இதன்படி கடந்த மே மாதம் கொடநாடு எஸ்டேட்டுக்கு வந்தார். கோவை ஆர்ப்பாட்டம், திருச்சி பொதுக்கூட்டம் என இங்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இதனையடுத்து இன்று பிற்பகல் விமானம் மூலம் ஜெ., கோவை வந்தார். பின்னர் கார் மூலம் கொடநாடு எஸ்டேட்டை சென்றடைந்தார். நீலகிரி மாவட்ட எல்லை குஞ்சப்பனையில் அ.தி.மு.க., செயலர் செல்வராஜ் தலைமையில் ஜெ., வை வரவேற்க பெரும் திரளாக கூடினர்.
ஆளும் அரசுக்கு எதிராக என்ன மாதிரியான பிரச்னைகளை கையில் எடுக்கலாம் என திட்டம் வகுக்கிறாராம். முன்னாள் அமைச்சர்கள் , கட்சி நிர்வாகிகள் என பலரிடம் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். ஆடி மாதம் முடிந்த பின்னர் ஒரு சிறப்பு பூஜையையும் நடத்த வேண்டும் என பிரபல ஆச்சாரியர்கள் அறிவுரையும் கூறியுள்ளனர். இதனால் இங்கு ஒரு ரகசிய பூஜையும் நடத்தப்ட இருக்கிறது என நெருங்கிய அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.
இடையூறு கொடுக்க தி.மு.க., திட்டம் ; இதற்கிடையில் இவர் தங்கும் எஸ்டேட் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. அதாவது பங்களா மற்றும் டீ பாக்டரி புனரமைப்பு பணியில் விதிமுறை மீறல் நடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இது தொடர்பாக தனி. அதிகாரி ஓருவரும் நியமிக்கப்பட்டு விசாரித்து வருகிறார்.
ஜெ., தங்கும் இந்த நேரத்தில் இந்த பிரச்னையை கையிலெடுக்க லோக்கல் தி.மு.க., வினர் தயாராகி வருகின்றனர். ஏற்கனவே இது தொடர்பாக விசாரணை நடத்த எஸ்டேட் உள்ளே அதிகாரிகள் நுழைய முடியாமல் போனது. ஜெ., இன்று முதல் வரும் 15 ம் தேதி வரை தங்கி இருக்கிறார். முக்கிய முடிவுகள் இருக்கும் என அ,தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-08-31 20:08:45 IST
முதலில் திமுகவுக்கு பாடம் புகட்டுகிரீர்களோ இல்லையோ, இந்த செந்தில் மதுரைக்கு பாடம் புகட்டுங்கள், தொல்லை தாங்க முடியல..... அந்த ....திற்கு தீய சக்தி கருணாநிதி போடும் இலவச திட்டங்கள் தாலி அறுக்கும் திட்டங்களாக தெரியவில்லை, நீங்கள் போடும் திட்டங்கள் தான் அவருக்கு தாலி அறுக்கும் திட்டமாக தெரிகிறது... மஞ்ச துண்டு கோமான், நாற்பது ஆயிரம் கோடி ரூபாய் வங்கியில் கடன் வாங்கி இலவசம் கொடுத்து மக்களின் தாலியை அறுப்பது இது போன்ற சொம்படிசான் குஞ்சிங்களுக்கு தெரிய மாட்டேன்கிறதே, அதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது......
s sivakumar - aranthangi,இந்தியா
2010-08-31 19:50:02 IST
amma is great...
Muthu - HongKong,சீனா
2010-08-31 19:47:00 IST
I think Jaya may consider to bring State Government Administration Head quarters to Kodanadu....
esundararaj - vellore,இந்தியா
2010-08-31 19:31:54 IST
nowadays even if we miss jaya TV we can read dinamalar, such great news jayamalar. long live jayamalar...
Raj - Singapore,சிங்கப்பூர்
2010-08-31 19:30:21 IST
அம்மா ஒய்வுக்கு போனது போய். இப்ப பலருக்கு ஒய்வு இல்லாம செய்ரதுக்கு போராங்க....
Antu Mathiyas - KansasCity,யூ.எஸ்.ஏ
2010-08-31 19:24:13 IST
இதுதான் ரூம் போட்டு யோசிகிறதோ?...
M .Kumanan - Singapore,இந்தியா
2010-08-31 19:20:52 IST
; "இதற்கிடையில் இவர் தங்கும் எஸ்டேட் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. அதாவது பங்களா மற்றும் டீ பாக்டரி புனரமைப்பு பணியில் விதிமுறை மீறல் நடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. " விதிமுறை மீறல் உண்மையா பொய்யா என்று உங்களுக்கு தெரியாதா.இதே தி. மு. க. காரன் செஞ்சிருந்தா அப்படி நடக்காவிட்டாலும் இந்நேரம் அப்படிதான்யா நடந்திச்சு என்று அடிச்சு எழுதுறீங்க. ஜெ., தங்கும் இந்த நேரத்தில் இந்த பிரச்னையை கையிலெடுக்க லோக்கல் தி.மு.க., வினர் தயாராகி வருகின்றனர். "ஏற்கனவே இது தொடர்பாக விசாரணை நடத்த எஸ்டேட் உள்ளே அதிகாரிகள் நுழைய முடியாமல் போனது." அது ஏன் என்று இதை எழுதியவருக்கு தெரியாதா? அதை ஏன் மறைக்கும் விதமாக செய்தி போடுறீங்க....
பாலாஜி - chennai,இந்தியா
2010-08-31 19:17:03 IST
அம்மா என்றால் ரகசியம் என்று அர்த்தம். அதுவும் கொடநாடு என்றால் பரம ரகசியம் என்று அர்த்தம்....
jaiganesh - singapore,சிங்கப்பூர்
2010-08-31 19:12:30 IST
ஒய் தினமலர், அம்மாவுக்கு ஜால்ரா போடறத நிறுத்து....
கிஷோர் கே சுவாமி - bangalore,இந்தியா
2010-08-31 19:10:38 IST
கொடநாடு எதோ வேறு மாநிலத்திலோ அல்லது வேறு நாட்டிலோ இருப்பது போன்று இங்கு பலர் பேசுகிறீர்கள், அங்கு ஓய்விற்கு செல்கிறார் என்பது பத்திரிக்கைகளின் கூற்று. அப்படியானால் அழகிரி மதுரையில் இருந்து கொண்டு அரசியலில் முக்கிய முடிவுகள் எடுக்க கூடாதா? சென்னையை விட்டு ஒரு அரசியல் தலைவர் தங்கினால், அது ஓய்விற்காக தானா? முதல்வர் கூட தான் பிரத்யேகமாக ஓய்விற்கு என்று பெங்களூரு மற்றும் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்டில் தங்குகிறார். அப்பொழுது அவர் துண்டு எங்கு போட்டிருந்தார் , கூட யார் யார் சென்றனர் , இந்த முறை தயாளு அம்மாள் சென்றார்களா? அல்லது ராஜாதி அம்மாள் சென்றார்களா? என்றெல்லாம் பத்திரிக்கைகள் போடுவதில்லை. எதற்கு இது போன்ற சிறு விஷயங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம்? ஜெயலலிதா தமிழகத்தில் சென்னையை விட்டு வேறு எங்கும் சென்று அரசியல் முடிவு எடுக்க கூடாது என்று சட்டம் ஏதும் உள்ளதா?...
எ.ராமு. - திருச்சி,இந்தியா
2010-08-31 19:05:58 IST
இப்படியா கொடநாடு போய்கிட்டு இருந்தா தமிழ்நாட யார் பாக்கறது அம்மா...
லீமா - புதுகோட்டை,இந்தியா
2010-08-31 18:29:14 IST
மூட நம்பிக்கை உள்ள மக்களும் மற்றும் பத்திரிக்கைகளும் உள்ளவரை நம் நாடு உருப்படாது....
அன்சர் - நாகர்கோயில்,இந்தியா
2010-08-31 18:29:05 IST
ஜெயலலிதாவும் சசிகலாவும் என்ன பூஜை செய்ய போகிறார்கள். தினமலர் ஆசிரியருக்குதான் தெரியும்.......
விஜய் - சென்னை,இந்தியா
2010-08-31 18:19:20 IST
இந்த அம்மா ஜோசியத்தை நம்புவது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் ஜெ வை விட தீயசக்திதான் அதிகமாக மூடநம்பிக்கை உள்ளவர். சின்ன உதாரணம் அவர் கழுத்தில் எந்த நேரமும் தொங்கும் மஞ்ச கலர் துண்டு. ஏன் ஊருக்கு உபதேசம் செய்யும் தீயசக்தி வேற கலர் துண்டு போடக்கூடாதா ?அவங்க கட்சியில எல்லோரும் வெள்ள கலர் துண்டுதானே போடுகிறார்கள்.இவர் மட்டும் ஜோசியம் பார்த்து மஞ்ச கலர் துண்டையே பயன்படுத்துவது மூட நம்பிக்கை இல்லையா....
ஜெய் - Chennai,இந்தியா
2010-08-31 18:18:42 IST
அம்மா நீங்க வந்தால் கருணா அய்யாவை காட்டிலும் நலிந்தோருக்கு ஏதாவது செய்வீர்கள். ஆனால் நீங்கள் இரண்டு பேரும் வேண்டாம்... கேப்டன் வந்தால் போதும்... அவரும் மக்கள் பணத்தை அடிப்பார் ... உங்கள் இருவரை போல அடிக்க மாட்டார் என்று நம்பிக்கை உண்டு ....
பட்டுக்கோட்டை பிரபாகரன் - துபாய்,இந்தியா
2010-08-31 18:10:42 IST
அம்மா கருணாநிதி குடும்பம் தமிழ் நாட்டை விட்டு ஓட வேண்டும். அடுத்த முதல்வர் நீங்க தான் அம்மா. கோவை, திருச்சி போல தொடர்ந்து நடத்துங்கள். நீங்க ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் அழகிரியை உள்ள தள்ள வேண்டும். மதுரையில் ஆடும் ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா,, குடும்ப ஆட்டதை அடக்க இனி புயலாய் புறப்படுங்கள் அம்மா புறப்படுங்கள்... இனி தாங்கது தமிழகம். தமிழ்நாட்டை விலைக்கு வாங்கும் அளவுக்கு கருணாநிதி குடும்பம் வளர்ந்து விட்டது. தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் அடுத்த முதல்வர் நீங்கள் தான் என்று. தமிழ்நாட்டில் மதுரை , திருச்சி , கோவை. சென்னை என்று வாரிசுகள் ஆடும் ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல, ஆட்டத்துக்கு ஒரு முடிவு கட்டுங்கள்...
aleem - திருபத்தூர்,இந்தியா
2010-08-31 17:49:57 IST
அம்மா முதல்வரானால் சட்டமன்றம் கொடனாட்டிற்கு மாற்றப்படும் என்ற அறிவிப்பு விரைவில் வரும்....
zakeer - ஓமன்கடலூர்தமிழகம்,இந்தியா
2010-08-31 17:24:03 IST
என்ன அம்மா வின் அடுத்த போராட்டம்.,''.என் கட்சி காரர்களுக்கு எப்படி தூக்கு தண்டனை கொடுக்கலாம், இது அநியாயம் ஆளுங்கட்சி காரர்களின் அக்கிரமம் கருணாநிதி இன் சதி'', என்று கூப்பாடு போடத்தான், அதற்கும் வரவேற்க சில பல பேர் இருகத்தான் செய்கிறார்கள்.....
Dominic - Doha,கத்தார்
2010-08-31 17:23:39 IST
என்ன அம்மா, இந்த புகை எல்லாம் அந்த மஞ்ச துண்டுக்கு ஒன்னும் பண்ண முடியாது....
டெஸ்ட் - திருச்சி,இந்தியா
2010-08-31 17:22:23 IST
யோவ் , ஒரு கிராம் தங்கம் கூட போட்டுக்காம மக்களுக்காக உழைக்குறாங்க. அவங்கள போய் சொல்றதுக்கு ஒங்களுக்கு வாய், உடம்பு , நாக்கு கூசல ?...
ரவி - தோஹா,கத்தார்
2010-08-31 17:08:29 IST
கொடையரசியின் உல்லாச பயணத்தை கூட "அரசியல் நகர்வு" ஆக எடுத்துக்கொள்கிற அதிமுக (Anti Dravida Moment Kazhagam) அதிமேதாவி அப்பாவிகளின் அறியாமையை என்னவென்று சொல்வது? ஜெயா கொடநாடு போனாலே 'அடுத்தது என்ன' ங்கிற பரபரப்பு வேற இருக்குதாம்...ஐயோ...ஐயோ...எப்படி அழுவுரதுன்னே தெரியலையே.....நாலு வருசமா ஒரே பரபரப்பா...இருந்துச்சு பாரு...! ஏதோ செந்தமிழ் மாநாடு புண்ணியத்துல உறங்கிக்கிடந்தவர் எழ வேண்டிய கட்டாயத்துல எழுந்தார்...கோவையில அல்லக்கைகள் சொந்தப்பணத்தை செலவழித்து ஒரு கூட்டத்தையும் காண்பித்து விட்டார்கள். இதில் உற்சாகமானவர் மீண்டும் திருச்சியில் கூட்டிப்பார்த்தார். ரெண்டு கூட்டமுமே ஆளுங்கட்சிக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை..மக்கள் அவர்கள் பக்கம்தான் என்று தனக்கு விசுவாசமான உளவுப்பிரிவினர் சொன்னவுடன் இதோ மீண்டும் மலை ஏறிவிட்டார்....
செந்தில் - மதுரை,இந்தியா
2010-08-31 17:04:14 IST
இன்னும் எத்தனை பேரு தாலிய அறுக்க திட்டம் போட போகுதோ தெரியல. எல்லாம் தமிழனின் தலை விதி. எப்படியோ தமிழ் மக்கள் உசாராக இருந்தால் சரி....
umas - salem,இந்தியா
2010-08-31 16:35:02 IST
ஏன் திட்டம் எல்லாம் சென்னைல எடுக்க கூடாதாமா. ஜோசியத நம்பிறத விட்டுட்டு என்னைக்கு மக்களை நம்புராங்களோ அன்னைக்குத்தான் அவங்க தலைவர இருக்குறதுக்கு லாயக்கு...
SAM - madhurai,இந்தியா
2010-08-31 16:27:20 IST
அம்மாவின் அடுத்த அதிரடி ஆரம்பம்......
Maha - chennai,இந்தியா
2010-08-31 16:18:25 IST
உச்ச நீதிமன்றத்தின் தர்மபுரி பஸ் எரிப்பு தீர்ப்பு வேலை செய்ய ஆரம்பித்து விட்டது போலும் ......
Arun - Chennai,இந்தியா
2010-08-31 16:17:13 IST
என்ன ஆசிரியரே, ஜெ விசுவாசம் அதிகமா இருக்கிறதோ ?...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக