திங்கள், 30 ஆகஸ்ட், 2010

யாழ். பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் உருவாக்கப்படும். SB

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடமொன்று விரைவில் உருவாக்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தப் பொறியியல் பீடம் கிளிநொச்சியில் இயங்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய மற்றும் விஞ்ஞான பீடங்களும் கிளிநொச்சிக்கு இடமாற்றம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கிளநொச்சியில் புதிய பீடங்களை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் விரிவுரையாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், விரைவில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஏனையவர்களை விடவும் யாழ்ப்பாண மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழ் மொழியில் நடத்தப்படும் கற்கை நெறிகள் எதிர்வரும் ஆண்டு முதல் ஆங்கிலத்தில் நடத்தப்படும் எனவும், அதற்கு மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகளவு சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் நோக்கி பயணிப்பதனால் தங்குமிடங்களுக்கான விலை உயர்வடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் மாணவர்கள் தங்குமிட வசதிகளுக்கு நெருக்கடியை எதிர்நோக்கலாம் எனவும், விரைவில் மாணவர் விடுதிகள் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: