத்த களச் செயற்பாட்டாளராக இருக்கும் இன்னொருவரும் காங்கிரசுக்கு டாடா காட்டப் போகிறார் என்கிறார்கள் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில்.  புதுச்சேரியைப் போல தமிழகத்திலும் காங்கிரஸைக் கரைக்கப் பலவிதமான திட்டங்களைப் போட்டுவருகிறது பாஜக. மாநில நிர்வாகிகளிடமும், முன்னாள் இன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ.க்களிடமும் பாஜக பிரமுகர்கள் தொடர்பிலிருந்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் மொத்த கடன் 5.70 இலட்சம் கோடி! பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தலையிலும் 62 ஆயிரம் ரூபாய் கடன்

கமிஷன் பெற்றே தமிழகத்திற்கு 5 லட்சம் கோடி கடன்" முதல்வர் மீது ஸ்டாலின்  புகார்! - TopTamilNews
Vivekanadan T : · திமுக தலைவர் ஸ்டாலின் வெளிப்படுத்திய முக்கிய பேச்சுகள்
1. ரூ.5.70 லட்சம் கோடி கடன், பிறக்கும் குழந்தையின் தலையில் ரூ.62 ஆயிரம் கடன் சுமை, ஆட்சியாளர்கள் நிதி மேலாண்மையில் ஏற்படுத்தியுள்ள அனைத்து முறைகேடுகளையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம்.
2. திமுக ஆட்சியில் 10.5 சதவீதமாக இருந்த வருமானம், அதிமுக ஆட்சியில் தற்போது 7.2 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதாவது மூன்று ரூபாய் வருமானத்தில் ஒரு ரூபாய் காணாமல் போனதன் விளைவாக - 93,737 கோடி ரூபாய் வருமானம் சரிவு ஏற்பட்டுவிட்டது.
கரோனா பேரிடருக்கு முன்பே - அதாவது 2018-ஆம் ஆண்டிலேயே 68 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் காணாமல் போய் - நிதி நிலைமை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டது.
3. தேர்தலுக்கு முன் பணிகளை மேற்கொண்டு நிறைவேற்ற முடியாது என்று நன்கு அறிந்திருந்தும் கூட, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள டெண்டர்களை விடுத்து - அரசு கஜானாவை காலி செய்துள்ளார் முதல்வர்.
அதிமுக ஆட்சியில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் 78,854.25 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

சாமியார் ராம்தேவின் CORONIL மருந்தை மக்களுக்கு செலுத்த அனுமதி கொடுத்தது யார்? - அதிர்ச்சி கொடுத்த IMA

சாமியார் ராம்தேவின் CORONIL மருந்தை மக்களுக்கு செலுத்த அனுமதி கொடுத்தது யார்? - அதிர்ச்சி கொடுத்த IMA
சாமியார் ராம்தேவின் CORONIL மருந்தை மக்களுக்கு செலுத்த அனுமதி கொடுத்தது யார்? - அதிர்ச்சி கொடுத்த IMA
kalaignarseithigal.com :நிறுவனத்தின், தரம் நிரூபிக்கப்படாத மருந்தை மார்க்கெட் லாபத்திற்காக விற்பனை செய்ய வேண்டாம் என இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.... 2019ம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை முடக்கியது. இந்த வைரஸால் கொத்து கொத்தாக மக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து மக்களைப் பாதுகாப்பதற்காக, பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு தற்போது மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

இந்தியாவிலும், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் முன்களப் பணியாளர்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் உச்சத்திலிருந்த போது, சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் 'கொரோனில்' என்ற ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்தது. அப்போது மருந்துக்கான அறிவியல் ஆதாரங்கள் மீது மருத்துவர்களும்,சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பினர்.

ஸ்கூட்டியை மீட்கும் போது அடித்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு!

ஸ்கூட்டியை மீட்கும் போது அடித்துச் செல்லப்பட்ட பெண்  உயிரிழப்பு!
minnambalam :புதுச்சேரியில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்கப்பட்டார். புதுச்சேரி மாநிலம் சண்முகாபுரத்தை அடுத்த வடக்கு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சசிகுமார் - ஹசீனா பேகம். சண்முகாபுரம் ஓடைப் பகுதியை ஒட்டி வசிப்பவர்கள் அனைவரும் தங்கள் இரு சக்கர வாகனத்தை ஓடைக்கு அருகில் நிறுத்தி வைப்பது வழக்கம். அதுபோல ஹசீனா பேகம் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருக்கிறார். புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வந்த நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதுபோன்று சண்முகாபுரம் ஓடை பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி இருக்கிறது.

இதனால் ஹசினா பேகம் தனது வாகனத்தை நீரிலிருந்து மீட்க முயன்றபோது தண்ணீரின் வேகம் காரணமாக இரு சக்கர வாகனத்துடன் அவரும் அடித்துச் செல்லப்பட்டார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் டெண்டர்கள் ரத்து - ஸ்டாலின் அறிவிப்பு

dinakaran.com : சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் கடைசி நேரத்தில் போடப்படும் அனைத்து டெண்டர்களும் ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் வாக்குறுதிகளை நம்பி ஒப்பந்தம் போட வேண்டாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில் கூச்சமே இல்லா

விவி மினரல்ஸ் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை 5 லட்ச ரூபாய் அபராதம்!


tamil.news18.com :டெல்லி சிபிஐ நீதிமன்றம், வைகுண்ட ராஜனுக்கு 3 ஆண்டுகள்
சிறை தண்டனையும், 5 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது மணல் ஆலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில், வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜனுக்கு, டெல்லி சிபிஐ நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் திருவெம்பாலபுரத்தில், கடற்கரைப் பகுதியில் மணல் ஆலை அமைப்பதற்காக, 2012ம் ஆண்டு மத்திய சுகாதாரத்துறை இணை இயக்குநர் நீரஜ் கட்கரிக்கு, வைகுண்டராஜன் நான்கு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்ற வழக்கின் விசாரணை கடந்த ஜனவரி 19ந்தேதி முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

Killing Fields of Jaffna - யாழ் குடாநாட்டின் கொலைக்களம் எச்சரிக்கை, Warning

Mylvaganam Sooriasegaram : · Killing Fields of Jaffna - யாழ் குடாநாட்டின் கொலைக்களம் எச்சரிக்கை, Warning இந்த பதிவைப் பார்க்க எதையும் தாங்கும் உள்ளம் வேணும். சிறுவர்களுக்கு பொருத்தமற்றது, முக்கியமாக இதிலுள்ள படங்கள். You need to be strong minded to view this post, not suitable for children's consumption, especially the photos. இந்த நாய்கள் சரன் ஆலையம் (காப்பகம்) யாழ் குடாநாட்டிலுள்ள யைக்கச்சி என்ற இடத்தில் உள்ளது.
This dogs shelter(home) is located in Jaffna at Ikachchi.
இங்குள்ள நிலமைகள் பின் வருமாறு. படங்கள் இவற்றை தெளிவு படுத்துகிறது
The situation here is as follows. Photos are self explanatory.
எல்லா நாய்களும் கூடுகளில் அடைக்கப்பட்டு பூ ட்டப்பட்டுள்ளன.
All dogs are caged and locked up.
உணவு கொடுக்கப்படவில்லை. நாய்கள்
பட்டினியில் தவிக்கின்றன. ஓலமிடுகின்றன. ஒரு நாய் செத்துக்கிடக்கிறது. பசிக் கொடுமையால் அதை மற்ற நாய்கள் சாப்பிடுகின்றன.
குடிக்க தண்ணீர் கூட கொடுக்கப்படவில்லை. நா ய்கள் தாகத்தில் தவிக்கின்றன.
Dogs are not given food. They are suffering and starving to death. They are moaning. One dog died. It is being eaten by the other starving dogs.
No water is given for them to drink. So they are thirsty and dehydrated.
If this situation continues they will all die locked up. It is a shameful crime.
இந்த காப்பகம் (கொலைக்களம்) TCT (தியாகிகள் பேரில் நடத்தப்படும் நிறுவனம்) என அறியப்படுகிறது to  link  .யாழ்ப்பாண நாய்கள் காப்பக கொடுமைகள்

திங்கள், 22 பிப்ரவரி, 2021

அன்னா ஹாசாரே பாணியில் சகாயம் ஐ ஏ எஸ் மூலம் பாஜக கடை விரிக்கிறது?

 திரு சகாயம் அவர்களின் கட்சி தொடங்கும் விழா காணொளியை கண்டேன் . மிகவும் பொறுமையாக முழுவதும் பார்த்தேன்   மிகுந்த ஏமாற்றம் அளித்தது.
சகாயம் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாக இருந்தவர் .ஆனால் தமிழகத்தை பற்றி எந்த விடயமும் தெரியாத ஒருவர் பேசியது போல இருந்தது .
பேசிய பலரும் வெறும் அப்பாவிகளாக அல்லது வேண்டுமென்றே ஒன்றும் தெரியாதவர்கள் போல நடிப்பவர்களாகவே தெரிந்தனர்.
ஊழல் என்ற ஒற்றை மந்திரமே போதும் தங்களை கரைசேர்த்து விடும் என்று கருதுவதாக தெரிகிறது.
தமிழ்நாட்டின் கல்வி களவு போகிறதே  அதை பற்றி ஒரு வார்த்தை ம்ம்ம்ம்ம்
தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புக்கள் களவாடாப்படுகிறதே அதை பற்றி ம்ம்ம்ம்
தமிழ்நாட்டின் வியாபாரங்கள் திட்டமிட்டு மார்வாடிகள் கைக்களுக்கு போகிறதே அதை பற்றி ம்ம்ம்
தமிழ்நாட்டின் மீது ஒரு பொருளாதார போர் நடக்கிறதே அதைப்பற்றி ..ம்ம்ம்ம்
தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக்கு சாவு மணி அடிக்கிறார்களே/ அதைப்பற்றி ம்ம்ம்ம்ம்
தமிழ்நாட்டில் மீண்டும் பார்ப்பனீயம் சமஸ்கிருதம் எல்லாம் நுழைகிறதே? அதை பற்றி ம்ம்ம்ம்ம்
பணமதிப்பு இழப்பு பற்றி ம்ம்ம்ம்ம்   
ஜி எஸ் டி வரி பற்றி ம்ம்ம்ம்ம்
இவை எல்லாம் கொஞ்சம் சாம்பிள்தான்  இன்னும் என்னன்னவோ கேள்விகள் இருக்கின்றன .
சகாயம் குழுவிடம் நல்ல நோக்கமும் கிடையவே கிடையாது.
பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவர அன்னா ஹாசாரே போன்றோர் எடுத்த காவடியை தமிழ்நாட்டில் திரு சகாயம் ஐ ஏ எஸ் மூலம் பாஜக முன்னெடுக்கிறது என்பதில் சந்தேகமே கிடையாது.
முடிவாகவே தெரிகிறது  சகாயம் இன்னொரு ஆர் எஸ் எஸ் அடியாள்தான்.
ஆனால் ஒரே ஒரு சந்தேகம் மட்டுமே உள்ளது .
ஒருவேளை இந்த அடியாள் இதை கூட புரிந்து கொள்ள முடியாத ஒரு இன்னொரு ஆட்டுக்கார அண்ணாமலை ரேஞ்சாக இருக்கலாமோ?   

போயிங் 777: இயந்திரக்கோளாறால் தரையிறக்கப்படும் 128 அமெரிக்க விமானங்கள்

\BBC :அமெரிக்க விமான நிறுவனமான போயிங்கின் 777 ரக விமானத்தின் எஞ்சின் எரிந்து நடுவானில் அதன் பாகங்கள் வெடித்துச்சிதறிய சம்பவம் காரணமாக, அத்தகைய இயந்திர கோளாறு சாத்தியம் மிகுந்த 777 ரகத்தைச் சேர்ந்த 128 விமானங்களை தரையிறக்க போயிங் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. .. கடந்த சனிக்கிழமை டென்வெரில் இருந்து ஹோனோலூலு நகர் நோக்கி யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 777 ரக விமானம் 231 பயணிகளுடன் புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த விமானத்தின் எஞ்சின் பகுதி தீப்பிடித்து எரிந்தது. 

இதனால், அவசரமாக அந்த விமானம் தரையிறங்க கட்டாயப்படுத்தப்பட்டது. அந்த எஞ்சினின் சில பாகங்கள் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்தன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அமெரிக்க விமான போக்குவரத்துத்துறை தகவலின்படி போயிங் 777 ரக விமானங்களை அங்குள்ள யுனைடெட் ஏர்லைன்ஸ் மட்டுமே இயக்கி வருகிறது. அதே ரக விமானங்கள் சில ஜப்பானிலும் தென் கொரியாவிலும் இயக்கப்படுகின்றன.

இரட்டை இலையில் ஜெயித்தவரெல்லாம் பாஜகவுக்குப் போய்விடுவார்கள்- திருமா

minnambalam : புதுச்சேரியில் இன்று நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு நாளை
இரட்டை இலையில் ஜெயித்தவரெல்லாம் பாஜகவுக்குப் போய்விடுவார்கள்- திருமா

தமிழகத்திலும் பாஜகவால் நடத்தப்படக் கூடும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல், திருமாவளவன் எச்சரித்துள்ளார்.   இன்று (பிப்ரவரி 22) சேலத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னனி ஒருங்கிணைப்பில் நடைபெறும் UAPA கருப்புச் சட்ட வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தொல்.திருமாவளவன்,  “மக்களை சந்தித்துகொள்கையை எடுத்து வைத்து பரப்புரை செய்து தேர்தலை சந்தித்து ஜனநாயக ரீதியாக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முடியாமல்... வெற்றி பெற்ற கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைபேசி ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியைக் கவிழ்ப்பது எவ்வளவு அநாகரிகமான அரசியல்.

இன்று புதுச்சேரியில் நாராயணசாமியின் ஆட்சியை மோடியின் கும்பல் கவிழ்த்துவிட்டது. இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் வரும் நிலையில் ஆட்சியை கவிழ்க்க வேண்டிய அவசியம் என்ன என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

புதுவை முதல்வர்நாராயணசாமி பதவி விலகினார்

ராஜினாமா செய்தார் நாராயணசாமி...  இனி முடிவு செய்யவேண்டியது ஆளுநர்தான்
maalaimalar : புதுச்சேரி: புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்தது. சட்டசபையில் நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் தோல்வியடைந்ததையடுத்து ஆட்சி கவிழ்ந்தது. அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து முறைப்படி அறிவித்தார். நியமன எம்எல்ஏக்கள் மூலம் ஆட்சியை கவிழ்த்ததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவையைவிட்டு வெளியேறிய நாராயணசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். தனது அமைச்சரவையும் ராஜினாமா செய்வதாக கூறினார். இனி ஆளுநரின் முடிவைப் பொருத்து அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்.
ராஜினாமா செய்த நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-